Kanavu Shortstory By Niranjanan. கனவு சிறுகதை - நிரஞ்சனன்

கனவு சிறுகதை – நிரஞ்சனன்

அன்று பறப்பது, ஊர்வது, நீந்துவது, நடப்பது, நட-பறப்பது போட்டது, என தடால் புடால் விருந்து, ரெடி பண்ணுறாங்க, வாசனை தெரு முனைக்கு….

நம்ம வீடு தான, என ஒரு முறைக்கு இருமுறை சோதனை செய்தே உள்ளே போனான், அவன்…..

என்ன ஏது என விசாரிப்பதற்குள், மகள் சொன்னா கை கால் கழுவிட்டு வாங்க…..

யாருடா அப்பாவா?

ஆமா அம்மா….

முகம் கழுவி உக்கார சொல்லு, ……

ஒன்றும் புரியவில்லை….. ஒரு சஞ்சலதுடன் முகம், கை, கால் கழுவி வந்தாச்சு….. முகத்தில் சோப் போட்டது மீதம் இருக்க…. ஹால் வந்தாச்சு….

மனசுதான் விருந்து பத்தி யோசிக்கும்போது, மற்ற கவனம் எங்க….

பெரிய இலை ஒன்றே ஒன்று விரித்து, அதில் வலது ஓரத்தில் ஆரம்பித்து இடது வரை வரிசையா, உப்பு, ஊறுகாய், 2 வத்தல், இரத்த பொறியல், முட்டை(அவுச்சது 1, பொறியல் கொஞ்சம்),
சிக்கன் 65 4 பீஸ், மட்டன் சுக்கா கொஞ்சம், ஆட்டு மூளை கொஞ்சம், கொடல் பிரை கொஞ்சம், பெப்பர், மீன் பொரித்தது, இது போக இலை நடுவில் பிரியாணி, புலாவ், வெள்ளை சோறு, ரசம் இலை பக்கத்தில்.

ஒரு சொம்பு தண்ணி. இலை முன்னாடி அவன், அவனுக்கு முன்னாடி அவனவள், வலது கை பக்கம் மகள், இடது கை பக்கம் மகன்.

எதுக்கு இதெல்லாம்? ஏன்? என கேட்ககூட எண்ணம் வரல, முட்டை பொரியல்க்கு கை போச்சு, மகன் அப்பா என வாய் திறக்க, ஊட்டியாச்சு, சரி இரத்தம் எப்புடினு எடுக்க போக, மகள் அப்பா அவளுக்கும்…..

அவசரபட்டு மகன் மீன எடுத்து சாப்பிட, முள் மாட்டிவிட்டது அவன் தொண்டையில், அப்புறம் அவனா ஃப்ரீ பண்ணிட்டு, சாப்பிட போக……

தண்ணி குடிக்காமா அவுச்ச முட்டையா பாப்பா சாப்பிட, விக்கல் வந்து விட்டது அவளுக்கு, தண்ணி கொடுத்து அவளுக்கு சரி பண்ணியாச்சு…..

மதுரைக்கு வந்த சோதனையா? இத்தன இருக்க, முடியலயே ருசி பார்க்க….. என எண்ணினான்….

சரி கூட்டாஞ்சோறு சாப்பிடுவோம் என எல்லாம் சொல்ல, அவன் உருண்ட பிடிக்க (பிடிக்க மட்டும்) உள்ளே தள்ளி கிட்டு… தள்ளி கிட்டே இருந்தாங்க சுத்தி இருந்த மக்கள்….

ஒரு வாய் வைக்கலாம் போன, மகள்/மகன் அப்பா சொல்ல, அப்புறம் என்ன…… ஊட்டுதல்….

இப்படியே முதலில் இலை காலி அப்புறம் சுத்தி இருந்த பாத்திரங்களில் ஒன்னு ஒன்னா காலி….. மீதம் இலை மட்டும்தான்….. கடைசியா தண்ணி மேல கை வைக்க, அதுவும் இல்லாம எழுந்து விட்டான்…..

ஏண்டி, என்ன ஏன் உக்கார வைச்சீங்க கேட்க வாய் திறக்க போனான்…..

அப்பா, எழுந்திரிங்க இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டது,…. எழுந்திரிங்க என குடும்பத்தோட அழைப்பு….

அப்புறம்தான் தெரிந்தது அது ஒரு கனவு என அவனுக்கு…..