Posted inStory
சிறுகதை: “ஓய்வு தந்த ஆய்வு” – உஷாதீபன்
தனது பணி ஓய்வை இந்த ஊருக்கும் உலகத்திற்கும் யார் டமாரம் போட்டுச் சொன்னார்கள் என்று சபேசனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. எப்படி இது எல்லாருக்கும் தெரிந்தது? அப்படி அப்படியே பேச்சோடு பேச்சாகப் பரவி விடுமோ? யாரேனும் ஒருவர் சொல்ல, அவர் இன்னொருத்தருக்குச் சொல்ல…அவர்…