Posted inPoetry
ஒன்றல்ல கவிதை – சாந்தி சரவணன்
கோபமும் குரோதமும் ஒன்றல்ல
காதலும் காமமும் ஒன்றல்ல
கவவையும் கஷ்டமும் ஒன்றல்ல
கஞ்சதனமும் சிக்கனமும் ஒன்றல்ல
பசியும் பட்டினியும் ஒன்றல்ல
சிரிப்பும் புன்னகையும் ஒன்றல்ல
மருந்தும் மருத்துவமும் ஒன்றல்ல
வரலாறும் வரலாற்று நூல்களும் ஒன்றல்ல
ஊடக செய்திகளும் உண்மை நிகழ்வுகளும் ஒன்றல்ல
நீதியும் நீதிமன்ற தீர்ப்பும் ஒன்றல்ல
பார்வைகளும் காட்சிகளும் ஒன்றல்ல
சொல்லும் வாக்குறுதியும் ஒன்றல்ல
நினைவுகளும் சிந்தனைகளும் ஒன்றல்ல
போரும் புரட்சியும் ஒன்றல்ல
அடிமைத்தனமும் அகிம்சையும் ஒன்றல்ல
கவி படைப்பவனும் மூன்டாசு கவி பாரதியும் ஒன்றல்ல
போதையும் போதை பழக்கமும் ஒன்றல்ல
மரணமும் இறப்பும் ஒன்றல்ல!
உளவியல் அகழாய்வு செய்து ஊடே சென்று பார்த்தால்
மனதின் சித்தாந்தம் புலப்படும்!