Posted inStory
ஒற்றை வரி கதைகள் – சாந்தி சரவணன்
கதை 1:
குடிசையில், சில நாட்களில் கடைசி பருக்கை, பல நாட்களில் ஒரு சொம்பு தண்ணீர் அம்மாவின் உணவானது.
கதை 2:
“சமுக சேவகர்” விருது வழங்கும் விழாவில் விருது பெற்றுக் கொண்டு, நேரே மாத தவணை கட்ட அப்பா இருக்கும் முதியோர் இல்லம் சென்றார் மகன்.
கதை 3:
“ப்ளூ கிராஸ் ஆர்வலர்” வீட்டில் விருந்து. மட்டன் பிரியாணி, சிக்கன் 65.
கதை 4:
லஞ்ச ஒழிப்பு அதிகாரி டொனேஷன் கொடுத்து தன் பிள்ளைக்கு L.K.G அனுமதி வாங்கினார் தனியார் பள்ளியில்.
கதை 5:
ஃபாரஸ்ட் ஆபிசர் வீட்டில், கதவுகள், ஜன்னல்கள், மேசை, கட்டில், தேக்கு மர பலகையில் பளபளத்தன.
கதை 6:
ஸ்டார் ஓட்டல் முதலாளிக்கு வீட்டில் இருந்து மதிய உணவு வந்தது
கதை 7:
பள்ளி பையை போட்டு விட்டு குப்பை அள்ளும் பையை எடுத்தான் 5 வயது சிறுவன் அம்மாவின் ஈம சடங்குகள் முடிந்த சில தினங்களில்.
