Onion-speaking math curves Article by Pesum Prabhakaran பேசும் பிரபாகரனின் கட்டுரை வெங்காயம் பேசும் கணித வளைவுகள்

வெங்காயம் பேசும் கணித வளைவுகள் – பேசும் பிரபாகரன்



மனிதன் சக்கரத்தினை கண்டுபிடித்த நாகரிக வளர்ச்சிக்கு பிறகு பொருட்களை கையாளுவதில் அளவீடுகளை பயன்படுத்த ஆரம்பித்தான்.

சேமிப்புக்காகவும் மற்றும் பொருள் விரயங்களை தவிர்க்கவும் பொருட்களின் உருவங்கள் பற்றி சிந்திக்கஆரம்பித்தான். அதனால் கணித உருவங்கள் உருவாகியது அந்த கணித உருவங்களை நுட்பமாக கணக்கிட வளைவரைகள் பற்றிய அறிவு பெருக ஆரம்பித்தது. கணிதத்தின் வரலாற்றில் பெரும்பாலும் நாம் உண்ணும் காய்கள் பெரும் பங்கு வகித்துள்ளது. அவ்வகையில் தினமும் நாம் பயன்படுத்தும் காயான வெங்காயம் எப்படி கணிதத்தினை நம்மிடம் பேசுகின்றது என்று பார்க்கலாம். வளைவரைகள் பற்றிய கருத்துகள் மிகவும் சுவாரசியமானவை.

Onion-speaking math curves Article by Pesum Prabhakaran பேசும் பிரபாகரனின் கட்டுரை வெங்காயம் பேசும் கணித வளைவுகள்

வளையாத பாதைக்கு நேர்கோட்டுப் பாதை என்று பெயர். அதனை கணிதத்தில் நேர்கோடு y = x என்று கூறுவர். இதில் வளைவுகள் இல்லாததினால், இந்த நேர்கோட்டின் வளைவு வீதம் பூச்சியமாகும். y = x என்ற நேர்கோடு வெங்காயத்தின் மையமாக’ நின்று வெங்காயத்தினை இரண்டாக பிரிக்கின்றது.

பரவளையம் என்பது U வடிவத்திலமைந்த வளைவரையாகும்.

ஒரு வாழைப்பழம் வளைந்து காணப்படுவது பரவளையம் அமைப்பு.

பாலத்தில் இரு தூண்களுக்கு இடையில் தொங்கிக் கொண்டிருக்கும் கம்பி U வடிவில் காட்சியளிப்பது பரவளையம் அமைப்பு .

Onion-speaking math curves Article by Pesum Prabhakaran பேசும் பிரபாகரனின் கட்டுரை வெங்காயம் பேசும் கணித வளைவுகள்

தேவாலயங்கள் மற்றும் பெரிய அரண்மனைகளில் கட்டிடத்தின் அழுத்தத்தை கீழ்நோக்கி மற்றும் வெளிப்புறமாக அழுத்துவதன் மூலம் வலிமையை வழங்குவதற்கும், வளாகத்திற்கு ஒரு கவர்ச்சியான தோற்றத்தை சேர்க்கவும் தலைகீழ் U வடிவ பரவளையம் அமைப்பு காணப்படுகின்றது.

இதுபோல் பல பரவளைய அமைப்புகள் இந்த பேரண்டத்தில் நம்மை சுற்றி காணப்படுகின்றன y = x2 என்பது ஒரு பரவளைய பாதையை குறிக்கின்றது. y = x2 என்ற வளைவரையானது வெங்காயத்தில் y = x என்ற நேர்கோட்டுக்கு கீழே அமைத்துள்ளது. பொதுவாக நகரும் பொருள்கள் மற்றும் புவியீர்ப்பு சம்பந்தப்பட்ட பல கணக்கீடுகள் ஒரு வர்க்க மூலத்தை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. இதனை y = x1/2 என்ற வளைவரையாக குறிக்கலாம். இந்த வளைவரையானது வெங்காயத்தில் y = x என்ற நேர்கோட்டுக்கு மேலே அமைத்துள்ளது.

இதுபோன்று நமது வாழ்க்கையில் நடக்கும் பெரும்பாலான அனைத்து நிகழ்ச்சிகளை உருவாக்கும் மாறிகளுக்கு வளைவரை உருவங்கள் கொடுத்தால் அவைகள் உருவாகும். அவை அனைத்தையும் நம்மால் பெரும்பாலும் வெங்காயத்தில் காணமுடிகின்றது. இவ்வாறு உலக நிகழ்ச்சிகளில் கணிதத்தினை கண்டால் உலக இயக்கம் நம்முள் வசப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

துணை நூல்கள்
Real Life Parabola Examples By J. Dianne Dotson , sciencing ,November 06, 2020
16 Parabola Examples in Real Life ,studiousguy
Real-life Examples of a Parabola for a Better Understanding, sciencestruck
தொடர்புக்கு rpcitcbe@gmail.com