மொழிபெயர்ப்பு கவிதை : திறந்த காயம் | தமிழில் – வசந்ததீபன்

மொழிபெயர்ப்பு கவிதை : திறந்த காயம் | தமிழில் – வசந்ததீபன்




திறந்த காயம்
*******************
நான் ஒரு திறந்த காயம்
யாரோ அதைச் சுத்தம் செய்கிறார்
யாரோ மருந்து போடுகிறார்
நான் எல்லாருடைய நன்றியுணர்வையும்
ஏற்றுக் கொள்ள முடியாது
ஆனால் நான் உணர்கிறேன்
உண்மையைச் சொன்னால்
அனுதாபம் பிடிக்கவில்லை எனக்கு.

திறந்த காயங்கள்
விரைவில் குணமாகும்
மூடப்பட்ட காயங்கள்
தாமதமாகக் குணமாகின்றன
ஆனால் திறந்த காயத்தை
பொத்தி வைத்திருக்க வேண்டியிருக்கிறது.

நான் சில சமயம் காதலை மறைக்கிறேன்
சில சமயம் மறைக்கிறேன்
நிறைய அனைத்துக் கனவை
சில சமயம் ஏதாவது என்னுடைய புலம்பும்
கவிதையையும் மறைத்துக் கொள்கிறேன்
ஆனால் ஒவ்வொரு கட்டுக்குள்ளும்
மூச்சுத்திணறும் காயம்
தொந்தரவு செய்கிறது
அது புதிய காற்றுக்காக துடிதுடிக்கிறது.

அன்பு , கனவுகள் மற்றும் கவிதை போன்ற
கட்டுகள் இருக்கின்றன
அவை பொத்தி வைக்கப்பட்டிருந்தாலே
திறப்பதில் சிரமம் செய்கின்றன
நான் இவற்றினால் எவர்ற்க்கும் பாதிப்பு
ஏற்படாமலிருக்க விரும்புகிறேன்
ஆனால் காயங்களின்
அலறல் ஏற்பட்டதும்
இவற்றின் இடங்களிலிருந்து நீக்கி
திறந்து வைக்கப்படுகிறது.

திறந்த காயம்
திறந்த நிலையில் இருக்க விரும்புகிறது
திறந்த காயம்
விரைவான சிகிச்சையை விரும்புகிறது
தன்னில் கட்டிவைக்கப்பட விரும்பவில்லை
மூடப்பட்ட காயங்கள் போல வருடக்கணக்கில்
வேதனைப்பட விரும்பவில்லை
அதை நோக்கியே நான் மன்னிப்பு கோருகிறேன்_
ஓ… என் அன்பே !
ஹே.. என் கனவுகளே!!
அட.. என் கவிதை !!!

உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற
அன்பின் மேல்
காயத்தை ஒட்டாதீர்கள்
உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
என் கனவுகள் சரியான வழியில் சென்றாலே
பொய்யான மறைப்பை உருவாக்காது
தூக்கிவிடும் தான் எனக்குள் வரை
உருவாக்கிக் கொண்டிருக்கும்
கவிதை ஒட்டு மொத்தம் போல
அது வாழ்வில் இருக்கிறது
விற்பனை அழைப்பு.

இந்த திறந்த காயம்
திறந்த காயமாகத்தான் இருக்கிறது
நிற்க புழுக்கள் உண்டாகா இதில்
அவை எப்போது தவற விட்ட பிறகும்
சுற்றிலும் அழுகின்றன
அதனால் அடங்காத பசியை
நான் உணர முடியும்.

அவற்றின் உயிரியல் நடத்தை
இருந்து கொண்டு இருக்கிறது
இறந்த பிறகு உடலை உண்ணும்
ஆனால் இப்போது வாழ்வும்
அவற்றின்
பசியில் அடங்கியிருக்கிறது
சிந்தனையற்ற மனிதம் அவற்றை
எதிர்த்து நிற்க முடியாது
அது வாழ்ந்து கொண்டு உண்ணப்படும்.

திறந்த காயங்கள்
மற்றும்
அழுகிற பூச்சிகளின்
இந்த பரவச விவகாரத்தில்
நான் எனது
எந்த கவலை குறித்துக்
கவலை கொள்வதில்லை
தமது கவலை பற்றி கவலைப்படுவது
தமது சித்தாந்தத்திற்க்கு எதிராக போகிறது.

தொடர்ச்சியான காயங்களால் தான்
இப்போது வரை வாழ்வு
பல கவனச்சிதறல்களில் இருந்து
காப்பாற்றப்பட்டு இருக்கிறது
இன்னும் எளிமையான ஒன்று இருக்கிறது
என் சொந்த உறுதியே வாழ்க.

என் இருப்பு ஒரு திறந்த காயமாகவே இருக்கிறது
ஆனால் அது எண்ணங்களால்
கட்டுப்பட்டு இருக்கிறது.

ஹிந்தியில் : ஷிரிஷ் குமார் மௌரியா
தமிழில் : வசந்ததீபன்

ஷிரிஷ் குமார் மெளரிய
பிறப்பு : 13 , டிசம்பர் 1973
இடம் : நாக்பூர்
முக்கிய படைப்புகள் :

(1) பாலா கதம்
(2) சந்தோஷ் கே ச்ஜூர்முட் மே ( இஸ்ரேலியக் கவிஞர் யேஹூதா ஆமிகாஈ யின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு )
(3) தந்த் கதா மற்றும் கவிதைகள்
(4) ப்ருத்வி பர் ஏக் ஜகஹ்