American- black race struggle | ரஸ்டின்- கருப்பர் இனப் போராட்டம்

“அமெரிக்க கருப்பர் இனப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட வரலாறு ரஸ்டின்” –  இ.பா.சிந்தன்

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை ஓப்பன்ஹைமர் படத்தில் நடித்த சிலியன் முர்ஃபி பெற்றார். அந்த விருதின் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் மற்றொரு நடிகரின் பெயரும் இருந்தது. அவர் பெயர் கோல்மன் டோமிங்கோ.…
அணிலாடு முற்றம் கவிதை – வளவ. துரையன்

அணிலாடு முற்றம் கவிதை – வளவ. துரையன்




நேற்று மாலைவரை
கூடியிருந்த கூட்டம்
இரவில் எங்கோ போய்
அடைந்து விட்டது.

அது விட்டுப் போன
மிச்சங்கள் அழுதுகொண்டிருக்கின்றன

குடை ராட்டினமும்
பலூன் வியாபாரியும்
பஞ்சு மிட்டாய்க் காரனும்
நின்றிருந்த இடங்கள்
பரிதவித்து நிற்கின்றன.

அம்மாவைக் காணோம்
என்று அழுத சிறுவனுக்கு
அம்மா கிடைத்தது
ஆஸ்கார் வந்த்து போல.

அத்தை மகனும்
மாமன் மகளும்
அங்குமிங்கும் கண்களை
அலையவிட்டுக் கொண்டு
கள்ளப் பாரவையால்
கவனம் இழுக்கிறார்கள்.

திருவிழா முடிந்த திடலில்
அன்றும் இன்றும்
அணில்கள்தாம்
ஆடிக் கொண்டிருக்கின்றன.

– வளவ. துரையன்