காலா பாணி- டாக்டர். மு. ராஜேந்திரன் இ.ஆ.ப ( Kaala paani : Dr.M.Rajendran )

மு. ராஜேந்திரன் எழுதிய “காலா பாணி” – நூலறிமுகம்

"காலா பாணி" நாடு கடத்தப்பட்ட முதல் இந்திய அரசனின் கதையைச் சொல்லிடும் வரலாற்று நாவல் இந்திய அரசுப் பணி அதிகாரியாக இருந்த டாக்டர் மு.ராஜேந்திரன் இயற்கை ஆர்வலர், சமூகச் செயற்பாட்டாளர், எழுத்தாளர், தொல்லியல் ஆய்வாளர், வரலாற்றாசிரியர் என்று பன்முகத் திறன் பெற்ற…
நூல் அறிமுகம்: டி.எஸ்.எலியட்டின் பேராலயத்தில் படுகொலை தமிழில்: ச. வின்சென்ட் – பெ.விஜயகுமார்

நூல் அறிமுகம்: டி.எஸ்.எலியட்டின் பேராலயத்தில் படுகொலை தமிழில்: ச. வின்சென்ட் – பெ.விஜயகுமார்



Peralayathil Padukolai Book By T.S.Eliot in tamil translated By S. Vincent Bookreview P. Vijayakumar நூல் அறிமுகம்: டி.எஸ்.எலியட்டின் பேராலயத்தில் படுகொலை தமிழில்: ச. வின்சென்ட் - பெ.விஜயகுமார்

டி.எஸ்.எலியட் ஆங்கில இலக்கிய உலகில் கவிதை, நாடகம், திறனாய்வு, இதழியல் என்று பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாக வலம் வந்தவர். அமெரிக்காவில் பிறந்து (1888) இங்கிலாந்தில் வாழ்ந்து மறைந்த (1965) எலியட் 1948ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். எலியட்டின் ‘தி வேஸ்ட் லாண்டு’ கவிதை இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கவிதையாகப் போற்றப்படுகிறது. கிறித்துவ மதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட எலியட்டின் படைப்புகளில் கிறித்துவமதக் கோட்பாடுகள் வெளிப்படையாகவும், மறைந்தும் விரவிக் கிடக்கின்றன. ’கான்ஃபிடன்சியல் கிளர்க்’, ’காக்டெய்ல் பார்ட்டி’, ’ஃபேமிலி ரீயூனியன்’, ’தி எல்டர் ஸ்டேட்ஸ்மென்’ ஆகியன சமூக நாடகங்கள் போல் தெரிந்தாலும் ‘மறைமுக கிறித்துவ’ நாடகங்களே.

Peralayathil Padukolai Book By T.S.Eliot in tamil translated By S. Vincent Bookreview P. Vijayakumar நூல் அறிமுகம்: டி.எஸ்.எலியட்டின் பேராலயத்தில் படுகொலை தமிழில்: ச. வின்சென்ட் - பெ.விஜயகுமார்

’மர்டர் இன் தி கத்டிரல்’ (Murder in the Cathedral) நாடகம் 1935இல் காண்டர்புரி பேராலயத் திருவிழா கொண்டாட்டத்திற்காக எலியட்டால் இயற்றப்பட்டு அரங்கேற்றப்பட்ட கிறித்துவ நாடகம். கவிதை நடையில் எழுதப்பட்ட அந்த நாடகம் பல முறை தொடர்ந்து மேடையேறி வெற்றி கண்டது. இங்கிலாந்தில் 1936இல் தொலைக்காட்சி அறிமுகமான ஆண்டிலேயே நாடகம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. எலியட்டின் Murder in the Cathedral நாடகத்தை பேராசிரியர் ச.வின்சென்ட் ‘பேராலயத்தில் படுகொலை’ என்ற பெயரில் அழகு தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

Peralayathil Padukolai Book By T.S.Eliot in tamil translated By S. Vincent Bookreview P. Vijayakumar நூல் அறிமுகம்: டி.எஸ்.எலியட்டின் பேராலயத்தில் படுகொலை தமிழில்: ச. வின்சென்ட் - பெ.விஜயகுமார்

’பேராலயத்தில் படுகொலை’ 1170ஆம் ஆண்டு இங்கிலாந்தின் காண்டர்புரி பேராலயத்தில் நடந்த உண்மை சம்பவத்தினைச் சித்தரிக்கும் வரலாற்று நாடகம் ஆகும். இங்கிலாந்து மன்னர் இரண்டாம் ஹென்றி – காண்டர்புரி பேராலயத்தின் பேராயர் தாமஸ் பெக்கெட் இருவருக்கும் இடையில் நடந்த நீண்ட பனிப்போர் கொடூரக் கொலையில் முடிந்தது. இப்படுகொலையை நேரில் கண்ட எட்வர்டு கிரிம் என்பவர் எழுதிய ஆவணத்தை ஆதாரமாகக் கொண்டே எலியட் அந்த நாடகத்தை எழுதினார்.

இரண்டாம் ஹென்றியும், தாமஸ் பெக்கெட்டும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். ஹென்றி மன்னரானதும் நண்பர் பெக்கெட்டை இங்கிலாந்தின் வேந்தர் (Chancellor) என்ற உயர்ந்த பதவியில் அமர்த்தினார். வேந்தராக சிறப்புடன் பணியாற்றிய பெக்கெட் காண்டர்புரி பேராலயத்தின் பேராயராக நியமிக்கப்பட்டதும் முற்றிலும் மனம் மாறினார். வேந்தர் பதவியிலிருந்து விலகினார். மறைப்பணியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஆட்சி அதிகாரம் ஹென்றி கையில், மதத் தலைமை பெக்கெட் கையில் என்றானதும் இருவருக்குமிடையில் அதிகாரப் போட்டி ஏற்பட்டது. மத விஷயங்களில் மன்னர் தலையிடுவதை பெக்கெட் விரும்பவில்லை. ஆட்சி அதிகாரத்தில் பெக்கெட் தலையிடுவதை ஹென்றி இடையூறாக நினைத்தார். இச்சமயத்தில் யார்க் பேராயர், சாலிஸ்புரி ஆயர், லண்டன் ஆயர் ஆகியோர் ஹென்றியின் மகனுக்கு அரசனின் வாரிசாக யார்க் பேராலயத்தில் முடிசூடினார்கள். அரச பரம்பரையினருக்கு முடிசூடுவது காண்டர்புரி பேராயரின் உரிமையாகும். இந்த மீறலைப் பொறுத்துக் கொள்ளாத பெக்கெட் கோபத்தில் ஆயர்கள் மூவரையும் மத நீக்கம் செய்தார். ஹென்றி – பெக்கெட் இருவருக்கும் இடையிலான பகைமை முற்றி நிலைமை மோசமானதும் பெக்கெட் பிரான்சிற்குத் தப்பிச் சென்றார்.

பெக்கெட்டுக்கு பிரான்சு மன்னர் ஏழாம் லூயி அடைக்கலமும், ஆதரவும் கொடுத்தார். ரோமிலிருந்து திருத்தந்தை தலையிட்டு இருவருக்கும் இடையில் சமரசம் செய்து வைத்தார். இதனால் பெக்கெட் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்து திரும்பினார். இருப்பினும் பகைமை தீரவில்லை. ஒரு நாள் ஹென்றி ஆத்திரத்தில் “யாரேனும் இந்தப் பேராயரின் தொந்திரவுக்கு முடிவுகட்ட மாட்டீர்களா?” என்று பொதுவாகச் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு மன்னருக்கு விசுவாசமான நான்கு வீரர்கள் காண்டர்புரி பேராலயத்திற்குச் சென்று பெக்கெட்டை கொடூரமாகக் கொலை செய்து விடுகின்றனர். இந்த வரலாற்று நிகழ்வினையே எலியட் நாடகமாக வடித்துள்ளார்.

நாடகம் இரண்டு பாகங்களில் கவிதை மொழியில் எழுதப்பட்டுள்ளது. ஏழாண்டு காலம் பிரான்சில் அடைக்கலம் பெற்றிருந்த தாமஸ் பெக்கெட் 1170 டிசம்பர் இரண்டாம் நாள் காண்டர்புரி பேராலயத்திற்குத் திரும்புகிறார். முதல் பாகம் அந்நாளைய நிகழ்வுகளைச் சித்தரிக்கிறது. டிசம்பர் 29 அன்று பேராலயத்தில் நடக்கும் கொடூரக் கொலையை இரண்டாம் பாகம் காட்சிப்படுத்துகிறது. இரு பாகங்களுக்கும் இடையில் தாமஸ் பெக்கெட் டிசம்பர் 25இல் ஆற்றும் கிறிஸ்துமஸ் மறையுரை உரைநடை மொழியில் உள்ளது. சேர்ந்திசைப் பாடகர்களின் நீண்ட பாடலுடன் நாடகம் தொடங்குகிறது. கிரேக்க செவ்வியல் நாடக வழியில் சேர்ந்திசைப் பாடகர்களை எலியட் பயன்படுத்துகிறார். கிரேக்க நாடகங்களில் ‘Chorus’ என்றழைக்கப்படும் சேர்ந்திசைப் பாடகர்கள் முக்கிய இடம் வகிக்கிறார்கள். சேர்ந்திசைப் பாடகர்கள் நாடகத்தில் பார்வையாளர்களுக்கும் நாடகாசிரியருக்கும் இடையில் பாலமாக விளங்குகிறார்கள். நாடகத்தில் நேரடியாகப் பங்கேற்பதோடு மேடையில் ஒதுங்கி நின்று வர்ணனையும் செய்கிறார்கள்.

காண்டர்புரி தேவாலயத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் சேர்ந்திசைப் பாடகர்களாகப் பேராயரின் மண்டபத்தில் கூடுகிறார்கள். “பேராலயத்தில் பாதுகாப்பு இல்லை. நாங்கள் சாட்சிகளாக இருக்கக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறோம். புத்தாண்டு இருளில் காத்திருக்கிறது. அமைதியான பருவநிலைகளில் கலக்கம் வருமென்று அஞ்சுகிறோம்” என்று வரவிருக்கும் சோகத்தையும், கொலையையும் முன்னறிந்து பாடுகிறார்கள். ”விதி இறைவனின் கையில் காத்திருக்கிறது. அரசியல் தலைவர்களின் கைகளில் அல்ல. எங்களுக்கு, ஏழைகளுக்கு செய்வதற்கு ஒன்றும் இல்லை. காத்திருந்து சாட்சியாக இருப்பது மட்டுமே எங்கள் விதி” என்று முறையிடுகிறார்கள். புலம்புகிறார்கள். இவர்களின் அழுகுரல் கேட்ட மூன்று பேராலயக் குருக்கள் பெண்களை அமைதிப்படுத்துகிறார்கள். பிரான்சில் இருக்கும் பேராயர் பெக்கெட் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பார், அமைதிக்கான வழியை அறிந்து வருவார் என்ற நம்பிக்கையை அவர்கள் தெரிவிக்கின்றனர். அந்நேரத்தில் தூதுவன் வருகிறான். பேராயரின் வருகையை அறிவிக்கிறான். குருமார்கள் ஆச்சரியத்தில் மூழ்குகிறார்கள். “என்ன! பழைய பகைகள் முடிந்தனவா, அவர்களைப் பிரித்த அகந்தைச் சுவர் வீழ்ந்து விட்டதா? அமைதியா, போரா?” என்ற கேள்விக்கு தூதுவன், “அமைதி; ஆனால் அமைதியின் முத்தம் இல்லை” என்று சொல்லிவிட்டுச் செல்கிறான்.

பேராயரின் வருகையைக் கேட்டதும் “நான் பேராயருக்காக அஞ்சுகிறேன், நான் திருச்சபைக்காக அஞ்சுகிறேன்” என்று குரு ஒருவர் தன்னுடைய பயத்தை வெளிப்படுத்துகிறார். மற்றொரு குரு “எனினும் நமது ஆண்டவர் வந்து விட்டார். அவருடைய இடத்திற்கு மீண்டு விட்டார். நமது ஐயங்கள் மறைகின்றன. கடவுளின் பாறை நமது காலடியில் இருக்கிறது. நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்”. என்று நம்பிக்கை கொள்கிறார். மூன்றாவது குரு, “நல்லதற்கோ தீயதற்கோ சக்கரம் சுழலட்டும். சக்கரம் இந்த ஏழு ஆண்டுகளாகச் சுழலவில்லை. நல்லதோ கெட்டதோ அதன் முடிவு யாருக்குத் தெரியும்? என்று சொல்லி எதற்கும் தயாராகிறார். சேர்ந்திசைப் பாடகர்கள் மீண்டும் அழுகிறார்கள். “ஓ, தாமஸ், திரும்பிப் போங்கள். பேராயரே! திரும்பிப் போங்கள், ஃப்ரான்சுக்குப் போங்கள். புரிந்துகொள்ள முடியாத ஓரச்சத்தில் நாங்கள் பயப்படுகிறோம். எங்களை விட்டுப் போங்கள். ஃப்ரான்சுக்குப் போங்கள்” என்று பதறுகிறார்கள். இரண்டாம் குரு அவர்களை அமைதிப்படுத்தும் போது பெக்கெட் உள்ளே நுழைகிறார். “அவர்கள் பேசட்டும்; அவர்கள் நன்றாகவே பேசுகிறார்கள். செயல்படுவது என்னவென்றும் அல்லது துன்புறுவது என்னவென்றும் அவர்களுக்குத் தெரியும். செயல்படுவது துன்புறுதல் என்றும் துன்புறுவது செயல்படுதல் என்றும் அவர்களுக்குத் தெரியும்”. என்று சொல்லி பெக்கெட் அனைவரையும் அமைதிப்படுத்துகிறார். “முடிவு எளிமையாய், திடீரென்று நிகழ்வதாய், கடவுள் தருவதாக இருக்கும்”, என்று வரவிருக்கும் ஆபத்தை அறிந்தவராக கூறுகிறார்.

தாமஸ் பெக்கெட்டின் பலவீனத்தைத் சோதித்துப் பார்க்க நான்கு சோதனையாளர்கள் (Tempters) வருகிறார்கள். முதல் சோதனையாளர் பெக்கெட்டின் இளமைக் கால சல்லாபங்களை நினைவுப்படுத்தி மீண்டும் பழைய இன்பலோகத்திற்கு அழைக்கிறார். “வசந்தகால ஆசையை விட்டு விடுவது நல்லது” என்று பெக்கெட் உடனே விரட்டி விடுகிறார். இரண்டாவது சோதனையாளர் “நீங்கள் நாட்டின் வேந்தராக இருந்த நாட்களை நினைத்துப் பாருங்கள். மீண்டும் வேந்தராகி பலருக்கும் பேருதவிகள் செய்து மகிழலாமே” என்கிறார். பெக்கெட் “வானகத்துத் திறவுகோலையும், நரகத்தின் திறவுகோலையும் பொறுப்பாய் வைத்திருக்கும் நான் குறுகிய அதிகாரி ஆகும் ஆசைக்காகக் கீழிறங்குவேனா?” என்று சொல்லி மறுத்து விடுகிறார். மூன்றாம் சோதனையாளர் “மன்னர் பலமிழந்து இருக்கும் இவ்வேளையில் மற்ற பிரபுக்களை ஒருங்கிணைத்து அரசு அதிகாரத்தைக் கைப்பற்றலாமே” என்கிறார். பெக்கெட் “புறாக்கள் மத்தியில் கழுகாய் ஆட்சிபுரிந்த நான், இப்போது ஓநாய்களின் மத்தியில் ஓநாயின் உருவெடுப்பதா? நான் ஒரு அரசரை ஏமாற்றினேன் என்று யாரும் என்னைச் சொல்லக் கூடாது” என்று அந்தக் கூற்றையும் மறுத்து விடுகிறார்.

நான்காவது சோதனையாளரைக் கண்டதும் பெக்கெட் திடுக்கிடுகிறார். “நீ யார், என்னுடைய ஆசைகளாலேயே என்னைச் சோதிக்கும் நீ யார்?” என்று கேட்கிறார். “நீங்கள் நினைப்பதை, விரும்புவதையே நான் முன்மொழிகிறேன். ஆம்; தாமஸ் இதைப்பற்றி நீங்கள் நினைத்திருக்கிறீர்கள். என்றென்றும் கடவுளின் முன்னிலையில் வகிக்கும் ’புனிதர்களின்’ மகிமைக்கு எது ஈடாகும்? மன்னருடையது மண்ணுலக மகிமை. நீங்கள் மறைசாட்சியத்தைத் (martyrdom) தேடுங்கள் தாமஸ்! ’புனிதர்’ (Saint) என்று போற்றப்படுவீர்கள்! மேலுலகை அடைந்து உங்களைத் துன்புறுத்தியவர்கள் காலமில்லாத சித்திரவதையில் கிடப்பதைப் பார்ப்பீர்கள், உங்கள் கனவில், மனதில் இருப்பதையே நான் உரைக்கிறேன்” என்று ’புனிதர்’ ஆவதால் கிடைக்கும் பெருமைகளைச் சொல்லி நான்காவது சோதனையாளர் பெக்கெட்டின் மனதை அசைக்கிறார்.

“மற்ற மூன்று சோதனையாளர்களும் பயனற்றவற்றை முன்மொழிந்தனர். ஆனால் நீ தருவது மீளா நரகத்தின் கனவுகள். பாவம் நிறைந்த அகந்தையை இன்னும் அதிகமாகக் குற்றமிழைத்துத்தான் விரட்ட முடியுமா? ’புனிதர்’ என்றுரைத்து என்னைச் சபலத்துக்குள்ளாக்குகிறாய்” என்று சொல்லி பெக்கெட் மனங்கலங்குகிறார். நான்கு சோதனையாளர்களும் ஒரே குரலில் “மனித வாழ்க்கை ஓர் ஏமாற்று. உண்மையற்றது. குழந்தைகளின் விருந்தில் அளிக்கப்படும் பரிசு, மாணவரின் பட்டம், அரசியல்வாதியின் பதக்கம் எல்லாமே உண்மையற்றது. இந்த மனிதர் பிடிவாதக்காரர் கண்ணை மூடி தன் அழிவில் குறியாய் இருக்கிறார். தன்னுடைய பெருமையின் உன்னதத்தில் தொலைந்து போகிறார்”. என்று ஒரே குரலில் பேசுகிறார்கள். அதனைத் தொடர்ந்து மூன்று குருக்களும், சேர்ந்திசைப்போரும், வரவிருக்கும் ஆபத்தைத் தடுக்க முனைகிறார்கள். ”சன்னல் மூடியிருக்கிறதா? கதவு பூட்டியிருக்கிறதா? காவல் நாய் வெளிக்கதவு அருகில் நிற்கிறதா? சாவுக்கு நூறு கைகள் உள்ளன. சாவு ஆயிரம் வழிகளில் நடக்கிறது. சாவு எல்லோர் பார்வையில் வரலாம். யாரும் பார்க்காமல், யாரும் கேளாமல் வரலாம்”. என்று பதற்றப்படுகிறார்கள். அவர்களை அமைதிப்படுத்தி விட்டு, ”சோதனை இது போல் இனி வராது. கடைசிச் சோதனை. தவறான காரணத்திற்காக நல்ல செயலைச் செய்வது”. என்று பெக்கெட் தன் நிலைபாட்டைத் தெளிவாக்குகிறார். முதல் பாகம் முடிகிறது.

அடுத்து கிறிஸ்துமஸ் நாள் மறைவுரையை பெக்கெட் வழங்குகிறார். ”கடவுளின் அன்பான குழந்தைகளே! கிறிஸ்துமஸ் நாள் அன்று நாம் ஒரே நேரத்தில் ஆண்டவரின் பிறப்பையும், இறப்பையும் மட்டும் கொண்டாடுவது இல்லை. அதற்கடுத்த நாள் கிறிஸ்துவின் மறைசாட்சியான மகிமைக்குரிய ஸ்டீபனது சாட்சியத்தையும் கொண்டாடுகிறோம். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு அடுத்த நாளே முதல் மறைசாட்சியின் நாள் (புனிதர் ஸ்டீபன் நாள்) வருவது தற்செயலானது என்று நினைக்கிறீர்களா? ஒருபோதும் இல்லை. ஒரே நேரத்தில் ஆண்டவனின் பிறப்பிலும், பாடுகளிலும் மகிழ்ச்சியும், துக்கமும் கொள்வது போல் மறைசாட்சிகளின் மரணத்திலும் மகிழ்ச்சியும் துக்கமும் கொள்கிறோம். நான் மீண்டும் உங்களுக்கு மறையுரை ஆற்றுவேன் என்று நினைக்கவில்லை. ஏனென்றால், உங்களுக்கு இன்னொரு ’மறைசாட்சி’ கிடைக்கப் போகிறார். அவரும் கடைசியானவராக இல்லாமல் இருக்கலாம். நான் சொல்வதை இதயத்தில் இருத்தி வேறொரு சமயத்தில் எண்ணிப் பாருங்கள். தந்தை! மகன்! தூய ஆவியின் பெயரால் ஆமன்!” என்று கிறிஸ்துமஸ் மறையுரை பெக்கெட் முடிக்கிறார். அத்துடன் தான் மற்றுமொரு ’மறைசாட்சி’யாக மாற விரும்புவதையும் உணர்த்தி விடுகிறார்.

நாடகத்தின் இரண்டாம் பாகம் சேர்ந்திசைப் பாடகர்களின் நீண்ட புலம்பலுடன் தொடங்குகிறது. பேராலயத்துக்குள் திடீரென்று நான்கு வீரர்கள் (Knights) அதிரடியாக நுழைகிறார்கள். அரசரின் ஆணைப்படி அவசர வேலையாக வருவதாகக் கூறுகிறார்கள். குருக்கள் இரவு உணவுக்கு வீரர்களை அழைக்கிறார்கள். ”உங்களுடைய விருந்தோம்பல் எங்களுக்குத் தேவையில்லை” என்று வீரர்கள் மறுத்து விடுகிறார்கள். பேராயரை வரச் சொல்லி அவசரப்படுத்துகிறார்கள். வீரர்களின் சத்தத்தைக் கேட்டு தாமஸ் பெக்கெட் அரங்கத்துக்குள் வந்து வீரர்களை மனமுவந்து வரவேற்கிறார். ஆனால் வீரர்கள் பெக்கெட்டை மரியாதையின்றிப் பேசுகிறார்கள். “மன்னருக்கு எதிராகப் புரட்சி செய்கிறீர்கள்; அவருடைய பணியாள் நீங்கள்; அரசரின் கருணையால் பதவிகளைப் பெற்றீர்கள்; பொய் சொல்லியுள்ளீர்கள்; அரசரை ஏமாற்றி பணத்தைச் சுருட்டியுள்ளீர்கள்” என்று சரமாரியாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

“வீரர்களே! நீங்கள் சொல்வதை மக்கள் முன்னால் சொல்லுங்கள் நான் மக்கள் மத்தியில் பதிலளிக்கிறேன்” என்கிறார் பெக்கெட். வீரர்கள் பெக்கெட்டைத் தாக்க முற்பட்டதும் குருக்களும், பணியாளர்களும் அவரின் பாதுகாப்புக்கு ஓடோடி வருகிறார்கள். “சட்டவிதிகளுக்கு உட்பட்டு இளவரசருக்கு முடிசூடல் நடந்தது. நீங்கள் முடிசூடிய ஆயர்களைப் பதவி நீக்கம் செய்தீர்கள்” என்று வீரர்கள் சொன்னதும் ”ஆயர்கள் மீது நடவடிக்கை எடுத்தது நான் அல்ல. நடவடிக்கை எடுத்தது திருத்தந்தை. கிறிஸ்துவின் திருச்சபைச் சட்டம். உரோமையின் நீதித் தீர்ப்பு. இதுகுறித்து நீங்கள் பேசவேண்டியது என்னிடமல்ல திருத்தந்தையிடம். உரோம் மட்டுமே ஆயர்களைக் குற்றங்களிலிருந்து விடுவிக்க முடியும்” என்று பெக்கெட் விளக்கமளிக்கிறார். ”பேராயரே! உமது உயிருக்கு ஆபத்து ஏற்படப் பேசுகிறீர்கள். கத்தி முனையின் ஆபத்தில் பேசுகிறீர்கள். அரச துரோகம் பேசுகிறீர்கள்; நாங்கள் திரும்ப வருவோம்; பேராயரை தப்பித்துச் செல்ல விடாதீர்கள்” என்று கூடியிருந்தவர்களை எச்சரித்துவிட்டு நான்கு வீரர்களும் வெளியேறுகிறார்கள். தாமஸ் பெக்கெட் பயமேதுமின்றி “சிறைப் பிடிக்க வாருங்கள்! வாளுடன் வாருங்கள்! ஆண்டவனின் பேரில் நான் காத்திருக்கிறேன்’ என்று எந்தவிதப் பதற்றமுமின்றி பெக்கெட் கூறுகிறார்.

சேர்ந்திசைப் பாடகர்களும் குருக்களும் பெக்கெட்டை தப்பித்து ஓடச் சொல்கிறார்கள். பேராலயத்தின் கதவுகளை மூடுகிறார்கள். சிறிது நேரத்தில் நான்கு வீரர்களும் திரும்ப வருகின்றனர். பெக்கெட் கதவுகளைத் திறக்கச் சொல்லி ஆணையிடுகிறார். “கதவின் தாழைத் திறவுங்கள்! போரிட்டோ, வியூகத்தாலோ, எதிர்ப்புக் காட்டியோ நாம் வெற்றி பெற வேண்டியதில்லை. விலங்கை எதிர்த்துப் போரிட்டு நாம் வெற்றி பெற்று விட்டோம். இப்போது துன்புற்று மட்டுமே வெற்றி காண வேண்டும். இப்போது இது சிலுவையின் வெற்றி. கதவைத் திறங்கள்!” என்று ஆணையிடுகிறார். கதவு திறக்கப்படுகிறது. வீரர்கள் உள்ளே வருகின்றனர். “நீங்கள் மதம் நீக்கம் செய்த அனைவரையும் விடுவியுங்கள். நீங்கள் எடுத்துக் கொண்ட அதிகாரங்களை விட்டு விடுங்கள். நீங்கள் மீறிய கீழ்ப்படிதலைப் புதுப்பியுங்கள்” என்று எச்சரிக்கிறார்கள். துரோகி! துரோகி” என்று ஆவேசத்துடன் கத்துகிறார்கள். “நான் எல்லாம் வல்ல இறைவனிடமும், என்றும் கன்னியான மரியா, புனிதர் திருமுழுக்கு யோவான், திருச்சீடர் பேதுரு பவுல், புனித சாட்சி டெனிஸ், மற்றும் எல்லாப் புனிதர்களிடமும் எனது பணியை ஒப்புக் கொடுக்கிறேன்” என்று சொல்லி பெக்கெட் அவர்களின் தாக்குதலுக்கும் ஒப்புக் கொடுத்து அமைதியுடன் நிற்கிறார். நான்கு வீரர்களும் பெக்கெட்டை வெட்டிச் சாய்க்கிறார்கள்.

Peralayathil Padukolai Book By T.S.Eliot in tamil translated By S. Vincent Bookreview P. Vijayakumar நூல் அறிமுகம்: டி.எஸ்.எலியட்டின் பேராலயத்தில் படுகொலை தமிழில்: ச. வின்சென்ட் - பெ.விஜயகுமார்

சேர்ந்திசைப் பாடகர்கள் கதறி அழுகிறார்கள். ”நாம் மட்டும் அல்ல, வீடு மட்டுமல்ல, நகரம் மட்டுமல்ல தீட்டுப்பட்டது. உலகம் முழுவதுமே மாசடைந்து விட்டது. காற்றைத் தூய்மைப்படுத்துங்கள். வானத்தைச் சுத்தமாக்குங்கள். கல்லைக் கழுவுங்கள், எலும்பைக் கழுவுங்கள், ஆன்மாவைக் கழுவுங்கள்” என்று தங்களின் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்கள். நான்கு வீரர்களும் ஒவ்வொருவராக வந்து தங்கள் செயலை நியாயப்படுத்திப் பேசுகிறார்கள். பின்னர் ரெஜினால்டு ஃபிட்ஜ், வில்லியம் தி டிரேசி, ஹியு தெ மார்வில், ரிச்சர்டு பிரிட்டோ ஆகிய நான்கு வீரர்களும் ஒருமித்த குரலில் பேசுகிறார்கள். ”எங்களைவிட வன்முறையைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்திற்காக வருத்தப்படுபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. ஆனால் சமூக நீதியை நிலைநாட்ட வன்முறை ஒன்றுதான் வழியாக இருந்தது எங்களின் துரதிர்ஷ்டம். இந்த விஷயத்தில் ஏதேனும் குற்றம் இருந்தால் அதனை நீங்களும் எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். பகையைத் தூண்ட எல்லா வழிகளையும் பேராயர் பயன்படுத்தினார். அவருடைய நடத்தையிலிருந்து பெக்கெட் ’மறைசாட்சி’யராக மரிக்க நினைக்கிறார் என்பது உறுதியாகிறது. இந்த உண்மைகள் உங்கள் முன்னால் இருக்கும் போது மனப்பேதலிப்பில் பெக்கெட் தற்கொலை செய்து கொண்டார் என்று நீங்கள் தயக்கமின்றி தீர்ப்புச் சொல்வீர்கள் என்று நம்புகிறோம். உங்களுடைய வீடுகளுக்கு அமைதியாகக் கலைந்து போங்கள் கலவரம் எதையும் தூண்ட வேண்டாம்.” என்று சொல்லி எச்சரித்து விட்டு வீரர்கள் வெளியேறுகிறார்கள்.

சேர்ந்திசைப் பாடகர்கள்’ “ஆண்டவரே! கிறிஸ்துவே! எங்களது குற்றத்தை, எங்களது பிழையைப் பொறுத்தருளும்! உலகின் பாவம் எங்கள் தலைமேல் இருக்கிறது. மறைசாட்சிகளின் இரத்தமும், புனிதர்களின் துன்பமும் எங்கள் தலைமேல் இருக்கின்றன. நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும்! புனித தாமசே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்! என்ற அவர்களின் வேண்டுதலுடன் நாடகம் முடிகிறது.

Peralayathil Padukolai Book By T.S.Eliot in tamil translated By S. Vincent Bookreview P. Vijayakumar நூல் அறிமுகம்: டி.எஸ்.எலியட்டின் பேராலயத்தில் படுகொலை தமிழில்: ச. வின்சென்ட் - பெ.விஜயகுமார்

’பேராலயத்தில் படுகொலை’ நாடகம் கவிதை மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் Free Verse எனப்படும் எளியநடை என்பதால் சாதாரண மக்களும் புரிந்துகொள்ள முடிகிறது. கிறித்துவ இறையியல் குறித்த ஆழ்ந்த சிந்தனைகள் நிரம்பியுள்ளது. நாடகம் விவாதிக்கும் ஆழ்ந்த பொருளை உள்வாங்கி மொழியாக்கம் செய்வது என்பது மிகவும் சிரமமான செயல். பேராசிரியர் ச.வின்சென்ட் தனது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். எலியட்டின் மற்ற நாடகங்களையும் இதுபோல் மொழிபெயர்த்துக் கொடுத்து தமிழ்கூறும் நல்லுலகிற்கு பேராசிரியர் வின்சென்ட் நல்கிடுவார் என்று நம்புவோம்.

The Last Gift Novel written By Abdul Razak Gurnah Bookreview By P. Vijayakumar நூல் மதிப்புரை: அப்துல்ரஜாக் குர்னாவின் தி லாஸ்ட் கிஃப்ட் - பெ.விஜயகுமார்

நூல் மதிப்புரை: அப்துல்ரஜாக் குர்னாவின் தி லாஸ்ட் கிஃப்ட் – பெ.விஜயகுமார்



புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் துயரம்

டான்சானியா நாட்டின் ஜான்ஜிபர் தீவில் பிறந்து இங்கிலாந்தில் வாழும் அப்துல்ரஜாக் குர்னா 2021ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் விருதைப் பெற்றுள்ளார். காலனிய ஆட்சியின் கொடூரங்களையும், அகதிகளின் வாழ்வியல் சோகங்களையும் தன்னுடைய புனைவிலக்கியங்களில் சித்தரித்துள்ளார். ’பாரடைஸ்’, ’ஆஃப்டர் லைவ்ஸ்’ ‘தி லாஸ்ட் கிஃப்ட்’ போன்ற பத்து நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ள குர்னா மிகச் சிறந்த இலக்கியத் திறனாய்வாளரும் ஆவார். சல்மான் ருஷ்டி, குகி வா தியாங்கோ, வி.எஸ்.நைபால் ஆகியோரின் படைப்புகள் குறித்து ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். 1968இல் தன்னுடைய பதினெட்டு வயதில் ஜான்ஜிபர் தீவில் ஏற்பட்ட இனக் கலவரத்திலிருந்து தப்பிக்கவும், தன்னுடைய மேற்படிப்புக்காகவும் இங்கிலாந்து வந்த குர்னா அங்கேயே நிரந்தரமாகக் குடியேறியுள்ளார். கெண்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் பின்காலனிய இலக்கியத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தன் படைப்புகள் அனைத்தையும் ஆங்கிலத்தில் எழுதினாலும் வாய்ப்புகள் கிடைக்குமிடத்தில் தாய்மொழியான சுவாஹிலியின் சொல்லாடல்களையும் குர்னா பயன்படுத்துகிறார்.

The Last Gift Novel written By Abdul Razak Gurnah Bookreview By P. Vijayakumar நூல் மதிப்புரை: அப்துல்ரஜாக் குர்னாவின் தி லாஸ்ட் கிஃப்ட் - பெ.விஜயகுமார்

குர்னா 2011இல் எழுதிய ’தி லாஸ்ட் கிஃப்ட்’ நாவல் இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் ஒரு குடும்பத்தினர் சந்திக்கும் இன, நிறப்பாகுபாடுகள் பிரச்சனைகளைச் சித்தரிக்கிறது. நாவலில் தந்தை அப்பாஸ், தாய் மரியம், மகள் ஹனா, மகன் ஜமால் ஆகியோர் மட்டுமே முக்கிய கதாபாத்திரங்களாக நடமாடுகிறார்கள். அப்பாஸ் பதினெட்டு வயதில் ஜான்ஜிபரிலிருந்து தப்பித்து இங்கிலாந்து வந்தவர். பதினைந்து ஆண்டு காலம் கப்பலில் வேலை செய்துவிட்டு இங்கிலாந்தின் எக்சிடர் எனும் சிறு நகரத்தில் ஒரு தொழிற்சாலையில் இன்ஜினியராக நிரந்தர வேலையில் சேருகிறார். தன்னுடைய 34ஆம் வயதில் மரியம் என்ற 17 வயதுப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அனாதைப் பெண்ணான மரியம் தன் வளர்ப்புத் தாய் தந்தையரிடம் சொல்லிக் கொள்ளாமல் அப்பாஸுடன் ஓடி வந்து விடுகிறார். இருவரும் கருத்தொருமித்த தம்பதிகளாக வாழ்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் ஹனாவையும், ஜமாலையும் நன்கு வளர்த்து ஆளாக்குகிறார்கள். ஹனா படிப்பை முடித்து ஒரு பள்ளியில் ஆசிரியையாகச் சேரவிருக்கிறாள். அவள் தன்னுடன் படித்த நிக் என்ற வெள்ளைக்கார இளைஞனைக் காதலிக்கிறாள். ஜமால் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவனாக இருக்கிறான்.

நன்கு திடகாத்திரமாக இருந்த அப்பாஸ் தன்னுடைய 63ஆவது வயதில் திடீரென்று நோயில் விழுகிறார். பேச்சுத் திறனை இழந்து படுத்த படுக்கையாகிறார். தன்னுடைய வேலையில் தொடர்ந்து கொண்டே மரியம் கணவருக்குப் பணிவிடையும் செய்து வருகிறார். தன்னை அன்புடன் நேசித்த அப்பாஸின் இளமைக்கால வாழ்வைப் பற்றி அறிந்து கொள்ள மரியம் விரும்பியதில்லை. அவரும் சொல்லியதில்லை. என்றேனும் ஒரு நாள் மரியத்திடமும், தனது பிள்ளைகளிடமும் தன்னுடைய பழைய வாழ்க்கை ரகசியங்களைச் சொல்லிடவே அப்பாஸ் விரும்பினார். சற்றும் எதிர்பாராமல் அவர் படுக்கையில் விழுந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. தங்களுடைய தாய் தந்தையரின் இளமைக்கால வாழ்க்கை பற்றி அறியும் ஆவல் பொதுவாகவே குழந்தைகளுக்கு இருப்பதுண்டு. ஹனாவும் ஜமாலும் தந்தையைப் பார்க்க ஓடோடி வருகிறார்கள். தந்தையின் உடல்நிலை கண்டு மனம் கலங்குகிறார்கள். அப்பாஸுக்குச் சிகிச்சை அளித்திடும் மருத்துவரும் பேச்சுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்கிறார். பயிற்சியாளர் அப்பாஸிடம் ஒரு டேப் ரிக்கார்டரைக் கொடுத்து முடியும் போதெல்லாம் அவரது வாழ்க்கை வரலாற்றை வாய்மொழியாகச் சொல்லி பதியச் சொல்கிறார். தினமும் சிறிது சிறிதாக பதிவாகும் தந்தையின் இளமைக்கால வாழ்க்கையை ஹனா ஓரிரவு முழுவதும் கேட்கிறார்.

துயருற்ற தன் தந்தையின் கடந்த கால வாழ்வை அறிந்து மனமுருகுகிறார். அப்பாஸ் எதிர்பார்த்தது போல் மரியமும், குழந்தைகளும் அவரின் கடந்த கால வாழ்க்கையின் மீது கோபமோ, வெறுப்போ அடையவில்லை. அவர் மீதான அன்பும், நெருக்கமும் அதிகரிக்கவே செய்கின்றன. அப்பாஸின் வாழ்க்கை முழுவதும் வலிகளால் நிறைந்திருந்ததை எண்ணி கண்ணீர் மல்குகின்றனர் அப்பாஸ் ஜான்ஜிபர் தீவில் படிப்பை முடித்து பள்ளி ஆசிரியராகப் பணி ஏற்கும் சமயத்தில் குடும்பத்தினர் அவருக்கு அவசரத் திருமணம் நடத்தி வைக்கின்றனர். அந்தப் பெண் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியிருப்பதை அப்பாஸ் அறிந்து அதிர்ச்சி அடைகிறார். தனக்கிழைக்கப்பட்ட துரோகத்தை நினைத்து வருந்துகிறார். குடும்பத்தையும், நாட்டையும் விட்டுவிட்டு ஓடிவிட நினைக்கிறார். ஜான்ஜிபர் துறைமுகத்தில் நின்றிருந்த வணிகக் கப்பலில் ஏறி ஒளிந்து கொள்கிறார். துறைமுகத்தைவிட்டு கப்பல் நகர்ந்து வெகுதூரம் சென்ற பின்னரே அப்பாஸ் ஒளிந்திருந்ததைக் கண்டுபிடிக்கின்றனர். கப்பலில் வேலையாள் தேவைப்பட்டதால் அவரை வேலைக்குச் சேர்த்துக் கொள்கின்றனர். அப்பாஸ் தன்னுடைய வாழ்வில் பதினைந்து ஆண்டு காலம் கப்பலில் பணிசெய்து கழிக்கிறார்.

The Last Gift Novel written By Abdul Razak Gurnah Bookreview By P. Vijayakumar நூல் மதிப்புரை: அப்துல்ரஜாக் குர்னாவின் தி லாஸ்ட் கிஃப்ட் - பெ.விஜயகுமார்

கப்பலில் உலகின் பல நாடுகளுக்கும் பயணித்து பல துறைமுக நகரங்களையும் பார்க்கும் வாய்ப்பு அப்பாஸுக்குக் கிடைக்கிறது. ஒருமுறை கப்பல் சில நாட்கள் தென்னாப்பிரிக்கத் துறைமுகம் டர்பனில் நங்கூரமிட்டிருந்த போது ஓர் இஸ்லாமியப் பெண்ணுடன் பழகுகிறார். அது காதலாக மலரும் முன்னர் கப்பல் புறப்பட்டு விடுகிறது. அதேபோல் மொரிஷியஸ் தீவில் லூயி துறைமுகத்திலும் கிளெய்ர் எனும் பெண்ணிடமான ஈர்ப்பும் ஒரு சில நாட்களே நீடிக்கின்றது, கப்பல் வேலையை விட்டுவிட்டு இங்கிலாந்தில் எக்சிடர் நகரத்தில் நிலையான வேலையில் அமர்ந்ததும் மரியம் மீதான காதல் வெற்றியில் முடிந்திட அழகான குடும்பம், அமைதியான வாழ்க்கை என்றாகிப் போகிறது. இருப்பினும் ஜான்ஜிபர் தீவில் விட்டுவந்த பெண், அவள் வயிற்றில் வளர்ந்த குழந்தை பற்றிய நினைவுகள் அவரின் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கின்றன. சில சமயங்களில் அவரிடம் குற்ற உணர்வும் மேலிட்டது. தன் வாழ்வின் ரகசியங்களை எல்லாம் சொல்லித் தீர்த்த சில நாட்களிலேயே அப்பாஸ் இறந்து விடுகிறார்.

தங்கள் தந்தையின் பால்ய கால வாழ்வை அறிந்த பிள்ளைகள் இருவரும் தங்கள் தாயின் வேர்களையும் தேடிக் கண்டுபிடிக்க நினைக்கிறார்கள். மரியம் தன்னைத் தத்தெடுத்து வளர்த்த அந்த இரண்டு நல்ல உள்ளங்களைப் பார்த்து மன்னிப்புக் கேட்க விரும்புகிறார். அப்பாஸைத் திருமணம் செய்தபோது அவர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் ஓடிவந்த குற்றம் அவள் மனதை உருத்திக்கொண்டிருந்தது. ஹனாவும், ஜமாலும் அவர்களின் இருப்பிடம் அறிந்து மரியத்தை அங்கே கூட்டிச் செல்கிறார்கள். அந்திமக் காலத்தில் இருந்த தன்னுடைய வளர்ப்புத் தந்தையையும், தாயையும் கண்டு மனம் நெகிழ்ந்து மரியம் மன்னிப்புக் கேட்கிறார். அவர்களின் மன்னிப்பையும், ஆசியையும் பெற்று மனம் நிறைவடைகிறார் மரியம். இதுவே பிள்ளைகள் ஹனாவும், ஜமாலும் தங்கள் தாய்க்குக் கொடுக்கும் ’கடைசிப் பரிசா’கும் தங்கள் தந்தை பிறந்து வளர்ந்த ஜான்ஜிபர் தீவுக்கு பயணத்தை மேற்கொள்ள இருவரும் திட்டமிடுவதுடன் நாவல் முடிவடைகிறது.

அப்பாஸ் – மரியம் தம்பதிகளுக்கு அடுத்தபடியாக ஹனாவும் ஒரு பருமனான கதாபாத்திரமாக நாவலில் தென்படுகிறாள். தன்னுடைய பள்ளி, கல்லூரி, வேலை பார்க்குமிடம், மால்கள், அலுவலகங்கள், ரயில், பஸ் பயணங்கள் போன்ற பொதுவெளிகளில் எல்லாம் வெள்ளையின மக்கள் கடைப்பிடிக்கும் நிறப் பாகுபாடு அவளுடைய மனதில் ஆழ்ந்த வடுக்களை ஏற்படுத்துகிறது. அவள் பல முறை அவர்களின் புறக்கணிப்பையும், நிராகரிப்பையும் அனுபவித்துள்ளாள். ஹனாவின் வாழ்வில் காதல் மலருகிறது, நிக் என்ற வெள்ளைக்கார இளைஞனைக் காதலிக்கிறாள். ஆனால் நிறமும், இனமும் அவர்களின் காதலுக்கு குறுக்கே நிற்கும் என்பதை மிகவிரைவில் புரிந்து கொள்கிறாள். ஒரு முறை நிக் குடும்பத்தினருடன் ஹனா சுற்றுலா செல்கிறாள். நிக்கின் சித்தப்பா ஹனாவின் பூர்வீகத்தைத் தெரிந்து கொள்ள விரும்பி அவளிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார். தான் ஒரு பிரிட்டிஷ் பெண் என்று திரும்பத் திரும்ப அவரிடம் ஹனா சொல்கிறாள். அதில் தவறேதும் இல்லை என்றும் நினைக்கிறாள். அதுதானே உண்மை. இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த தனக்கு இங்கிலாந்தின் குடியுரிமை கிடைத்தும் இவர்களால் ஏன் தன்னை ஒரு இங்கிலாந்துப் பெண்ணாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று ஆதங்கப்படுகிறாள்.

நிறப்பாகுபாட்டிற்கும், நிறவெறிக்கும் இடையிலான இடைவெளி மெல்லிய நூலிழை அளவுதானே! அது எப்போது அறுந்து போகும் என்று யாரறிவார். ஹனாவின் காதலன் நிக் விரைவில் அதை வெளிப்படுத்தி விடுகிறான். அவனுக்கு வேறொரு வெள்ளைக்காரப் பெண் மீது காதல் இருப்பதை அறிகிறாள். அதைச் சுட்டிக் காட்டியதும் குற்றவுணர்வு ஏதுமின்றி அதை ஒத்துக் கொள்ளும் நிக் அவளைக் கலவியின்பத்திற்கு அழைக்கிறான். “இதுவே நமது கடைசி துய்ப்பாக இருக்கட்டும்” என்று ஆணவத்துடன் அவளைக் கூப்பிடுகிறான். அவனைப் பொறுத்தவரை கறுப்பினப் பெண்கள் பாலியல் சுகத்திற்கு மட்டுமே தகுதியானவர்கள். திருமணத்திற்கு ஏற்றவர்கள் அல்ல.

நாவல் முழுவதும் அப்துல்ரஜாக் குர்னா நிறம் மற்றும் இனப்பாகுபாட்டின் பல்வேறு வடிவங்களை நமக்குச் சுட்டிக்காட்டிச் செல்கிறார். அதே சமயம் அதைக் குறிப்பிடும் போது கோபம், ஆத்திரம், ஆவேசம் அடையாமல் வன்முறை வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் மென்மையான மொழியில் சொல்கிறார். அமைதியான மொழிநடையில் அதே சமயத்தில் அழுத்தமாக, உறுதியாக வெள்ளையின மக்களின் பாகுபாட்டை, வெறுப்பைச் சொல்லி விட முடியும் என்பதை நிரூபிக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

The Last Gift Novel written By Abdul Razak Gurnah Bookreview By P. Vijayakumar நூல் மதிப்புரை: அப்துல்ரஜாக் குர்னாவின் தி லாஸ்ட் கிஃப்ட் - பெ.விஜயகுமார்

தமிழ் நாவலாசிரியர் பூமணி இங்கு நினைவுக்கு வருகிறார். தன்னுடைய ‘பிறகு’ ‘வெக்கை’ போன்ற நாவல்களில் வன்முறைகளற்ற மென்மையான மொழிநடையைக் கொண்டு சாதி இந்துக்கள் கடைப்பிடிக்கும் சாதியப் பாகுபாடுகளை, வெறியை பூமணியால் விவரித்துவிட முடிகிறது. ஆர்ப்பாட்டமும், ஆவேசமும் இன்றி அவரால் தலித்துகளின் வலியை, சோகத்தை, துயரங்களைச் சொல்லி விட முடிகிறது. அது போன்றே அப்துல்ரஜாக் குர்னாவாலும் வெள்ளை இனத்தவர்களின் பாகுபாட்டை, வெறியை அமைதியும், மென்மையும் கொண்ட மொழி கொண்டே சித்தரிக்க முடிகிறது. அதுவே குர்னாவின் வெற்றியாகும்.

The Last Gift Novel written By Abdul Razak Gurnah Bookreview By P. Vijayakumar நூல் மதிப்புரை: அப்துல்ரஜாக் குர்னாவின் தி லாஸ்ட் கிஃப்ட் - பெ.விஜயகுமார்

இலக்கியத்திற்கான நோபல் விருது குறித்த அறிவிப்பு வருவதற்கு முன்பாக கனடாவின் மார்கரெட் அட்வுட், ஜப்பானைச் சார்ந்த எழுத்தாளர் ஹருகி முராகாமி, நைஜிரியாவின் குகி வா தியாங்கோ, பிரான்சின் ஆனி எர்னோ போன்றவர்களில் எவரேனும் ஒருவரே நோபல் விருதை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்துல்ரஜாக் குர்னா விருதை வென்றிருப்பது இலக்கிய ஆர்வலர்களை வியப்பிலே ஆழ்த்தியுள்ளது. அப்துல்ரஜாக் குர்னா நோபல் விருது பெறுவதற்கு முழுமையான தகுதி கொண்டவர் என்பதற்கு அவரின் படைப்புகளே சாட்சியமாக நிற்கின்றன.

பெ.விஜயகுமார்

K.A. Manikumar's Vellore Puratchi 1806 Book Review By P. Vijayakumar. வேலூர்ப் புரட்சி 1806 - கா. அ. மணிக்குமார்

நூல் அறிமுகம்: ’வேலூர்ப் புரட்சி 1806’ இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த பேரா.கா.அ.மணிக்குமாரின் அரிய ஆவண நூல் – பெ.விஜயகுமார்  



புத்தகம்: வேலூர்ப் புரட்சி 1806
பேரா.கா.அ. மணிக்குமார்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
பக்கம்: 112
விலை: ரூ.
325.0
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/vellore-puratchi-1806/

வட இந்தியாவில் கான்பூர், லக்னோ, ஆக்ரா, டில்லி ஆகிய இடங்களில் 1857ஆம் ஆண்டு உருவான சிப்பாய்களின் எழுச்சியே இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று வரலாற்றில் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இப்புரட்சிக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே 1806ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வேலூர் கோட்டையில் வெள்ளையர்களின் ஆட்சிக்கு எதிரான வீரஞ்செறிந்த போர் நிகழ்ந்துள்ளது. அந்த நிகழ்வு வேலூர்ப் படுகொலை, வேலூர் கலகம், வேலூர் எழுச்சி, வேலூர் கிளர்ச்சி, வேலூர்ப் புரட்சி என வரலாற்றறிஞர்களால் பலவாறு வர்ணிக்கப்பட்டுள்ளது. அந்தப் போரில் நூற்றுக்கணக்கான இந்திய வீரர்கள் இன்னுயிர் ஈந்தனர். வேலூர்ப் புரட்சி குறித்த ஆழ்ந்த ஆய்வை மேற்கொண்டு ஓர் அரிய ஆவணத்தை பேராசிரியர் கா.அ.மணிக்குமார் வெளிக்கொணர்ந்துள்ளார். பிரிட்டிஷ் நூலகம் (லண்டன்), ஸ்காட்லாந்து தேசிய ஆவணக்காப்பகம் (எடின்பரோ), தமிழ்நாடு ஆவணக்காப்பகம், இந்திய தேசிய ஆவணக்காப்பகம் போன்ற இடங்களிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வேலூர்ப் புரட்சி குறித்த வராலாற்றின் மீது புதிய வெளிச்சத்தை மணிக்குமார் பாய்ச்சியுள்ளார். இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாறு குறித்து புதிய சிந்தனையையும், வழிகாட்டுதலையும் வழங்குவதாக அவரது நூல் இருக்கிறது.

பேராசிரியர் மணிக்குமார் ஈரோடு வாசவி கல்லூரியில் பணியாற்றிய போது ஏயூடி எனும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து கல்லூரி ஆசிரியர்களுக்கான பல்வேறு போராட்டங்களையும் முன்னின்று நடத்திய சமூகச் செயற்பாட்டாளர். தமிழ்நாடு பாடநூல் குழுவின் (வரலாறு பிரிவு) தலைவராகவும் செயல்பட்டுள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய போது 19,20ஆம் நூற்றாண்டுத் தமிழகச் சமூக, பொருளாதார வரலாற்றில் முக்கிய ஆய்வுகளை மணிக்குமார் மேற்கொண்டுள்ளார். ‘நவீன தமிழகத்தில் சமூக வன்முறைகள்’, ‘1930களில் தமிழகம்: பொருளாதாரப் பெருமந்தத்தின் தாக்கம்’, ‘முதுகுளத்தூரில் கொலை: சாதியும் தேர்தல் அரசியலும்’, ‘வரலாறும் சமூகமும்: கட்டுரைத் தொகுப்பு’ போன்ற நூல்களை எழுதியுள்ள மணிக்குமார் வரலாற்றுத்துறையில் தொடர்ந்து காத்திரமான பணியை ஆற்றி வருகிறார்.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களுக்கு எதிராக வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் போன்றோர் தென்தமிழகத்தில் வீரஞ்செறிந்த போர்களைப் புரிந்துள்ளனர். அதே காலகட்டத்தில் கொங்கு நாட்டில் வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான கலகக் குரலை தீரன் சின்னமலை எழுப்பியுள்ளார். மைசூரில் ஹைதர் அலியும், அவரின் புதல்வர் திப்பு சுல்தானும் கிழக்கிந்திய கம்பெனிக்கு சிம்மசொப்பனமாக இருந்துள்ளனர். இவ்வாறாக இருப்பினும் இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் 1857ஆம் ஆண்டு நிகழ்ந்த சிப்பாய்க் கலகமே முதல் சுதந்திரப் போர் என்பதாகக் குறிப்பிடப்படுவது வரலாற்றுப் பிழையன்றி வேறென்ன?

1857இல் நடந்த சிப்பாய் கலகத்தின் முன்னோட்டமே ’வேலூர்ப் புரட்சி 1806’ என்பதை அரிய சான்றுகளுடன் மிகவும் ஆணித்தரமாக மணிக்குமார் முன்வைக்கிறார். வேலூர்ப் புரட்சியின் இருநூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2007இல் பேரா.மணிக்குமார் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வு நூல் வி.ஐ.டி.பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. அதன் தமிழ் வடிவத்தை காலச்சுவடு பதிப்பகமும், வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் இணைந்து தற்போது வெளியிட்டுள்ளன.

இந்த ஆவணம் சிறு அறிமுகவுரை, நான்கு பாகங்கள், இறுதியில் முடிவுரை என்று இருநூறு பக்கங்களுக்கு விரிந்து செல்கிறது. 1806 ஜூலை பத்தாம் நாள் அதிகாலை இரண்டு மணிக்கு சுமார் ஐநூறு இந்தியப் படைவீரர்கள் திடீரென்று வேலூர் கோட்டையில் போர்கொடியை உயர்த்தினர். கோட்டையில் இருந்த ஐரோப்பியர் குடியிருப்புக்குள் புகுந்து வெள்ளையின அதிகாரிகளையும், படைவீரர்களையும் அவர்கள் சுட்டு வீழ்த்தினர். சிறிது நேரத்திலேயே ஆயுதங்களையும், ஆயுதக்கிடங்குகளையும் அவர்கள் தங்களுடைய  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அதற்குப் பின்னர் கிளர்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து மைசூர் சுல்தானின் கொடியை ஏற்றிக் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டனர். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு வேலூரிலிருந்து இருபத்தைந்து கி.மீ தொலைவிலுள்ள ஆர்காட்டிலிருந்து கர்னல் கில்லஸ்பி  குதிரைப் படையுடன் வரும் வரை வேலூர் கோட்டை இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. கில்லஸ்பி தலைமையில் கோட்டைக்குள் நுழைந்த குதிரைப்படையினர் கிளர்ச்சியாளர்களைக் கொடூரமாகப் பழிதீர்த்தனர். ஆங்கிலேயர்கள் தங்களுடைய அதிகாரத்தை மீட்டெடுத்துக் கொள்வதற்காக  சுமார் எழுநூறு இந்திய வீரர்களைப் படுகொலை செய்யதிருக்கலாம் என்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே வேலூர்ப் புரட்சியின் வெற்றி வரலாறு.

1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகம் ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கைக்கு ஏற்பட்ட படுதோல்வி என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். மார்க்ஸின் அந்தக் கூற்று வேலூர் புரட்சிக்கும் முற்றிலும் பொருந்துகிறது என்று தன்னுடைய அறிமுகவுரையில் மணிக்குமார் தெளிவாக்குகிறார். வேலூரில் இருந்த படைவீரர்கள் இந்து, முஸ்லீம் என்று மதவேறுபாடுகளின்றி ஒன்றிணைந்து போராடி ஒற்றுமையை வெளிப்படுத்தினர் என்பதே அவரது ஆய்வின் முடிவாக இருக்கிறது.

வேலூர் புரட்சி ஆங்கிலேய வரலாற்றறிஞர்களின் கண்ணோட்டத்தில் வேலூர் படுகொலை என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. ’படுகொலை’ என்று அவர்கள் குறிப்பிடுவது கொல்லப்பட்ட ஆங்கிலேயர்களை மட்டுமே. அதைவிட எண்ணிக்கையில் பல மடங்கு அதிகமாகப் படுகொலை செய்யப்பட்ட இந்தியப் படைவீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. தூக்கிலிடுதல், பீரங்கியின் வாயில் கட்டி வைத்து சுட்டுக் கொல்லுதல், தூப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல் என்று பலவிதங்களில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட இந்திய வீரர்களை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை. வேலூர்ப் புரட்சிக்குக் காரணம் படைவீரர்களின் சாதி, மத அடையாளங்கள் மீதான தேவையற்ற கட்டுப்பாடுகளே என்று ஒற்றை வரியில் ’ஆக்ஸ்ஃபோர்டு இந்திய வரலாறு’ குறிப்பிடுகிறது. வேலூர் கிளர்ச்சி பற்றிப் பெயருக்குக்கூட ’கேம்பிரிட்ஜ் இந்திய வரலாறு’ விவாதிக்கவில்லை. வில்லியம் ஃப்ரான்சிஸ் பட்லர் என்ற ஆங்கிலேய வரலாற்றாசிரியர் “ஆங்கிலேயப் படைவீர்ர்களின் நடத்தை நாகரீகமானதாகவும், ஈவிரக்கத்தோடும் இருந்ததாகக் கூறுவதை என்னென்பது? ஆங்கிலேய வரலாற்றறிஞர்கள் பித்தியன் ஆடம்ஸ், ஜான் மால்கம், ஹூவர், ஜான் வில்லியம் கே, டபிள்யூ. ஜெ. வில்சன் போன்றவர்களின் ஆவணங்கள் ஆங்கிலேயர் கண்ணோட்டத்தில் வேலூர் கலகத்தைப் பற்றிக்  குறிப்பிடும் தகவல்களையும் பதிவு செய்துள்ளார். ஆர்.சி.மஜும்தார், தமிழ் அறிஞர் ந.சஞ்சீவி, மாயா குப்தா, கே.இராசய்யன் போன்ற இந்திய ஆய்வாளர்கள் இந்தியக் கண்ணோட்டத்தில் வேலூர்ப் புரட்சி பற்றி எழுதியுள்ள கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார்.

கம்பெனி, இராணுவம், கோட்டை

‘கம்பெனி, இராணுவம், கோட்டை’ என்ற தலைப்பில் உள்ள நூலின் முதல் பாகம் ஆங்கிலேயப் பொருளாதார அறிஞர் ஆடம் ஸ்மித்தின் கூற்றுடன் தொடங்குகிறது. “இறையாண்மை அரசுகளைக் காட்டிலும் முழுவதும் வணிகர்களாலான அரசு எந்தவொரு நாட்டிற்கும் மோசமானதாகவே இருக்கும்” எனும் ஆடம் ஸ்மித்தின் கூற்றிற்கிணங்க இந்திய நலன்களுக்கு முற்றிலும் எதிராகவே கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி அமைந்திருந்தது. அதனாலேயே தங்களின் சாதி, மத வேறுபாடுகளை மறந்து இந்திய மக்கள் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராகப் போராடினார்கள். முதலாவது அத்தியாயத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் தோற்றம், வளர்ச்சி, அதற்கு துணைநின்ற ராணுவம், வேலூர் கோட்டையின் கட்டமைப்பு ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. கிழக்கிந்திய கம்பெனி படையிலிருந்த வீரர்களின் நிலைமைகள் படுமோசமாக இருந்தாலும், இந்தியர்கள் அதில் சேர்ந்தற்குக் காரணம் அவர்களைப் பீடித்திருந்த வறுமையே. கம்பெனியின் படையில் இந்துக்களும், இஸ்லாமியர்களும், அப்போது புதிதாக கிறித்துவர்களாக மதம் மாறியிருந்த இந்துக்களும் இருந்தனர். இந்துச் சிப்பாய்கள் நாமம், திருநீர், காதணி போன்றவற்றை அணிவதற்கும், இஸ்லாமிய வீரர்கள் தாடி வளர்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. அனைத்து வீரர்களும் அணிந்து கொள்ள தோலினால் செய்யப்பட்ட தொப்பி வழங்கப்பட்டது. சிலுவை போன்ற ஒரு சின்னம் அதில் காணப்பட்டது. படைவீரர்களின் புரட்சிக்கு இவையே காரணமாக இருந்தன என்று ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் கூறினர். கட்டபொம்மன், பூலித்தேவன், மருது பாண்டியர்கள், திப்பு சுல்தான், வேலு நாச்சியார், தீரன் சின்னமலை போன்றோர் நிகழ்த்திய கிளர்ச்சிகளின் தொடர்ச்சியே வேலூர் கிளர்ச்சி என்ற பேரா.இராசய்யன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார் தனிமனிதர்களின் ஆவேசமான போராட்டங்களை நாட்டுப்புறப் பாடல்களில் சித்தரித்த தமிழ்ச் சமூகம் ஏனோ வேலூர் கிளர்ச்சி குறித்து எதுவும் பேசாமல் இருந்து விட்டது. வேலூர் புரட்சியில் தனிமனிதர்கள் முக்கியத்துவம் பெறாததே இதற்கான காரணம் என்று பேரா.இராசய்யன் கூறுகிறார். பாளையக்காரர்களின் படைக்கலைப்பின் போது வேலையிழந்த வீரர்கள் ஆங்கிலேயர்களின் படையில் ஊடுருவியிருந்தனர் என்பதைக் குறிப்பிடுகின்ற இராசய்யன், இந்தியாவில் அன்றைய காலகட்டத்தில் நிலவிய கடுமையான விவசாய நெருக்கடியும் கிளர்ச்சிக்கான காரணமாக அமைந்தது என்கிறார்.

கம்பெனியின் தோற்றமும் வளர்ச்சியும்

முகலாய மன்னர் ஜஹாங்கீரின் அரசவையில் 1609ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியைத் தொடங்குவதற்கான அனுமதி கோரி வில்லியம் ஹாக்கின்ஸ் வணங்கி நின்றதில் தொடங்குகிறது கம்பெனியின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற பகுதி. அதற்கான அனுமதி முதலில் கிடைக்காமல் போனாலும் தொடர்ந்து முயற்சி செய்த தாமஸ் மன்றோ தலைமையிலான குழு 1615ஆம் ஆண்டில் மொகலாய இளவரசர் குர்ரம் மூலமாக அனுமதி பெறப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி ஆக்ரா, அகமதாபாத், பரூச், மசூலிப்பட்டினம் ஆகிய இடங்களில் தொழிற்கூடங்களைக் கட்டி தன்னுடைய வணிகத்தைத் தொடங்கியது. சென்னையில் பாழடைந்து போயிருந்த போர்த்துக்கீசியர் குடியிருப்பான சாந்தோம் அருகில் இருந்த சென்னப்பட்டணத்தை சந்திரகிரி நாயக்கர் மன்னனிடமிருந்து வாங்கி 1639இல் கோட்டையுடன் கூடிய தொழிற்கூடத்தைக் கட்டியது. சாசனத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த உரிமைகளோடு நீதிபரிபாலனம் செய்திடும் அதிகாரத்தையும் 1683ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கினார்.

”அழகான, செழிப்புமிக்க சமவெளி நடுவில் கம்பீரமான குன்றுகள் சூழ அமைந்திருந்த வேலூர் கோட்டை கீழை நாடுகளில் உள்ள இந்தியக் கட்டுமானத் திறமைக்குச் சரியான எடுத்துக்காட்டாக உள்ளது” என்று வேலூர் கோட்டையை விவரிக்கிறார் ஜேம்ஸ் வெல்ஸ். கோட்டையின்  சுவையான வரலாறு குறித்தும் நூலாசிரியர் மணிக்குமார் பதிவு செய்துள்ளார். கோட்டையைக் கட்டிய சின்ன பொம்மநாயக்கன் பற்றி அதிக வரலாற்று விவரங்கள் கிடைக்கவில்லை. பொம்மநாயக்கனின் மகன் லிங்கமநாயக்கர் விஜயநகரப் பேரரசுக்கு எதிராகப் போர் புரிந்து தோற்ற பின்னர் விஜயநகர மன்னர் வெங்கடராயரின் கைவசம் கோட்டை சென்றது. வெங்கடராயர் கோட்டைக்குள் இருந்த பளிங்கு மாளிகையில் குடிபுகுந்தார். எனவே அது ’ராயவேலூர்’ என்றழைக்கப்பட்டது. 1677ஆம் ஆண்டு வரையிலும் கிருஷ்ண தேவராயரின் வழித்தோன்றல்களிடம் இருந்து வந்த அந்தக் கோட்டை பின்னர் மராத்தியர் வசம் கைமாறியது. அதற்குப் பின்னர் ஔரங்கசீப்பின் தூதர் சுல்பிகர்கான் தலைமையிலான மொகலாயர் படை கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டது, அப்பகுதி முழுவதையும் சூறையாடிவிட்டு தன்னுடைய தளபதி தாவூத்கானை கர்நாடக நவாபாக நியமித்து விட்டு சுல்பிகர் தில்லி திரும்பினார். அவரிடமிருந்து ராபர்ட் கிளைவ் துணையுடன் ஆர்க்காடு நவாப் கோட்டையை அபகரித்துக் கொண்டார். 1756ஆம் ஆண்டில் நவாபின் சம்மதத்துடன் கோட்டையை ஆங்கிலேயர் படை ஆக்கிரமித்தது.

கோட்டையின் மூன்று கி.மீ. சுற்றளவிலும் 191 அடி அகலம் 29 அடி ஆழம் கொண்ட அகழி அமைக்கப்பட்டுள்ளது. அகழியில் பதினெட்டு அடி நீளம் இருந்த முதலைகள் வளர்க்கப்பட்டன. அன்றைய நாளில் அகழியை எளிதில் தாண்டிச் செல்ல முடியாது. கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வர் கோவில் இருந்தது. ஆங்கிலேயர் கைவசம் கோட்டை சென்ற பிறகு கோவில் ஆயுதக் கிடங்காகவும், கோவில் குளம் ராணுவ அணிவகுப்பு மைதானமாகவும் மாறியது. கோட்டை கட்டுவதற்கே முன்பே அங்கே சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும்.

இஸ்லாமியர் கைவசம் கோட்டை இருந்த போது (1687-1700) கோட்டைக்குள் மசூதி கட்டப்பட்டுள்ளது. 1846இல் பிரிட்டிஷ் அரசு 280 பேர் அமரக் கூடிய தேவாலயத்தைக் கட்டியது. 1806இல் கிளர்ச்சி வெடித்த போது வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர் 370 பேர்,  இந்தியர்கள் 1500 பேர் இருந்தனர். திப்புவின் பன்னிரண்டு மகன்களும், ஆறு மகள்களும் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

கிளர்ச்சி

’கிளர்ச்சி’ என்று தலைப்பிடப்பட்ட இரண்டாம் பகுதியில் கிளர்ச்சி குறித்த முழு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. 1806 ஜூலை 9 அன்று திப்பு குடும்பத்து இளவரசி நூர்-உல்-நிசும் திருமணம் நடக்கிறது. ஆங்கிலேய அதிகாரிகளும், வீரர்களும் இரவு விருந்து முடித்து விட்டு அவரவர் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர். அந்த நாளில் கிளர்ச்சிக்கான அறிகுறி ஏதும் கோட்டைக்குள் தென்படவில்லை.

ஜூலை பத்தாம் நாள் அதிகாலை இரண்டு மணி. அணிவகுப்பு மைதானத்தில் மரங்களின் நிழல்கள் நிலவொளியில் அழகாகக் காட்சியளித்தன. அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு திடீரென்று துப்பாக்கிகள் முழங்கின. ஒரே நேரத்தில் ஐரோப்பியர் குடியிருப்பு, வெள்ளைக்காரக் காவலர்கள், அதிகாரிகள் வசிப்பிடம் என்று அனைத்தையும் இந்திய வீரர்கள் தாக்கினர். கோடைகாலம் என்பதால் ஜன்னல்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. அதுவே தாக்குதலுக்கு எளிதாக வழியேற்படுத்திக் கொடுத்தது. படுக்கையில் ஆடைகளின்றி, பாதுகாப்பின்றி படுத்திருந்த ஐரோப்பியர்களை ஜன்னல் வழியாக கிளர்ச்சியாளர்களால் எளிதாகச் சுட முடிந்தது. லேன்ஸ்நாயக் ஒருவர் அதிகாரிகள் வசித்த இடங்களுக்குத் தீ வைத்தார். வீட்டை விட்டு வெளியேறும் அதிகாரிகளை சுட்டுக் கொல்வதற்கென்று தனித்தனியாக படையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இன்னொரு பகுதியினர் வெடிமருந்துகளும், இராணுவத் தளவாடங்களும் இருந்த அறையைக் கையகப்படுத்தி வீர்ர்களின் வசம் அளித்தனர். கர்னல் ஃபேன்கோர்ட் அவருடைய மனைவியின் முன்னிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். கர்னல் மக்கராஸ் இரண்டாவதாகப் பலியானார். சிறிது நேரத்தில் பதினான்கு  ஆங்கிலேய அதிகாரிகளும், தொன்னூற்றி ஒன்பது வீரர்களும் மடிந்தனர். அதிகாரிகள், வீரர்கள் என்று பலரும் படுகாயமடைந்தனர்.

கோட்டைக்குள் வசித்த திப்புவின் மூன்றாம் மகன் மொய்தீன் கிளர்ச்சியாளர்களுக்கு மைசூர் கொடியை கொடுத்தான். கோட்டையின் மீது அவர்கள் மைசூர் கொடியை ஏற்றினர். கோட்டைக்கு வெளியே பணியிலிருந்த ஆங்கிலேய அதிகாரி மேஜர் கோட்ஸ் கிளர்ச்சி பற்றிய செய்தி அறிந்து கோட்டைக்குள் நுழைய முயன்றார். நுழைய முடியாமல் போனதும் அவர் ஆர்க்காடு குதிரைப்படை முகாமின் பொறுப்பாளர் கர்னல் கில்லஸ்பிக்கு கடிதம் மூலம் செய்தி அனுப்புகிறார். ஜூலை 10ஆம் நாள் காலை ஆறு மணிக்கு செய்தி கிடைத்ததும் குதிரைப்படையுடன் கில்லஸ்பி வேலுர் விரைந்தார். பத்து மணிக்கு வேலூர் வந்தடைந்த குதிரைப்படை சில மணி நேர கடுமையான சண்டைக்குப் பின்  கோட்டையை ஆங்கிலேயர் வசமாக்கியாது.

திப்புவின் புதல்வர்கள் கோட்டைக்குள் காவலில் வைக்கப்பட்டனர். கோட்டையினுள் இருந்த 1,700 பேரில் 879 பேர் கொல்லப்பட்டனர் என்பதிலிருந்து கர்னல் கில்லஸ்பியின் தாக்குதல் எந்த அளவுக்கு வெறியுடன் இருந்தது என்பதை அறியலாம். கிளர்ச்சி செய்த இந்திய வீரர்கள் 466 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கர்னல் கில்லஸ்பிக்கு மிகப் பெரிய பாராட்டுதல் கிடைத்தது. வாலாஜாபாத், ஐதராபாத், நந்திதுர்க்கம், சங்கரிதுர்க்கம், பெங்களூர், பெல்லாரி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களிலும் வேலூர் கிளர்ச்சி எதிரொலித்தது. கொடூரத் தண்டனைகள் கொடுத்து அந்தக் கிளர்ச்சிகள் அனைத்தும் ஒடுக்கப்பட்டாலும் ஆங்கிலேய அதிகாரிகள், வீரர்கள் மனதில் பீதி நீடித்தது.

கிளர்ச்சிக்குப் பிறகு

கிளர்ச்சிக்குப் பிறகு என்ற மூன்றாம் பாகத்தில் விசாரணைக் குழு கண்டறிந்த உண்மைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிளர்ச்சியை ஒடுக்கிய உடனேயே லெப்டினன்ட் கர்னல் தலைமையில் விசாரணைக் குழுவை கர்னல் கில்லஸ்பி நியமித்தார். உயிர் பிழைத்திருந்த ஆங்கிலேய அதிகாரிகள் முதலில் விசாரிக்கப்பட்டனர். அடுத்ததாக கைதாகியிருந்த இந்திய அதிகாரிகளும், வீரர்களும் விசாரிக்கப்பட்டனர். ஆங்கிலேய அதிகாரிகள் இந்திய படைத் தளபதிகள் மீது பழிபோடுவதிலேயே கவனமாக இருந்தனர். கிளர்ச்சியில் தாங்கள் சேரவில்லை என்றும், கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதாக நடிக்கவே செய்தோம் என்றும் இந்திய அதிகாரிகளும், வீரர்களும் கூறினர். விசாரணைக் குழு இந்திய வீரர்களுடனான நல்லுறவைப் பொறுத்தே ஆங்கிலப் பேரரசின் பாதுகாப்பு அமையும் என்ற யதார்த்த உண்மையை நன்கு உணர்ந்திருந்தது.

விசாரணைக் குழு கூடுவதற்கு முன்னரே கைதான இந்திய வீரர்களை 1.ஒன்றுமறியாதவர்கள், 2. பயங்கரக் குற்றவாளிகள், 3.குற்றவாளிகள், 4.குற்றம் ஏதும் செய்யாதவர்கள் என்று நான்கு வகையாகப் பிரித்திருந்தனர். தீவிர விசாரணைக்குப் பின் 516 கிளர்ச்சியாளர்கள் பணியில் தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. ஆறு பேர் பீரங்கி வாயில் வைத்துக் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எட்டுப் பேர் தூக்கிலிடப்பட்டனர். சிலர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். சிலரை நாடு கடத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. கோட்டைக்குள் இருந்த திப்பு சுல்தான் குடும்பத்தினர் மீது கடுமையான தண்டனை வழங்கும் அளவிற்கு குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களைக் கல்கத்தாவுக்கு அனுப்பிட உத்தரவிடப்பட்டது. கிளர்ச்சியைத் திறமையுடன் ஒடுக்கிய கர்னல் கில்லஸ்பிக்கு நன்றி பாராட்டி 7,000 வராகன் (ரூ.24,500) வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய புதிய ராணுவ ஒழுங்கு முறைகளும், உடை, தொப்பி பற்றிய விதிகளும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டன.

காரணிகளும் விளைவுகளும்

காரணிகளும் விளைவுகளும் என்ற நான்காம் பகுதியில் புரட்சிக்கான காரணங்கள் பற்றி ஆங்கிலேய அதிகாரிகள் மட்டத்தில் நடந்த விவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. 1806ஆம் ஆண்டு புரட்சி இராணுவத்தளங்களில் மட்டுமே நடைபெற்றிருந்தாலும் இராணுவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை மட்டுமே அதற்குக் காரணியாக்குவது சரியான புரிதலாகாது என்ற விவாதம் முன்வைக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு சமூகத்தில் ஏற்பட்டிருந்த கடுமையான மாற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்த தங்களுடைய குடும்பங்களின் துயரங்களை கோட்டைக்குள் இருந்த வீரர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். அதனால் ஏற்பட்ட கோபமும், ஆற்றாமையும்தான் கிளர்ச்சிக்கான காரணம் என்ற முடிவுக்கும் ஆங்கிலேய அதிகாரிகள் வந்து சேர்ந்தனர். ராணுவத்தைத் தாண்டி வேறு பல காரணங்கள் இருந்ததாலேயே தங்களின் சமய வேறுபாடுகளை எல்லாம் மறந்து பொது எதிரியான ஆங்கிலேயருக்கு எதிராகப் படைவீரர்கள் திரும்பினர். வேலூர் கோட்டையில் மட்டுமின்றி தென்னிந்தியாவின் பிற ராணுவத்தளங்களிலும் வீரர்களிடையே அதிருப்தி இருந்து வந்தது அந்தக் கருத்தை நிரூபிக்கிறது என்ற முடிவுக்கு ஆங்கிலேய அதிகாரிகள் வந்தனர்.

இந்தியப் படை வீரரின் சம்பளம் மாதம் ஏழு ரூபாய் மட்டுமே. திப்பு சுல்தான் வழங்கியதை விடவும் குறைவான சம்பளமே வழங்கப்பட்டு வந்தது. ஒருவர் தன் ஆயுட்காலம் முழுவதையும் கம்பெனி படையில் கழித்தாலும் சுபேதார் பதவிக்குக்கூட வர முடியாத நிலையே இருந்தது. நாற்பது ஆண்டுகளாக படையில் பணிபுரிந்த ஒரு சுபேதாரை அப்போதுதான் படையில் சேர்ந்த இளைய ஆங்கிலேய அதிகாரி மரியாதையின்றி நடத்துகின்ற அவலம் இருந்தது. ஆங்கிலேய அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை மரியாதையின்றியே நடத்தினர். இந்திய வீரர்கள் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு அடிமைகளைப் போல் வேலை செய்து வந்தனர். வெள்ளைக்கார வீரன் இந்திய அதிகாரியை மரியாதைக்குக்கூட வணங்குவதில்லை. ஆங்கிலேய அதிகாரிகளின் வைப்பாட்டிகள்கூட இந்திய அதிகாரிகளைவிட அதிகப் பணம் ஈட்டினர். எல்லாவற்றிருக்கும் மேலாக ஜெனரல் ஆர்தர் வெல்லெஸ்லி தன்னுடைய படையில் காயமுற்றிருந்த வீரர்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாகச் சொல்லப்பட்டது. 1806இல் தமிழகத்தில் நிலவிய பஞ்சமும் ஒரு காரணம். பஞ்ச காலத்தில் சென்னையில் மட்டுமே 17,000 பேர் இறந்துள்ளனர். கால்நடைகளின் இழப்பினால் வாழ்வாதரங்களை இழந்துள்ளனர். வட ஆர்க்காடு மாவட்ட ஆட்சியர் டேவிட் காக்பர்ன் மோசமான விளைச்சலையும் பொருட்படுத்தாமல் நிலவரியைக் கட்டாயப்படுத்தி வசூலித்ததும் ஒரு காரணமாகியுள்ளது.

முடிவுரையில் ’வேலூர் கிளர்ச்சி’ ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான இந்திய விடுதலைப் போரின் ஓர் அங்கமே என்பது உறுதி செய்யப்படுகிறது. அது சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்ட எழுச்சியாகவும் இருந்துள்ளது. கோட்டைக்குள் அனைத்து சாதியினரும் இருந்துள்ளனர், நிலஉடைமைச் சமூகத்தைச் சேர்ந்த பிள்ளை, நாயுடு சமூகத்தினரும் விவசாயத்தில் ஏற்பட்ட துயர்களால் இராணுவப் பணிக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இவர்களைத் தவிர முக்குலத்தோர், செட்டியார், குறவர், இடையர், வன்னியர் ஆசாரி, முத்தரையர், மராத்தியர், தெலுங்கு ஜங்கமர், பறையர் என்று அனைத்துச் சாதிப்பிரிவினரும் கோட்டைக்குள் வீரர்களாக இருந்துள்ளனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மராத்தியர் பகுதியில் பேஷ்வா படையில் மஹர்கள் (தலித்துகள்) சேருவதற்கு அனுமதி கிடையாது. ஆனால் தென்தமிழகத்தில் பாளையக்காரர்கள் இராணுவத்தில் பள்ளர்- பறையர் படைப்பிரிவுகள் தனிப்பிரிவாக இருந்துள்ளன. பேஷ்வாக்கள் கடைப்பிடித்த சாதியப் பாகுபாடே பீமா-கோரேகான் போருக்கு இட்டுச் சென்றதை அறிவோம். மஹர்கள் ஆங்கிலேயர் படையுடன் சேர்ந்தது போன்ற சூழல் தமிழகத்தில் இருக்கவில்லை என்பதையும் அறிகிறோம்.

முறையாக, அமைப்பு ரீதியாக ஒன்றிணைந்து வலிமையுடன் போரிடாததால் வேலூர் கிளர்ச்சி தோல்வியடைந்ததாகப் பல அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர். அதே நேரத்தில் அவர்கள் ரயில் வசதி, தந்தி, பத்திரிக்கைகள் ஆகியன இல்லாத காலத்தில் இரகசிய ஆலோசனைகளை மேற்கொண்டு தங்களுக்கே உரிய வழியில் ஆங்கிலேயர்களின் கண்களில் படாது செய்திகளைத் தூரத்து இடங்களுக்கு அனுப்பிய கிளர்ச்சியாளர்களின் திறமைகளைப் பாராட்டியுள்ளனர். வேலூர் கிளர்ச்சி ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு எதிரான இந்திய வீரர்களின் ஒன்றுபட்ட போராட்டமே. உணர்ச்சிவசப்பட்டு மட்டுமே அந்த வீரர்கள் செயலில் இறங்கவிடவில்லை. ஏகாதிபத்தியக் கொள்கைகளை எதிர்த்து, மத சாதியத் தடைகளை மீறி ஆங்கிலேயர் ஆட்சியைத் தூக்கி எறிந்திடவே அவர்கள் திட்டமிட்டனர். ”போரிடாமல் இருப்பதைவிட போரிட்டு தோற்பது மேல்,” என்ற ஆங்கிலக் கவிஞன் மில்டனின் கூற்றுப்படி நடந்துள்ளனர் என்பது தெரிகிறது. ”ஆக்கிரமிப்பாளர்கள், சுரண்டல்வாதிகளுக்கு எதிரான கிளர்ச்சிகளை ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராகவே பார்க்க வேண்டும்” என்றே வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் கருதுகிறார். அந்த வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாகவே ’வேலூர்ப் புரட்சி 1806’ வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டும் என்று சொல்லி மணிக்குமாரின் ஆய்வு நிறைவடைகிறது.

வேலூர்ப் புரட்சியைப் போன்று வரலாற்றின் பக்கங்களில் இடம் பெற்று முக்கியத்துவம் பெறாமல் இன்னும் ஏராளமான விடுதலைப் போராட்டங்கள் இருக்கலாம். பேரா.மணிக்குமார் இதுபோன்று வரலாற்றில் காணாமல் போயுள்ள பக்கங்களைத் தேடி எடுத்து பதிவு செய்திட வேண்டும். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றைத் திருத்தியும், திரித்தும் எழுதும் போக்கினை இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் ஊக்குவிக்கும் சூழலில் பேரா.மணிக்குமார் போன்ற வரலாற்று அறிஞர்களின் தேவையை உணர்கிறோம்.

மணிக்குமார் தன்னுடைய ஆய்வுத் திறனையும். வரலாற்றியலில் இருக்கும் அறிவையும் பயன்படுத்தி இதுபோன்ற பல அரிய நூல்களையும் கொண்டு வருவார் என்று நம்புவோம்.

  • பெ.விஜயகுமார்.

Sakthi Jothi [சக்தி ஜோதி] Book Aan Nandru Pen Inidhu [ஆண் நன்று பெண் இனிது] Review by P. Vijayakumar. Book Day, Bharathi Puthakalayam

‘ஆண் நன்று பெண் இனிது’ கவிஞர் சக்திஜோதியின் நினைவலைகள்  – பெ. விஜயகுமார்



தமிழகம் நன்கறிந்த சங்க இலக்கிய அறிஞரும், ஆய்வாளருமான சக்திஜோதி தன் நினைவலைகளை எழுத்தோவியமாக்கிக் கொடுத்துள்ளார். எளிய இயல்பான மொழியில் எழுதப்பட்டுள்ள ’ஆண் நன்று பெண் இனிது’ கட்டுரைத் தொகுப்பு சக்திஜோதியின் ஆழ்மனதில் உறைந்திருக்கும் நினைவின் குறிப்புகளாகும். ஆங்கில அறிஞர் சாமுவேல் ஜான்சன் தன்னுடைய கட்டுரைகளை ”மனதின் உலா” (Loose sally of the mind) என்றழைப்பார். சக்திஜோதியின் உள்ளக்கிடக்கையும் கட்டுரைகள் வழி உலாவருவதைப் பார்க்கிறோம். ‘நிலம் புகும் சொற்கள்’. தொடங்கி ‘கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்’ வரை பனிரெண்டு கவிதைத் தொகுப்புகள் மூலம் தமிழின் புதுக்கவிதை வெளியில் காத்திரமான பங்களிப்பு செய்துள்ள சக்திஜோதியின் இரண்டாவது கட்டுரைத் தொகுப்பிது. ’சங்கப் பெண் கவிஞர்கள்’ எனும் கட்டுரைத் தொகுப்பில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கப் பெண் கவிஞர்கள் 45 பேரை இன்றைய தமிழ்ச் சமூகம் புரிந்து கொண்டாடிடும் வண்ணம் அழகு தமிழில் எழுதிப் பரவசப்படுத்தினார். ’ஆண் நன்று பெண் இனிது’ தொகுப்பின் முப்பது கட்டுரைகள் வழி சக்திஜோதியின் நினைவோடை தெள்ளிய நீராகத் ததும்பி ஓடுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் வாழும் சக்திஜோதி சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். சங்க இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றதோடு சங்க இலக்கியத்தின் நயம், பெருமை, தொன்மை, மேன்மைகளை தமிழ் கூறும் நல்லுலகிற்கு பரப்புரை செய்து நற்பணியாற்றி வருகிறார். சங்க இலக்கியப் பாடல்களை சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் சக்திஜோதி தெள்ளுதமிழில் விளக்கிடும் உரைகள் காணொளிக் காட்சிகளாக (YouTube) வலம் வருகின்றன. சங்க இலக்கியப் பெருங்கடலில் நீந்தி முத்தெடுக்கத் தவறியவர்கள், சங்க இலக்கியச் செழிப்பினை முறையாகப் படித்துப் பயனடையும் வாய்ப்பை இழந்தவர்கள் ’கற்றலில் கேட்டல் நன்றே’ என்ற கூற்றிற்கிணங்க சக்திஜோதியின் இனிய உரைகளைக் கேட்டு மகிழலாம். தன்னுடைய இலக்கியச் சாதனைகளுக்காக சக்திஜோதி தமிழக அரசின் நூலக விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது. சிற்பி இலக்கிய விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவரின் கவிதைகள் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இலக்கியப் பணிகளைத் தாண்டி இயற்கை வேளாண்மை, நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வூட்டல் ஆகியவற்றிலும் சக்திஜோதி ஆர்வத்துடன் செயல்படுவது போற்றுதலுக்குரியது. பெண் கல்வியை முன்னெடுத்துச் செல்லும் சமூகச் செயற்பாட்டாளராகவும் மிளிர்கிறார்.

சக்தி ஜோதி - தமிழ் விக்கிப்பீடியா

தி இந்து குழுமம் வெளியிடும் காமதேனு இதழில் ’ஆண் நன்று பெண் இனிது’ என்ற தலைப்பில் முப்பது வாரம் தொடராக  வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன இக்கட்டுரைகள்.  சக்திஜோதி தற்செயலாகச் சந்தித்த அல்லது தன்னுடன் நெருங்கிப் பழகிய மனிதர்களைப் பற்றிய நினைவுகளையே சொற்சித்திரமாகத் தீட்டியுள்ளார். முப்பது கட்டுரைகளில் நூற்றுக்கும் மேலான மனிதர்களின் சலனங்கள், சஞ்சலங்கள், சாதனைகள் பதிவாகியுள்ளன. பயணங்கள் தரும் அனுபவங்கள் அலாதியானவை. தன்னுடைய பல்துறை பணிசார்ந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும், உலகின் பல நாடுகளுக்கும் சக்திஜோதி பயணித்துள்ளார். அன்றாட வாழ்வில் தான் சந்தித்த மனிதர்களின் மன ஆழத்தில் அமிழ்ந்து கிடக்கும் எண்ணவோட்டங்களையும், உணர்ச்சிகளையும் சக்திஜோதி காணத் தவறவில்லை.

’ஆண் நன்று பெண் இனிது’ எனும் பாரதியாரின் கவித்துவமான சொற்றொடரையே தொகுப்பின் தலைப்பாகத் தேர்ந்தெடுத்துள்ளது சாலப் பொருந்துகிறது. சக்திஜோதியின் பெண்ணியம் எவ்வளவு மென்மையானது என்பதையும் தலைப்பு புலப்படுத்துகிறது. ஆண்களை எதிராகக் கொள்வதல்ல பெண்ணியம்; ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதே பெண்ணியம் என்ற உயர்ந்த கோட்பாடு வெளிப்படுகிறது. ஆம்; கட்டுரைகளில் காணப்படும் ஆண்கள் யாரும் கொடிய வில்லன்கள் அல்ல. மனிதர்களுக்கே உரிய பலங்களையும் பலவீனங்களையும் கொண்ட சாதாரண மனிதர்களே. மிகை உணர்ச்சிகள் ஏதுமற்ற ரத்தமும் சதையுமான நிஜ மனிதர்களையே காண்கிறோம். இன்னும் ஒரு படி மேலே சென்று ஆண்மையின் நல்ல அடையாளங்களாக விளங்குபவர்களை மட்டுமே சித்தரிக்கிறார். பெண்களை அவமதிக்கும் அல்லது அவலத்திற்குள்ளாக்கும் ஆண்கள் பற்றிய சித்தரிப்பை தவிர்க்கிறார். ஒரு சில பாதிக்கப்பட்ட பெண்கள் வழியாகவே ஆண்களின் குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

‘தவணை முறை வாழ்க்கை’ எனும் முதல் கட்டுரையில் ‘பாத்திரக்கார பாய்’ என்றழைக்கப்படும் அரிய மனிதர் ஒருவரைச் சந்திக்கிறோம். தள்ளுவண்டியில் பாத்திரங்களை ஏற்றிக்கொண்டு கிராமங்களில் அலைந்து தவணை முறையில் வியாபாரம் செய்யும் அந்த எளிய மனிதருக்குத்தான் எத்துணை பெரிய மனது! ”உங்களிடம் பாத்திரம் வாங்கி தவணைகளை ஒழுங்காகக் கட்டாமல் யாரேனும் உங்களை ஏமாற்றியிருக்கிறார்களா?” என்ற கேள்விக்கு அவர் தரும் பதில் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ”தவணைகளைக் கட்டாதவர்கள் உண்டு; ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று சொல்ல மாட்டேன். ஏதோ பாவம்! பணக் கஷ்டம்! கட்டவில்லை” என்று சொல்லி பெருமனதுடன் அவர்களை மன்னிக்கிறார்; மறக்கிறார். இத்தகு உயர்ந்த குணத்திற்கு இணையாக தி.ஜானகிராமனின் ‘கடன் தீர்ந்தது’ என்ற சிறுகதையில் வரும் கதாபாத்திரத்தை வாசகர்களுக்கு சக்திஜோதி நினைவுகூர்வது பொருத்தமாகிறது. ‘கடன் தீர்ந்தது’ கதையில் சுந்தரதேசிகர் என்ற வெள்ளந்தியான மனிதருக்கு வயல் வாங்கித் தருவதாகச் சொல்லி ராமதாஸ் என்பவன் இருபதாயிரம் ரூபாயை ஏமாற்றி எடுத்துக் கொள்கிறான். எவ்வளவோ முயன்றும் அவனிடமிருந்து பணத்தை திரும்ப வாங்க முடியாது போய் விடுகிறது. அவன் சாகும் தருணத்தில் சுந்தரதேசிகர் ”உன்னிடம் என்ன இருக்கோ அதைக் கொடு; சாகப் போற நேரத்துல நீ கடனோட சாக வேண்டாம்” என்று சொல்லி அவன் கையிலிருந்த ரெண்டணாவை வாங்கிக் கொண்டு “பராசக்தி கேட்கச் சொல்கிறேன் உன் கடன் பூராவும் தீர்ந்து போச்சு” என்று சொல்லிவிட்டுப் போகிறார். கதையும் முடிகிறது. தி.ஜானகிராமனின்  ‘கங்கா ஸ்நானம்’ சிறுகதையும் இது போன்ற உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதரைச் சித்தரிக்கிறது. தனக்கு துரோகமிழைத்த கயவனை மன்னித்து அவன் செய்த பாவத்துக்காகவும் கங்கா ஸ்நானம் செய்கிறார் அந்த மாமனிதர்.

ஆணாதிக்க மனோபாவம் இயல்பாகவே சில ஆண்களின் மனதில் ஏறி விடுகிறது. ”சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை”. ’பொம்பள சிரிச்சா போச்சு’, ‘ஆண் பிள்ளை சிங்கம்’ என்பது போன்ற உலுத்துப் போன பழமொழிகள் இன்னும் வழக்கில் இருக்கத்தானே செய்கின்றன. ‘சக்கரங்களின் பின்னே….’ கட்டுரையில் ஆணாதிக்க மனோபாவம் எவ்வாறு ஆண்களை அலைக்கழிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. கார், ஸ்கூட்டர் ஓட்டுவது ஆண்களின் அடையாளமாகக் கருதப்பட்ட காலமெல்லாம் மாறிவிட்டது. ஆனால் இன்றும் கார், ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களை ஆணவம் மிக்கவர்களாகப் பார்ப்பது அவலமே. தெருக்களில் வாகனம் ஓட்டிச் செல்லும் பெண்கள் சிரமத்துக்குள்ளாகிறார்கள். விரைந்து செல்லும் பெண்களின் வாகனத்துக்கு வழிவிடுவதை ஆண்கள் இழிவு என்று கருதுகிறார்கள். வழிவிட மறுப்பதுடன் உரசிச் சென்று முந்துவது ஆபத்தாகவும் முடிகிறது. சாலையில் கூட தன்னையொரு பெண் முந்திச் செல்வதை விரும்பாத ஆண்கள் இச்சமூகத்தில் இருப்பது எவ்வளவு துயரமானது!

Routemybook - Buy Aan Nandru Pen Inidhu - [ஆண் நன்று பெண் இனிது] by  Sakthijothi [சக்திஜோதி] Online at Lowest Price in Indiaபெறுவதில் கிடைக்கும் இன்பத்திலும் கொடுப்பதில் கிடைக்கும் இன்பம் பெரிது என்பதை உணர்த்துகிறது ‘பெறுவோம்… தருவோம்’ கட்டுரை. பெரிய தொழிலதிபர் தன்னுடைய மகன் அஸ்லமின் பிறந்தநாளை புதுவிதமாகக் கொண்டாடுகிறார். அஸ்லமின் நண்பர்களை எல்லாம் பிறந்தநாள் பரிசைப் பணமாகக் கொடுக்கச் சொல்கிறார். பரிசாகக் கிடைத்த பணத்துடன் தானும் ஒரு தொகையைப் போட்டு முதியோர் இல்லத்தில் இருப்போருக்கு தேவைப்படும் பொருட்களை வாங்குகிறார்.  குழந்தைகள் முதியோர் இல்லத்தில் பகல் பொழுதைக் கழிக்கிறார்கள். முதியோர்களுக்குப் பரிசுகளைக் கொடுத்து அவர்களுடன் விருந்துண்டு மகிழ்கிறார்கள். அஸ்லமின் தந்தை கொடுப்பதிலிருக்கும் மகிழ்ச்சியை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறார். கொடுப்பதற்கு பெரும்  பணமெல்லாம் தேவையில்லை. மனமிருந்தால் போதும். முகம் பார்த்து ஒரு புன்னகை; மனம் தொடுகிற ஒரு வார்த்தை; கையைப் பற்றிக் கொண்டு அன்பைப் பகிர்தல் ஆகியன போதுமே என்று நெகிழ்ச்சியுடன் கட்டுரை முடிகிறது.

தமிழர்களிடையே வாசிப்புப் பழக்கம் அரிதாகவே இருக்கிறது. தமிழர்கள் நெல்லை சென்றால் அல்வா வாங்குவார்கள், மணப்பாறை சென்றால் முறுக்கு வாங்குவார்கள், ஒவ்வொரு ஊரிலும் ஏதேனும் வாங்குவதற்கு ஒரு பொருள் வைத்திருப்பார்கள், ஆனால் எந்த ஊர் போனாலும் புத்தகம் வாங்க மாட்டார்கள் என்று அறிஞர் அண்ணா கேலியாகச் சொல்வாராம்! ஆங்கிலேயர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கம் நிறைந்திருக்கிறது. ரெயில், விமான நிலையங்களில் காத்திருக்கும் நேரங்களில் புத்தகத்தில் மூழ்கிக் கிடப்பதைக் காணலாம். சக்திஜோதியின் ‘நல்ல அப்பா… நல்ல புத்தகம்… நல்ல தலைமுறை’ கட்டுரை வாசிப்பை நேசிக்கும் பெரியவர் ஒருவரை அறிமுகப்படுத்துகிறது. கு.இலக்கியனின் ‘சாபத்துக்குள் பயணிக்கும் ரயில்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் சந்திக்கும் கவிஞரின் அப்பா குமணன் தான் அந்தப் புத்தகக் காதலர். தன்னுடைய வீட்டு வறுமையையும் மீறி தன் மகனுக்கு புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்து வளர்த்தவர். தமிழகத்தில் திராவிட இயக்கத்தையும், பொதுவுடைமை இயக்கத்தையும் சார்ந்தவர்கள் ஓரளவு படிக்கும் பழக்கத்தை வளர்த்துள்ளார்கள். இருப்பினும் தமிழின் மிகச் சிறந்த புத்தகங்களும் கூட ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பதில்லை என்ற குறையினை கவிஞர் சக்திஜோதி குறிப்பிடுகிறார். சொந்த அனுபவத்தில் நிகழ்ந்ததாகவும் இருக்கலாம்.

’பார்வதி சூழ் உலகு’ கட்டுரையில் பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இருவரை சக்திஜோதி அறிமுகம் செய்கிறார். அமலா, பார்வதி எனும் இவ்விரு பெண்களின் திண்மை பாராட்டுதலுக்குரியது. ”முட்டி/ மோதிச் சிதறடிக்க/ முயலுபவர்கள்/ அறிவதில்லை/ உள்ளுக்குள்/ உடைந்து தேறிய/ பெண்ணொருத்தியின்/ உள்ளம் தீட்டவும் தீராத/ திண்மை கொண்ட/ வைரம் என்பதை”. எனும் சக்திஜோதியின் கவிதை வரிகளுக்கு அவர்கள் சாட்சியாய் விளங்குகிறார்கள். கவிஞர் சக்திஜோதி தன் பால்ய காலச் சிநேகிதி அமலாவை பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கல்லூரி விழாவில் சந்திக்க நேருகிறது. அமலா இளம் வயதில் கணவனை இழந்து மறுமணம் முடிக்காமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். கணவனின் மரணத்திற்குப் பிறகு இன்னொரு ஆணின் துணையுடன் மட்டுமே வாழ்ந்திட முடியும் என்று அமலா நினைத்திடவில்லை. தனித்தும் பெண்ணால் வாழ முடியும் என்று வைராக்கியத்துடன் நம்புகிறார். கணவன் இறந்து போனதால் தனித்து வாழும் பெண்களை மட்டுமா சமுதாயத்தில் பார்க்கிறோம்.   மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு ஓடிப்போகும் எத்தனையோ ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! அதனையும் எதிர்கொண்டு வைராக்கியத்துடன் வாழும் பெண்களையும் பார்க்கிறோமே! அமலா தன் தோழியிடம் இத்தகு சோகத்தைச் சுமந்து வாழும் பார்வதி எனும் பெண்ணை அன்று காலை சந்தித்ததையும், அவள் தன்னுடன் பகிர்ந்து கொண்ட துயரக் கதையையும் சொல்கிறாள். மூன்று குழந்தைகளுக்குத் தகப்பனான கணவன் வேறொரு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருப்பதை அறிந்ததும் அவனைப் பிரிந்து தனித்து வாழ்ந்து சாதித்துக் காட்டியுள்ளாள் பார்வதி. இன்று தன்னுடைய ஐம்பது வயதில் மூன்று குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கி வெற்றி பெற்றுள்ளதை பெருமிதத்துடன் பார்க்கிறார். நம் சமூகம் பார்வதி சூழ் உலகுதானே! என்று அமலாவும், தோழி சக்திஜோதியும் சோகத்துடன் அங்கலாய்ப்பது நம் காதுகளில் கேட்கிறது.

சக்திஜோதியின் உரைநடை தெளிந்த நீரோடை போல் ஓடுகிறது. கட்டுரைகளை வாசிக்கும் போது அவர் நம்முடன் உரையாடுவது போல் உணர்கிறோம். வாசகர்களுடன் கலந்துரையாடல் வழி கட்டுரையை நகர்த்திச் செல்லும் உத்தியை ஆங்கில இலக்கியத்தில் சார்ல்ஸ் லாம் (Charles Lamb) என்ற எழுத்தாளர் கையாண்டுள்ளார். அவருடைய எலியாவின் கட்டுரைகள் (Essays of Elia) வாசிப்பதற்கு இன்பம் பயப்பன. சக்திஜோதியின் கட்டுரைகளும் படிக்கும் போது தெவிட்டாத இனிமையுடன் இருக்கின்றன. எவ்வளவு கனமான விஷயங்களையும் தன்னுடைய மென்மையான வாதங்கள் மூலம் எளிதாக்கிவிடுகிறார்.   மனித உறவுகளின் நுட்பங்களையும், வாழ்வியல் சிக்கல்களையும், உளவியல் பிரச்சனைகளையும் தனக்கே உரித்தான எளிய மொழியில் விளக்கிடும் தேர்ந்த படைப்பாளியாக பரிணமிக்கிறார் சக்திஜோதி,  தான் சந்தித்த, பழகிய மனிதர்களைப் போல் வாசகர்களும் பல மனிதர்களைச் சந்தித்தும், பழகியும் இருப்பார்கள் எனில் அதுவே நன்று. அதுவே இனிது. என்று முத்தாய்ப்பாக தொகுப்பை முடிக்கிறார்.

சக்தி ஜோதி - Buy Books Online - Books2Home - Maths, Commerce & Management  Books

உலகில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களும் கோடிக்கணக்கான விதங்களில் வாழ்கிறார்கள். எந்தவொரு மனிதனும் மற்றொரு மனிதனைப் போல் இருப்பதில்லை என்பதே இயற்கையின் விநோதம். மனித மனத்தின் ஆழத்தை யாராலும் கண்டுகொள்ள முடியாது.  அன்பு ஒன்றே மனிதர்களை இணைக்கும் பாலமாகும். வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவதாகும். இனம், மதம், நாடு, மொழி, சாதி எனும் வேறுபாடுகளை எல்லாம் கடந்து மனித குலம் அன்புடன் வாழ்ந்திட  முடியும் என்பதை தன் கவிதைகள், கட்டுரைகள் வழி உணர்த்தி வெற்றி பெற்றுள்ளார் சக்திஜோதி.

 –பெ. விஜயகுமார்.

—————————————————————————

நூல் அறிமுகம்: ’மனாமியங்கள்’ – புற உலகை அறியாத அப்பாவிப் பெண்களின் அக உலகை விவரிக்கும் சல்மாவின் நாவல் – பெ.விஜயகுமார்.

நூல் அறிமுகம்: ’மனாமியங்கள்’ – புற உலகை அறியாத அப்பாவிப் பெண்களின் அக உலகை விவரிக்கும் சல்மாவின் நாவல் – பெ.விஜயகுமார்.

தமிழ் இலக்கிய வானில் கவிஞராகப் பரிணமிக்கும் சல்மா புனைவிலக்கியத்திலும் தடம் பதித்து சாதனை படைத்துள்ளார். ‘ஒரு மாலையும், இன்னொரு மாலையும்’, ‘பச்சை தேவதை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை கொணர்ந்துள்ள சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’, ‘மனாமியங்கள்’ எனும் இரண்டு நாவல்கள், ’சாபம்’…
’குருகும் உண்டு’ – நல்ல குறுந்தொகை எனப்படும் சங்கத் தமிழ் பாடல்களின் மேன்மையை விளக்கிடும் நூல் : பெ.விஜயகுமார் 

’குருகும் உண்டு’ – நல்ல குறுந்தொகை எனப்படும் சங்கத் தமிழ் பாடல்களின் மேன்மையை விளக்கிடும் நூல் : பெ.விஜயகுமார் 

காலத்தால் மிகவும் முற்பட்டவை என்பதால் இன்றைய இளைய தலைமுறையினர் படித்து இன்புற முடியாதவையாக சங்கப்பாடல்கள் இருக்கின்றன. இக்குறையைப் போக்கிட சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட அறிஞர்கள் சங்கப் பாடல்களுக்கு எளிய விளக்கங்கள் அளித்து பல நூல்களை எழுதி வருவது தமிழ்…
’முகிலினி’ இரா.முருகவேளின் சூழலியல் விழிப்புணர்வு குறித்த நாவல் – பெ.விஜயகுமார்

’முகிலினி’ இரா.முருகவேளின் சூழலியல் விழிப்புணர்வு குறித்த நாவல் – பெ.விஜயகுமார்

நூல்: முகிலினி ஆசிரியர்: இரா.முருகவேள் வெளியீடு: ஐம்பொழில் பதிப்பகம் விலை: ₹333.00 INR* சூழலியல் குறித்த விழிப்புணர்வு உலகெங்கிலும் பரவி வரும் காலமிது. சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்து போராடுவதைப் பார்க்கிறோம். தமிழகத்திலேயே கூடங்குளம் அணுமின் நிலையம், தூத்துக்குடி…
Prof. Mu. Ramasamy in Vidathu Karuppu Book Review By P. Vijayakumar. Book day website is Branch of Bharathi Puthakalayam

‘விடாது கருப்பு – பெரியாரியல் நாடகங்கள் 5’ பேரா. மு. ராமசாமியின் ஐந்து வீரியமிக்க நாடகங்களின் தொகுப்பு – பெ.விஜயகுமார்

நூல்: " விடாது கருப்பு - பெரியாரியல் நாடகங்கள் 5 " ஆசிரியர்: மு. ராமசாமி (Ramasamy) வெளியீடு: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்  விலை: ₹190 இன்றைக்கு சனாதன இந்து மதத்தின் கைகள் ஓங்கியுள்ள சூழலில் தந்தை பெரியாரின் தேவை முன்னெப்போதையும்…