paangai thamizhan kavithai பாங்கைத் தமிழன் கவிதை

பாங்கைத் தமிழன் கவிதை

ஓர் அரசுப் பள்ளியின் கலை விழா! 🌹💥🌹💥🌹💥🌹💥🌹💥🌹 கலகலப்பாகிவிடும் ஒரு மாதத்திற்கு முன்பே! பொறுப்பாசானிடம் பெயர்களைப் பதிந்து என்னப் போட்டியென ஊர்ஜிதப் படுத்திய அந்த நிமிடத்திலிருந்து.... மாணவரென்ற நிலை மாறி.... இராஜா மந்திரி கவிஞர் ஓவியர் அதிகாரி ஆசிரியர் நடிகர் பாடகர்…
paangai thamizhan kavithai பாங்கைத் தமிழன் கவிதை

பாங்கைத் தமிழன் கவிதை

*கடவுளுக்கு முன் அனைவரும் சமம்*                                          •••••••••••••••••••••••••••••••• சேரிகளில் வாழ்ந்து மறைகின்றவர்க்கு சொர்க்கத்திலோ நரகத்திலோ…
கவிதைகள்: பாங்கைத் தமிழனின் கசப்புச் சுவைகள் kavithai: pangai thamizhanin kasapusuvaigal

கவிதைகள்: பாங்கைத் தமிழனின் கசப்புச் சுவைகள்


நவீன உடைகள்
அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன
வறுமை அடையாளம்
வெள்ளையும் ஒன்றுதான்
கொள்ளை கொள்கையும் ஒன்றுதான்
கொடி நிறமே வேறு
தலையசைக்கும் பயிர்
தாலமிசைக்கும் சேற்றில் கால்கள்
களை பறிப்பவள் பாட்டு
உண்பதற்கானத் தலைகள்
இந்திய மக்கள் தொகை
கடலில் குறைவான மீன்கள்
கொடி பறக்கிறது
கோட்டைகள் எழப்போகும் வயல்வெளி
குடியானவன் ஆண்டி
மருந்தில்லா உணவுமில்லை
மதுவுண்ணா பயிருமில்லை
வயலெல்லாம் சாராய புட்டிகள்
மன உறைக்குள் வாள்
கை குலுக்கள் நடிப்பு
அரசியல் களம்
வசூல் மையங்கள் திறப்பு
தேதிகள் அறிவிக்கப் பட்டன
கடன் பெற்றோர்
கோடை வெப்பம்
குளு குளு குளிர்ச்சி
பெருங்கோயில் கருவறை
அண்ட விடாது
தமிழிளைஞன் வாசமறிந்தக் காளை
அடுத்த மாநில இளைரை