கவிஞர் பாண்டிச்செல்வி எழுதிய “நெருப்புச் சொற்கள்” கவிதை நூல்
க. பாண்டிச்செல்வியின் இரண்டு கவிதைகள்
விதை தூவும்
பறவை
எடுத்துக்கொள்வதில்லை
செல்ஃபி
மழைபொழிந்திடும்
மேகங்கள்
தண்ணீர் கட்டணம்
வசூலிக்கவில்லை.
மரங்களை
வளர்த்தெடுக்கும் பூமி
வரி கேட்பதில்லை.
பூக்களின்
சேர்க்கைக்கு
பதிவுக் கட்டணம் கேட்பதில்லை
தேனீ

தண்ணீர் வற்றிய
கிணறுகள்,
குப்பைத் தொட்டி,
கண்ணீர் வற்றிய
கிணறு
விவசாயிகளின்
கண்கள்,
சு.பாண்டிச் செல்வியின் இசைப்பாடல்
பல்லவி
ஊருக்குள்ள எளவட்டம் நூருபேரு இருந்தாலும் _ என்
உசுருக்கு புடிச்சவன் நீதானே !
மன்மதனா நீயுமில்ல மமதையும் உனக்குயில்ல _ இவ
மனசுக்குப் புடிச்சவன் நீதானே !
முறுக்காக மீசை வச்சு
கிறுக்காக லுங்கி கட்டி _ நீ
காத்திருப்ப பொட்டிக்கடையில…
அருகாமை வந்து நின்னா _ என்ன
அறுப்பாயே முட்டக் கண்ணால
உன்னைப் பூபோல சூடிக்குவேன் ரெட்டை சடையில..
சரணம் 1
தரிசு போல மனம் கிடக்கையிலே_ நீ
தண்ணியத்தான் இரைக்கிற
பொறண்டு பொறண்டுங்கூட உரக்கம்வல்ல_
நெஞ்சுல புளியத்தான் கரைக்கிற…
நடுச்சாமம் எந்திருச்சு சருவத்த தூக்கிக்கிட்டு
தனியாத்தான் நடக்குறேன்_
ஒரு விதமாத்தான் இருக்குறேன் !
கத்தாழப்பழமா செவக்குறேன் _ அவன்
கண்ணப் பாக்கத்தான் மருகுறேன் .
சரணம் 2
மத்தியான வெயில் நேரத்திலும்
என் மண்டைக்குள்ள முறைக்குற !
கண்ணாலம் கட்டி வாழ்ந்துக்கிற _
என்ன கைய நீட்டி அழைக்கிற..!
சிறுகாத்து வீசுனாலும் ஒருதூசு விழுமென
புருவத்துப் பக்கத்துல _
காவலுக்கு நிக்குறியே !
சாதி தடுத்தாலும் சேரணும் _
நாம கோடி வருசங்கள் வாழணும் !

க. பாண்டிச்செல்வி
க. பாண்டிச்செல்வியின் மூன்று கவிதைகள்
கடுங் கோபக்காரி நானெ
வர்ணம் பூசி சித்தரிக்கிறார்கள் ,
பரப்புரை செய்கிறார்கள் .
மூட்டிவிட்டு
முட்டுச்சந்தில் முனங்குகிறார்கள்
நெருப்பின்றி புகையுமா ஆராய்கிறார்கள்
பற்றவைத்த அறிவாளிகள்.
அப்படியென்ன வினையாற்றினேனெ விம்முகிறார்கள் இந்த கோவேறுகள்.!
அடிமைச்சங்கிலியின் ஒரு கண்ணியை அறுக்கமுற்பட்டேனென அதெப்படி
பாலூட்டும் என் மார்பகம் நிமிரலாமா ?
எங்கே அந்த மீசைக்காரன்
ரெளத்திரம் கற்கச் சொன்னவன்
எத்தனை யுகங்கள்
எனச் சொல்லவில்லையே !
எல்லா நாட்கள் போல் இன்றல்ல..?
உன் நினைவு தோன்றலின் அனுபவத்தை வாசித்து என் நாவு சுவைத்துண்கையில்
உமிழ்நீர் உப்பு கரிக்கின்றது.!
வறண்ட கண்களின் வெறித்த பார்வையோடு
கால்கள் பயணிக்க
பாதம் தேடுகின்றது
கடற்கரை குறுமணலில்..
உன்சுவடுகளை
கதகதப்பான நின் சீண்டலில் தொலைத்த
நாட்களைத் தேடுகையில்
மணல் சுழலில் பதப்பட்டுக் கிடந்தன ……

காயம் குறித்து
கவலைகொள்ளவில்லை,
கனி.
சுவைக்குறித்து
சொல்லவில்லை,
கிளி
கூந்தல் – க. பாண்டிச்செல்வி
கூந்தல்
வாசலை நனைத்துப் போன சாரல்
அவளின் சிரத்தை நனைத்தது.
நீண்ட நாள் முடித்து வைத்த
தலைமுடி முடிச்சை அவிழ்த்தாள்!
ஈரத்தை ஈர்த்துக்கொள்ளமுடியாமல்!.
விரித்த கோலத்தில் களமாட
துரியோதனன்,
ஒன்றா?
பூச்சூடி கொண்டாட,
கிருஷ்ணர்கள்
ராமர் வேடத்தில்.!
விரல்களை சிறுக்கனியாக்கி
சிக்குண்ட மயிரிலையை
பிரித்தெடுத்தாள்.
ஒவ்வொரு மயிரிலைகளிலும்
புடைத்த சடைமுடிகள்.
அவளின் இறுகிய மனதைப் பிரதிப்பலித்தது.
லாவகமாய்
முடிச்சுக்களை பிரித்தெடுக்க முயலுகிறாள்
உதிர்ந்த கேசம்
கேவுகிறது,
வாசனைகளை சூடாத ,
சிரத்தில் வாசம் செய்ய விருப்பமின்றி
முடிச்சுக்களை அவிழ்த்துக்கொண்டது.








