வெகுளி சிறுகதை – நிரஞ்சனன்
ஒரு தேநீர்க் கடைக்குள் நுழைகிறான் ஒரு பதினான்கு வயது மதிப்பு மிக்க சிறுவன், பார்க்க கொஞ்சம் சோம்பேறி போலவும் முட்டாள் போலவும் அவன் தோற்றம், பள்ளி போக மற்ற நேரங்களில் தேநீர் கடை மட்டுமே உலகம் என சிறு வேலைகள் அந்த கடைக்கு செய்து கொண்டு காலம் ஓட்டுகிறான். அவன் வீடு அருகில் தான்.
அவன் நுழைந்ததும், அந்த தேநீர் கடைக்காரர் அவனிடம் ஒரு குடம் கொடுத்து நீர் எடுத்து வர அனுப்புகிறார். அவனும் வெளியே நீர் எடுக்க சென்று விடுகிறான்.
கடைக்காரர், தேநீர் பருக வந்தவரிடம் கூறுகிறார், இவனைப் போல் சோம்பேறி, முட்டாள், உதவாக்கரை நான் பார்த்ததே இல்லை என அவனை மட்டம் தட்டுகிறார். இப்போ அவன் வந்ததும் உதாரணம் காட்டுகிறேன் பாருங்க, என்றார்.
தேநீர் பருக வந்தவர், இவன் சொந்தம், என தெரியாமல்.
நீர் கொண்டு வந்தவனிடம், “ப்ரு சின்ன பாக்கெட் ஒரு சரம் வாங்கி வா.….தம்பி, இந்தா 100 ரூபாய் போய் வாங்கி வா” என அனுப்பினார். அவனும் பக்கத்து மளிகை கடையில் வாங்கி வந்தான். இந்த உனக்கு 5 ரூபா என்றார் அவர், அவன் எனக்கு வேண்டாம் 3 ரூபாய் போதும் என்று வாங்கிக் கொண்டு வெளியேறி விட்டான்.
தேநீர் அருந்த வந்தவர்க்கு வந்ததே கோவம், தேநீர் குடித்து முடித்து நேர அவன் வீட்டுக்கு போனார், அவன் தாயிடம் பொரிந்து விட்டார்.
இவன் அழகாக அங்கே ஐஸ் கிரீம் ருசித்துக் கொண்டே வீடு வந்தான், அவன் தாய் அழுவதை கண்டு என்ன என விசாரிக்க…..
‘ஏண்டா இப்படி இருக்க?’ என ஒரே ஒப்பாரி…..
தலையும் காலும் புரியாமல், “அய்யோ மாமா இப்போ தான டீ கடையில் பார்த்தேன், என்ன மாமா என்ன சொன்னீங்க?”
“அந்த டீ கடைக்காரன் உன்னை ஏமத்துறான், நீயும் அவன் சொல்லுற வேலை எல்லாம் செய்யுற அவன் extra கொடுக்குற காசு வேண்டாம் சொல்லுற…..நான் இருக்குறது கவனிக்காம போற….என்னடா?”
“இப்போ உங்களை பார்த்து மரியாதை செய்யாதது பிரச்சனையா? இல்ல அவன் கிட்ட கூடுதலா 2 ரூபா வாங்காதது பிரச்சனையா?”
“ஏண்டா? அங்க போற…. படிக்கறது போக வீட்டில் இருக்க வேண்டியது தான….எக்ஸ்ட்ரா கொடுத்தா வாங்கிக்க வேண்டியது தான.?”
“சரி, தான். இப்போ நான் முட்டாளா இல்லை அவன் முட்டாளா நீங்களே சொல்லுங்க……மாமா, ஒரு சரம்ல 20 பாக்கெட் இருக்கும் , ரெண்டு பாக்கெட் ஃப்ரீ, ஒரு சரம் 100 ரூபா அந்த கடையில், அவனுக்கு ஒரு பாக்கெட் 5 ரூபா தான் தெரியும், நான் 2 பாக்கெட் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டேன், அவன் சோம்பேறி தனத்தில் எனக்கு 2 பாக்கெட் லாபம். அப்புறம் அந்த 3 ரூபா, அவன் கொடுத்ததை வாங்கினால் அவனுக்கு எதோ நான் அடிமை மாதிரி இருக்கும், இப்போ நான் நினைச்சா போவேன்னு அவன் நினைப்பான், எப்பையும் வேலை வாங்க மாட்டான்.
கம்மியா வாங்கினதால் என்ன சந்தேக பட மாட்டான், என் மேல் நம்பிக்கை இருக்கும், என் உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்டா கொடுக்க மாட்டான், சிறுவன் என ஏளனம் செய்வான், இப்போ எனக்கு தினமும் லாபம் கிடைக்கும், தினமும் அவன் கடைக்கு வரும் நாளிதழ் எங்க இருக்கு பாருங்க, நான் தினமும் இரவு சென்று வாங்கி வந்து அடைக்கி சேகரித்து வருகிறேன், இது மாதிரி நெறய இருக்கு. இப்போ சொல்லுங்க உங்க மருமகன் முட்டாளா? சோம்பேறியா? பிழைக்க தெரியாதவனா?”
அசந்து போய்ப் பார்த்தார் அந்த பையனின் மாமா.