பட்டுக்கோட்டையின் பாடல்கள் சொல்லும் கதைகள் – 2
பட்டுக்கோட்டையின் பாடல்கள் சொல்லும் கதைகள்
நூல் அறிமுகம்: சு.பொ. அகத்தியலிங்கத்தின் ’சும்மா கிடந்த சொல்லை எடுத்து’ – ராஜேஷ் நெ.பி
நூல் : சும்மா கிடந்த சொல்லை எடுத்து
ஆசிரியர் : சு.பொ. அகத்தியலிங்கம்
விலை : ரூ.₹ 80/-
பக்கங்கள்: 96
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க :www.thamizhbooks.com
[email protected]
தமிழில் பழம்பெரும் பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர்களில் மிக முக்கியமான ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். பாரதியையும் பாரதிதாசனையும் தனது குருவாக கொண்டவர். தமிழில் 55 திரைப்படங்களுக்கு மட்டுமே எழுதிய 156 திரைப்படப் பாடல்களில் காலத்திற்கும் அழியா புகழ் பெற்றவர். பாரதியைப் போலவே இளம் வயதில் மரணத்தை தழுவியவர் (29) அதனால் நமக்கு ஏற்பட்ட இழப்புகளின் அளவை நாம் அறிந்து கொள்ள முடியும்.
புத்தக ஆசிரியர் மூத்த எழுத்தாளருமான சு பொ அகத்தியலிங்கம் பட்டுக்கோட்டை அவர்களின் கவிதைகளையும் பாடல்வரிகளையும் அணு அணுவாக ரசித்து மேற்கோள் காட்டி எழுதியுள்ளார். அவருடைய ரசனை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுடன் நிறுத்தி விடாமல் மேலும் பல கவிஞர்கள், பாடல் ஆசிரியர்களையும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது மிக சிறப்பு. உதாரணத்திற்கு பாரதியார், பாரதிதாசனார், நவகவி கண்ணதாசன், வைரமுத்து, பாப்லோ நெருதா, என் எஸ் கிருஷ்ணன், புலமைப்பித்தன், மனுஷ்ய புத்திரன், நூர் முகமது ரோஷன், தமிழ் ஒளி, பாரசீக கவி சாங் அதி காயம், உமர் கையாம், மருதகாசி தஞ்சை ராமையா தாஸ், உடுமலை நாராயண கவி, சரோஜினி நாயுடு, ஹென்றி ஹெய்நே ஜெர்மனியக் கவி இன்னும் பலர் என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். “எனது முதலமைச்சர் நாற்காலியின் மூன்று கால்கள் எவற்றால் ஆனவை என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களால் ஆனது” என்று 1982 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் வானொலிக்கு அளித்த பேட்டியின் போது அவரது ஆழ் மனதில் இருந்து வந்த வார்த்தைகள் இவை என்றால் பட்டுகோட்டையின் சிறப்பினை அறிந்துகொள்ளலாம்.
பட்டுக்கோட்டை அவர்கள் மெட்டுக்கு பாட்டு எழுத மாட்டாராம் அவருடைய பாட்டு வரிகளுக்குத்தான் மெட்டு போட வேண்டும் என்கிற ஒரு வைராக்கியத்தை வைத்திருந்தார் என்பது கூடுதல் தகவல். கவிதைகள், கட்டுரைகளும் பல எழுதி இருந்தாலும் திரைப்படப் பாடல்கள் வழியே அவருடைய அழியா புகழ் நிலை கொண்டுள்ளது எனலாம். இப்பேற்பட்ட கவிஞர் மற்றும் பாடலாசிரியை பாடலாசிரியரை இளமையிலேயே இழந்தது தமிழகத்திற்கு பேரிழப்பு என்று சொல்ல வேண்டும்.
ராஜேஷ் நெ.பி
சித்தாலப்பாக்கம் சென்னை