சே.கார்கவி கவிதை
நாம்
யாருடனும்
ஒப்பிட முடியாத
காதலில்
முழ்கியிருக்கும் பொழுது
மழைத்துளியின் வருடலுக்கு
சருமங்கள் பதிலளித்து விடுகின்றன
இன்று போய் நாளை வாவென……..
மயில் தோகைகளை
ஆசையாக சேகரித்து
அவள் படித்து முடித்த புத்தகத்தில் செருகி
அதனுடே ஆரம்பமாகிறது
மயில் தோகையின் வண்ணமாகிய
காதல் மழை….!
உன் மனதின் சிறு ஓரங்களின் மறைவுக்காக நெடுங்கால மழையைக் கேட்கிறேன்…
நீ
ஒரு துளி காதல் கொடுக்கிறாய்….!
எனது
உத்திரவாதங்கள்
உனது முத்தங்களின்
மத்தியில் களைந்து போய்விடுகின்றன
இருப்பினும் இதோ
வைத்துக்கொள்
என் இதயம்
அடுத்த முத்தம் தருவதற்கு முன்னே சம்மதம் பெற்றுவிடு…..!
இதழைப்பார்த்தேன்
வானம் பார்த்தேன்
மீண்டும் இதழைப் பார்த்தேன்
மழையைப் பார்த்தேன்
இதழ் வெடிப்பை பார்த்தேன்
வறட்சியை பார்த்தேன்
காதோர முடிப் பார்த்தேன்
தூரமான குதிரையின் அலாதியான வால் பார்த்தேன்
இதயம் பார்த்தேன்
பூசிய வண்ணம் பார்த்தேன்
தூரமாக பூசிக்கொண்டு பறக்கிறது
அணியின் பட்டாம்பூச்சி…….
ஒட்டுமொத்தமாக
சொல்லிவிடு
இந்த மௌன நடையில்
முதல் பாதம் யாருடைய குத்தகை……
யாரை ஈர்த்து தள்ளும் ஒத்திகை….
– கவிஞர் சே கார்கவி