கவிதை: கடையெல்லாம் முதலாகும் – கோவி.பால.முருகு

கவிதை: கடையெல்லாம் முதலாகும் – கோவி.பால.முருகு

வான்கோழி ஆட்டமிங்கே வர்ணனைக்கு உள்ளாகும் வான்முகிலின் தோற்றங்கள் வண்ணமயில் காலொடிக்கும்! தேன்போன்ற குரலென்று காகத்தின் புகழ்பாடும் தேள்கொட்டும் வலியாகிக் குயிலின்நல் குரலிடிக்கும்! மான்விழிகள் மட்டமென்று ஆந்தைவிழி இழித்துரைக்கும் மடவன்ன நடையிங்கே வாத்துக்கு இணையாகும்! ஏனென்று கேட்காதீர் எல்லாமே மாற்றந்தான் ஏற்றமிலான் மூளையிலே…