நூல் அறிமுகம்: குற்றவாளி கூண்டில் அதானி மோடி – இரா.இயேசுதாஸ்
நூல் அறிமுகம்: எழில் சின்னதம்பியின் கடைசி வருகை – து.பா.பரமேஸ்வரி
வணக்கம்.
எப்போதும் கதை கேட்பதும் கதை சொல்வதும் கதை வாசிப்பதும் சுவாசிப்பதும் ருசிகாரமானது சுவாரஸ்யமானதும் கூட .அதிலும் கதைக்கும் கதை பேசுவதென்பது கூடுதல் பெருமிதம். இலக்கியவுலகம் பன்மொழி இலக்கியங்கள் துவங்கித் தமிழிலக்கியம் வரையிலான மாறுபட்ட பல தளங்களைத் தமக்குள் உள்ளொடுக்கி உள்ளன. அதிலும் சிறுகதைகள் இலக்கிய வரலாற்றின் வெவ்வேறு கூறுகளில் தன் தனிப்பெரும் முத்திரையைப் பதித்துக் கொண்டு தான் வருகிறது. இதற்கு காரணம் பல்கிப் பெருகி வரும் தலைசிறந்த சிறுகதை எழுத்துதாரர்கள் உலகம் முழுதிலும் ஆங்காங்கே புத்தம் புதிதாய் முளைத்துத் தத்தம் மகத்துவப் பங்கை பாங்காக இலக்கியப்பரப்பில் சமூகத்திற்காகவும் எழுத்து இறைக்கவும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர். குறிப்பாக தமிழ் சிறுகதைகள் அடைந்திருக்கும் பாய்ச்சல் வேக மாற்றங்களை விதவிதமாக எழுதத்தான் வேண்டும். போற்றிக் கொண்டாடவும் வேண்டும். அத்தனை மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது நமது தமிழ் சிறுகதைகள்.
அதிலும் குறிப்பாக மொழிபெயர்ப்புப் படைப்புகள் என்பவை தமிழில் அதிக அளவில் காணக்கிடைக்கின்றன. பல மகத்துவ மேன்மை எழுத்தாளுமைகள் உலகபிரசித்திப் பெற்ற பல்வேறு புனைவுகளைத் தம் சீர்மை மிகு எழுத்துகளில் தமிழிலக்கியத்தை அலங்கரித்துள்ளனர். உலகளாவிய புகழ் பெற்ற சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து இலக்கியவெளியிலும் வாசகப் பரப்பிலும் விரியுப்படுத்தியுள்ளனர். வங்காள மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்ந்த யாத்வஷேம், உலகமொழிகளிலிருந்து தமிழில் எழுத்தாக்கப்பட்ட இக்கிகய், மரணவீட்டின் குறிப்புகள், போரும் வாழ்வும், ரசவாதி போன்ற புனைவுகள் உலகபிரசித்தி பெற்ற படைப்புகள். ஆயிரத்தொரு இரவுகளின் ஷீராசத்தாக்கிக் கதைக்தாரர்கள் கதைகள் முன்வைக்கும் சவாலை எதிர்கொள்ள வேறு என்ன முகாந்திரம் தேவை மாய விசித்திரங்களின் புனைவுகளைப் பரிந்துரைக்க.
ஆனால் உலகளாவிய இயல்பு புனைவல்லாது மாய எதார்த்த படைப்புகள் தமிழாக்கம் செய்யப் பெற்றவை குறைவே. அந்த இடத்தைத் தமநதிந்தப் தொகுப்பால் நிறைசெய்துள்ளார் எழுத்தாளர் எழில் சின்னதம்பி அவர்கள். லத்தின் அமெரிக்க எழுத்தாளுமைகளின் உலகபிரசித்திப் பெற்ற பன்மொழிப் சிறுகதைகளைப் தம் வளமைமிகுந்த எழுத்துப் புலமையில் தேர்ந்தப் படைப்பாகத் தமிழிலக்கியத்திற்கு வழங்கியுள்ளது சிறப்பு. இப்படியான பற்பல விருதுகளும் பெரும் அங்கீகாரங்களும் உலகமக்களாலும் ஆகச்சிறந்த ஆளுமைகளாலும் இலக்கியவாதிகளாலும் பெரும் பாராட்டையும் சிறப்பையும் பெற்ற புனைவுகளைத் தேர்ந்தெடுத்து வளமான மொழியிலும் தீர்க்கமான நடையிலும் மொழிப் பெயர்த்து தமிழிலக்கியத்திலும் தமிழ் வாசிகப்பரப்பிலும் விரியுப்படுத்தி இலக்கியத்திற்கான தமது பெரும் எழுத்துக்கடமையை “கடைசி வருகை” என்கிற இந்தத் தொகுப்பின் வழியே நிறைவேற்றியுள்ளார் தொகுப்பாளர்.
ஒரு மகத்துவமிக்க எழுத்தாளனால் அதுவரைக் கண்டிராத இயல்பு மனிதர்களின் கதையுலகில் புகுத்தப்பட்ட மாய லோகத்தை இயல்பான பொதுவான அன்றாட நிகழ்வுகளிலிருந்துக் கடத்தப்பட்ட விலக்கப்பட்ட இயற்கையின் வழக்கமான வரையறைகள் விளங்கமுடியாத மாய யதார்த்த நிகழ்வுகளை ஒரு அற்புதத்தால் திருத்திக் கதைகளாகப் புனைவுகளாகப் படைத்துள்ளனர் எழுத்துதாரிகள்.
உலகளாவிய லத்தீன் அமெரிக்க எழுத்துக்கவிஞர்கள் இப்படியான கற்பனைக்கப்பாற்பட்ட மாய எதார்த்தக் கூறுகளைப் புனைவுகளாக மயக்க உலகின் பாத்திரங்களை இயல்பிற்குப் பாற்பட்ட விளிம்பில் நின்றுகொண்டு தமது புனைவுகளில் கொண்டாடியுள்ளனர்.
நம் தமிழிலக்கியமும் இதுமாதிரியான மாய. மயக்க இயல்பல்லாத மனித சிந்தனைக்கும் செயலுக்கும் அப்பாற்ப்பட்ட பல அதிசயங்களையும் விசித்திரங்களையும் புனைவுகளாக ஒளித்துள்ளது. சமகால இலக்கியவாதிகளும், தமிழறிஞர்களும்,. சங்ககாலந்தொட்டு இந்த மாதிரியான மனித சிந்தனைக்குப் பாற்பட்ட படைப்புகளைப் புனைவுகளாக இதிகாசங்களாகப் படைத்து தமிழுக்கு வழங்கிச் சிறப்புச் சேர்த்துள்ளனர்.
நம் இலக்கியமல்லாத பிற மொழிப் புனைவையும் உலகபுகழ் படைப்பாளிகளின் மாய எதார்த்த கற்பனைத் திறனையும் அவர்களின் பார்வையில் இப்படியான புனைவுகளையும் தமிழ்மக்கள் அறிந்திடவும் தமிழிலக்கியம் கொண்டாடவும் வேண்டி நூலாசிரியர் தேர்ந்த உலகப்புனைவுகளை நேர்த்தியாக அணிவகுத்து பெரும் மெனக்கிடல் கொண்டு தொகுத்திருப்பது இலக்கியத்திற்கான செயற்கரியத் தொண்டு என்று கூறலாம்.
பழகியப் பாதையில் பயணம் செய்பவர்கள் நிஜத்தில் பெரும் பாக்கியவான்கள். அதுவரையிலும் தமிழ்க் கதைக் கண்டிராத மனித மயக்க மாய வித்தைக்கொண்ட இயல்பற்ற கதையுலகைக் காட்சிக்குள்ளாகியுள்ளனர் இலத்தின் அமெரிக்க எழுத்தாளர்கள். இந்தத் தொகுப்பு முழுதும் வரம்பு மீறிய கனவு மெய்மைகளையும் புனைவுகளையும் பேசுகின்றன. இக்கதைகளின் பாத்திரங்கள் கனவுகளையும் மாயத் தோற்றங்களையும் சேர்த்துக் கட்டிய கற்பனைக் கடலின் அதீதங்களில் அளவலாவிக் கிடக்கின்றன. தனிமையின் முகட்டில் தொங்கி உழல்பவர்களாய் இருக்கின்றனர் கதை மாந்தர்கள்.
வாழ்வில் எதிர்கொள்ளும் கசப்பான அனுபவங்களைக் கடந்தவர்கள், வலிகளும் வதைகளும் நிறைய தின்னப்பட்டு உளச்சலிப்புகளில் போராடுபவர்கள் வாழ்வின் மீதான பேரச்சத்தால் எண்ணகுலைவில் சிக்கிக்கொண்டு தோல்விகளின் தழுவலில் தம்மைத்தாமே இறுக்கிக் கொண்டு இழித்தும் பழித்தும் தனிமையின் நிழலில் தவித்துக் கொண்டு தம்மைத் தற்காத்துக்கொள்வதாய் நினைத்துத் தவிக்கும் நபர்களும், எதிலும் திருப்தியைக் காணவில்லையா பெருமூச்சிட்ட இதயத்தைச் சுமக்கும் மாந்தர்களாய் எப்போதும் ஒருவித கனவுக் கூட்டில் மயக்க அதீதத்தில் உழன்றுக்கொண்டு போலியான பிம்பத்தைத் தமக்குள் உருவாக்கிக் கொண்டு அதனுடன்பேசியும் வாழ்வைக் கழித்தும் மகிழ்ந்தும் போராடியும் பல தருணங்களில் நடுங்கியும் அவஸ்தைக்காட்பட்டும் வாழும் மனநோயாளிகள் தொகுப்பில் அதிக அளவில் நிரம்பியுள்ளனர்.
இப்படியான மனிதர்கள் பெரும்பாலும் தனிமைத் தீயில் உழன்று வாழ்பவரே. மனநிலைச் சரிவில் சிக்குண்டுக் கிடப்பவர்களைச் சுற்றிய நிகழ்வுகளைக் கதைக்கிறது இத்தொகுப்பு.
சாதாரணமாக நாம் காண்பவை கடப்பவை அதிர்ந்தவைகளைக் கருக்கொண்டு கதை உருவாகப் புனைவேற்றி வடித்து விடலாம். ஆனால் நம் பண்பாட்டிற்கும் நில சூழலுக்கும் மாந்தர் அனுபவங்களுக்கும் வாழ்வியல் கூறுகளுக்கும் முற்றிலும் மாறுபட்ட வேற்று மொழியினரின் மனநிலை முற்றிலும் வேறுபட்ட கலாச்சாரம் கொண்டவர்களின் தீவிரமான பெருக்கப்பட்ட உளவியல் மனநிலையில் உழலும் பாத்திரங்கள் நிரம்பிய இந்தப் படைப்புகளை மொழிபெயர்த்து தமிழுக்கு வழங்குவதென்பது அத்துணை சாமானியம் அல்ல.பெரும் அசாத்தியத்தைச் சாத்தியமாக்கியுள்ளார் எழுத்தாளர் தொகுப்பின் மொழிப்பெயர்ப்பாளர் எழில் சின்னதம்பி.
சிறு பிசகும் கதைக் கருவைத் தொலைத்து விடும். மொழியில் நேர்த்திமை அளவளாவி இருந்தாலொழிய மொழிபெயர்ப்பு என்பது கதை வாசிப்பின் கவனத்தை ஈர்க்காது. சொந்த மொழித்திறன் முழுவதாகப் பிற மொழிப் புலமை நேர்த்தியாக இருந்தால் மட்டுமே இவ்வாறான மொழிபெயர்ப்புப் படைப்பு முழுமையின் முச்சந்தியைத் தொடும் சாத்தியம் பெறும் என்பதில் பெரும் கவனம் கொண்டு நூலைக் கையாண்டுள்ளார் தொகுப்பாளர்.
எவ்வளவு வலிமையான கதையாகவோ மொழிபெயர்ப்புப் புனைவாக இருப்பினும் அது தன்னளவில் முழுமை அல்லது பகுதியாகத் திறந்துக் கொள்வது வாசகனிடம் மட்டுமே. வாசகனை சென்றடைய முடியாத மொழிபெயர்ப்புப் படைப்புகள் நிச்சயம் விளைவுகளை நிகழ்த்துவதற்கான வாய்ப்பில்லை. ஆனால் நம் நூலின் தொகுப்பாளர் தமது நூலின் மொழிபெயர்ப்பில் அணிவகுத்திருக்கும் கதைகள் வாசகனின் முழு நிறைவைப் பெற்றுள்ளது.மொழிபெயர்ப்பு நூலிற்கான வாசிப்புச் சலிப்பை முற்றிலும் தகர்க்கிறது இந்த நூல்.வேற்று மொழிப் படைப்புகளான அதிலும் ஐரோப்பிய அமெரிக்க புனைவுகள் விளங்கிக் கொள்ளவும், ஏற்றுக் கொள்ளும்படியான மனப்பான்மையை தமிழ் வாசகர்களுக்கு வழங்கியுள்ளது. .
தொகுப்பின் அத்துணை கதைகளையும் மொழிபெயர்ப்பின் சுவாரஸ்யத்தைக் கூட்டித் தமது இலக்கிய உயிரோட்டம் கூடிய மொழிக்குடுவையில் வாசகனை வாசிப்புத் தளத்திலிருந்து துளியும் நகர விடாமல் நிறுத்தி வைத்துள்ளது என்பதே பெரும் வியப்பிற்குரியது. அதீத அசாத்தியங்களைத் தமது வளம் கூடிய மொழிப் புலமையில் சாத்தியமாக்கி உள்ளார் எழுத்தாளர் என்று விதந்துப் போற்றலாம்.
1947இல் பிரேசிலின் மாய எதார்த்த புனைவுகளின் முன்னோடி எழுத்தாளர் முரிலோ ருபய்யோ அவர்கள் மனித மனத்தின் வரம்பு மீறிய கனவு மெய்மைகளையும் மாயத் தோற்றங்களையும் ஒன்று திரட்டி மனித கற்பனைக்கப்பாற்பட்ட விளிம்பில் நின்று தனிமையின் முகட்டில் தொங்கி உழலும் மாந்தர்களின் வாழ்க்கை அபத்தங்களைப் பேசும் புனைவாக “முன்னாள் வித்தைக்காரன்.” வாழ்க்கையின் திடீர் சரிவுகளால் பெரும் மன உளைச்சலில் சிக்குண்டு வாழ்க்கையின் மீது சலித்து நிற்கும் மனநிலை, இயல்பு வாழ்க்கை வாழும் மனிதரல்லாத மாய வித்தைகளால் சூழப்பட்ட வித்தைக்காரன். அவனின் மனநிலை ஒருவித தனிமையில் முகட்டில் தனித்துவிடப்பட்ட வெறுமை. கண்ணுக்கு தெரியாமல் மறைந்து மரித்துப் போக விழையும் சோகம் குடிகொள்ள இந்த உலகம் அவனுக்கு பேரச்சம் நிறைத்து பெரும்வாதை வழங்கியது.
இவ்வித்தைகளும் மாயங்களுக்கும் அவனை முற்றிலும் ஆட்கொள்ள தன்னையே மீறி அவனைத் துரத்தின. அவனை அலைக்கழித்த வினோதங்களின் மிரட்டலில் மரணத்தின் பிடியை விரைந்துத் தேடினான். ஆனால் அனைத்தும் தோற்று நிற்க தோல்விகளெல்லாம் பன்மடங்கு மலைக்க வைத்து எண்ணக்குலைவு செய்தன. கூடப்பிறந்த ஒட்டு உறவான வினோத வித்தைகளும் கைவிடவே விழைந்து விரும்பிய ஒரு சிறு காதல் அசைத்தலும் அவனைத் தூக்கியெறிய வெற்றுத்தாரனாகிப் போனான் வித்தைக்காரன். வித்தைகள் யாவும் இப்போது வெறும் பிரமை ஆகி விட்டன. அவனுக்கு நன்றாகவே புலப்பட்டது மயக்க எண்ணம் ஒருபோதும் ஆறுதலைத் தரப்போவதில்லை என்று. இது நாள் வரை தான் வெறுத்து விட்டொழிக்க விழைந்த விசித்திர விநோதங்கள் கொண்டு மந்திர உலகை படைக்கத் தவறி விட்டோமே என்கிற பின்புத்தி பெரும் மன உளைச்சலில் வித்தைகளைக் கற்பனையில் ஆரத்தழுவி நிறைவேற்றிக் கொண்டான்.
தொகுப்பின் தொடரும் அடுத்த சிறுகதை புனாப்பகுதியில் கரீப் பழங்குடி இன மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அவர்களின் பெரும் பூர்வகுடி நம்பிக்கைகளையும் இயற்கை சார்ந்த இறைமையைப் பற்றிய மறைக்கப்பட்ட பிரபஞ்ச இரகசியங்களைக் குறிப்பறிந்து உணரும் தீர்க அறிவையும் தொலைநோக்குப் பார்வையையும் தமது வெகுவான படைப்புகளில் பிரதிலிபியாக்கிய மெக்ஸிகோவின் ஆகச் சிறந்த எழுத்தாளுமைகளில் ஒருவரான ஃபிரான்சிஸ்கோ ரோஹாஸ் கன்ஸாலெஸ் அவர்களின் “சாமியாக்கி” சிறுகதை ஒரு மேம்பட்ட படைப்பு. இந்தச் சிறுகதை அக்டோபர் மாத சிறுகதைகள் காலாண்டில் பதில் பிரசுரமாகியுள்ளது சிறப்பு. இந்தச் சிறுகதையின் நகர்வு ஒவ்வொன்றும் திடுநிகழ்வுகளையும் பழங்குடி மக்களின் தலைவனான கைலான், படைப்பின் பேறாற்றலைத் தமது நுண்திறன் கொண்டு உணரும் பாங்கும், இயற்கையின் செயலூக்கத்தைத் தமது விரல் இடுக்குகளில் கண்டறியும் பகுத்தறிவும், நுட்ப அறிவும் நம் வேட்டையாடி மூதாதயரை நினைவுக்கூர வைக்கின்றன.பெரிய ஆச்சரிய அதிர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு படித்தான சொல் முறையிலிருந்தும் முற்றாக விலகிச் செல்லாத வகையில் புனையப்பட்டுள்ள இந்தக் கதை ஆச்சரிய ரேகையை ஏற்படுத்துகிறது.
பழங்குடியினரின் இயற்கையுடனான பிணைப்பை எழுத்தின் வழியே காட்சிப்படுத்தியுள்ள தொகுப்பாளரின் எழுத்து முயற்சி நம் குடி அல்லாது நமது பார்வைக்கப்பாற்பட்ட பகுதிகளின் பழங்குடியிருப்புகளின் பண்பாட்டு வழக்கத்தைத் தமிழிலக்கியம் அறிய வழிவகுத்துள்ளது சிறப்பு. சாமானியர் அல்லாத உலகத்தின் பிற இனக்குடிகள் கூட பெண்களை ஒதுக்கியும் வழிப்பாட்டுத்தளத்தில் பெண்களைத் தீட்டுப்பொருளாகத் தள்ளி வைத்து அவர்களை வெறும் உடல் துய்ப்பிற்கான கொள்வதற்கான பொருளாக ஆண்மமதைக்கும் ஆதிக்கத்திற்கும் பயன்படுத்தி வந்தனர் என்பது இந்த கதை வழியே புலனாகிறது. சற்றே வருத்தம் மேலோங்கியது. தொகுப்பின் இந்த வரிகள் கண்ணுக்குப் புலப்படாத கடவுளின் மீதான பார்வையைப் பலகோணங்களில் திருகி நிற்கிறது.
“மனிதனின் கைகளில் சாமி மீண்டும் ஒருமுறை மாண்டுப் போனான்.”
1907இல் இத்தாலியைச் சேர்ந்த பன்முகம் திறங்கொண்ட பயனீட்டுவாதத்தை முன்னிறுத்தும் படைப்பாளியாக ஜொவானி பாப்பிளி அவர்களால் வரையப்பட்ட கதையே “கடைசி வருகை”. தொகுப்பின் தலைப்பைப் சூடிய இந்தப் புனைவு மகத்துவம் நிரம்பப் பெற்ற ஒரு படைப்பு. கனவுலகின் மாய பிரம்மாண்டத்தை அதீத அசாத்தியங்களைக் கண்டெடுத்த கதைத் தொகுதி. கனவு காணும் ஒரு மனிதனின் மாய உலகில் சிருஷ்டித்த ஒரு உருவத்தின் ஆற்றாமையை அந்த மனிதனின் நீளும் கனவுகளால் சிக்குண்டு கனவுதாரனின் கனவுகளின் சாயையைப் போர்த்தி இயலாமையின் விளிம்பில் அவனது உயிர்ப்புள்ள ஆழமான சக்திவாய்ந்த கனவுகளால் இருள் சூழப் பெற்று கொடூரமான படிமங்களால் நிரம்பி வெளி வர இயலாமல் தவிக்கும் மனித பிம்பத்தின் கதறலைப் பேசுகிறது “கடைசி வருகை”.
வாழ்க்கை என்பதே கனவுகளின் சுயம். அதில் மெய்மை என்பது மாயத் தோற்றமே அன்றி வேறில்லை என்கிற தத்துவ மேதாவிகளின் கூற்றைப் பிரதிபலிக்கிறது இந்தப் புனைவு .
கனவு காணும் மனிதனின் குரூரத் தன்மையால் இழிவான வாழ்க்கையை நீட்சியாகக் கொண்டிருக்கும் அந்த பொய்மையின் பிரதிஷ்டை யால் நொந்துபோன மாய உருவின் நிலையே மனிதர்களைச் சூழ்ந்துள்ள வன்ம வாழ்வு என்பதை உணர்த்துகிறது இந்தப் புனைவு.
நீர்க்குமிழி போன்ற மனித வாழ்க்கையில் அனைத்தும் மாயக் கனவுகளே. இவ்வுலகில் கண்களுக்கு புலப்படும் எதுவும் நிதர்சனம் அற்றது. நிஷ்சாசுவமற்றது. நிரந்தரமற்றது நாம் எதைக் கொண்டு கனவாக்குகிறோமோ நம் நனவுகளும் அவற்றைச் சூடியே நம்மை சூழ்ந்திருக்கும் என்கிற மனித வாழ்வின் எதார்த்தத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது கடைசி வருகை. கடினமான கேள்விகளையும் ஊடுருவல் பொருளையும் கொண்டுள்ள புனைவு இது. பிற கதைகளை உட்கொள்வது போல இதை அவ்வளவு எளிதில் உள்வாங்க இயலாத ஒரு ஆழத்தைத் தனக்குள் புதைக்கொண்டுள்ளது. இத்தனை கடினமான புனைவைப் பொருட்புதிர் விலக்கியப் பக்கங்களின் கதைகளை உளவியல் சிக்கல்களால் நிரம்பப்பெற்றப் புனைவை மொழிபெயர்த்து வழங்கியுள்ளது தொகுப்பாளரின் மேலாண்மை பொருந்திய மொழி மீதான பற்று கட்புலனாகிறது.
தொடரும் புனைவுகளில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் ஜுனிசிரோ டானிஸகி அவர்களால் 1912ஆம் ஆண்டில் எழுத்தாக்கபட்ட சிறுகதை “சிலந்தி”. மாறுபட்ட மனித உளவியல் குரூரத்தை உள்ளார்ந்த அடர்த்திக் கூடிய வக்கரத்தை மெல்லியதாய் வெளிப்படுத்தாது, இயல்பின் ரசிகனாய் கலைஞனாய் மிளிரும் ஒரு மனிதன் உள்ளுக்குள் ரகசிய குரூர ரத்த வாடை துய்க்கும் மனிதநேயமற்றக் குரூரத்தைச் சுமந்து மனித வேதனையில் மனக்கிளர்வு உண்டு நிற்கும் ஒரு மனநோயாளி உருக்குத்துதாரியின் வாழ்நாள் பேரவாவைப் பேசுகிறது சிலந்தி. புனைவிலக்கியத்தில் மனித உளவியல் பங்கு என்பது மிகவும் அசூயையானது. மனித மன இயக்கம் சில சமயம் அறிவுப்பூர்வமாகவும் வெகுநேரம் உணர்வுகளின் அல்லாட்டத்தில் மல்லுக்கட்டிக் கொண்டுத் தமது வாழ்நாள் விழையை வன்மவதையின் விளிம்பில் நின்று பூரணத்தின் வாசலைத் தொட்ட பின்பே ஆற்றுப்படும் என்கிற மனித மனத்தின் இரக்கமற்ற இருள் கவ்விய உளவியல் பெருக்கத்தைக் கதைக்கிறது இந்தப் புனைவு.
மனித உடலில் குருதியையும் வலியால் வதைபடும் அந்த உயிர் படும் வேதனையை நிதம் உண்டு களித்து கொண்டாடி மகிழ்ந்து மனமது மறுத்துப் போய் இன்னும் வேண்டும் சித்திரவதைக் கிளர்ச்சி என்கிற வக்கிர வெறித் தலைதூக்க பச்சிளம் மேனி கொண்ட பெண்ணுடல் மீது உருகுத்த அல்லாடுகிறது. அதற்குத் தக்கன தருக்கான பெண்ணுடல் தேடித் தமது ஆன்மா முழுவதையும் அந்த உருவின் மீது ஊற்றவும் விழைகிறது வக்ரம் கொண்ட அந்த கலைஞனின் மனம். அதற்கான பெரும் மெனக்கிடல் அவனை அவன் லட்சியத்தை உச்சம் தொட செய்கிறது. தமது எண்ணத்தைப் பரிபூர்ணமாக்கும் பெண்ணைக் கண்டடைந்துத் தமது விழையை சிலந்தியின் உருக் கொண்டு அவளது பச்சைதோல் முதுகில் முடித்து வைக்கிறான். ஆத்ம திருப்தியும் அடைகிறான்.
மனித மன உணர்வுகளை அழுத்தமான தமது எழுத்ததிகாரத்தில் திண்ம மொழி வளத்தில் ஆங்காங்கே உணர்ச்சிப் பிரவாகச் சொற்களின் கோர்வையில் திடுக்கிடும் சொற்களின் பயன்பாட்டில் இறுதிவரை வாசகனை உருகுத்தலின் வேதனையை பக்கங்களின் வழியே வலிக்கச் செய்கிறது. தொகுப்பாளர் புனைவை சின்னபார் தாது நிறைந்த சொற்களின் கூர்மைக்கூடிய பயன்பாட்டில் நிரப்பி இறுதிவரை வாசகனை உணர்வுக் கிடங்கில் கிடத்தி வைக்கிறார்.
முதல் சிறுகதை காலாண்டிதழில் வெளிவந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஆகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர், கற்பனைகளின் அதீதத்தைப் புனைவாகப் படைப்பதில் வித்தகரான செலினா ஆண்டர்சன் அவர்களின் கைவண்ணம் “ஞான மாதாவின் தேனீர்” சிறுகதை 2020இல் “சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள்” எனும் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. பெற்றோருக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படும் ஒருவராக சமய அறிவுரைகள் சொல்லி நல்வழிப்படுத்தும் பொறுப்புமிக்கவரான ஞானமாதா அவர்களை மையமாகக் கொண்டுப் புனையப்பட்ட சிறுகதை இது.தனிமையின் ஒவ்வாமையால் உழலும் பேசும் பாத்திரமாக கதாநாயகி. தனிமையின் பொருட்டு தனது ஒதுக்கான வெறுப்பார்ந்த குணத்தால் இயல்பான வாழ்விலிருந்து விலகி மாய உருவங்களையும் கற்பனை உரையாடல்களிலும் சிக்கிக்கொள்கிறது சிந்தனை. இது ஒருவித மனப் பிராந்தி மனப்பிறழ்வும் கூட. பெரும் மன உளைச்சலின் பொருட்டு நெறிபடும் சீர்மைப் பிம்பம். அனேகர் இதுபோன்ற பிம்பங்களுடன் பேசியும் பழகியும் இயல்பு வாழ்விலிருந்துத் தனித்து விடப்படுகின்றனர். இதையே நாம் நம் மனசாட்சி என்று அழைக்கிறோம்..
தீவிரமான பெருக்கப்பட்ட மனநிலையில் குழப்பங்கள் சூழ திண்ம முடிவுகளோ அல்லது வருந்தக்கூடிய சூழலையோ கடக்க முடியாமல் இருக்கும் பட்சத்தில் தீர்வை நாடும் மனம் அது பிரதிபலிக்கும் மாயத் தோற்றமே ஞான மாதா போன்ற அருவமற்ற உருவங்கள். அவரவர் நம்பிக்கையின் நீட்சி மாயத் தோற்றத்தைத் தோற்றுவித்து உருவ பிம்பமொன்றைப் பிரதிபலிக்கும். வாழ்க்கையில் வெறுமை, விரும்பியவர் ஒதுக்குதல், சுவாரஸ்யமற்ற ருசிகரமற்ற நிலை, அபிலாஷைகளின் பூர்த்தியின்மை, வாழ்வின் மீது அயர்ச்சி, பிறரிடமிருந்து தனித்து விடப்படுதல், தேவையற்ற எதிர்பார்ப்புகள், எதிர்பார்ப்புகளின் ஏமாற்றம், விருப்பங்களை மாற்றிக்கொள்ளும் தெளிவின்மை, புறக்கணிப்புகளின் உச்சம் என மனித மனத்தின் வெகுவான உளவியல் சிக்கல்களில் உழன்று மனப்பிறழ்வில் அகப்பட்டு பெரும்பாலானோர் தம்மைச் சுற்றிய வட்டமிட்டுக் கசந்தவர்களாகக் கிடப்பர்.அப்போது மனதின் ஆற்றல் இந்த இயல்பற்ற ஆற்றாமையைக் கழுவிவிட உருவங்களை உண்டு பண்ணும். இங்கு ஞான மாதாவாக நமது கதாநாயகிக்கு மனம் என்னும் ஆழம் ஏற்படுத்திய மருட்சியின் மறு உரு.
புனைவின் தமிழாக்கம் தேர்ந்தச் சொற்களின் அபரீதக் கோர்வையாய் உள்ளத்தில் உறைந்து நிற்கின்றன. மாறுபட்ட மொழிபெயர்ப்பாக வாசகனை அடுத்தடுத்தப் பத்திகளுக்கு இமை கொட்டாமல் கடத்துகிறது. ஆங்கிலப் பதத்திற்கான தேர்ந்த ஆழமான தமிழ் பதத்தைக் கொண்டு தொகுப்பு முழுமையிலும் தவழவிட்டுள்ளார் மொழிப்பெயர்ப்பாளர் எழில்சின்னதம்பி அவர்கள்.
1951 இல் வெளிவந்த “தண்டவாள மாற்றி” சிறுகதை மெக்சிகோ எழுத்தாளர்களின் தலைசிறந்த எதார்த்த எழுத்துக்களின் சொந்தக்காரரான ஜுவான் ஹோசே அர்ரியோலா அவர்களால் எழுத்துக் காட்சியாக்கப்பட்ட புனைவு முயற்சி. இதுவும் மாய யதார்த்தத்திற்கும் விசித்திர வினோதங்களுக்கும் பாற்பட்டப் புனைவு. பிரபஞ்சவெளியில் மறைந்து நிற்கும் ரகசியங்களின் விளிம்பு இந்தப் புனைவு.
கதையின் நகர்வு ஒருவித திராபையான கதவுகளைக் கொண்ட அறைகளைத் திறக்க மேற்கொள்ளும் திகிலூட்டும் நொடிகளைக் கொண்டு மனத்தின் எல்லா விதமான மயக்க மருட்சிகளை ஏற்படுத்தும் வல்லமை கொண்ட புனைவாகத் ‘தண்டவாள மாற்றி’ வாசகப் பரப்பை அசத்துகிறது.
பொய் உணர்வையும் போலியான மயக்க அதீதத்தையும் துல்லியமாக்க மாயலோக தரிசனம் தந்துள்ளார் எழுத்துதாரர். வாசிக்கும் தருணங்கள் மாய உலகத் திரை காணலைப் பிரம்மாண்டமாக தோற்றுவிக்கிறது. தொகுப்பாளரின் மைக்கோல் வண்ணம் வாசகனைப் பயண அயர்ச்சியில் வினோத சுழற்சியில் ஆட்படுத்தியது.
முற்றிலும் மனமது கொள்ளவியலா பகுதிகளும் நம்பகமற்ற பாத்திரப் புனைவுகளும் எழுத்தின் சுபிக்ஷம் கைக்கொண்டு வாசகனை சிலிர்பூட்டுகிறது. பிள்ளை மனநிலையை உண்டுப்பண்ணுகிறது . மாய உலகிற்குள் புகுத்தி ஆளரவமற்ற அச்சந்தரும் அதிர்ந்தப் போக்கை உருவாக்கி அடுத்தடுத்த காட்சி எதிர்பாரப்புகளை தோற்றுவிக்கிறது. பேரச்சம் சூடி நிற்கும் எழுத்துக்களை மாயப் பிடியில் நிறுத்தி வைக்கிறது.
கரு கொண்டுக் கதைப் பதிப்பித்தக் கதைக்காரர் தம் புகழ்ச்சி மாலை சூடினாலும் வேற்று மொழியின் விஸ்தாரத்தை சுவாரஸ்யமாக அச்சு அசலாக படைப்பின் மூலத்தை சற்றும் பிசிறின்றி அலுங்காமல் குலுங்காமல் மொழியைப் பந்தாட விட்டு அதே ருசிகரத்தைச் சுவை மாறாமல் கூடுதல் நளினமேற்றிச் செரிவான படைப்பாகத் தமிழுக்கு வழங்கியுள்ளது வெகு சிறப்பு.
மனித வாழ்வின் பயணங்கள் என்பவை ரயில் பயணங்களின் யதார்த்தம். உடன் பயணிப்பவர் இறுதிவரை உடன் வருவதில்லை. நடுவில் ஏறுபவர் உறவாக ஆவதும் இல்லை. கடந்தவர் கடத்துபவர் என அனைவரும் இந்த மீச்சிறு வாழ்வின் இடைப்பட்ட காலப் பிரதிநிதிகள். வந்துக் கொண்டும் சென்று கொண்டும் இருத்தலின் அடையாளத்தை மட்டும் விட்டு சென்று விலகிச் செல்வர். இது வாழ்தலின் பொருட்டில் மட்டுமல்ல மரணத்தின் மருண்மைக்கும் பொருந்தும் என்பதை வாழ்க்கைப் பயணத்தின் உருநிழலின் ஒதுக்கத்தில் நின்று பேசுகிறது, வெனிசுவேலாவைச் சேர்ந்த இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற மகத்துவ எழுத்துதாரியான அந்தோனியா பலசியோஸ் அவர்களால் 1990 இல் சித்தரிக்கப்பட்ட சீர்மைமிகுப் புனைவான “பயணம்”.
உலகச் சிறுகதைத் தளத்தில் இதுவொரு மேம்பட்ட புனைவு. பயணத்தின் அறிதுயில் நிலைக்கு ஆட்படும் மனித மனம் பல படிநிலைகளைக் காண்கிறது .டேலியாவின் பயணமும் அப்படித்தான். உடன் வந்துப் பயணித்துப் பேசிப் பழகிய மனிதர் கண்டுகளித்த பொருட்கள் என அனைத்தும் பாரிய இயக்கமில்லாத உருவமில்லாத அரவமற்ற இருட்டில் தொலைந்து விட்டதை உணர்கிறாள் டேலியா.
இங்கு எல்லாமே மாயை எதுவுமே மெய்யற்றது. நிலையற்றது. இருள் மட்டுமே நிலையானது. அதுவே நம் வாழ்வின் இறுதிநிலை இன்று நமக்கான உறவும் சுற்றமும் வாழ்வின் முதிர்ச்சியில் நம்மை விட்டு வெகு தொலைவில் விலகிச் சென்றுவிடுவர். தனியாக இவ்வுலகிற்கு வந்த நாம் துணையாக பலர் வாழ்வில் சூழ்ந்தாலும் இறுதியில் தனியாகவே தனிமையின் துணை வழங்கிவிட்டு செல்வர் என்பதே “பயணம்”நமக்கு வழங்கும் நிலையாமையின் கற்பிதம். பிரதியேகமாக மறைக்கப்பட்ட மறுக்க முடியாத யதார்த்தம். இந்த ஆழிசூழ் உலகத்தில் மெய்மைக் கோலம்.
மனித மனம் அபிலாஷைகளின் இறுக்கங்களில் கட்டுண்டுத் தனிமை நோய் பீடித்து அவதிப்படும் வேளை உறவுக்காகவும் வாழ்த்துணைத் தேடியும் சுற்றித்திரியும் தனிமையின் பேரச்சம்,போதாமை, வாழ்க்கைப் பேதைமை, திண்மமில்லா நிலை, சுற்றியே இருண்மை, வாழ்க்கையின் அடிப்படைக்கான சிறுதுளிக் கிளர்வும் நீக்கப்பட்டு சிக்கல் உணர்வு சூழ மனித மனம் பேரிரைச்சலைச் சந்திக்கிறது. அந்த இரைச்சலின் உரையாடல்களாக உதிர்க்கும் உதிர்ந்திடும் சொல்லாடல்கள் கண்ணெதிரே நம் உணர்வுகளை உறவுகளை நாடிய ஏக்கத்தைத் தாங்கி நிற்கும் . அவ்வாறு தாங்கும் உளவியல் வெளியில் தோன்றுபவை யாவும் உருநிழல் ஏற்று பிரதிபலிக்கும்.மனம் விழையும் துணையைத் தேடி வாழ்ந்த காலங்களில் ஏங்கிய உறவுகளைப்போலவே போலி மாயத்தோற்றம் சூடி கண் முன் நிழலாடும். முன்பே பெரும் குழப்பத்திலும் தனிமையின் உருக்குத்தலில் தமக்குத்தாமே ஒன்றுமில்லை நான் இயல்பாக தான் இருக்கிறேன் என்கிற போலிப் பகட்டுப் போர்வையைத் தாங்கி நிற்கும். அசலில் மனம் தனிமையைப் போக்க ஆள் தேடி விம்மும். மெல்லமெல்ல கற்பனையின் மாயப்பார்வை ஒருவித மாயமனிதர்களையும் அவர்களின் ஒலிகளையும் உரையாடலாகப் பிரதிபலிக்கும். இவை யாவும் கனவுகளே என உணர உணர்த்த துணையின்றி மாய நிகழ்வுகளிலேயே அகப்பட்டு திக்குமுக்காடும். இந்தத் தனிமையின் பீடிகை பேரச்சத்தை அவர்களுக்கு உண்டு பண்ணும். வெகுதொலைவில் தோன்றிய மாய பிம்பங்களின் சாயை மனத்தின் பலவீனத்தால் மெல்ல நகர்ந்து அவர்கள் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டுத் திகிலூட்டும். தமக்குள் அவர்களை இழுத்துச் சென்று எப்போதும் சிக்கலான நூற்கண்டு போலச் சிக்க வைத்து விடும். அநேகர் தமது வாழ்நாள் இறுதிவரை தமைச்சுற்றிய இப்படியான மாய உறவுகளுடன் உறவாடிக் களித்திருப்பர். இறுதியில் மரித்தும் போவர்.
அமெரிக்காவின் ஆகச் சிறந்த சிறுகதைப் புனைவாளர் ட்ரூமேன் கபோட்டி அவர்களால் உயிர் ஊட்டப்பட்ட எழுத்தான “மிரியம்” சிறுகதை தனிமையில் சிக்குண்டு மனித உளவியலின் உறவுகளுடனான வாழும் அபிலாஷைகளின் புறக்கணிப்பால் ஏற்பட்ட அல்லாட்டத்தை அதன் விளைவில் தோன்றிய மிரியம் என்கின்ற மாய உருவம் ஏற்படுத்திய பேரச்சத்தில் திகிலூட்டத்தில் திடுக்கிடும் திருமதி மில்லரின் சிந்தனை சிக்கல், அமைதியின் மேல் மனம் ஒரு நூற்கண்டாகச் சுற்றி உறக்கம் போன்ற ஒருவித சிந்தனை மயக்க அதீதத்தை உண்டு பண்ணி மில்லரை அலைக்கழித்தது. வெகுகாலமாக உயிரற்ற உருப்படிகளுடன் தமது வாழ்வைக் கடத்திய மில்லர் வெறுமைச் சுமந்த அவரின் மனம் உறவு ஏக்கத்தை உள்ளுக்குள் புதைத்துக் கிடந்தது. அதன் தாக்கமே மிரியத்தின் மாயத் தோற்றத்தில் அகப்பட்டுக் கிடுகிடுத்து இறுதியில் தன் நிலை உணர்ந்து மீள்நிலைக்குத் திரும்புகிறார் திருமதி மில்லர்.
வளவளப்புக்கு இடமின்றி எழுத்தின் மையம் வாசகனும் வாசிப்பும் என்பதை கருத்தில் கொண்ட எழுத்துதாரி மனித மனத்தின் பல்வேறு கோணங்களைப் படைப்பின் வழியே நிறுவியுள்ளார். இப்படியான தேர்ந்தப் படைப்புகளைக் கைக்கொண்டுத் தொகுப்பை உரமேற்றி வளமாக்கியுள்ளார் நூற்தொகுப்பாளர். அவருடைய மொழியும் எழுத்து நடையும் கூடுதல் பலம். வாசகனை ஒருபோதும் சோதிப்பதில்லை.
அருகில் அமர்ந்து அவரே தேனூறும் தமிழில் கதை சொல்லியாக உருமாறி மாய யதார்த்தப் புனைவுகளை உணர்வுப் பெருக்கின் நீட்சி மிகுந்த சுவாரஸ்யம் கூட கதைகளைச்ச் சொல்லி முடிக்கிறார்.
பிரபஞ்சத்தின் மெய்யாளுமை நம் பிள்ளைகள் அவர்களின் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் கொண்டாட்டங்களும் புரிதல்களும் பெரியவர்களின் சேகரித்த அறிவிற்கு முற்றிலும் முரண்பட்டது. குழந்தைமை மூலமாகவும் பிள்ளைப் பிராயத்தின் வழியாகவும் இயல் முரணிய புனைவின் உருவாக்கமே சிலியைச் சேர்ந்த அறிவியல் புனைவுக் கதைகளின் அரசியாகவும் சிறார் இலக்கியத்தின் தன்னிகரில்லா எழுத்துதாரியாகவும் அறியப்படும் எலினா அல்துனாட்டே அவர்களால் 1977 இல் பாந்தமாகப் பிள்ளைகளின் ஏக்கங்களை எதிர்பார்ப்புகளை பெற்றோர்கள் தம் பிள்ளை மீதான ஆதிக்க வட்டத்திலிருந்து வெளிவந்து குழந்தைகளின் கற்பனை உலகிற்குள் அவர்களின் பிடித்தத்திற்குள் பிரவேசித்து அவர்களின் எதிர்பார்ப்புகளை வியனுலக விந்தைகளைத் தனதாக்கிக் கொள்ளும் முனைப்பைப் பெற்றோர் யாவரும் கையாள வேண்டும் என்கிற பிள்ளை மனதின் உளவியல் எதிர்பார்ப்புகளைப் பேசுகிறது “வண்ணத்துப்பூச்சி மனிதன்” சிறுகதை நான்கு சுவருக்குள் உள்ளொடுக்கப்பட்ட ஒரு குழந்தையின் வெளியுலக ஏக்கம். தனக்குக் காண்பிக்கப்படாதஅந்த உலகை பெற்றோர் உறவுகள் அல்லாத அந்தப் பிரபஞ்ச வெளியை காண ரசித்துத் துய்க்க வீட்டை கடந்து வெளியேறுகிறாள்.
இதுவரை அவளுக்குப் பாதுகாப்பானதாக மனமுவந்ததாக இருந்த வீடு பலமற்று படி தாண்டியதும் உலகம் மாய வித்தைகள் நிரம்பியதாகக் கட்டுப்படுத்தவியலா படிமங்களின் உருவங்களாகத் தீய விலங்காய் அச்சுறுத்துகிறது. திக்கற்று துழாவியக் குழந்தையை வண்ணத்துப்பூச்சி மனிதன் தமது மாய வித்தைகளில் அசத்துகிறான். குழந்தைமையின் பரிமாணத்தில் மினுக்கும் சுவாரஸ்யத்தில் தன்னை இழக்கிறது அந்தப் பச்சிளம் பிள்ளை.ஆரவாரம் கூட்ட திளைக்கிறாள். அந்த மாய மனிதனின் மென்மையான அன்பும் மகிழ்ச்சியூட்டும் நேசமும் அவளை ஒரு நாளும் சலிப்படைய வைக்கவில்லை. தமது ஆழ்மன ஏக்க நிறைவின்மையை அந்த வண்ணத்துப் பூச்சி மனிதன் தமது பூரண அன்பினால் பூர்த்திச் செய்கிறான். அவள் எதிர்பார்த்த அந்த பேரன்பும் சுதந்திரமும் இயல்பைத் தாண்டிய மகிழ்கூடிய திண்டாட்டங்களும் அவளுக்குள் பெரும் உளக்களிப்பை ஏற்படுத்தியது.
திடீரென மறைந்துப் போகும் அந்த மனிதனைத் தொலைத்து தேடி அழுகிறாள் பிள்ளை. குழந்தையின் பரிதவிப்பை உணர்ந்த தந்தை அவள் கண்டதும் கொண்டாடிய யாவும் மாயபிம்பங்களே. கற்பனையே என்பதைப் புரிய வைத்து குழந்தையின் எதிர்பார்ப்பை அவள் தேடித் திரிந்த வெற்றிடத்தைக் கதை சொல்லியாக தன்னை உருமாற்றி நின்று பூர்த்தி செய்கிறார் தந்தை.
குழந்தைமையின் விஸ்தார லோகத்தின் அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் முழுமையாக எழுத்தில் வார்த்திட முடியாது. அத்துணை வினோதங்களும் நம் கற்பனைக்கப்பாற்பட்ட அந்த உலகை அந்தக் குதூகலத்தைச் சொல்லாடிக் களிக்கிறது கதை.
மொழிபெயர்ப்பாளரும் கதைக்காரருக்குச் சற்றும் சளைத்தவர் அல்லர் என்பதைத் தமது எழுத்துப் புலனாய்வில் ஒவ்வொரு கதைகளையும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் . கதைக்களத்தில் வாசகனைத் திருப்தியடையச் செய்து பரிபூரணத்தை நிலைநாட்டி வெற்றிவாகை சூட வழிவகுக்கிறது தொகுப்பு.
எப்போதும் புனைவிலக்கியத்தின் உளவியல் பங்கு என்பது மிக முக்கியமானது. இன்னொரு மனிதரின் வாழ்க்கையைப் புனைவின் வழியே துய்த்து அனுபவம் பெற புனைவுகள் பேருதவி செய்கின்றன. வாசிப்பனுபவம் வழியாக இது வாய்த்தும் விடுகிறது. ஒவ்வொரு கதையும் கூடுதல் உயிர்ப்பும் அசத்தலான மனிதர்களின் இயல்பின் சாயலாகவும் அமைந்து வருவதை வாசிக்கிற யாரும் உணர்ந்து விட முடியும். தொகுப்பாளர் ஒவ்வொரு கதைக்காரரின் வாழ்ந்த காலப் பதிப்புகளையும் புனைவுகளின் பதிப்புகளையும் எழுத்துக்களின் சிறப்புகளையும் தனித்துவத்தையும் அணிவகுத்துப் பதிவிட்டிருப்பது ஒவ்வொரு கதைக்கான பின்புலத்தையும் ஆய்வையும் தேடி அலைய தேவையின்றி நூலின் பக்கங்களிலேயே கண்டடைய வழிவகுத்துள்ளது சிறப்பு.
மனித மனத்தின் அபத்தமான உளவியலை பேசுகிறது ஒவ்வொரு புனைவும். மொழியின் சீர்மையுடன் வாசகனை கதைக் காட்சியகத்திற்குள் புகுத்த எழுத்தாளர் எழில் சின்னதம்பி அவர்கள் மேற்கொண்ட பெருங்மெனக்கிடல்களும் தீர்க தமிழாய்வும் தொகுப்பை உச்சம் பெற செய்கிறது.
தெறிப்பான மொழியும் கோர்வையான வரிகளும் வாசகனை வாசிப்பு வெளியிலிருந்து கடத்திடாது இருத்தி வைக்கிறது. தத்துவ உரையாடல்களோ கோட்பாட்டு இறுக்கங்களோ இன்றி உலகமொழி மாய யதார்த்த உளவியல் சார்ந்த உலகளாவிய எழுத்தாளுமைகளின் புனைவுகளைத் தமிழிலக்கிய வாசகப் பரப்பில் மொழிபெயர்ப்பின் வலிமையில் கூடுதலாக ஒளிர்ந்து நிற்கிறது நூல்.
நம் தமிழ் சிறுகதை இலக்கியம் அல்லாது உலக மொழிக் கதைகளையும் ஆகச்சிறந்த எழுத்து கவிஞர்களின் படைப்புகளைச் சராசரி அல்லாது விளிம்புநிலைப் புனைவுகளை எழில்மிகு நம் தாய்மொழியில் மீள்புனைவு செய்து வாசக வெளிக்குள் விரவ மேற்கொண்ட முயற்சிக்கு என் பாராட்டுகள். தங்களின் மேலான இந்த இலக்கியத் தொண்டு இத்துடன் ஒடுங்கி விடாமல் தங்களுக்குள் துளிர்விடும் புதிய படைப்புகளையும் உலக தத்துவ எழுத்துக்களையும் தமிழ் இலக்கிய வெளியில் படரவிட்டு நிரப்பிட வேண்டும் என்கிற வேண்டுதலை முன்னிறுத்தி உளமார்ந்த வாழ்த்துக்களையும் சேர்த்துப் பதிவிடுகிறேன்.
நன்றி.
நூலின் பெயர் : கடைசி வருகை
நூல் ஆசிரியர் : எழில் சின்னதம்பி
பக்கம்: 176
விலை : ₹ 280
வெளியீடு : நூல் வனம்
பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள் கட்டுரை – தமிழில் கி.ரமேஷ்
பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள். பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள் – 26ஆவது செய்திக் கடிதம் (2022)
விஜய் பிரசாத்
சலௌவா ரௌடா சௌகேர் (லெபனான்), கோரஸ், 1948
அன்பு நண்பர்களே,
ட்ரைகாண்டினண்டல்: சமூக ஆய்வுக்கான நிறுவனத்திலிருந்து வாழ்த்துகள்.
ஐ.நா.சர்வதேசக் குழந்தைகள் அவசர நிதி (UNICEF)யானது, உலகளாவிய உணவு நெருக்கடியால் கிழித்தெறியப்பட்டுள்ள பதினைந்து நாடுகளில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு குழந்தை பட்டினியில் தள்ளப்படுவதாகக் கூறுகிறது. இந்தப் பதினைந்து நாடுகளில் பன்னிரண்டு நாடுகள் ஆப்பிரிக்காவில் (பர்கினோ ஃபாசோவிலிருந்து சூடான் வரை) உள்ளன, ஒன்று கரீபியனில் (ஹைதி) உள்ளது, இரண்டு ஆசியாவில் (ஆஃப்கானிஸ்தானும், ஏமனும்) உள்ளன. முடிவே இல்லாத போர்கள் இந்த நாடுகளிலுள்ள அரசு நிறுவனங்களை உயர்ந்து வரும் கடன், வேலையின்மை நெருக்கடிகள், பணவீக்கம், வறுமை ஆகிய நெருக்கடிகளை சமாளிக்க முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளன. அதில் தற்போது ஆப்பிரிக்காவின் சஹேல் பகுதியைச் சேர்ந்த இரண்டு நாடுகள் (குறிப்பாக மாலியும், நைகரும்) சேர்கின்றன. அங்கு பட்டினியின் நிலைமை ஏறத்தாழ கட்டுப்பாட்டை மீறிச் சென்று விட்டது. இந்த நிலைமை போதாதென்றோ என்னவோ, கடந்த வாரம் ஆஃப்கானிஸ்தானை ஒரு பூகம்பம் தாக்கி, ஆயிரம் மக்களுக்கு மேல் கொன்று விட்டது. இது ஏற்கனவே 93% மக்கள் பட்டினியில் வீழ்ந்து விட்ட நிலையில் இன்னொரு அடி.
நெருக்கடியால் தாக்கப்பட்டுள்ள இந்த நாடுகளில் அரசுகள் மற்றும் ஐ.நா. உலக உணவுத் திட்டத்திலிருந்து உணவு உதவி வரும். இந்த நாடுகளில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் ஐ.நா. அமைப்புகளிலிருந்து வரும் உதவியை நம்பியே இருக்கிறார்கள். உலக உணவுத் திட்டமானது உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய உணவை வழங்கும். அது எண்ணை, நிலக்கடலை, பால் பவுடர், சர்க்கரை, தாவர எண்ணை, வைட்டமின்கள் அடங்கியது. அடுத்த ஆறு மாதங்களில் இவற்றின் விலைவாசி 16% உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவேதான் ஜூன் 20 அன்று, தனது ரேஷனை 50% குறைக்கப் போவதாக அறிவித்தது. இந்த ரேஷன் குறைப்பானது, கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு நான்கு அகதிகளில் மூவரை பாதிக்கும். அங்கு சுமார் 50 லட்சம் அகதிகள் வசிக்கிறார்கள். ”குழந்தைகளை வீணடிக்கும் தீவிர நிலைமைகள் தீப்பற்றும் நிலைமை இருப்பதை இப்போது நாங்கள் காண்கிறோம்” என்கிறார் யூனிசெஃப்பின் செயல் இயக்குனர் கேதரின் ரசல்.
ஊசோ இகோனு (நைஜீரியா), நாடற்ற மக்கள், ஒரு கூட்டம், 1982
உணவுப் பொருள் விலையேற்றம் பட்டினி கிடப்போரின் அதிகரிப்புடன் தொடர்புடையது என்பது தெளிவு. இது உக்ரைன் மோதலால் மேலும் அதிகரித்துள்ளது. பார்லி, சோளம், பலாப்பழம், சூரியகாந்தி விதை, சூரியகாந்தி எண்ணை, கோதுமை, உரம் ஆகியவற்றை மிக அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள் ரஷ்யாவும், உக்ரைனும் ஆகும். உலக அளவில் உணவுப் பொருள் விலையில் போர் பேரழிவை உண்டாக்கியுள்ளது என்றாலும், அதுதான் விலையேற்றத்துக்குக் காரணம் என்று பார்ப்பது தவறானது. உலக உணவுப் பொருள் விலையேற்றமானது இருபது ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. 2021 இல் அது கீழ்க்கண்டவை உட்படப் பல காரணங்களால் கைமீறிச் சென்றது:
1) பெருந்தொற்றுக் காலத்தில், நாடுகளுக்குள்ளும், அவற்றின் எல்லைகளிலும் இருந்த கடுமையான ஊரடங்குகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நகர்வுக்குக் கடுமையான தடைகளை ஏற்படுத்தின. இப்போது அகதிகள், அடைக்கலம் கேட்டு வருவோர் உள்ளிட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவசாய உற்பத்தியில் முக்கியமான பங்கை வகிக்கிறார்கள். அகதிகளுக்கு எதிரான மனப்பான்மையும், ஊரடங்குகளும் நீண்ட காலப் பிரச்சனையை பெரும் பண்ணைகளில் ஏற்படுத்தி விட்டன.
2) கோவிட் 19 பெருந்தொற்றின் விளைவாக விநியோகச் சங்கிலி உடைந்து விட்டது. உலக உற்பத்தியில் பெரும் அளவின் மையமான சீனா பூஜ்யத் தொற்றுக் கொள்கையைக் கடைப்பிடித்ததால், சர்வதேச கப்பல் போக்குவரத்தில் தொடர் பிரச்சனையை உருவாக்கியது. துறைமுகங்கள் மூடப்பட்டு, மாதக்கணக்கில் கப்பல்கள் கடலிலேயே இருந்தன. சர்வதேச கப்பல் போக்குவரத்தும், உரம், உணவு உள்ளிட்ட தொழில் உற்பத்தி சாதாரண நிலைக்கு வருவது மிகவும் மந்தமாக நடந்தது. உணவு விநியோகச் சங்கிலியானது ஏற்பாட்டுப் பிரச்சனையாலும், உணவு பதப்படுத்தும் இடங்களில் ஊழியர்கள் குறைவாகக் கிடைத்ததாலும் மோசமானது.
3) உணவு முறையில் தீவிரமான காலநிலைகள் பெரிய பங்கை வகித்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில், வறட்சி, வெள்ளம், கடுமையான புயல் ஆகியவற்றால் 80லிருந்து 90% இயற்கைப் பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன. அதே நேரத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளில், இந்தப் பூமியானது ஒவ்வொரு ஆண்டும், வறட்சியாலும், பாலைவனமாதலாலும் ஒரு கோடியே இருபது லட்சம் நன்செய் நிலத்தை இழந்துள்ளது; இந்தக் காலத்தில் நில அரிப்பாலும், மாசுபாட்டாலும் நாம் மூன்றில் ஒரு பங்கு விவசாய நிலத்தை இழந்துள்ளோம்.
4) கடந்த நாற்பது ஆண்டுகளில், உலக அசைவ உணவு நுகர்வு (பெரும்பாலும் கோழி) நாடக பாணியில் அதிகரித்தது. ‘உச்சகட்ட இறைச்சி நுகர்வை’ எட்டி விட்டோம் என்று சில அறிகுறிகள் காட்டினாலும், அது தொடர்ந்து உயர்கிறது. மிகப்பெரும் சுற்றுச்சூழல் தாக்கத்தை இறைச்சி உற்பத்தி உருவாக்குகிறது: விவசாயத்தின் மொத்த வெளிப்பாட்டில் 57% இறைச்சியிலிருந்து வருகிறது. (உலக கலோரி விநியோகத்தில் இறைச்சி வெறும் 18%ஐயே வழங்கினாலும்) பூமியின் விவசாய நிலத்தில் 77%த்தை கால்நடை உற்பத்தி எடுத்துக் கொள்கிறது.
யோலண்டா வால்டிஸ் ரெமெண்டெரியா (மெக்சிகோ) (பன்முகத்தன்மை), 2009
உலக உணவுச் சந்தையானது உக்ரைன் மோதலுக்கு முன்பாகவே நெருக்கடியில் இருந்தது. நோய்த்தொற்றுக் காலத்தில் விலைவாசியானது பல நாடுகள் முன்பு பாத்திராத அளவுக்கு உயர்ந்தது. எனினும், போரானது ஏற்கனவே பலவீனப்பட்டுப் போன இந்த உணவு முறையை ஏறத்தாழ நொறுக்கி விட்டது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க பிரச்சனை உலக உரச் சந்தை. அது பெருந்தொற்றுக் காலத்தில் மீட்சியில் இருந்தது, ஆனால் இப்போது நெருக்கடியில் உள்ளது: ரஷ்யாவும் உக்ரைனும் நைட்ரஜன், பாஸ்பரஸ் உரங்களில் 28%த்தையும், உலக ஏற்றுமதியில் பொட்டாஷில் 40%
ஏற்றுமதி செய்கின்றன. மேலும் ரஷ்யா உலக அம்மோனியம் நைட்ரேட்டில் 48%ஐயும், உலக யூரியாவில் 11%ஐயும் ஏற்றுமதி செய்கிறது. விவசயிகளும், விவசாய நிறுவனங்களும் உயிரியல் உரத்துக்கு மாற விரும்பினால் தவிர, விவசாய நிபுணர்கள் உரத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்தால் மகசூல் கடுமையாகக் குறையும். உணவுச் சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதால், பல நாடுகள் தமது ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை வித்து விட்டன. இது உணவு உற்பத்தியில் தன்னிறைவு இல்லாத நாடுகளில் உணவு நெருக்கடியை மேலும் அதிகரித்து விட்டது.
உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவது குறித்து நிறைய உரையாடினாலும், செயல்பாடு பெரிய அளவில் இல்லை என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. 21ஆம் நூற்றாண்டின் இறுதியில், உலகில் 141 நாடுகள் உணவு உற்பத்தியில் தன்னிறைவுடன் இருக்காது எனவும், உலகில் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கும் 15.6 பில்லியன் மக்களில் 9.8 பில்லியன் மக்களுக்குத் தேவையான சத்துணவு கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. உலக நாடுகளில் 14%தான் தன்னிறைவுடன் இருக்கும். ரஷ்யா, தாய்லாந்து, கிழக்கு ஐரோப்பா அகியவை உலகின் தானிய உற்பத்தியில் முன்னணி வகிக்கும். இத்தகைய இருண்ட முன்கணிப்பானது, நாம் உலக உணவு முறையை விரைவாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது; ட்ரைகாண்டினண்டல் வெளியிட்டுள்ள ‘பூமியைக் காக்க ஒரு திட்டம்’ என்ற கட்டுரையில் தேவையான கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
சுருக்கமாக, ஐநாவின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குடிரெஸ் உக்ரைன் மோதலும், ரஷ்யாவுக்கெதிரான தடைகளும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு உலகச் சந்தையில் உணவு, உரத்தின் முக்கிய உற்பத்தியாளர்களான அந்நாடுகள் உற்பத்தியைத் தொடங்க வேண்டுமென்று தெளிவுபடுத்தியுள்ளார்.
உணவு மற்றும் சத்துணவு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு (ரெடே பென்சான்) பற்றிய பிரேசிலிய ஆய்வு வலைப்பின்னல் சமீபத்தில் நடத்திய ஆய்வானது, 60% பிரேசிலியக் குடும்பங்களிடம் தேவையான உணவு இல்லை என்பதை கவலையுடன் பதிவு செய்துள்ளது. 2 கோடி 12 லட்சம் மக்கட்தொகை கொண்ட நாட்டில் உண்ண எதுவுமில்லாதவர்களின் எண்ணிக்கை 2020க்குப் பின் 1.9 லட்சத்திலிருந்து 33.1 லட்சமாக உயர்ந்துள்ளது. அரசு தேர்ந்தெடுத்த பொருளாதாரக் கொள்கைகளும், பெருந்தொற்றை மிக மோசமாகக் கையாண்டதும் நம் நாட்டில் இன்னும் அதிகமாக அவப்பெயருடன் கூடிய சமத்துவமின்மைக்கு இட்டுச் சென்றது’ என ரெடே பென்சானின் ஒரு மருத்துவப் பெருந்தொற்று நிபுணரான ஆனா மரியா செகால் கூறுகிறார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஐ.நா.வானது பட்டினியையும், வறுமையையும் நாடக பாணியில் குறைத்த பிரேசிலின் ஃபோம் ஜீரோவையும், போல்சா ஃபாமிலியா திட்டங்களையும் ஆதரித்தது. முன்னாள் அதிபர்கள் லூலா டி சில்வா
(2003-10), டில்மா ரூசூஃப் (2011-16) ஆகியோரின் தலைமையில் பிரேசில் ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைந்தது. ஆனால் அதைத் தொடர்ந்து மிக்கேல் டெமர் (2016-18), ஜேர் பொல்சொனாரோ (2019 முதல் இப்போது வரை) ஆகியோரின் ஆட்சியில் கிடைத்த பலன்கள் இழக்கப்பட்டு பிரேசில் பழைய பட்டினி நிலைக்குப் பின்னடைவைச் சந்தித்து விட்டது. கவிஞரும், பாடகருமான சொலானோ ட்ரிண்டாட் பாடுகிறார், ‘டெம் ஜெண்டே காம் ஃபோமே” (பட்டினியுடன் மக்கள் இருக்கிறார்கள்)
பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள்
பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள்
பட்டினி கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள்…
பட்டினியுடன் மக்கள் இருந்தால்
உண்ண அவர்களுக்கு எதாவது கொடுங்கள்
பட்டினியுடன் மக்கள் இருந்தால்
உண்ண அவர்களுக்கு எதாவது கொடுங்கள்
பட்டினியுடன் மக்கள் இருந்தால்
உண்ண அவர்களுக்கு எதாவது கொடுங்கள்
அன்புடன்
விஜய்
தமிழில்: கி.ரமேஷ்
நூல் அறிமுகம்: நாராயணி கண்ணகியின் வாதி நாவல் – ந.பெரியசாமி
என்றேனும் ஒருநாள் சமதர்மம் பூக்கும் எனும் நம்பிக்கையோடு ஒரு பிரதேச மக்களின் வாழ்வியல் வாதையை, அந்நிலத்தின் பூர்வ கதையை நமக்கு சொல்லிச் செல்கிறது நாராயணி கண்ணகியின் ‘வாதி’ நாவல்.
தன்னைவிடப் புத்திசாலியாக இருப்பவனைக் கண்டால் அதிகாரத்திற்குப் பிடிக்காது. மந்தைத் தன்மையோடு என்றும் கேள்வி கேட்காது, தங்களை மட்டுமே நம்பி வாழும் தலைமுறைகளை உருவாக்கியபடியே இருக்கும். உயிர் மற்றும் வாழ்வியல் பயத்தால் நமக்கேன் வம்பு என வாழப் பழகிக் கொள்ளும் மக்களில் இருந்து ரோசத்தோடு அதிகாரத்திற்கு எதிராக ரோசப்பட வைப்பவர்கள் நக்சலைட், கம்யூனிஸ்ட், தீவிரவாதி என முத்திரையிட்டு அவர்களின் வாழ்வை அழிப்பதில் அதிகாரம் எப்பொழுதும் தீவிரத்தன்மையோடு இயங்கும். வாழ்வெனும் நீரோடையில் சருகு வீழ்ந்த அலைவுகளைக்கூட பொருத்துக்கொள்ளாத ஆண்டைகள், ஜமீன்கள், பண்ணையார்கள் எதையும் செய்பவர்கள் என்பதற்கு சாட்சியாக வாதி நிற்கும்.
‘ஊறுகாய்க்காக மாங்காயை பத்து போடுவது போல் உதடுகளை பனி கீத்துபோடும். ஜனங்கள் ஆண்டைகளுக்கு நடுங்குவதைப்போல் பனிக்கு நடுங்கியாக வேண்டும்’ என்பதிலிருந்து ஏலகிரி, ஜோலார்பேட்டை பகுதியின் சூழலையும், வாழ்ந்த மக்களின் நிலையையும் அறிந்து கொள்ள முடிகிறது.
உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தாளத்துக்கோ இருபக்கமும் இடி எனும் சொல்லாடல் உண்டு. இங்கு காலமற்று திசையற்று பேதமற்று எங்கும் எப்பொழுதும் வாதைக்குட்படுபவர்கள் பெண்களே. நாம் சொல்லிக்கொள்ளும் வளர்ந்த சமூகத்தின் நிலையே தொடர் துயரமாக இருக்கையில், ஜமீன்தாரர் காலத்தில் சொல்லவா வேண்டும். அவரின் கண் பட்டோர் கலங்கப்பட்டே தீர்வர். ஊரில் யார் வீட்டிலாவது பெரிய மனுஷியான தகவல் வந்தால் ஜமீன் வீட்டிலிருந்து சீர் தட்டு வந்திடும். அப்பெண் பங்களாவிற்குள் சென்ற ஆகவேண்டிய கட்டாயம் குறித்து நாவலில் வாசிக்கும்போது நம்மையும் மீறி கண்களில் நீர் துளிர்க்கும்.
ஊருக்குள் பாடம் நடத்த வரும் டீச்சரின் நிலையோ பெரும் துயர். பால் மறக்கடிக்க வேப்பிலை பூசிய மார்புக்கண்ணைக் கூட விட்டுவிட மனம் இல்லாது கழுவி வரச்செய்து கட்டாயக் கலவிகொள்ளுதல் தொடர்கதை. ஒருநாளும் மனம் விரும்பி போகாதிருப்பதே எதிர்ப்பு உணர்வாக பார்க்க வேண்டியிருக்கிறது.
ஊராரின் கண்களில் தேவதையாக மிதக்கும் தனத்தை ஜமீன்தார் விட்டுவிடுவாரா என்ன? இயலாமையும், எதிர்கொள்ள இயலாத சூழலுமே தனத்தை அவரோடு இணங்கி இருக்கச் செய்திடுகிறது. ஐந்துமாத கர்ப்பிணியாக இருந்தபோதும் பிறந்தால் என் ஜாடையோடு குழந்தை இருக்குமெனக் கலைத்திட கட்டாயப்படுத்த, தனத்தின் இழப்பு நம்மையும் கலங்கச் செய்திடுகிறது.
“நாக்கு வறண்டு போயி தாகம் எடுத்தாலும், யார்கிட்டயும் தண்ணி கேக்கறதில்ல. புழக்கட தண்ணிய கொண்டாந்து கொட்டாங்கச்சில ஊத்தி தர்றாங்க” ஆதி தொட்டு வளர்ந்தபடியே இருந்துகொண்டுதான் இருக்கிறது சாதி வேர். அது எங்கும் இற்றுப்போய்விடவில்லை. காலமாற்றத்திற்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டு நீண்டபடியேதான் இருக்கிறது. சாதி எனும் கீழ்மையோடு இருப்பவர்களுக்காகவும் சேர்த்தேதான் இயக்கம் கட்ட வேண்டியிருக்கிறது. அடிக்கடி கட்சி வகுப்புக்காக கூடுதல், பெண் தோழர்களின் பங்கெடுப்பில் உருக்கொள்ளும் சிக்கல்களை பேசுதல், பங்கெடுக்கும் தோழர்களிடையே இருக்கும் கருத்து முரண்பாடுகளை விவாதத்திற்கு உட்படுத்துதல், ஜமீனை அழித்தொழிக்க பயிற்சி எடுத்தல், அவ்வப்போது நிகழும் போலிஸ், மக்களுக்கான பிரச்சினைகளை முன்னின்று தீர்த்துவைத்தல் என கதை நிகழ்ந்த காலத்தின் கம்யூனிஸ்டுகளின் நிலையை நாவலில் விரிவாகவே பதிவு செய்து உள்ளார். வகுப்பெடுக்கும் தோழரின் ஆளுமைக்கேற்ப அப்பகுதியின் செயல்பாடு இருக்கும் என்பதை உணர முடிகிறது.
“பயத்திலேயே ஒங்கள வெச்சினு இருக்கறான். பயம் போவணும், உங்க எல்லோருக்கும் என்னிக்கு பயம் போவுதோ, அன்னிக்கு ஜமீன் போயிரும்” என்று நாவலில் வரும் வக்கில் கிருஷ்ணனின் குரல் அன்றைக்கானது மட்டுமல்ல, இன்றைக்கானதாகவும் இருக்கத்தானே செய்கிறது. பயம் வெவ்வேறு வகைமையாக நம்மை வந்தடைகிறது. நம் பயமே பிறரின் மூலதனமாக மாறுகிறது. மருத்துவத்துறை, கல்வி, அரசு என எல்லா துறைகளும் மக்களின் பயத்தால்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஜமீன்கள் போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு மக்களை பயத்தில் வைத்திருந்தனர். அதற்காக ஜமீன்களால் போடப்பட்ட எலும்புத்துண்டு உயர்ரக மதுவும், நடிகைகளின் நிர்வாண நடனமும். இதற்காகத்தான் தவறெனத் தெரிந்தும் இயக்கத்தில் இருந்தவர்களை அழித்தொழப்பு செய்துள்ளதை வலியோடு வாதியில் பதிவு செய்துள்ளார்.
ஒருவன் ஒன்பது பேரை அடிப்பதையே நாயகன் என சித்தரித்த சினிமாவை நம்பியவர்கள் நம் தலைமுறையினர். ஆனால் தாங்கள் வாழும் ஊரின் மக்களின் நலம் பொருட்டு வாழ்ந்த, வாழும் நாயகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், வாதி நாவலில் வரும் நடராஜண் அசாத்தியங்கள் நிறைந்த நாயகன். கரணம் தப்பினால் மரணம் என்பதையும் பொருட்படுத்தாமல் ஓடும் கூட்ஸ் ரயிலில் ஏறி உள்ளிருக்கும் மூட்டைகளைத் தள்ளிவிட்டு அதிலிருக்கும் தானியங்களை மக்களுக்கு பகிர்ந்தளித்து பசியடங்குய முகம் கண்டு மகிழக் கூடியவன். போலிஸ்காரர்கள் சிறைபிடித்து செல்லும்போது கூட இனி இந்த மக்கள் பசிக்கு என்ன செய்வார்கள் எனும் யோசனையில் சென்ற நடராஜண்ணனை மரணிக்கச் செய்தாலும் ஆவ்வூராரின் மனதில் பிறந்து மனதில் இறந்தவனை நம்முள் பிறக்கச் செய்திடுகிறது நாவல்.
“ஜமீன்தார் எங்கள சாட்டையில அடிச்சான். கன்னத்துல அடிச்சான்… வெறகுல குத்துனான், தாங்கிட்டோம். மதக தொறந்து ஒரே ராவுல ஏரித் தண்ணிய வடிச்சான். பொழுது வெடிஞ்சி ஏரிக்குப் போனா மீனுங்க மொத்தமும் செத்து கெடக்குது. மீனுங்கள தூண்டி முள்ளுல புடிச்சா தொண்ட வலிக்குமென வல போட்டுத்தான் புடிப்போம். வலிக்கு துடிக்கக் கூடாது. மீனுங்க எப்புடி துடிச்சியிருக்கும், அவனும் ஒரு நாளைக்குத் துடிதுடிக்கணும்” என அவ்வூர் மக்களுக்கு கோபம் இருந்துகொண்டுதான் இருந்தது.
இயக்கத்தில் இருந்தவர்களுக்கு வேறு வழியற்று ஜமீனை அழிக்க டீச்சர்வீட்டையே தேர்வு கொள்ள வேண்டியதாகிவிட்டது. ஜமீன்தார் அழிந்தாலும், அவர்களுக்குள் காலரணமாக தங்கிப்போனது டீச்சரும் குழந்தையும் அழிந்தது. கதை உண்மையாக இருந்தபோதும் நாவலில் நாராயணி கண்ணகி டீச்சரையும், குழந்தையையும் காப்பாத்தி இருக்கலாமென மனம் ஆசைகொண்டது. நடந்து முடிந்தவைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கு.
நாம் பிறந்த அல்லது வாழும் ஊருக்கென்று எதாகினும் வாய்வழி வரலாறு இருந்தால் நாம் அதை ஏதாகினும் கலை வடிவத்திற்கு கொண்டு வருவதே அறச் செயலாகும். திருப்பத்தூர் மாவட்டத்திலிருக்கும் ஜோலார்பேட்டை நிகழ்ந்த சம்பவங்களை நாரயணி கண்ணகி வாதி நாவலில் வரலாறாக்கியுள்ளார்.
-ந.பெரியசாமி
நூல் : வாதி நாவல்
ஆசிரியர் : நாராயணி கண்ணகி
விலை : ரூ: ₹320/-
வெளியீடு : ஸீரோ டிகிரி வெளியீடு
தொடர்புக்கு : 044 – 24332924
புத்தகம் வாங்க :www.thamizhbooks.com
பேராசை என்ன செய்யும்? கவிதை – சிந்து
பேராசை என்ன செய்யும்?
நாடுகளைக் கடந்து மக்களை
அடிமைப்படுத்தும்
இயற்கை வளங்களைச் சுரண்டும்
லாபத்தைச் குறிவைக்கும்
போரை ஊக்குவிக்கும்
ஆட்சியைக் கவிழ்க்கும் ,கலகமூட்டும்
மக்களின் உழைப்பைச் சூறையாக்கும்
மக்களுக்கான சித்தந்தாங்களை
மண்ணோடு மண்ணாக்கும்
ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டும்
வல்லரசு என்று மார்தட்டும்….
ஆம் போர் ஓர் நிகழ்வு அல்ல
அது திட்டமிட்டு
எளிய மக்கள் மீது
நிகழ்த்தப்படும் ஓர்
ஆணவத் தீவிரவாதம்
அரச பயங்கரவாதம்…….
– சிந்து
பணவீக்கம் : உழைக்கும் மக்கள் மீது கொடூரமான தாக்குதல் – தமிழில் : ச.வீரமணி
நாடு, பணவீக்கச் சூழலில் சிக்கியிருப்பதன் விளைவாக மக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு விலைவாசிகள் நாளும் உயர்ந்துகொண்டிருப்பது, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்கள் வாழ்க்கையில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மே மாதத்தில் சில்லரைப் பணவீக்க விகிதம் 7.8 விழுக்காடு அளவிற்கு இருந்தது. கடந்த எட்டாண்டுகளில் இதுவே மிகவும் அதிகபட்ச அளவாகும். உணவுப் பொருள்களின் பணவீக்கமும் 8.38 விழுக்காடு அளவிற்கு அதிகரித்திருந்தது. இதுவும் கடந்த 17 மாதங்களில் அதிகபட்ச அளவாகும். இதே போன்றே மொத்த விலைவாசிக் குறியீட்டெண் பணவீக்கமும் ஏப்ரல் மாதத்தில் 15.08 விழுக்காடாக உயர்ந்தது. இதுவும் நடப்புத் தொடரில் உச்சபட்ச அளவாகும்.
இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் சாமானிய மக்களுக்கு, குறிப்பாக ஏழை மக்களுக்குக் கூறுவது என்ன? இவற்றின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், கோதுமை, காய்கறிகள், சமையல் எண்ணெய்கள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்ந்திருக்கிறது என்றே அர்த்தமாகும். ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்றும், பெயரளவுக்கே உண்ண முடியும் என்றே அர்த்தமாகும். அவர்களால் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களை வாங்கித்தர இயலாது என்பதும், குறைந்தபட்சம் ஒரு நாகரிகமான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான பொருள்களை வாங்க முடியாது என்பதுமேயாகும். வட இந்தியர்களின் பிரதான உணவாக விளங்கும் கோதுமை மாவு (atta) விலை, கடந்த ஓராண்டில் மட்டும் (2021 மே முதல் 2022 மே வரை) 13 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. பாலின் விலை லிட்டருக்கு 50 ரூபாய்க்கு மேலும், சமையல் எண்ணெய்களின் விலைகள் லிட்டருக்கு 200 ரூபாய்க்கு மேலும், காய்கறிகளின் விலைகள் பல மடங்கும் உயர்ந்திருக்கின்றன.
பணவீக்கம் என்பதன் அர்த்தம், பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதாகும். வீதிகளில் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்பவர்கள், சிறிய அளவில் வர்த்தகங்களில் ஈடுபடுபவர்கள் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதாகும். இது சிறிய மற்றும் நுண்ணிய வர்த்தகப்பிரிவினரையும் பாதித்திருக்கிறது.
பணவீக்கச் சுழலில் விலைவாசி உயர்வுக்கு மிகவும் முக்கிய காரணியாக விளங்குவது எரிபொருள்களின் விலை உயர்வாகும். ஒன்றிய அரசு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் மீது வரிகளை உயர்த்திக்கொண்டே இருப்பது, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை உயர்த்தி இருக்கின்றன. உக்ரேன் யுத்தம் துவங்குவதற்கு முன்னரே இவற்றின் விலைகள் உயர்ந்துவிட்டன. உக்ரேன் யுத்தம் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை உயர்த்திக்கொண்டே இருப்பது, அனைத்துப் பொருள்களின் விலை உயர்வுக்கும் இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.
பெட்ரோல் மீதான வரியில் 96 விழுக்காடும், டீசல் மீதான வரியில் 94 விழுக்காடும் செஸ் வரி மற்றும் சர்சார்ஜ் வரி என்பதை அடிக்கோடிட்டுக்கொள்ள வேண்டும். இவையெல்லாவற்றையும்விட மிகவும் குரூரமான விலை உயர்வு என்பது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வாகும். சாமானிய குடும்பத்தினருக்கு 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை கடந்த ஓராண்டில் மட்டும் 431 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. அதாவது 76 விழுக்காடு உயர்வாகும். வணிகரீதியாக வழங்கப்படும் 19 கிலோ கிராமுக்கான சிலிண்டரின் விலை இப்போது 2,397 ரூபாயாகும். அதாவது 126 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது.
பணவீக்கம் தொடர்பாக மோடி அரசாங்கம் அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் மிகவும் அலட்சியமான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் மாதத்திற்கான சில்லரைப் பணவீக்கம் தொடர்பான விவரங்கள் வெளியான அன்றைய தினமே, நிதி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில், இது பணக்காரர்களைப் பாதிப்பதோடு ஒப்பிடும்போது ஏழைகளுக்கு மிகவும் குறைவாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்திர பொருளாதார ஆய்வு அறிக்கையில், “இந்தியாவில் பணவீக்கத்தின் தாக்கம் உயர் வருமானம் பெறுபவர்களைப் பாதித்த அளவிற்கு, குறைந்த வருமானம் ஈட்டுபவர்களைப் பாதிக்கவில்லை என்றே கிடைத்திருக்கும் சாட்சியங்கள் காட்டுகின்றன,” என்று குறிப்பிட்டிருக்கிறது. மேலும் அந்த அறிக்கையின் முடிவில், நுகர்வு செலவினமானது மக்கள் தொகையில் உயர்நிலையில் உள்ளவர்களில் 20 விழுக்காட்டினருக்கும், மத்திய நிலையில் உள்ளவர்களில் 60 விழுக்காட்டினருக்கும், அடித்தட்டு நிலையில் உள்ளவர்களில் 20 விழுக்காட்டினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறியிருக்கிறது.
இந்த அறிக்கை இவ்வாறு முடிவுக்கு வந்திருப்பதில் உள்ள போலித்தனத்தை ஓர் அம்சத்திலிருந்து தெளிவாக உணர முடியும். மாதாந்திர பொருளாதார அறிக்கை, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பல்வேறு நுகர்வு வர்க்கங்களுக்கிடையேயும் பணவீக்கத்தின் பாதிப்பு விகிதம் எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மிகவும் புத்திசாலித்தனமாக மழுப்பியிருக்கிறது.
பணவீக்கம் பணக்காரர்களையே அதிக அளவில் பாதித்திருக்கிறது என்று கூறப்படும் சிந்தனையை நீக்கிட வேண்டும். ஏனெனில் பணவீக்கம் ஊதியம் பெறுவோரையும், குறைந்த சேமிப்பு உள்ளவர்களையும் நேரடியாகத் தாக்குகிறது. குறிப்பாக உணவுப் பணவீக்கம் அவ்வப்போது உணவுப் பொருள்களை வாங்குபவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. பணக்காரர்களும், உயர் மத்திய வர்க்கத்தினரும் தங்களுடைய நிதி மேலாண்மை மற்றும் பங்குச்சந்தைகள் மூலமாக வருமானங்களுக்கு வேலைகட்டிடமுடியும். அதன் மூலம் தங்கள் வருமானத்தைப் பெரிய அளவில் பாதுகாத்திட முடியும்.
பணவீக்கம் பொதுவாக வருமானத்தை ஏழைகளிடமிருந்து பணக்காரர்களுக்கு மாற்றுவதற்கே இட்டுச்செல்கிறது. ஏனெனில் ஏழைகள் தங்கள் உண்மையான வருமானத்தில் ஏற்படும் இழப்பைச் சரிக்கட்டுவதற்கு, பணக்காரர்களுக்கு இருப்பது போன்று எவ்விதமான வாய்ப்பும் கிடையாது. கார்ப்பரேட்டுகள் சந்தையின் மீது கட்டுப்பாட்டைப் பெற்றிருக்கிறார்கள். அதனால் அவர்கள் பணவீக்கத்தால் ஏற்படும் உயர் இடுபொருள் செலவினங்களின் சுமையை எளிதாக நுகர்வோருக்கு மாற்றிவிடுவார்கள். அதன்மூலம் அவர்கள் தங்கள் லாப விகிதத்தில் இழப்பு ஏற்படாது தக்க வைத்துக்கொள்வார்கள். மேலும், பணவீக்கத்தின் காரணமாக, சேமிப்பாளர்களின் உண்மையான வட்டி வருவாயும் வீழ்ச்சி அடைகிறது.
விலைவாசியைக் கட்டுப்படுத்த, பெட்ரோலியப் பொருட்களின் மீதான அனைத்துவிதமான சர்சார்ஜ் வரிகளையும் ரத்து செய்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோருகின்றன. இது ஒன்றுதான் பெட்ரோல், டீசல் விலைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திட வழியாகும். மேலும் அவர்கள், அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும், குறிப்பாக சமையல் எண்ணெய்கள் மற்றும் தான்யங்களை பொது விநியோக முறையில் அளிப்பதன் மூலம் பொது விநியோக முறையை வலுப்படுத்திட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்கள். மேலும் கோவிட் பெருந்தொற்று ஈராண்டு காலமாகக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக, வருமான வரி செலுத்தாத குடும்பத்தினர் அனைவருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் ரொக்கமாக அளித்திட வேண்டும் என்றும் கோரி இருக்கிறார்கள்.
விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், வேலையில்லாத் திண்டாட்டத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தணிப்பதற்கும் இந்நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியவைகளாகும். இதுவே இடதுசாரிக் கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைத்திற்கும் முன்னுரிமை நிகழ்ச்சிநிரலாக மாற வேண்டும். இதன் அடிப்படையில்தான் இடதுசாரிக் கட்சிகள் நாடு தழுவிய அளவில் வரும் மே 25-31 தேதிகளுக்கிடையே இக்கோரிக்கைகள் மீது போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன. விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மைக்கு எதிராக இத்தகைய போராட்டங்களும் இயக்கங்களும் நாடு முழுதும் பரப்பப்பட்டு தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
(மே 18, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79 – சுகந்தி நாடார்
மாணவர்களின் வல்லமை
மாணவர்களுக்கு நாம் எந்தப் பாடம் நடத்தினாலும், பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக ஒவ்வோரு தனி மாணவரும் சர்வ வல்லமை உடையவராக மாறக் கூடிய ஒரு அனுபவத்தையோ, அல்லது அப்படிப்பட்ட ஒரு தேடலுக்கான வழியையும் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் என்ன மாதிரியான ஒரு மாணவர் சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும் என்று யோசித்துப் பார்ப்போம். இங்கே நான் சர்வ வல்லமை என்றச் சொல்லை, சமயம் சார்ந்த இறைமையைக் குறிப்பிடவில்லை. (கோவிலுக்கு போக வேண்டுமா? தேவலாயத்திற்கு அழைத்துச்செல்ல வேண்டுமா? தொழுகை செய்வதற்கு பழக்க வேண்டுமா என்று மதங்கள் சார்ந்து யோசித்து விட வேண்டாம். இங்கு சர்வ வல்லமை என்பது வாழ்க்கைக் கல்வி என்று சொல்லுக்கு ஒரு மறுபெயர் தான் என்று வைத்துக் கொள்ளுவோமே).
நம் பாடத்திட்டத்தின் அங்கம் நம் மாணவர் ஒருவரை சர்வத்திலும் வல்லுனராக ஆக்கக் கூடிய தகுதி பெற்றுள்ளதா என்பதை எப்படி சோதித்துப் பார்ப்பது? சோதித்துப் பார்த்தால் தானே நம் பாடத்திட்டம் வேலைசெய்கின்றதா இல்லையா என்று தெரியும்?
மாணவருக்கு மனிதாபிமான உணர்வு, அது சார்ந்த செயல்கள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கும் முறையில் இருக்கின்றதா? அவர் வயதுக்கும் சூழ்நிலைக்கும் தேவையான திறமையையும் செயல்திறனையும் வளர்க்கும் விதத்தில் உள்ளதா?
மாணவரது செயல்திறனையும் திறமையையும் ஊக்குவித்து, வளர்க்கும் வகையில் பாடப் பொருண்மையை வகுப்பில் அளிக்கக்கூடிய வகையில் பாடத்திட்டம் அமைந்துள்ளதா? ஒரே சூழ்நிலையிலும் வயதிலும் உள்ள மாணவர்களில் ஒரு மாணவர் முதல் எட்டு இடங்களில் வரக்கூடியவரா? ஒரு மாணவர் தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும் வகைகளை தன்முனைப்பில் தேடிசென்று, தன்னை வளர்த்துக் கொள்ளும் திறன் படைத்தவரா? என்ற வகையில் ஒரு பாடத்திட்டத்தின் ஒரு அங்கத்தையாவது நாம் சோதித்துப் பார்த்தால்தான் நம் மாணவர் ஒரு சர்வ வல்லமை படைத்தவராகக் வர முடியும்.
சரி வாழ்க்கைக் கல்வியை, ஏன் சர்வ வல்லுனர் என்று குறிப்பிட்டுச் சொல்கின்றேன் என்று முதலில் பார்ப்போம். பொதுவாக வாழ்க்கைக் கல்வி என்று சொன்னால் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது சூழ்நிலைக்கு ஏற்றவாறு எண்ணத்தையும் தங்கள் செயல்முறைகளையும் மாற்றிக் கொள்ளும் பண்பு செய்யும் தொழிலின் அறம் காத்தல் கூட்டணியில் வேலை செய்தல் தகவல் தொடர்பு வல்லமை என்று பலர் சொல்லுவர். இன்னும் சிலர் தொழில்நுட்ப அறிவு, கோட்பாடுகளை சார்ந்த கருத்துக்களை புரிந்து கொள்ளுதல் எதையும் ஆராய்ந்து பார்க்கும் தன்மை தருக்கவியல் கருத்துக்களை உருவாக்குவதில் வல்லமை சிக்கலான தெளிவில்லாத விஷயங்களைப் புரிந்து கொன்டு அதை கோர்வைப்படுத்தப்பட்ட கருத்தாகக் கூறுதல் புத்தாக்க சிந்தனை மாற்றங்களை எதிர்பார்த்தல் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ந்து எதிர்காலத்தைக் கணித்தல் என்று பட்டியலிடுவார்கள்.
மேற்கூறிய பட்டியலில் ஒரு மாணவரை வல்லவராக்கும் எந்த ஒரு அடையாளமும் இல்லை அதனால் தான் வாழ்க்கைக் கல்வி என்ற பதத்திற்கு பதிலாக சர்வ வல்லமை என்ற சொல்லை இங்கு பயன்படுத்துகின்றேன். நாம் கல்வி 4,0 பற்றி பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். இடையில் கட்டுரை நின்று போயிருந்த காலக் கட்டத்தில் உக்ரேன் மேல் ரஷ்யா தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பது, துக்கமான செய்தியாக இருந்தாலும். ஒரு மாணவன் சர்வத்திலும் வல்லவராக இருக்க வேண்டிய அவசியத்தை உக்ரேன் மக்கள் உலகிற்கு உணர்த்தி வருகின்றனர். இராணுவப் பயிற்சி இல்லாத அனைவரும் நாட்டைக் காக்கும் வீரர்களாய் மாற வேண்டிய கட்டாயம். வீட்டுக்கு அரசியாக இருந்த பெண்கள் முதல் பல்வேறு தொழில் புரியும் அனைத்துப் பெண்களும் ஒரு நாளில் அடிப்படையே இல்லாத ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டியக் கட்டாயம். சர்வ வல்லமையுடைய மாணவர் என்று சொல்லும் போது, all-rounder என்ற சொல்லைப் பொருத்திப் பார்க்கலாம். all – rounder என்றால் சகலத்துறையர் என்று பொருள். இங்கே சர்வவல்லமயம் என்பது சகலத் துறை அறிவு அனுபவம் பெற்றதோடு மட்டுமல்லாமால், அனைத்துத் துறையிலும் வல்லமை பெற்று இருப்பது.
ஒரு மாணவர் வல்லமை பெற்று இருக்கின்றார் என்பதை எந்த ஒரு அளவுகோலாலும் மதிப்பிட இயலாது. ஏன் எனில் ஒவ்வோரு மாணவரும் ஒரு விதம், மனிதனுக்கு முகம் எப்படி வேறுபடுகின்றதோ அப்படித்தான் மூளையும் வேறுபடும். அதனால் நம் திறமையும் சிந்தனைத் திறனும் செயல்திறனும் கண்டிப்பாக வேறுபடும். நம்முடைய முகம் நமது மூதாதையர் போல் இருந்தால் நமது முகம் மூதாதையரின் முகமாகிவிடாது. அது போலத்தான் ஒருவர் வல்லமைப் பெறுவதும். முகம் ஒன்று போல இருந்தாலும் மூளை (தலைமிதழ், தேகசாரம், பூமலி, மிதடு ஆகியவை மூளை என்ற சொல்லிற்கு இருக்கும் சிலச் சொற்கள் சின்னக் கொசுறுத் தகவல் – கூகுள் ஆண்டவருக்காக) என்பதன் திறன் கண்டிப்பாக வேறுபட்டுத்தான் இருக்கும். ஒரே முகம் கொண்ட இரட்டையரிடமும் சில வித்தியாச குணநலன்களைத் திறமைகளை நாம் காணலாம். எனவே சர்வ வல்லமை என்பதற்கு எந்த விதத்திலும் ஒரு அளவு கோலை வைக்க முடியாது. சர்வ வல்லமைத் திறனைத்தான் ஒரு மாணவனிடமிருந்து கல்வி 4.0 எதிர் பார்க்கின்றது.

All-rounder என்ற சொல்லுக்கு துடுப்பாட்டத்தை (cricket) ஒரு நல்ல உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இவ்விளையாட்டில் ஒரு வீரர்,பந்தை அடிப்பது, பந்தை வீசுவது. மைதானத்தில் பந்தைக் கையாளுவது ஆகிய அனைத்துத் திறமைகளையும் காட்டினால் அவரை All-rounder அல்லது பன்முக வித்தகர் என்கின்றோம். அதே விளையாட்டுக்காரர், துடுப்பாட்டத்தை மட்டும் விளையாடாது அனைத்து விளையாட்டிலும் எந்த ஒரு பொறுப்பையும் எடுத்துச் செய்யக் கூடியவராக இருந்து, விளையாட்டைச் சார்ந்த பொருட்கள் பயன்படுத்தும் விதம், அவற்றை தயாரிக்கும் விதம், விளையாட்டின் வரலாறு என்று விளையாட்டுத் தொடர்புடைய அத்தனைத் தகவல்களையும் தெரிந்தவராகவும் இருந்தால் அவரை நாம் சர்வ வல்லமை படைத்தவர் என்று கூற முடியுமா? இல்லை. தான் விளையாடும் விளையாட்டைச் சார்ந்த அனைத்து செயல்களின் நல்விளைவையும், தீய விளைவுகளையும் ஆராய்ந்து பார்த்து நல்விளைவுகளைப் பெருக்கும் வகையையும் , தீய வளைவுகளைக் குறைக்கும் வகையையும் தெரிந்து அவற்றைச் செயலாற்ற கூடிய ஒருவரை நாம் சர்வ வல்லுநராக நாம் அடையாளம் காட்ட முடியும். இத்தகைய சர்வ வல்லுனர்களைக் கொண்ட சமுதாயம் நாளைய உலகிற்கு இப்போது தேவை. அப்படிப்பட்ட ஒருவர் உலகத்திலேயே இல்லை, இதில் எங்கிருந்து ஒரு சமுதாயத்தை உருவாக்க? இயலாத காரியம்.
இல்லாத ஒன்றை நாம் எவ்வாறு உருவாக்குவது என்ற கேள்வி இருக்க அப்படி ஒருவரை மாற்றக் கூடிய இடம் கல்வி நிலையங்கள் தான். கல்வி நிலையங்களைச் சார்ந்தே, குடும்பம் பணிகள் பொருளாதாரம் உடல் நலம் அனைத்தும் இருக்கின்றன. கல்வி என்ற கட்டமைப்பை மேம் படுத்தி வலு பெறச்செய்வதே கல்வி 4.0. சர்வ வல்லுநராக ஒரு மாணவனை ஏன் தயார் படுத்த வேண்டும்?
ஏன் எனில் அம்மாணவன் தனது செயல் முறைகளை நன்னெறிப் படுத்த முடியும். இன்றைய உலகிற்கும் நாளைய உலகிற்கும் இது அத்தியாவசிய, அவசரத் தேவை. அப்படி என்றால் கல்வி என்று நாம் அடையாளம் காட்டும் ஒன்றை முற்றிலும் வேறு கோணத்தில் பார்க்க வேண்டும். ஏன்?
நன்னெறி என்றால் நீதிக்கதைகளா?
முந்தைய தொடர்களை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 74(என்ன மாதிரியான விழிப்புணர்வு?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76(2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 77(டாவோஸ் செயல்திட்டமும் கல்வி 4.0ம்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78(அது என்ன மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?) – சுகந்தி நாடார்
எல்லையில்லா இன்பம் கவிதை – ஆதித் சக்திவேல்
நாடுகளின் எல்லைகளில்
போராய் வெடிக்கின்றது
எல்லை மீறிய பனிப் போர்
எல்லையோர கிராமங்களில்
எட்டி நிற்க எச்சரிக்கும் மின் வேலி
முட்டி நிற்கும் இரு நாட்டுத் துப்பாக்கிகள்
தினம் தினம்
தீபாவளி கொண்டாடும் வானம்
வெடிச்சத்தத் தாலாட்டுகள்
அன்னையரின் தாலாட்டுக்குப் போட்டியாய்
வேறுபாடு ஏதுமில்லா
பகல் இரவுகள்
சூரிய ஒளி ஒன்றைத் தவிர
வெடிகுண்டுச் சத்தங்களை
விழுங்கிய இரவுகள் விடியும்
சீறிப் பாயும் போர் விமானங்களின்
பேரிரைச்சலுடன்
ராணுவ வண்டிகளால்
புழுதியான சாலைகள்
ஓடி ஒளிந்து உயிர் காக்க
பதுங்குக் குழிகளான காடுகள்
நாற்புறமும் திறந்திருக்கும்
பதுங்கு குழிகள்- அவற்றில்
ஒளியக் கற்றுக் கொண்ட குழந்தைகள்
அக்குழிகளின் இடுக்குகளில்
ஒளிந்து கொண்ட அவரது கல்வி
ஆழப் புதைந்த
தோட்டாவைத் தோண்டி எடுக்கையில்
பீறிட்ட குருதி உறைந்து கிடக்கும்
அக்குழிகளில் தரை எங்கும்
குண்டு துளைத்த காயங்களில்
ரத்தத்துடன் கசியும்
எல்லையோரக் கனவுகள்
வேடிக்கையாய்
பலூன்களைப் பறக்க விட்டு
ஓடி ஆட வேண்டிய குழந்தைகள்
வெடித்த வெடிகுண்டுகளின் மீதங்களை
வீசிப் பிடித்து விளையாடுகின்றன
மரணத்தின் வாசனை நிறைந்த வீதிகளில்
கருவிலிருந்தே வெடிச் சத்தத் தாலாட்டுக்கு
உறங்கி வளர்ந்த குழந்தைகள்
உறங்க மறுத்து அழுகின்றன
அச்சத்தம் கேட்கா இரவுகளில்
பொம்மைகளுடன் விளையாடும் குழந்தைகள்
பொம்மைகள் ஆகின்றன
எச்சரிக்கைச் சங்கொலிகள்
எல்லையில் ஒலிக்கும் நேரங்களில்
இலக்குத் தவறிப் (?)பாய்ந்த எறிகணைகளால்
கருகி நிற்கும்
ஆலயங்கள்
வீடுகள்
பள்ளிகள்
பிள்ளைகளின் புத்தகங்கள்
வெடிச் சத்தம் கேட்கா நாட்களில் கேட்கும்
பள்ளிகளில் மணிச் சத்தம்
மலைக் குன்றுகளில் ஓடி ஒளிந்து விளையாடும்
மேகங்களின் இடையே
ஓடி ஒளியும் துப்பாக்கி ஏந்திய உருவங்கள்
அணி வகுத்த
ராணுவ வாகன வரிசை கண்டு
மலர பயந்த பூக்கள்
பேசப் பயந்த கிளிகள்
பாடப் பயந்த குயில்கள்
வெளியெங்கும்
பூத்துக் குலுங்கிய பள்ளத்தாக்குகளில்
மலரும் ஓரிரண்டு பூக்களும்
கருகி உதிர்ந்திடும்
வீசும் கந்தகக் காற்றில்
மன்னராட்சி மறைந்தும்
மண்ணாசை மறவா
மக்களாட்சி மன்னர்கள்
அம்மன்னரின் ஆணைக்கு
எல்லையில் போரிடக் காத்திருக்கும்
அவரது படைகள்
கடந்த போர் நிறுத்தத்தில்
பறக்கவிடப்பட்ட அமைதியின் சின்னங்கள்
பிரார்த்திக்கின்றன அமைதி வேண்டி
தூரத்தில்
வான்நோக்கி வளர்ந்த
பைன் மரக் கிளைகளில் அமர்ந்து
அமரவும் முடியாது
பறக்கவும் முடியாது
அந்தரத்தில் மிதக்கும் கிளைகளில்
தொங்கும் பறவைகளாய்
அச்சத்தின் ரேகை நிரம்பிய நாட்களில்
காலமெல்லாம் மக்கள்
எண்ணிப் பார்த்தேன்
இரு நாட்டு எல்லை – வெறும்
நிர்வாக எல்லையானால்……
எல்லை தாண்டியது என் மகிழ்ச்சி
அடையாளம் இழக்கும்
இரு நாட்டு தேசிய நாணயங்கள்
எல்லையோரக் கடைகளில்
இந்நாட்டோர்
அந்நாடு சென்றிடுவர்
தேநீர் அருந்திவர
அந்நாட்டோர்
இந்நாடு வந்திடுவர்
காய்கறி வாங்கிச் செல்ல
அங்காங்கே பூங்காக்கள்
எல்லை நெடுக
இருநாட்டு குழந்தைகள்
சறுக்கி விளையாடிட
பெண் எடுக்கவும் கொடுக்கவும்
தடை இல்லா எல்லையில்
திருமண ஊர்வலங்கள்
இரு திசைகளிலும்
இரு நாட்டுக் கொடிகளும்
அடுத்தடுத்த கம்பங்களில்
ஒருவர் மாற்றி ஒருவர்
ஏற்றி இறக்குவர்
கம்பி வேலி இல்லா எல்லை
துப்பாக்கிக்கு
வேலை இல்லா எல்லை
இன்றோ
ஒவ்வொரு நாட்டிலும்
பாதி நிதி – நிதிநிலை அறிக்கையில்
பாதி நிதி எல்லைக்கும் – அங்கே
அண்டை நாடுகள் தந்திடும் தொல்லைக்கும்
பாராளுமன்றம் பேசும்
பாதி நேரம் எல்லையைப் பற்றியே
இந்நிலை மாறி
என் ஆசை நிறைவேறிடின்
எல்லைகள் இல்லா நாடுகள்
எப்போதும் மகிழுமே
எல்லை இல்லா இன்பத்தில்………








