thodar 28: samakala sutrusuzhal savaalgal- munaivar.p.rammanohar தொடர் 28: சமகால சுற்றுசூழல் சவால்கள் - முனைவர். பா. ராம் மனோகர்

தொடர் 28: சமகால சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

குப்பைகள் எரிப்பு!  சமுதாயம் உணருமா,பொறுப்பு! நமக்கு ஒன்று தேவையில்லை என்றால், அதனை அழித்துவிடும் வன்முறை உணர்வு உண்மையில் சமூக உயர்வு, தாழ்வு, வேறுபாடு கலாச்சாரம் மாற்றம் ஆகியவற்றில் ஓரளவு பாரம்பரியமாக ஏற்றுக் கொண்டு வரலாம். ஆனால், இயற்கை சுற்று சூழல் அமைப்பில்…
athyaayam 11 : pen: andrum indrum...-narmada devi அத்தியாயம் 11: பெண்: அன்றும், இன்றும்… -நர்மதா தேவி

அத்தியாயம் 11: பெண்: அன்றும், இன்றும்… -நர்மதா தேவி

கற்பனைக்கும் எட்டாத சுரண்டல் அமெரிக்கா போன்ற புதிய காலனிகளை ஆய்வு செய்யும்போது, 1) ‘அடிமை’த் தொழிலாளர் நிலை, 2) ‘சுதந்திர’ ‘வெள்ளை’ உற்பத்தியாளர்கள் குடும்பங்களில் உழைப்பு, 3) ‘சுதந்திர’ ‘வெள்ளை’த் தொழிலாளர்களின் கூலி-உழைப்பு- இவற்றில் பெண்களின் பாத்திரம் என்ற அடிப்படையில்தான் நாம்…
kavithai: kuralatravargalin kuralaai - u.krishnamoorthi கவிதை: குரலற்றவர்களின் குரலாய்...- உ.கிருஷ்ணமூர்த்தி

கவிதை: குரலற்றவர்களின் குரலாய்…- உ.கிருஷ்ணமூர்த்தி

வாய்ப்பேச இயலாதோரின் அன்றாடப் பாடுகளுக்காய்க் கத்துகிறேன். வாய்ப்பேச வாய்ப்பிருந்தும் வலுவான குரலற்றவர்களுக்காய்க் கத்துகிறேன். வாய்ப்பேச்சில் வம்பளக்கும் வீணர்களின் கூச்சல்களை முறியடிக்கக் கத்துகிறேன். வாய்ப்பேச்சில் தேனொழுகி வரலாறு திரிக்கும் வஞ்சகர்களுக்காய்க் கத்துகிறேன். மெல்லிசைக் கேட்டே பழகிய காதுகள் வாய்த்தவன் ஈயம் காய்ச்சி ஊற்றப்பட்ட…
Tirunelveli Neer Nilam Manithargal book by Era Narumpoonathan book review by S. Subbarao இரா.நாறும்பூநாதனின் திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள் - ச.சுப்பாராவ்

நூல் அறிமுகம்: இரா.நாறும்பூநாதனின் திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள் – ச.சுப்பாராவ்




சந்தியா பதிப்பகம் வெளியிட்டு வரும் ஊர் வரலாறுகளில் திருநெல்வேலி குறித்து என் அருமைத் தோழர் இரா.நாறும்பூநாதன் எழுதியது. திருநெல்வேலி நகரம் என்பதாக இல்லாமல் பழைய அந்த ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் வரலாறாக விரியும் நூல்.

41 கட்டுரைகளில் திருநெல்வேலியின் கல்வி நிலையங்கள், மதம் பரப்ப வந்து தமிழ்தொண்டாற்றிய கிறிஸ்துவப் பெரியோர்கள், நெல்லையின் அன்றைய இன்றைய படைப்பாளிகள், உணவுகள், கோவில் சிற்பங்கள் என்று தொட்டுத் தொட்டுச் செல்கிறார் நாறும்பூநாதன்.

நான் ஒரு தகவல் கொண்டாடி என்ற போதிலும், இணையத்தில், மற்ற புத்தகங்களில் தேடினால் கிடைக்காத தகவல்கள் தரும் கட்டுரைகள், புத்தகங்களே என் மனதுக்கு நெருக்கமாகின்றன. அந்த வகையில் நெல்லையின் கல்வி நிறுவனங்கள், அவற்றின் நிறுவனர்கள், மத போதகர்கள், பற்றிய பல கட்டுரைகள் நெல்லை பற்றியும், அந்த மண்ணில் வாழ்ந்து அந்த மண்ணை செழிக்கச் செய்த பெரியோர் பற்றியும் நிறைய நிறைய தகவல்களைச் சொல்லிக் கொண்டே போகின்றன என்றாலும் என்னை ஈர்த்தவை நான் முற்றிலும் அறியாத புதிய செய்திகளைச் சொல்லும் கட்டுரைகளைத்தான். அவையும் இந்தப் புத்தகத்தில் நிறையவே உள்ளன.

 உமறுப்புலவர் பற்றி இப்போதுதான் விரிவாக அறிகிறேன்.  பாரதியின் தந்தை ஆரம்பித்த நூற்பாலை எங்கிருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். பத்தமடைப் பாய் பற்றி அறிந்தேன். மெல்லத் தமிழினி சாகும் என்று சொல்லி பாரதியிடம் திட்டு வாங்கியவர் யார்? என்று அறிந்தேன் ( செவி வழிச் செய்திதான் போலும். ஆனால், அப்படியான செய்திகள் தரும் சந்தோஷம் தனிதானே !) பாடகர் டி.எல்.மகாராஜனின் பெயர்க் காரணம் பற்றிய செய்தியை அறிந்தேன். சாத்தூர் டீ ஸ்டால் பற்றி அறிந்ததைவிட, கி.ராவின் கதவு கதை யாருடைய கதை? என்ற அந்த கதவின் சொந்தக்காரர் பற்றிய தகவலை அறிந்து மகிழ்ச்சியில் பொங்கினேன். காலத்தால் அழியாத அந்தக் கதையை கி.ராவிற்கு அளித்தவரல்லவா அந்தப் பெரியவர் ! 

சிறிய இடைவெளியில் திரும்பவும் சந்திக்கிறேன் என்கிறார் நாறும்பூ. அப்போது நமக்கு இன்னும் நிறையவே கிடைக்கலாம்.

புத்தகத்தில் கிளாரிந்தா, ரேனியஸ் ஐயர், சாராள் தக்கர், வ.உ.சி, தொ.ப போன்ற பெரியோர்களை விட  தவசுப்பிள்ளை அருணாச்சலம் பிள்ளை,  ஆரெம்கேவி விஸ்வநாதன்,  மனக்காவம்பிள்ளை, மகாராஜ பிள்ளை, அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளையை  ரா.பி.சேதுப் பெருமகனார் என்று ஜாதிப்பெயரை தவிர்த்து அழைக்கும் வளனரசு ஐயா ஆகியோர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ஆகிவிட்டார்கள்.  

இவர்களை விட த.மு.கட்டிடத்தின் பெயர் காரணம் கேட்கும் அந்த கணேசன்.  நாறும்பூ அதை விசாரித்துச் சொன்னதும், இந்தத் தகவலைத் தந்தது யார்? என்கிறார் கணேசன்.  விவேகானந்தன் என்கிறார் நாறும்பூ. 

“அவருக்கு என் சார்பில ஒரு வாழ்த்து சொல்லு… அவருதாம்ல திருநெவேலி ஆணி வேரு… “ என்று சொல்லிவிட்டு வேகமாக பஸ் ஏறுகிறார் கணேசன். எனக்கு அந்த கணேசனைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.

நெல்லையின் ஆணிவேர்களை கோட்டுச் சித்திரமாகக் காட்டிய என் அன்புத் தோழர்.நாறும்பூநாதனை இங்கிருந்தே ஆரத் தழுவி வாழ்த்துகிறேன். 

நூல்: திருநெல்வேலி நீர்-நிலம்-மனிதர்கள்
ஆசிரியர்: இரா.நாறும்பூநாதன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
விலை: ரூ270.00
பக்கங்கள்: 270

Pavalar Karumalai thamizhazhan Poems 2 பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள் 2

பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள்




ஏழ்மையின் எதிர்பார்ப்பு
*******************************
வாழ்க்கையிலே அமர்தற்குச் சிறிய வீடு
வயிறெரிக்கும் பசிதணிக்கக் கொஞ்சம் சோறு
தாழ்ந்திடாமல் மானத்தைக் காப்ப தற்குத்
தகுவுடலை மறைப்பதற்குக் கீழ்மேல் ஆடை
வீழ்ந்திடாமல் தலைநிமிர்ந்து நிற்ப தற்கு
விளங்குகின்ற அடிப்படையாம் இந்த மூன்றே
ஏழ்மையிலே தவிக்கின்ற மக்கள் எங்கள்
எதிர்பார்ப்பாம் இவைகிடைத்தால் வாழ்வோம் நாங்கள் !

பிச்சையாக இலவசங்கள் தேவை யில்லை
பிறக்கின்ற கருணையதும் தேவை யில்லை
முச்சந்தி தனில்நின்று கையை ஏந்தி
மூச்சுவிடும் வாழ்க்கையினை விரும்ப வில்லை
கச்சிதமாய் மதிப்பளித்துப் பணிகொ டுத்துக்
கரங்களிலே உழைப்பதற்கு வழியை செய்தால்
நிச்சயமாய் ஏழ்மையினை ஓட வைத்து
நிறைவாழ்வு வாழ்ந்திடுவோம் வாய்ப்ப ளிப்பீர் !

மாளிகையின் வசதிகளைக் கேட்க வில்லை
மகிழுந்து சொகுசுதனைக் கேட்க வில்லை
கேளிக்கைப் பொழுதுபோக்கைக் கேட்க வில்லை
கேள்விக்கு விடைதேடும் எங்க ளுக்கு
வாலியினை மறைந்திருந்து கொன்ற தைப்போல்
வளங்களினை சுருட்டுகின்ற கரமி ருந்து
கூலிக்காய் உழைக்குமெங்கள் உழைப்பிற் கேற்ற
கூலிதந்தால் போதுமெங்கள் ஏக்கம் தீரும் !

போனதெங்கே மனிதநேயம்
************************************
ஈரமண்ணாய் மனம்கசிந்து வீட்டுப் பக்கம்
இருப்போரின் துயரினிலும் பங்கு கொண்டு
வேரடியாய் அன்புதனில் கிளைய ணைத்து
வெறுப்பின்றிக் கூட்டமாக ஒன்றி ணைந்து
தூரத்தே அடிபட்டு வீழ்ந்த வர்க்கும்
துடிதுடித்தே ஓடிப்போய் உதவி செய்தும்
பாரத்தைப் பிறருக்காய்ச் சுமந்து நின்ற
பரிவென்னும் மனிதநேயம் போன தெங்கே !

சேற்றினிலே களையெடுக்கும் கரங்க ளாலே
சேர்ந்தணைத்துக் கபடுகளைக் களைந்தெறிந்து
நாற்றுகளை நட்டுவயல் வளர்த்தல் போல
நகையாலே வஞ்சமின்றி வளர்ந்த நட்பால்
வேற்றுமைகள் இல்லாத குடும்ப மாக
வேறுவேறு சாதியரும் நெஞ்ச மொன்றி
போற்றுகின்ற சோதரராய்ப் பிணைந்தி ருந்த
போலியற்ற மனிதநேயம் போன தெங்கே !

காடுகளாய் நம்முன்னோர் வளர்த்து வைத்த
கவின்மிகுந்த மரங்களினை வெட்டி வெட்டிக்
கோடுகளாய் மண்ணுடலைப் பிளக்க வைத்துக்
கொட்டிவந்த மழைவளத்தை அழித்த தைப்போல்
வாடுகின்ற பயிர்கண்டு வாட்டம் கொண்ட
வள்ளலாரின் மனிதநேயம் அழித்து விட்டோம்
பாடுபட்டு யாதும்ஊர் என்ற பண்பைப்
பாதுகாத்துத் தந்ததனைத் தொலைத்து விட்டோம் !

( 1 )
பக்கத்தில் குடியிருப்போர் முகத்தைக் கூட
பார்க்காமல் வாழுகின்ற வகையைக் கற்றோம்
துக்கத்தில் துடிப்போரின் குரலைக் கேட்டும்
துடிக்காமல் இயல்பாக நடக்கக் கற்றோம்
நக்கலாகப் பிறர்துயரில் வாடக் கண்டும்
நகைத்தவரை ஏளனமாய்ப் பழிக்கக் கற்றோம்
வக்கிரமே எண்ணமாகி அடுத்தி ருப்போர்
வயிறதனில் அடிப்பதையே தொழிலாய்க் கற்றோம் !

பிறர்வாழப் பொறுக்காத மனத்தைப் பெற்றோம்
பிறர்நெஞ்சைப் புண்ணாக்கும் கலையில் தேர்ந்தோம்
பிறர்போற்றப் பொதுநலத்தை மேடை மீது
பிசிறின்றிப் பேசிநிதம் கள்ள ராகப்
பிறர்பொருளை அபகரிக்கும் தன்ன லத்தால்
பிறர்காலை வெட்டுவதில் வல்ல ரானோம்
சிரம்தாழ்த்தும் பழிதனக்கே நாணி டாமல்
சிறப்பாக நடிக்கின்ற நடிக ரானோம் !

சாதிகளின் பெயராலே சங்கம் வைத்தோம்
சாதிக்காய்த் தலைவரினைத் தேர்ந்தெடுத்தோம்
சாதிக்கும் சக்தியெல்லாம் ஊர்வ லத்தில்
சாதனையாய்ப் பகையுணர்ச்சி பெருக்கு வித்தோம்
வாதிக்கும் கருத்தெல்லாம் வாயா லன்றி
வாள்தடிகள் சங்கிலியால் மோதிக் கொண்டோம்
போதிக்கும் அன்புவிட்டு மதங்க ளென்னும்
போதையாலே மதம்பிடித்தே அலையு கின்றோம் !

( 2 )
அறிவியலில் உலகமெல்லாம் அற்பு தங்கள்
அரங்கேற்றக் கலவரங்கள் அரங்க மேற்றி
அறிவிலியாய்க் குறுமனத்தில் திகழு கின்றோம்
அணுப்பிளந்து அடுத்தகோளில் அவர்க ளேற
வெறியாலே உடன்பிறந்தோர் உடல்பி ளந்து
வீதியெல்லாம் குருதியாற்றில் ஓடம் விட்டோம்
நெறியெல்லாம் மனிதத்தைச் சாய்ப்ப தென்னும்
நேர்த்திக்கடன் கோயில்முன் செய்யு கின்றோம் !

வானத்தை நாம்வில்லாய் வளைக்க வேண்டா
வாடுவோரின் குரல்கேட்க வளைந்தால் போதும்
தேனெடுத்துப் பசிக்குணவாய்க் கொடுக்க வேண்டா
தேறுதலாய் நம்கரங்கள் கொடுத்தால் போதும்
தானத்தில் சிறந்ததெனும் நிதானத் தில்நாம்
தமரென்றே அனைவரையும் அணைத்தால் போதும்
மானுடந்தான் இங்குவாழும் சமத்து வத்தில்
மன்பதையே அமைதிவீசும் நேயத் தாலே !