மரணவலி கவிதை – பேரா.பாவலன்

மரணவலி கவிதை – பேரா.பாவலன்




அவளின் யோனியிலிருந்து பிடுங்கப்பட்ட
ஒரு சின்ன இதயத்திற்காக நானும்
அவளும்
சேர்ந்தே உண்டு பண்ணியது.

அந்த சுகம்
அந்த ஒரு சுகம்
அவளின் மரணவலி
என் மலர் படுக்கையிலிருந்து
பெறப்பட்டது.

மூடப்பட்ட
சன்னலிருந்து
எட்டிப் பார்த்தது
ஒரு திருடன் போல காற்று..

அதை சாட்சியமாக
வைத்துச் சொல்லப்பட்டவை ஒன்றே நன்றாம்

என்னில்… அவளும் அவளில்… நானும்
கலந்த போது
சின்ன இதயம்
உருபெற்றது.

நானும்,
அவளும்,
சந்தோசப்பட்டோம்.
அச்சின்ன இதயத்திலிருந்து உதிரும் வார்த்தையை வினவு வதற்காக

நாளும்,
பொழுதும்,

கிழமையும்,
நகர்ந்தும்
ஓடியும்
கடந்தும்
சென்றுவிட்டது.

இப்பொழுது
அங்கு யாரும் இல்லை
அது வெற்றுமண்
ஒரு கலவரத்துக்கு பிறகு

பேரா.பாவலன்