நூல் அறிமுகம்: ஏற்காடு. இளங்கோவின் ’ஏழரைச்சனி’ – தி.தாஜ்தீன்

நூல் அறிமுகம்: ஏற்காடு. இளங்கோவின் ’ஏழரைச்சனி’ – தி.தாஜ்தீன்




நமது முன்னோர்கள் பண்டை காலத்திலேயே சனி கிரகத்தை பார்த்து அதற்கு பெயரும் வைத்துள்ளனர். சனியை பற்றி பல நாடுகளில் பலவிதமான கருத்துக்கள் இருந்துள்ளன. நம்மைப் பொறுத்தவரை சனி கிரகம் ஒரு வெறுக்கப்பட்ட கிரகம், மற்ற கிரகங்களை விட சனிக்கிரகம் கெடுதல் செய்யும் கிரகமாக கருதப்படுகிறது. ஒருவரை திட்டும் போது கூட ஏண்டா உனக்கு சனியன் பிடிச்சிருக்கா?, சனியனே என்று திட்டுபவர்களும் உண்டு.

ரோமானிய நாட்டில் மத சம்பந்தமாக பல புனைக் கதைகள் உள்ளன. சாட்டர்ன் என்பது ஒரு அறுவடை கடவுள். விவசாயத்திற்கு உரிய கடவுளாகும். ரோமானிய மக்கள் இதனை வழிபட்டன, விதை விதைப்பதில் சாட்டர்ன் முக்கிய பங்கு வைக்கிறது. சாட்டர்ன்யா என்கிற திருவிழாவினை (சனியை) மரியாதை செய்வதற்காகவே கொண்டாடப்படுகிறது. நமது பார்வையில் மோசமான கிரகம் என வர்ணிக்கப்பட்ட சனி உண்மையில் வானவெளியில் வலம் வரும் அற்புத கிரகம் என ஆசிரியர் கூறுகிறார். சனியின் அழகும்,பிரகாசமும் தொலைநோக்கியில் பார்ப்போரின் உள்ளத்தில் கொள்ளை கொள்ளும்.

சனி கிரகத்தைப் பற்றி ஆசிரியர் இளங்கோ மேலும் மிக அழகாக இப்புத்தகத்தில் கூறியுள்ளார். சனி கிரகமானது சூரியனிலிருந்து ஆறாவது கிரகமாகவும், பூமியிலிருந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் சூரிய குடும்பத்தில் இரண்டாவது பெரிய கிரகம் சனி ஆகும். இது வாயுக்களால் ஆன பெரிய கிரகம். நமது பூமியை போல ஆயிரம் மடங்கு பெரியது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களுக்கு ரோமானியர்கள் பெயர் வைத்தனர். ரோமானிய நாட்டுப் புராண கதைகளில் வரும் கடவுள்களின் பெயர்களையே கிரகங்களுக்கு வைத்தனர். அதேபோல விவசாய கடவுளான “சாட்டர்ன்”பெயரை சனி கிரகத்திற்கு வைத்தனர். சனி என்பது சனிஸ்வரா என்பதிலிருந்து வந்தது ஆகும். “சனீஸ்வரா” சன் என்பதிலிருந்து மருவி, சன் என்பதற்கு மந்தன் என்பதும், சனி என்றால் மெதுவாக சுற்றி வருபவன் என்றும் பொருள்படும்.

நமது புராணக் கதைகளில் வரும் கடவுள்களின் பெயர்களையே கிரகங்களுக்கு வைத்தனர். நிலப்பிரபுகள் காலத்தில் தோன்றிய கடவுள்களின் பெயர்களைத்தான் கிரகங்களுக்கு பெயர் சூட்டினார்.

முதன் முதலில் கலிலியோ தொலைநோக்கி மூலம் சனி கிரகத்தை பார்த்தவர். அந்த தொலைநோக்கி சக்தி வாய்ந்ததாக இல்லை. இருப்பினும் கூட அந்த ஆரம்ப கால தொலைநோக்கியில் சனி கிரகத்தை பார்த்ததில் அதன் வடிவத்தில் ஏதோ ஒரு அதிசயம் இருப்பதை கண்டு அதிசயத்தார். பிறகு சனி கிரகத்திற்கு வளையங்கள் உள்ளதை உறுதி செய்தார்.

சனி கிரகம் சூரியனிடமிருந்து 1,429,400,000 km தூரத்தில் உள்ளது. பூமிக்கு அருகில் இருக்கும் போது 1,200,000,000 km தூரத்தில் இருக்கிறது. இருந்தாலும் சனி கிரகத்தின் அடர்த்தி மிக மிக குறைவு தான். இதன் அடர்த்தி 0.69 ஆகும். நீரின் அடர்த்தி 1.0 ஆகும். சனி கிரகம் நீரின் அடர்த்தியை விட 30 சதம் குறைவு தண்ணீரில் தூக்கி போட்டால் இது மிதக்கும் என்பது ஆச்சரியம். சனி கிரகத்தில் உள்ள மேகங்கள் 3 அடுக்குகளை கொண்டுள்ளது. மேலடுக்கு வெளியே மஞ்சள் நிறத்தில் இருக்கும் இது அம்மோனியா பனிக்கட்டியால் ஆனது. அடுத்த அடுக்கு சிவப்பு மற்றும் பழுப்பு நிறம் கொண்டது. இது அமோனியம் ஹைட்ரோ சல்பைட்டால் ஆனது. கடைசி அடுக்கு அடர்ந்த அடுக்காக பனிக்கட்டியால் ஆன தண்ணீர் உள்ளது.

மேலும் சனிக்கிரகம் வாயு கிரகம் என்பதால் இதன் மேற்பரப்பு திடமானது அல்ல இக்கிரகத்தில் விண்கலத்தை ஏற்க முடியாது. சனிக்கிரகம் 75% ஹைட்ரஜன் 25 சதவீதம் ஹீலியாத்தால் ஆனது. இதுடன் நீர், மீத்தேன், அம்மோனியா மற்றும் பாறை ஆகியவைகள் உள்ளன. இக்கிரகம் பூமிக்கு அருகில் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து செல்கிறது. கடைசியாக ஜனவரி 1 2005 அன்று அதிகாலை 2.28 மணிக்கு பூமிக்கு மிக அருகில் வந்து சென்றுள்ளது. இந்த வாய்ப்பு அடுத்த 30 ஆண்டுகள் கழித்து அதாவது 2034 ஆம் ஆண்டு தான் மீண்டும் வரும் என்பது தெரிகிறது.

மேலும் பல சுவாரசியமான சனி கிரகத்தைப் பற்றி இப்புத்தகத்தில் ஆசிரியர் ஏற்காடு இளங்கோ குறிப்பிட்டுள்ளார்.

தி.தாஜ்தீன்
தி கிரசண்ட் மேல்நிலைப் பள்ளி
ஆவணியாபுரம்

நூல் : ஏழரைச்சனி
ஆசிரியர் : ஏற்காடு. இளங்கோ
விலை : ரூ.₹35
வெளியீடு : அறிவியல் வெளியீடு,

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]