கவிதைச் சந்நதம் 34 – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 34 – நா.வே.அருள்

      கவிதை - கவிஞர் சிற்பி, கவிஞர் இந்திரன் அவரவரும் அவசர அவசரமாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ஓர் அவஸ்தை. இது மனிதர்கள் படுகிற மரணாவஸ்தை! “ஒவ்வொருவரும் உள்ளுக்குள் ஒரு பிணத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள் அதன் பெயர் இதயம்!” அடக்கம்…
Famous Tamil Poet Indran Rajendran (இந்திரன்) in Muthirai Kavithaigal Series 7. Book day website is Branch of Bharathi Puthakalayam

முத்திரைக் கவிதைகள் 7 – இந்திரன் (Indran Rajendran)



பின்னகரும் கவிதை

மண்ணில் புரளும் மஞ்சள் சருகுகள்
மீண்டும் மேல் நோக்கிப் பறந்து
கிளைகளில் சென்று ஒட்டிக் கொள்ள
காய்ந்த மரம் பச்சைப் பசேலென துளிர்த்து கனிகளால் குலுங்க
கனிந்த பழங்கள் மலர்ந்த பூக்களாய் மலர
பட்டாம்பூச்சிகள் வந்து மொய்த்தவுடன்
பூக்கள் மொட்டுக்களாய்ச் சுருங்க
மரம்
செடியாய் உருமாற
செடி விதைக்குள் சென்று ஒளிந்தது
மண்ணில்
ஒரு துளி மழைநீர் விழாதா என
காத்திருக்கும் தவம் தேடி.

Famous Tamil Poet Indran Rajendran (இந்திரன்) in Muthirai Kavithaigal Series 7. Book day website is Branch of Bharathi Puthakalayam

கடலோரத்தில் கால்பந்து

கடலோரத்தில் நடக்கிறது
தினந்தோறும் கால்பந்து விளையாட்டு

சிவப்புப் பந்தாய்
அடிவானத்தில் மறையும் சூரியனை
வானில் எகிறிக் குதித்து
எட்டி உதைத்து விளையாடுகிறார்கள் இளைஞர்கள்.

வெற்றி தோல்விகள் குறித்து கரவொலித்து குரலெழுப்ப
சுற்றிலும் கூட்டமில்லை
ஆனாலும் ஆர்ப்பரித்துப் பாராட்டுகின்றன கடல் அலைகள்.

தப்பித் தவறி கடலில் போய் விழும் கால் பந்தை
உடனுக்குடன் கொண்டு வந்து திருப்பித் தருகிறது கடல்.

ஆட்டக்காரர்களின் நிழல்கள்
தனியாக கோஷ்டி சேர்ந்து கொண்டு
மணல் மேல் விழுந்து புரண்டு ஆடுகின்றன
இன்னொரு கால் பந்தாட்டம்.
நிழல்கள் கரைந்து
கவியும் இருளில்
கால் பந்து காணாமல் போகும் வரையிலும்
தொடர்ந்து நடைபெறுகிறது கால் பந்தாட்டம்.

Famous Tamil Poet Indran Rajendran (இந்திரன்) in Muthirai Kavithaigal Series 7. Book day website is Branch of Bharathi Puthakalayam

நினைவு

காணாமல் போய் விட்ட நாயின் நினைவு
பீங்கானில் பளபளக்கும்
பொம்மையாய் என் மேசைமேல்.

வர்ணப்பூச்சால் கருத்த மூக்கும்
மனிதனைப் போன்ற புருவமும் கொண்டு
தலை தூக்கி என்னை நோக்கும்

இரவின் அமைதியைத் துளைக்கும்
அதன் ஊளைச்சத்தம்
படிக்கட்டில் கட்டி வெறுமனே தொங்கிக் கொண்டிருக்கும்
நாய்ச் சங்கிலியின்
வெறுமையிலிருந்து எழும்.

Indran Rajendran (இந்திரன்)

முந்தைய கவிதைகள் படிக்க:

முத்திரைக் கவிதைகள் 1: வாக்குமூலம் – இந்திரன்

முத்திரைக் கவிதைகள் 2: ராப்பிச்சைக்காரன்– இந்திரன்

முத்திரைக் கவிதைகள் 3: கேள்வி, சிரிப்பொலி, உனது புகைப்படம் – இந்திரன்

முத்திரைக் கவிதைகள் 4: முகமூடிகளின் யுகம் – இந்திரன்

முத்திரைக் கவிதைகள் 5: பனிச்சிற்பம் – இந்திரன் (Indran Rajendran)

முத்திரைக் கவிதைகள் 6 – இந்திரன் (Indran Rajendran)

Famous Tamil Poet Indran Rajendran (இந்திரன்) in Muthirai Kavithaigal. Book day website is Branch of Bharathi Puthakalayam

முத்திரைக் கவிதைகள் 6 – இந்திரன் (Indran Rajendran)

உடம்பின் வாசனை ----------------------------- பறக்கும் வண்டின் தொடர்ந்த ரீங்கரிப்பு போல் உறவுக்குத் தூண்டும் அழைப்புகள். காட்டின் ஒவ்வொரு ஒற்றையடிப் பாதையையும் அறிந்திருப்பது போல் அந்தரங்கமான முறையில் அறிவேன் நான் அவள் உடம்பை. தீயின் இருதயத்துக்குள் விழுந்து விட்டது போல காம நெருப்பு…