Nilavai Parugum Kulam Poetry preview by Yegadhasi. கவிதை முன்னோட்டம் - நிலவைப் பருகும் குளம் கவிதை நூல் : ஏகாதசி

கவிதை முன்னோட்டம்: நிலவைப் பருகும் குளம் – கவிஞர் ஏகாதசி
இந்நூல் அண்ணன் அய்யப்ப மாதவனின் மதிப்புரையோடு வந்திருக்கிறது. ஹைக்கூ வகைமையில் எனக்கிது மூன்றாவது நூல். சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டிய நூல், இதை இருவாட்சி பதிப்பகத்தின் மூலம் தோழர் பா. உதயக்கண்ணன் அவர்கள் பொங்கல் பரிசாய் வெளியிட்டுள்ளார். அவருக்கு என் அன்பு. சுமார் 500 கவிதைகளிலிருந்து நான், நண்பர் மா.காளிதாஸ் மற்றும் அண்ணன் அய்யப்ப மாதவன் ஆகியோர் இத்தொகுப்பிற்கான கவிதைகளைத் தேர்வு செய்தோம்!

உள்ளிருந்து சில:
போதி மலரின்
வாசம் வீசுகிறது
புடவையில் புத்தர் ஓவியம்

கிணற்றில் இறந்த அக்கா
தூர் வாரும் போது
கிடைக்கவில்லை உயிர்

குதித்து குதித்து
விளையாடுகிறது அரிசி
அம்மாவின் முறம்

எறும்புறங்கப் போதும்
புளிய மரத்தின்
ஓர் இலை நிழல்

அப்பா நட்ட விதை
மரமெல்லாம்
கை ரேகை

நூல் விரும்பும் நண்பர்கள்
தொடர்பு கொள்க:

“இருவாட்சி” பதிப்பகம்,
எண் – 41, கல்யாணம் சுந்தரம் தெரு,
பெரம்பூர், சென்னை – 600011.
விலை : 100 ரூபாய்

6381357957 இந்த எண்ணின் வாட்ஸ்அப்பிற்கு உங்கள் முகவரியை அனுப்பினால் போதும், உங்கள் கைகளை வந்தடையும் “நிலவைப் பருகும் குளம்”. நிறைந்த அன்புடன்,
ஏகாதசி

Puthiya Mamisam Poetry preview by Chandru R C. கவிதை முன்னோட்டம் - புதிய மாமிசம் கவிதை நூல் : சந்துரு ஆர்.சி

கவிதை முன்னோட்டம் – புதிய மாமிசம் கவிதை நூல் : சந்துரு ஆர்.சி
படைப்பு பதிப்பகத்தின் புதிய வெளியீடாக உங்களைக் கவர்ந்த உங்களில் கலந்த கவிதைகளுடன் எனது கவிதை நூல் “புதிய மாமிசம்” 11.012.2021 அன்று நடைபெறவிருக்கும் படைப்பு சங்கமம் விழாவில் வெளியிடப்படுகிறது. இந்நூல் வெளிவர ஊக்கமும் ஒத்துழைப்பும் நல்கிய படைப்பு குழுமத்தின் நிர்வாகி நண்பர் கவிஞர் ஜின்னா அஸ்மி அவர்களுக்கும் இந்நூலுக்கு விருப்பமாய் அணிந்துரை வழங்கிய கவிஞர், கலை இலக்கிய விமர்சகர் ஐயா இந்திரன் அவர்களுக்கும் சிறப்பான முகப்போவியம் அளித்துள்ள ஓவியர் கமல் காளிதாஸ் வடிவமைத்த புலவர் முகமது மீரான் மற்றும் விருப்பமாய் கவிதைகளை வாசித்து அங்கீகரிக்கும் கவிஞர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
வாசித்து சொல்லுங்கள்… என வேண்டுகோள் வைக்கிறார் கவிஞர் சந்துரு.ஆர்,சி
இவர் புக் டே வில் தொடர்ந்து கவிதைகள் எழுதிவருகிற கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் பார்வைக்கு ஒரு கவிதை

புதிய மாமிசம்
*********************
வேட்டையாடப்பட்ட விலங்கின்
கொழுத்த சதைத்துண்டை
கவ்விக்கொண்டோடும் நரியைப்போல்
சுயநலங்களைப் பற்றிக்கொண்டு ஓடுகிறேன்…
குற்றவுணர்ச்சியற்று
மறைவிடத்தில் வைத்து
என் தேவைகளைப் பிய்த்து
உண்ணத் தொடங்குகிறேன்
இரை தீர்வதற்குள் எண்ணம்
அடுத்த களவுக்குத் தாவுவதால்
ஒவ்வொரு கைப்பற்றுதலிலும்
ருசியற்ற பண்டமாய்
தோற்கிறது உணவு…
ஒரு வழியாய் தின்று முடித்து
அடுத்த கவர்தலின்
தந்திரத்துடன் நிமிரும்போது
என்னைச் சுற்றிலும்
பெருமூச்சுகளுடன் நிற்கின்றன
வேட்டை மிருங்கங்களின் கால்கள்
ரத்தம் பூத்த அவற்றின் நாவுகளில்
இழந்த சதைகளை மீட்கும் வெறி…
சிக்கிக்கொண்ட அச்சத்தில்
நரியின் பற்களும் ரோமங்களும் உதிர்ந்து
இப்போது நான்
மானாகி விட்டிருக்கிறேன்
உருமாறிய அதிர்ச்சியில்
தப்பியோடும் என் பாய்ச்சலுக்கு முன்பாய்
சிங்கத்தின் பிடரி மயிர்கள்
என் முகத்தில் உரசுகின்றன…
அதிசயமாய்த் தப்பி
புதர் மறைவில் இரைப்பு வாங்கி
நீர் பருக ஓடைக்குள் குனிகையில்
என் எலும்புகள் தவிர தசைகளனைத்தும்
உதிர்ந்திருந்ததைப் பார்க்கிறேன்…
என் எலும்புக்கூட்டில் சதையென
ஒப்புக்குத் துடிக்கும் இருதயமும்
செரிக்காத சில
இறைச்சித் துண்டுகளும் மட்டுமே
மிச்சமாய் இருக்கின்றன
தூரத்தில்….
துரத்தி வந்த விலங்குகளின்
நாவுகளில் சொட்டும் ரத்தத்தில்
புதிய மாமிசத்தின் வாடை…

வாருங்கள் வாழ்த்துவோம்… வாசிப்பை போற்றுவோம்…
நூல் விவரக் குறிப்பு:
———————————
நூல் பெயர்: புதிய மாமிசம்
வகைமை: கவிதைகள்
ஆசிரியர்: சந்துரு ஆர்.சி
பதிப்பு: முதற்பதிப்பு 2021
முகப்பு : கமல் காளிதாஸ்
வடிமைப்பு : முகமது புலவர் மீரான்
வெளியீடு: படைப்பு பதிப்பகம்
விலை: ரூ.150 (இந்திய ரூபாய்)
வெளியீட்டு நாள்: 11-12-2021 (படைப்பு சங்கமம் விழாவில்)
நூல் வாங்க தொடர்புக்கு: அலைபேசி எண்: 91 97908 21981

கவிதை புத்தக முன்னோட்டம்: கவிதை அனுபவம் – இந்திரன் – வ.ஐ. ச. ஜெயபாலன் நூல்

கவிதை புத்தக முன்னோட்டம்: கவிதை அனுபவம் – இந்திரன் – வ.ஐ. ச. ஜெயபாலன் நூல்

கவிதை அனுபவம் இந்திரன் - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதை பற்றிய உரையாடல் ஒரு புத்தகமாகப் பதிவாகியிருக்கிறது. தமிழ் ஆறும் இலங்கை ஆறும் சரளமாகச் சங்கமிக்கின்றன. தமிழ் நதியின் மேல் பூக்களும் இலை தழைகளுமாக ஒரு நிலவியல் பரப்பை அடைய முடிகிறது. இலங்கை ஆற்றின்…
கவிதை முன்னோட்டம்: கவிஞர் கோ.  வசந்தகுமாரின் “முறிந்த வானவில்” கவிதைத்  தொகுப்பிலிருந்து

கவிதை முன்னோட்டம்: கவிஞர் கோ.  வசந்தகுமாரின் “முறிந்த வானவில்” கவிதைத்  தொகுப்பிலிருந்து

புதிய பகுதியாகக் கவிதை முன்னோட்டத்தை அறிமுகப் படுத்துகிறோம். கவிஞர்கள் ஆதரவு தருமாறு வேண்டுகிறோம். கவிதை முன்னோட்டம் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ (கவிதை முன்னோட்டம் பகுதிக்குத் தங்கள் வெளிவர இருக்கும் கவிதைத் தொகுப்பினை  அனுப்புகிறவர்கள் [email protected]  என்கிற மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் மூலமாகவே அனுப்பலாம்.  புக் டே இணைய…