N.Gajeshwari's Poem Unity In Solititude in tamil Translated By Era.Ramanan. Book Day is Branch of Bharathi Puthakalayam. தனிமையில் ஒருமை கவிதை

என்.கஜேஸ்வரியின் ஆங்கில கவிதை தனிமையில் ஒருமை – தமிழில் இரா. இரமணன்




உன்னை நான் அவதானித்திருக்கிறேன்.
என்னருமை உலகே !
உன்னை நான் அவதானித்திருக்கிறேன்.

சுழன்றடித்த புயல்களில்
மீண்டிருக்கிறாய்.
மலரும் ஒவ்வொரு ஆன்மாவையும்
போற்றுகிறாய்
போர்கள்,எரிகற்கள்,வெப்பம்,
நச்சுப் புகைகள்,பிளாஸ்டிக்
எத்தனை வகை சித்திரவதைகள்?
அத்தனையும் தாண்டியிருக்கிறாய்.
எத்தனைக் கொடுமைகள்?
ஆனாலும் அவையனைத்தும் மன்னித்தாய்.

இப்போது இந்தக் கொரோனா.
இது மற்றுமொரு கிருமிதான்.
அதனால், என்னருமை உலகே
ஒருபோதும் நம்பிக்கை இழக்காதே.
இளைப்பாறி புத்தாக்கம் பெற
இன்னும் காலம் இருக்கிறது.
அன்புடை உலகே !
கொஞ்சம் குணமடைந்து கொள்.
கடும் இழப்புகள் ஏற்றோம்.
இதையும் கடந்து போவோம்.
அழிந்துகொண்டிருக்கும் ஆத்மாக்களை
இப்போது கடைத்தேற்றம் செய்ய வேண்டும்.

(தஞ்சை லிட்ரரி ஸ்காலர்ஸ் சொசைட்டியும் இந்தியன் யூனிவர்சிட்டி பிரெஸ்சும் (பாரதி புத்தாகாலயம்)இணைந்து வெளியிட்டுள்ள ‘POEMS APLENTY (A CHOICE OF VERSE) புத்தகத்திலிருந்து என்.கஜேஸ்வரி  அவர்களின்  ‘Unity In Solititude’ கவிதையின் தமிழாக்கம். இவர் ஒரத்த நாடு அரசு கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணி புரிகிறார். மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார்.)

Australian Writer and Poet Erin honson You are Poetry Translated By Era. Ramanan. Book Day is Branch of Bharathi Puthakalayam. நீயென்பது கவிதை

எரின் ஹான்சனின் ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை – தமிழில் இரா. இரமணன்



நீயென்பது

நீ என்பது உன் வயதல்ல
உன் ஆடைகளின் அளவுமல்ல
தசைகளின் எடைக் குவியலல்ல நீ
கேசத்தின் வண்ணமுமல்ல .
பின் என்ன வெறும் பெயரா?
குழி விழும் கன்னம் கொண்டு
உன்னைக் கணிக்காதே.

நீ வாசிக்கும் புத்தகங்களின்
தொகுப்பல்லவோ நீ?
பேசும் சொற்களின்
திரட்டல்லவோ நீ?
கரகரக்கும் காலைக் குரலே நீ!
மறைக்க முயற்சிக்கும் புன்னகையே நீ!
உன் சிரிப்பில் கலந்திருக்கும்
இனிப்பே நீ!
உன் அழுகையில் சிந்திய
கண்ணீரே நீ!
தனிமையை உணரும்போது
உரத்த குரலில் பாடும் பாட்டே நீ!

நீ பயணித்த இடங்களே நீயாவாய்.!
இல்லம் என்றழைக்கின்றாயே
அதுவும்தான் நீ!
நம்பிக்கை வைக்கும்
நற்பொருட்களே நீ!
நீ நேசிக்கும் மனிதர்களே நீயாவாய்.
உன் படுக்கையறையில்
மாட்டியிருக்கும் படங்களே நீ!
நீ கனவு காணும் எதிர்காலமே நீ!
நீ அல்லாத விஷயங்களே
உன் வரையறுப்பு
என்றெண்ணும்போது
எத்தனை எழிலோடு
நீ சமைக்கப்பட்டிருக்கிறாய்
என்பதெல்லாம் மறந்துவிட்டாயோ?

26வயதாகும் எரின் ஹான்சன்  எழுதியுள்ள  ஆங்கிலக் கவிதையை என் மகள் மீரா  மிகவும் ரசித்து பாராட்டினார். எனக்கு அனுப்பி மொழிபெயர்க்க கேட்டிருந்தார். ஆகவே மொழியாக்கம் செய்திருக்கிறேன். எரின் ஜான்சன் ஆஸ்திரேலியாவில் பிறந்தார். தன்னுடைய 11 வயதில் ஒரு வலைப்பக்கத்தை தொடங்கினார்.16ஆவது வயது முதல் அதில் தீவிரமாக எழுதத் தொடங்கினார். மூன்று கவிதைத் தொகுதிகளை எழுதியிருக்கிறார்.(வலைத்தளத் தகவல்கள்)

தமிழில் ரமணன்

You are not your age, nor the size of clothes you wear,
You are not a weight, or the color of your hair.
You are not your name, or the dimples in your cheeks.
You are all the books you read, and all the words you speak.
You are your croaky morning voice, and the smiles you try to hide.
You’re the sweetness in your laughter, and every tear you’ve cried.
You’re the songs you sing so loudly when you know you’re all alone.
You’re the places that you’ve been to, and the one that you call home.
You’re the things that you believe in, and the people whom you love.
You’re the photos in your bedroom, and the future you dream of.
You’re made of so much beauty, but it seems that you forgot
When you decided that you were defined by all the things you’re not.

Erin Hanson is a 26-year-old poet who was born on the 22nd of June 1995 in Brisbane, Australia. She rose to fame for her beautiful poetry. It all started with a blog, a small dream, and a keen desire for expression. Erin started a blog when she was 11 and started taking the blog more seriously in the year 2011.
Unkown Hindi Poetries Translated in Tamil By Poet Vasanthadeepan. *நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்* ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதை

*நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்* ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதை – தமிழில்: வசந்ததீபன்



நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்

நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்?
நான் கைவிடப்பட்டு இருக்கிறேன்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன் ?
நான் பூஜை _ஹோமத்தில் அமங்களமாய் இருக்கிறேன்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்?

ஆனால் இதை ஏன் மறந்து இருக்கிறாய்,
என நீ இருக்கிறாய்,
நீ , நீ இருக்கிறாய்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்.

யோனியிலிருந்து பாயும் இரத்தம் எனது கெளரவம்
நான் இயற்கைக்கு சமானமானவளாக இருக்கிறேன்.
அதன் மீது முழு பிரபஞ்சம் தங்கியுள்ளது
நான் அந்த அச்சாக இருக்கிறேன்.

உங்கள் பிறப்பின் விளக்கமாக இருக்கிறேன்.
யாரை பூஜிக்க செல்கிறீர்களோ
நான் அந்த காமாக்யாவாக இருக்கிறேன்.

ஹிந்தியில் : பெயரற்றவர்
தமிழில் : வசந்ததீபன்

Hindi Poet Bhagwat Rawat Three Poetries Translated in Tamil By Poet Vasanthadeepan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

பகவத் ராவத்த்தின் மூன்று ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதைகள் – தமிழில்: வசந்ததீபன்



(1) பாறைகள்

நாலாபுறமும் பரவியது.
நிலையான மற்றும் கடினமான பாறைகளின் உலகத்திற்கு மத்தியில்
ஒரு மனிதன்
புதர்களின் உலர்ந்த தண்டுகளை சேகரித்து
தீயை எரிக்கிறான்.

பாறைகளின் முகங்கள் வெளிறிப் போகிறது
மனிதன் அவை எல்லாவற்றிடம் செய்தியற்று
சோதித்துக் கொள்கிறான்
தன்னைத் தானே
எழுகிறான் மற்றும் அவற்றில் ஏதாவது ஒன்றின் மேல் அமர்ந்து
தனது உலகத்திற்காக
மாவைப் பிசைந்து கொள்கிறான்.

தீ வேகமாக எரிகிறது
பாறைகள் முதல் முறை
தமக்கு முன்னால்
சில உருவாகுவதை பார்க்கின்றன.

இறுதியில் மனிதன்
எழுந்து நடக்கிறான் திடீரென்று
இதுபோல செய்தியற்று
பாறைகள் முதல் முறை தமக்கு நடுவிலிருந்து
சில கடந்து செல்கிறதை
உணர்ந்து இருக்கின்றன.



(2) மாறிய பருவத்தின் சுபாவம்

எப்போதிருந்து
பூமி மண்டலம்
இல்லாமல்
இருந்து கொண்டிருக்கிறது புவியியல்
ஏறிப் போயிருக்கிறது
உலகமயமாக்கலின் காய்ச்சல்
எப்போதிருந்து மறையத் தொடங்கியது
தாராள மனப்பான்மை
பரவியது பிளேக் போல
தாராளமயம்
எப்போதிருந்து நாசமாகிப் போயின
கிராமங்கள், தொழில்கள் மற்றும் நகரங்களின் திறந்தவெளி மைதானங்களின் சந்தைகள்
வீடுகளுக்குள் நுழைந்தது
முக்காடிட்ட சந்தைவாதம்

இது காரணமின்றி இல்லை என்று அப்போதிருந்து இயற்கையும்
பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்து
தமது நியமம், அறம்
மாற்றி இருக்கிறார்கள்
தமது நடத்தையும் இயல்பும்
இப்போது இங்கே பாருங்கள் என்று
தெரியவில்லை என்று
மகிழ்ச்சி அல்லது கோபம் இருக்கின்றன
இவை புதிர்
பங்கு தரகர்களின் தூக்கி எறியப்பட்ட சென்செக்ஸ் போல.

பலத்த மழை பெய்துள்ளது இந்த ஆண்டு.

ஏதோவொரு மிகப் பெரிய பணக்காரனாக
தமது செல்வத்தின் அடி
இது மாதிரி என்பது போல
பசித்த பிச்சைக்காரர்களுக்கு
ஏதோ ஒரு நாள்
பலவந்தமாக திணித்தபடி
உணவிட்டார் எல்லா தின்பண்டங்களை
அவர்கள் சாப்பிட்டுச் சாப்பிட்டு
இறக்காமல் போகும் அப்போது வரை.

ஏதோவொரு தண்ணீர் கோட்பாடு மட்டும் தனது பயிற்சிக்காக
காரணமற்று ஒருவர் கீழ் உத்தியோகம் பார்க்கிறது மேல்
அப்போது வரை பெய்தது
சவுக்கு மேல் சவுக்கு தொடர்ந்து
எப்போது வரை சுயமாக களைத்து தோற்று தூங்காமல் போனார்கள்.

பாருங்கள் மறுபுறம் இந்தக் காட்சியை
அத்தகைய மழையில், போதையில் அசைந்து
தன்னுடையதான குடிவெறியில் நிற்கின்றன நகராமல்
உயர்ந்த, தாழ்ந்த மலைகள்
நிலையான ஞானத்தைப் போல
தனதான பொய் ஆடம்பரத்தில்நின்று இருக்கின்றன
உயரமாக, உயரமாக எழுகிற
கட்டடங்கள்

மேலும் துக்கத்தை விடவும் அதிகமான துக்கத்தில்
மூழ்கி இருக்கின்றன
அனைத்து தாழ்ந்த குடியிருப்புகள்
பாய்ந்தோடுகின்றன அவற்றின் எல்லாக் கூரை வீடுகள்

இவர்கள் தான் இறக்க இருக்கிறார்கள் காற்றினால், தண்ணீரினால், நெருப்பால்
மாறிய பருவத்தின் சுபாவத்தால்
சில நேரங்களில் தாகத்தால்,
சில நேரங்களில் மூழ்கி
சில நேரங்களில் வாயுவால்
சில நேரங்களில் நெருப்பால்.



(3) இந்த அந்நிய நகரத்தில்

சிலர்
காயமடைந்து வெளியேறிஇருந்தார்கள்
வீட்டிலிருந்து.
கதை சொல்லும் மக்கள் சொல்கிறார்கள்
தண்ணீர் குடிப்பதற்கு
குவளை கயிறு வரை இல்லாமல் இருந்தது என்று.
அவரிடம் எதுவுமில்லாமலிருந்து
வாழ்க்கையைத் தொடங்கினார் அவர்
அந்நிய நகரத்தில்
மற்றும் உடல், மனம் ஈடுபாட்டோடு
பணம் சம்பாதித்தார்
பணத்துடன் மரியாதை
மரியாதையுடன் பெயர்
இந்த மாதிரி அவர் ஒரு நாள்
நகரத்தின் முதலாளியானார்
வாழ்ந்தார் முழு வயது
வெற்றிக் கொடியைப் பறக்க விட்டு
அவர் பலரக வாத்தியங்களின் இசையோடு
சொர்க்கவாசியானார்
முடிவுகள் திடமானதாக
அவர் எப்பவும் திரும்பிச் செல்லவில்லை
தனது வீட்டின் பக்கமாக
வீடு தான் வந்தது அவர் வரை
அவருக்கு வணக்கம் செலுத்தவும்
போற்றவும்.
ஒவ்வொரு கோட்டையின்
எந்த மாதிரி இருக்கிறது ஒரு
பெரிய கதவு
அதிலிருந்து
கோட்டை திறக்கிறது
அது போல
ஒவ்வொரு நகரத்திற்கும் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு
அது போன்ற
பெரிதான பகுதி
அதனாலே திறக்க இருந்தன
நகரின்
மறைவான கதைகள்
அந்த நாட்கள் தான் கொஞ்சம் மற்றும் இருந்தன
மக்கள் சொல்லிச் சொல்லி

மனம் தளர்ந்து போய்
இருக்கிறார்கள்
மற்றும் நேரத்தை நிந்தித்து நிந்தித்து
அது போன்ற ஏதாவது ஒரு
கதையின் சுவரிலிருந்து
முதுகில் தாங்கச் செய்கிறது
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக
ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில்
வீடற்றவராகி
ஒவ்வொரு வருடமும்
வெளியேறிச் செல்கிறார்கள் மக்கள்
நகரங்களின் உடைந்து நொறுங்கிய சாலைகள்
அழைக்கின்றன அவர்களை
அந்நிய சமையலறைகளின் பாத்திரங்கள்
அவர்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துகின்றன
தட்டுகளின் எச்சில்
அவர்களை அழைக்கிறது
மென்மையான படுக்கை
விரிப்பதற்கு
அவர்களின் கைகள்
எதிர்பார்க்கின்றன
மற்றும் எப்போது புரள்கின்றன அவை
வீடுகளின் பக்கம்
அவர்களை மறுபடியும் வாழ வைக்கவும்
பின்னர் ஏதோ தண்ணீர் நிரம்பிப் போகிறது
பின்னர் ஏதோ விலங்கு
பகல் கர்ஜித்து நுழைகிறது
அவர்களின் வீடுகளில்
பல ஆண்டுகளுக்கு முன்பு
தமது நேரத்தின்
முழுவதும் யெளவனமுள்ள பையன்களைப் போல
நானும் வெளியேறி இருந்தேன் வீட்டை விட்டு
துணிப்பையில் சில காகிதங்களை வைத்து
ஆனால் விட்டுவிடுங்கள்
இந்த கதையில் எதுவும் புதிதாக இல்லை
நீங்கள் சொல்லுங்கள்
நீங்கள் எப்போது மற்றும் ஏன் வந்தீர்கள்?
இந்த அந்நிய நகரத்தில்.

ஹிந்தியில் : பகவத் ராவத்
தமிழில் : வசந்த தீபன்

பகவத் ராவத்
பிறப்பு : 13,செப்டம்பர் 1939
பிறந்த இடம் : டேஹர்கா கிராமம், டீகம்கட் மாவட்டம், மத்திய பிரதேசம்.

முக்கிய படைப்புகள் :

(1) ஸமுத்ர கே பாரே மேன் (1977)
(2) தீ ஹுஈ துனியா (1981)
(3) ஹுஆ கிஸ் இஸ் தரஹ் (1988)
(4) ஸுனோ ஹீராமன் (1992)
(5) ஸச் பூச்சோ தோ (1996)
(6) பிதா_கதா (1997)

Collins Emeghara's English Poetry And Vasanthadeepan Tamil Translation. Book Day and Bharathi Tv Are Branches of Bharathi Puthakalayam

Collins Emeghara ஆங்கில கவிதையும், வசந்ததீபனின் தமிழ் மொழிபெயர்ப்பும்



கறுப்பும் நீலமும்

நான் நைஜீரியாக்காரி
நீ ஒரு அரசியல்வாதி…

உன்னை நான்
எனது தென்னைமரத்துக் கீழே சந்தித்தேன்…

என்னை உன்னிடம்
தாரை வார்க்குமாறு
நீ என்னிடம் இரந்தாய்…

உன் தாகத்தைத் தீர்க்க
என்னை அவசரப்படுத்தினாய்…

என் அரைப்பாவாடைக்குக் கீழே
நீ குனிந்தாய்…

உன் கண்களை
அதனுள்
மட்டுமீறி நுழைத்தாய்…

ஹோ , என் தடித்த முலைக்காம்புகளை
உறுத்துப் பார்த்தாய்…

என் கனத்த பிட்டங்களை
உற்று நோக்கினாய்…

பிறகு நீ
முரட்டுத்தனமாய் என்னை
விழுங்கினாய்…

கலக்கமூட்டும் கடலாக
உனது உடல் கெர்சித்தது…

என்னை ஒருமுறை
கற்பழித்தாய்…

ஓ.. கற்பழித்தாய்
இரண்டு முறை…

என்னை நீ கற்பழித்தாய்
கறுப்பாகவும் நீலமாகவும்
ஓ.. அரசியல்வாதி…

பிறகு என்னை
தென்னை மரத்தின் அடியிலிருந்து
இழுத்தாய்…

என்னை
திறந்த கடலுக்கு
இழுத்தாய்…

பிறகு என்னை மிரட்டி
கடலுக்குள்
அமிழ்த்தினாய்…

என்னால்
மேற்கொண்டு
சத்தம் மட்டும்
எழுப்ப முடிந்தது.

என் கால்களை
கடலுக்கும் படகுக்கும் இடையில்
கட்டினாய்…

என் மேல்
அக்கறையில்லாத நாயாய்
வேகமாகப் பாய்ந்தாய்…

உன் நண்பர்களை அழைத்து
உன்னோடு சேர்த்துக் கொண்டாய்…

என்னைக் கற்பழித்தாய்
கறுப்பாகவும் நீலமாகவும்
ஓ.. அரசியல்வாதி…

பிறகு
என் காற்சட்டையை
நீ கழற்றி எறிந்தாய்…

அது
உதிக்கும் சூரியனின் மேல்
போய் விழுந்தது…

உலகம்
என்னுடைய
அழுக்கான காற்சட்டையைப்
பார்த்தது…

பிறகு
சிரிக்க ஆரம்பித்தது…

என்னைக் கற்பழித்தாய்
கறுப்பாகவும் நீலமாகவும்
ஓ.. அரசியல்வாதி…

பிறகு
சாறு நிரம்பிய
பருத்த என் முலைகளை
இறுக்கிப் பிடித்தாய்…

அவைகள்
சிகப்பு நிறமாகும் வரை
உறிஞ்சினாய்…

பிறகு
என் இடுப்புகளைப் பிடித்தாய்…

என் கண்களிலிருந்து
உலகம் மறைய
அடித்துத் தூளாக்கினாய்…

என் பிட்டங்கள்
நெருப்பால்
நரக நெருப்பால்
நிரம்பியது…

என்னைக் கற்பழித்தாய்
கறுப்பாகவும் நீலமாகவும்
ஓ.. அரசியல்வாதி…

இப்பொழுது
எனது குழந்தைகள்
பசியால்
இறந்து கொண்டிருக்கின்றன…

எனது பால்
ஓடாமல்
நிறுத்தப்பட்டிருக்கிறது…

என்னைக் கற்பழித்தாய்
கறுப்பாகவும் நீலமாகவும்
ஓ.. அரசியல்வாதி…

இப்பொழுது
நிறைய குழந்தைகள் பெற
விரும்புகிறேன்…

ஆனால் என் பிட்டங்கள்
ஆயிரம் முட்டைகள் போல
அடித்து நொறுக்கப்பட்டது…

ஹோ, நீ
என்னில்
வேலையை முடித்தாய்…

ஆம்
என்னில்
மனிதாபிமானம் இறந்தது…

என்னைக் கற்பழித்தாய்
கறுப்பாகவும் நீலமாகவும்
ஓ.. அரசியல்வாதி…

ஆனால் மறக்காதே
நான்
நைஜீரியாக்காரி என்பதை…

நீ ஒரு
அரசியல்வாதி என்பதையும்…

ஆங்கிலத்தில்: Collins Emeghara
தமிழில் : வசந்த தீபன்

Collins Osinachi Emeghara, Nigerija – ASinfo Portal

Collins Emeghara
____________

பிறந்த இடம் : Owerri , Imo.
தற்போதைய வசிப்பிடம் : Naze , Nigeria.
பிறந்த தேதி : 23, ஏப்ரல்  1983
வெளியான நூல் :  My Blood , My Food.

Hindi Poet Vishnu Nagar's Two Poetries Translated in Tamil By Vasanthadeepan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

விஷ்ணு நாகரின் இரண்டு மொழிபெயர்ப்புக் கவிதைகள் | தமிழில் : வசந்த தீபன்

(1) தண்ணீராக இருக்கிறேன் ஆகையால் _________________________________ நான் தண்ணீர், ஆகையால் என்னைக் குற்றம் சொல்லாதே நான் ஏன் பனிக்கட்டி ஆனேன் என்று நான் நீராவி ஆனேன் என்று அல்லது அப்போது நான் ஏன் குளிராக இருந்தேன் மேலும் நான் இப்போது ஏன்…
Usha Akella Poetry Memoranda for Baama is Translated in Tamil Language By Era Ramanan. Book Day is Branch Of Bharathi Puthakalayam.

பாமாவின் நினைவாக (Memoranda for baama ….. for bamma, paternal grandmother) – உஷா அகேல்லா 

இங்கேதான் அவள் இடுப்பு இருந்தது; இங்கே இதயம்;அங்கே குதிகால். எரிந்து சாம்பலாய்ப் போன குவியலில் எவ்வளவு சிறுத்து விட்டாள்? இன்றல்ல என்றுமே அவள் குறுகித்தான் இருந்தாள். என நினைவின் அடுக்குகளில் அவள் மஞ்சள்வண்ண தூசியில் முழுகியிருந்தாள். அதன் மொழி அறிந்திருந்தாள். அவள்…
Hindi Poet Gopal Das Neeraj Two Poems Was Translated by Vasanthadeepan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஹிந்தியில்: கோபால்தாஸ் நீரஜ் | தமிழில்: வசந்ததீபன்

(1) தலைவன் தொலைவில் இருக்கிறான் இல்லை அருகில் இருக்கிறான் வாழ்க்கை திருப்தியாக இல்லாமல் இருக்கிறது , தாகமாக இல்லாமல் இருக்கிறது ஏனெனில் தலைவன் தொலைவில் இருக்கிறான் இல்லை அருகில் இருக்கிறான் அதிகரித்துக் கொண்டு உடல் , வயது குறைந்து கொண்டு, சித்திரம்…
Bengali Writer and Poet Sukumar Ray Imsai Arasan Poetry Translated By Era. Ramanan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

சுகுமார் ரேயின் வங்காளி மொழிபெயர்ப்பு கவிதை – தமிழில் இரா. இரமணன்

இம்சை அரசன் சிவனின் தாயகத்தில் விசித்திரமான விதிகள். சத்தியமாய் சாட்சியம் சொல்வேன். ஒருவர் தடுக்கி விழுந்தால் காவலர்கள் கைது செய்வர். கொடுமை நீதிமன்றத்திலும் தொடரும். பெரும் தொகை தண்டம் விதிக்க தயாராகும் நீதியரசர்கள். 21ரூபாய்தான் நீங்கள் செலுத்தும் தொகை. என்றாலும் இருங்கள்…