கண்திருஷ்டி அறிவியல் கட்டுரை – சுதா

கண்திருஷ்டி அறிவியல் கட்டுரை – சுதா




கண்திருஷ்டி புது டிரஸ் போட்டதும் வீட்டுக்கு புதுசா ஒரு பொருள் வாங்கியதும் யாராவது நம்மை நம் குழந்தையையோ பாராட்டி விட்டால் கட்டாயம் அன்று இரவு சூடம் உப்பு அல்லது முட்டை சுற்றி உடைப்பவர்கள் கூட உண்டு. ஒருவர் தன் வீட்டிற்கு வந்து போனதும் பகல் நேரத்தில் கூட சூடம் சுற்றி வாசலில் வைப்பவர்களை நான் பார்த்து இருக்கிறேன் இது உண்மையா? இதனால் நமக்கு நன்மை நடக்குமா? அடுத்தவர்களின்

பார்வை நம்மை தாக்குமா நமது புகைப்படத்தை டிபி வைத்தால் கண் பட்டுவிடுமா?

அறிவியலின் பார்வை என்ன?

இந்தியாவில் மட்டுமா கண்திருஷ்டி நம்புகிறார்கள்?

கண்திருஷ்டி இந்தியாவில் மட்டும் தானா? என்றால் இல்லை உலக நாடுகளிலும் இந்த பழக்கம் இருக்கிறது. துருக்கி நாட்டில் குழந்தை பிறந்ததும் ஒரு டோக்கன் கொடுக்கப்படும் அது தாயத்துக்காக. அரபு நாடுகளில் இரவு நேரங்களில் கருப்பு நிற கற்களையும் பகல் நேரங்களில் வெள்ளை நிற கற்களையும் வெளியில் செல்லும்போது கையில் வைத்துக் கொள்வார்களாம் இந்த நடைமுறை இப்போதும் தொடர்கிறது. நாம் எலுமிச்சை கையில் வைத்துக் கொள்வதைப் போல.

மத்திய தரைக்கடல் நாடுகளில் கப்பல் போக்குவரத்து அதிகம் இருக்கும் கப்பல்களில் கண் வரைந்திருப்பார்கள் கண்திருஷ்டிக்காக. தென் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வெள்ளைப்பூண்டை கண்திருஷ்டிக்கா பயன்படுத்துகிறார்கள் நாம் வெள்ளைப்பூசணி தேங்காய் பயன்படுத்துவது போல.

பிரபலங்கள் கண்திருஷ்டியை நம்பி இருக்கிறார்களா?

பிரபலங்களுக்கும் இந்த கண்திருஷ்டியில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு மூன்றாம் நெப்போலியன் கண்திருஷ்டி மீது அதீத நம்பிக்கை கொண்டவராக இருந்திருக்கிறார். ஒன்பதாவது போப் பார்த்தாலே இறந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு. அதுபோல் ஸ்பெயின் மன்னர் அல்போன்ஸ் நெகட்டிவ் எனர்ஜி கொண்டவராக நம்பப்படுகிறார். அவரை வரவேற்க வந்தவர் கைகுலுக்கியதும் இறந்துவிட்டதாக ஒரு கருத்தும் உண்டு. இந்த நிகழ்வுக்கு எந்த ஆதாரம் இல்லை என்றாலும் நம்ம படுகிறது.

அந்தக் காலத்தில் என்றில்லை இந்த காலகட்டங்களிலும் பிரபலங்களின் நெகடிவ் பாசிடிவ் எனர்ஜி மற்றும் கண்திஷ்டியை நம்புகிறவர்களாகவே இருக்கிறார்கள். பராக் ஒபாமா ஒரு பேட்டியின்போது ஹனுமான் உருவத்தைக் காண்பித்து இது எனக்கு பாசிட்டிவ் எனர்ஜி தரும் என்று சொல்லி இருக்கார். ஃபேமஸ் மாடல் kim kardashian அவருடைய கையில் ஒரு பிரேஸ்லெட் போட்டிருப்பார். கண் திருஷ்டியை போக்கும் என அவர் நம்புகிறார்.

இந்த கண் திருஷ்டி எத்தனை ஆண்டுகள் பழமையானது என பார்த்தோமேயானால் இன்றைய சிரியா அதாவது மெசபடோமியா நாகரீகத்தில் கண்டெடுக்கப்பட்ட தாயத்து. பழமையான கண்திருஷ்டி பொருளாக கருதப்படுகிறது இது 2500 ஆண்டுகள் பழமையானது. ஆக இவ்வளவு ஆண்டுகளாக மக்களிடையே இந்த கண்திருஷ்டி சார்ந்த நம்பிக்கைகள் இருந்துகொண்டிருக்கிறது. கிபி 40 இல் ஒரு தத்துவவாதி symposiacs என்ற புத்தகத்தில் கண்ணுக்கு நிறைய ஆற்றல் இருக்கிறது கண் பார்வையின் மூலம் விலங்குகளை கொல்லமுடியும் குழந்தைகளையும் கொல்ல முடியும். சிலர் வாயால் சபிக்க வேண்டும் என்று அவசியமில்லை கண்களால் பார்த்தாலே போதும் கண்ணுக்கு அவ்வளவு ஆற்றல் இருக்கிறது என்று அவர்தான் முதன்முதலில் எழுதுகிறார். கண்திருஷ்டி சார்ந்து நிறைய புத்தகங்கள் இருந்தாலும் முக்கிய புத்தமாக the evil eye கருதப்படுகிறது.

பாசிட்டிவ் நெகட்டிவ் உண்மையா?

அறிவியலில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை எனர்ஜி. ஒரு அணுவில் ப்ரோட்டான் எலக்ட்ரான் நியூட்ரான் இந்த மூன்றும் இருக்கிறது எலக்ட்ரான் நெகட்டிவ் எனர்ஜி புரோட்டான் பாசிடிவ் எனர்ஜி மற்றும் நியூட்ரான் என்பது ஒன்றுமில்லை. புரோட்டான் பாசிடிவ் எனர்ஜி என்பதற்காக அது நன்மை மட்டுமே செய்யும் எலக்ட்ரான் தீமை மட்டுமே செய்யும் என்று சொல்லிவிட முடியுமா? அறிவியலின் பார்வையில் எலக்ட்ரான் எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிவர். ஒரு பேட்டரியில் ஒருபக்கம் + மறுபக்கம் – இருப்பதால் – உள்ள பக்கத்தை தரையில் வைத்தால் வீடு முழுவதும்நெகட்டிவ் எனர்ஜி பரவி விடுமா? இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

நல்லது கெட்டது என்பது ஒரு ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றவருக்கு நல்லதாகவும் தோல்வியடைந்தவருக்குக் கெட்டதாகவும் மாறி விடுகிறது. ஆக நல்லது கெட்டது என்பது அவரவர் நிலைப்பாட்டில் இருப்பதுதானே அது எவ்வாறு நெகட்டிவ் பாசிட்டிவ் ஆக முடியும்.

ஒருவர் நம்மை பார்த்துக் கொண்டே இருந்தால் நாம் அவரை திரும்பிப் பார்ப்போம் பார்வையால் வசியம் செய்து விடலாம் என்று சொல்லி இருக்கிறார்களே இதெல்லாம் உண்மையா? இல்லை கண்களிலிருந்து எந்த ஆற்றலும் வெளிப்படாது என்பதே உண்மை. அப்படி ஆற்றல்
வெளிப்படும் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

முன்னோர்கள் சொல்லி வைத்ததெல்லாம் முட்டாள்தனமானதா?

முன்னோர்கள் சொல்லி வைத்தது முட்டாள்தனமானது இல்லை ஆனால் அந்த காலகட்டத்தில் அது சரியானதாக இருந்தது. இந்த காலகட்டத்தில் அது தேவையற்றது. இரவில் வீடு பெருக்க கூடாது என்று சொல்வார்கள் ஆனால் பிளாட் சிஸ்டம் ஆன பிறகு இரவில் தான் நாம் குப்பையை வெளியில் கொட்டுகிறோம். ஆக சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நம் நம்பிக்கைகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. போட்டோ எடுத்தால் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போகும் என்பதால் போட்டோ எடுக்காமல் தன் இளமை காலத்தை நிழல் படமாகக் கூட பார்க்க முடியாத குழந்தைகள் நிறைய பேர்.

திருவான்மியூரில் ஒருத்தர் தன் குழந்தையின் போட்டோவை ஸ்டேட்டஸ் வைப்பதால் திருச்சியில் இருப்பவர்கள் கண் வைத்து விடுவார் என்பது எப்படி லாஜிக்காக இருக்க முடியும். யோசிப்போம்

– சுதா