இந்தப் புத்தகம் செங்கையில் அறிவியல் இயக்கமும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் திரு ஆதி வள்ளியப்பன் பத்திரிகையாளர் ,சுற்றுச்சூழல், காட்டுயிர்கள், குழந்தைகள் சார்ந்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். உலகை அச்சுறுத்தி வரும் புவி வெப்பமடைதல் குறித்த ‘கொதிக்குதே கொதிக்குதே’, ‘: வாழ்வும் வீழ்ச்சியும்’, ‘எப்படி,எப்படி’, ,(அறிவியல் கேள்வி பதில்கள்) உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.
வேதியியல் துறையின் அஸ்திவாரம் சாதாரண மனிதர்களின் மாபெரும் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. உணவு உற்பத்தி, மூலிகை, மருத்துவம் போன்றவற்றின் மூலமாகத் தொடங்கிய வேதியியல், மற்ற துறைகளிலும் தாக்கம் செலுத்தி மனித வாழ்வை செழுமைப்படுத்தியது. இந்த நிலையில் காரியத்தைத் தங்கமாக மாற்ற முயற்சித்த இஸ்லாமிய ரசவாதிகளை, அறிவியலின் வரலாறு குறைத்து மதிப்பிடும் போக்கை பரவலாக காணமுடிகிறது.
ஆனால், வீட்டு அடுக்களையும் ரசவாதிகள் ஆய்வுகளும்தான் நவீன வேதியல் வளர்ச்சிக்கு வித்திட்ட முதல் ஆய்வுக்கூடங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. நமது பண்பாட்டுக்கும் வேதியலுக்குமான தொடர்பு மிகப்பழமையானது.
கை மருத்துவம், சித்த மருத்துவம் பண்டை காலத்தில் இருந்து தொடரும் சுவையான, சத்தான சமையல் முறைகள் (நமது சமையல் 10 ஆயிரம் வருட பழமை கொண்டது என்கிறார்கள் நிபுணர்கள்) வேளாண் வழிமுறைகள் போன்ற அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது நமது சமூகத்துக்கும் வேதியியலுக்குமான தொடர்பு நீண்ட காலமாக இருந்து வந்து இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் இன்றைய சூழ்நிலையில் நமது சமூகத்தில் அறிவியல் மனப்பான்மைக்கும் சாதாரண மக்களுக்குமான இடைவெளி சற்று அதிகம் என்று என்ன தோன்றுகிறது.
பொருள்களைப் பற்றி புரிந்து கொள்ளுதல் அவற்றை பகுத்துப் பார்த்தால் இரண்டு பொருள்களை எந்த விதத்தில் சரியாக சேர்த்தால் புதிய பொருள் கிடைக்கும் என்ற புரிதல் போன்றவை தான் வேதியியலின் அடிப்படை. நமது மருத்துவ முறைகள் சமையல் முறைகளில் இதை தெளிவாக உணரலாம். நமது அம்மாக்கள் வைத்தியர்கள், விவசாயிகள் அனைவரும் நடைமுறையில் வேதியியலாளர்களாக இருந்திருக்கிறார்கள், இருந்து வருகிறார்கள் என்றால் அது மிகையல்ல!
பெரும்பாலான அடிப்படை அறிவியல் துறைகள் சாதாரண மக்களிடம் இருந்து தோன்றியவை தான். உலகம் முழுவதும் பகுத்தறிவு ரீதியில் சிந்திக்க ஆரம்பித்த சாதாரண மனிதர்கள் அறிவியலின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக பங்களித்து வந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதனின் மனதிலும் உள்ள தேடல் உணர்வு, புதியன கண்டுபிடிக்கும் ஆவல், அறிவியல் சார்ந்த புரிதல் போன்றவை அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன.
வேதியியலும் இப்படி பலரது பங்களிப்பால் வளர்ந்த ஒரு துறைதான். ஆனால் வேதியியலின் வளர்ச்சியைப் பற்றி பேசும் போது அதில் இஸ்லாமிய ரசவாதிகளின் பங்கை குறைத்துக் கூறும் போக்கை பரவலாக காணமுடிகிறது தமிழில் வேதியியல் பற்றி எழுதப்படும் எழுத்துக்கள் கூட ரசவாதிகளை திருடர்கள் போலத்தான் குறிப்பிடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் காரியத்தை தங்கமாக மாற்ற அவர்கள் மேற்கொண்ட முயற்சி தான். அவர்களது நோக்கம் இன்றைக்கு தவறாக பார்க்கப்படுகிறது. ஆனால் காரியத்தை தங்கமாக மாற்றுவதற்காக புதிய புதிய பரிசோதனைகளை, பரிசோதனை முறைகளை அவர்கள் அனுபவபூர்வமாக கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் புதிய தனிமங்கள், பரிசோதனை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இன்றைய நவீன வேதியல் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் பரிசோதனை முறைகளுக்கு அவர்கள்தான் அச்சாரம் இட்டிருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மிகால் மேயரின் கட்டுரை இந்த விஷயத்தை மிகத் தெளிவாக கவனப்படுத்துகிறது. அன்றாட வாழ்வில் அறிவியலை கண்டுபிடிக்கும், பயன்படுத்தும் மக்களின் பங்களிப்பை அந்தக் கட்டுரை உரிய கவனம் கொடுத்துப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஏதோ எல்லா அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கும் மேற்கத்திய,ஐரோப்பிய அறிஞர்களே காரணம் என்பது போன்ற ஒரு பிம்பம் வலுவாக ஏற்படுத்தப்பட்டு விட்டது. அத்துடன் பெரும்பாலான நவீன அறிவியல் வளர்ச்சிகள், கண்டுபிடிப்புகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக அல்லாமல் பணத்தைக் குவிக்கும் இயந்திரமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் நடைமுறை செயல்பாடுகளின் மூலம், அனுபவபூர்வமாக உருவான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான முக்கியத்துவம் குறைந்து போய், அறிவியலைப் புரிந்து கொள்வதிலும் அதை வளர்ப்பதிலும் மேல்தட்டு மக்களும் முதலாளிகளும் இறங்க, பெரும்பாலான அறிவியல் வளர்ச்சிகள் ஒரு சிலருக்கானதாக மட்டும் மாறி விட்டன என்பது மறுக்க முடியாத உண்மை.
அறிவியல் துறைகள் இப்படி சிலரது கட்டுப்பாட்டுக்குள் போக ஆரம்பித்த பிறகு உருவான கட்டுப்பாடற்ற, வரைமுறையற்ற வளர்ச்சி, இயற்கை வளச் சுரண்டலுக்கும் சுற்றுச்சூழல் சீரழிவுக்கும் வழிவகுத்து விட்டது. சுற்றுச்சூழல் சீரழிவிற்கு வேதியியல் ஒரு காரணமாக இருந்துள்ளது. ஆனால் வேதியியலை சரியாக புரிந்து கொள்வதன் மூலம், சரியாக பயன்படுத்துவதன் மூலம், நியாயமான, முழுமையான வளர்ச்சியை சாத்தியப்படுத்த முடியும் (இயற்கை வேளாண்மையும், சுற்றுச்சூழலும் செயல்பாட்டாளர்களும் வேதியியலை அப்படி பயன்படுத்த ஊக்கம் அளித்து வருகின்றனர்) இந்த நோக்கத்துடன் தான் 2011 ஆம் ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அறிவித்திருந்தது.
ரஷ்யாவில் இருந்து வந்த குழந்தைகளுக்கான அறிவியல் புத்தகங்களும் அறிவியலை சாதாரண மனிதர்களுக்கு சொன்ன புத்தகங்களும், பலரது அறிவியல் ஆர்வத்திற்கு தீனி போட்டிருக்கின்றன. அறிவியல் ஒரு வேப்பங்காய் அல்ல என்றும் சுவாரசியமாக சொன்னால் எந்தத் துறையைப் பற்றியும் எளிமையாக புரிந்து கொள்ள முடியும் என்றும் உணர்த்தியவை அவை அந்தப் புத்தகங்கள்.
மேலும் அறிவியல், வரலாறு, சுவாரசியங்கள் சார்ந்த புத்தகங்களை நிறைய படித்து நம் அறிவுத் திறனை அனைவரும் மேம்படுத்திக் கொள்வோமாக.
புத்தகம்: மீண்டெழும் வேங்கைகள் அறிவியல் கட்டுரைகள் ஆசிரியர்: த. வி. வெங்கடேஸ்வரன் பதிப்பகம்:புக்ஸ் ஃபார் சில்ரன் மொத்த பக்கங்கள்: 64 விலை : ₹ 40/– புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
இந்தப் புத்தகம் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் ஒன்றாகும். இந்நூலின் ஆசிரியர் திரு.த.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள் விஞ்யான் பிரச்சார் நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். கலகக்காரர் ஐன்ஸ்டீன் உட்பட பல அறிவியல் நூல்களை எளிய தமிழில் எழுதியுள்ளார். துளிர் அறிவியல் இதழ் நிறுவனங்களில் ஒருவர். சமகால சமூகத்தில் அறிவியல் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு இதழ்களிலும் நூல்களிலும் பல நாடுகளில் நடத்தப்படும் ஆய்வு அரங்குகளிலும் சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வந்து மறைந்த ஐசான் வால் நட்சத்திரம், மழைத்துளிகள் நடுவே பறக்கும் கொசு, அழிவிலிருந்து மீண்டு வரும் வேங்கை, பால் குடிக்கும் பூனை இல்லை இல்லை பூனை குடிக்கும் பால், தென்னையின் தாயகம் என நம்மைச் சுற்றியுள்ள இயற்கை உயிர்கள் ஆகியவற்றின் இயக்கத்தின் பின்னே உள்ள அறிவியலை சுவைபட எளிய தமிழில் இந்த நூலில் மிகவும் சிறப்பாக விளக்கிக் கூறியுள்ளார் திரு. த.வி .வெங்கடேஸ்வரன் அவர்கள்.
இந்தப் புத்தகத்தில் என் மனதை கவர்ந்த பகுதிகளான பின்வருமாறு:
முதல் அத்தியாயத்தில் இந்த நூற்றாண்டின் வால் நட்சத்திரம் என்று போற்றப்பட்ட ஐசான் வால் நட்சத்திரம் கடந்த 2013 நவம்பர் 29 அன்று சூரியனை நெருங்கிய அடுத்த சில நிமிடங்களில் மாயமாகி விட்டது. உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் விறுவிறுப்பான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய ஐசான் வால் நட்சத்திரம் சூரியனை சுற்றும் பாதையில் செல்லும்போது 2013 நவம்பர் 28 அன்று இந்திய நேரப்படி இரவு 12 மணிக்கு சூரியனை உரசியபடி சென்ற போது ஈர்ப்பு விசையின் காரணமாக கரு சிதைக்கப்பட்டு 2600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் உருக்குலைந்து சிதறிப்போனது. இதை யானை மடிந்தாலும் பொன்; ஐசான் மறைந்தாலும் பயன் என்று மிகவும் சுவாரசியமாக ஆசிரியர் விளக்கிக் கூறியுள்ளார்.
சூரிய மண்டலத்தின் விளிம்பில் சூரியனிலிருந்து சுமார் 5000 AU தொலைவில் ஊர்த் (Oort) மண்டலம் இருக்கிறது. சுமார் ஒரு லட்சம் AU தொலைவிற்கு இந்த மண்டலம் நீண்டிருக்கும். ஒரு கட்டிடம் கட்டி முடித்த பின் அதை சுற்றி உடைந்த செங்கல், கொஞ்சம் சிமெண்ட், கல்,மண் காலி பெயிண்ட் டப்பா எல்லாம் இரைந்து கிடப்பது போல சூரியனும் கோள்களும் உருவான பின் எஞ்சிய பொருட்கள் ஊர்த் மண்டலத்தில் குவிந்துள்ளன என வானியலாளர்கள் கருதுகின்றனர். பெரும்பாலான வால் நட்சத்திரங்கள் இங்கிருந்துதான் பூமி- சூரியனை நோக்கி வருகின்றன.
இந்த வால் நட்சத்திரம் முதல் தடவையாக ஊர்த் மண்டலத்திலிருந்து புத்தம்புதிதாக வருகிறது என்பது மட்டுமல்ல, இது சூரியனை முத்தமிடும்(Sun grazing) வால்நட்சத்திரம் என அறிந்தனர். சூரியனிலிருந்து சுமார் 12 லட்சம் கிலோ மீட்டர் அருகில் ஐசான் செல்லும் என்பது விஞ்ஞானிகளுக்கு மிகப் ஏற்படுத்தியது.
உள்ளபடியே நாம் நிமிர்ந்து நிற்கும்போது நமது கால் பகுதியில் பூமி ஏற்படுத்தும் ஈர்ப்பு விசை தலைப் பகுதியை விட சற்று கூடுதல் தான். ஆயினும் வெகு குறைவாக இருப்பதால் நம்மால் உணரமுடியாது. நீண்டநாள் விண்வெளிப் பயணம் செய்யும்போது இதன் காரணமாகத்தான் 6 அடி உயரமுள்ள விண்வெளி வீரரின் சுமார் ஐந்து சென்டிமீட்டர் கூடுதல் பயன் பெறுவார். இவ்வாறு சூரியனுக்கு அருகே செல்லும் வால் மீனின் ஒரு பகுதி கூடுதல் ஈர்ப்பு விசை பற்றி நிலைகுலைந்து உடைந்து விடலாம் என கருதினர்.
மேலும் இது சூரியனுக்கு அருகில் உள்ள குய்ப்பர் மண்டலத்தில் இருந்து வந்தவை அல்ல ப்ளூட்டோ விற்கும் அப்பால் வெகுதொலைவில் உள்ள ஊர்த் மண்டலத்தில் இருந்து வந்தது. ஒளி கூட அங்கிருந்து புறப்பட்டு பூமியை அடைய சுமார் 30 நாட்கள் எடுக்கும் அவ்வளவு தொலைவு சுமார் 5000 AU. ஊர்த் பகுதியில் இருந்து வரும் இந்த வால்நட்சத்திரம் சூரிய குடும்பம் தோன்றியபோது உருவானது.
450 ஆண்டுகளுக்கு முன் சூரியனும் சூரிய குடும்பம் உருவாயின. அப்போது ஐசான் வால்நட்சத்திரம் உருவெடுத்தது. உருவானதிலிருந்து உறக்க நிலையிலிருந்து தற்போதுதான் புத்தம் புதிதாக பூமிக்கு அருகில் வருகிறது என்பதால் எந்த மாசும் ஏற்படாமல் சூரிய குடும்பம் தோன்றிய காலத்தில் உள்ள தகவல்கள் அதில் பத்திரமாக பொதிந்திருக்கும். எனவே இந்த வால் நட்சத்திரத்தை ஆராயும்போது அதன் மூலம் சூரியன் மற்றும் நமது பூமி தோன்றியது குறித்து அறியமுடியும் என்று விஞ்ஞானிகள் நம்பினர். சூரியனின் வளிமண்டல மேலடுக்கு கரோனா எனப்படுகிறது.பிளாஸ்மா நிலையில் பொருட்கள் நிரம்பிய அமளி துமளியான பகுதி இது. இங்கு நடக்கும் இயக்கத்தை அறிந்துகொள்ள சூரியனை முத்தமிடும் நட்சத்திரங்கள் உதவுகின்றன.
அடுத்த கட்டுரையான மழையில் எப்படி கொசு பறக்கிறது என்று அறிவியல்பூர்வமாக அறிவியல் அறிஞர் ஆராய்ந்து சுவாரசியமாக ஆசிரியர் விளக்கிக் கூறியுள்ளார்.
இன்று நேற்றல்ல சுமார் 17.5 கோடி ஆண்டுகளாக இந்த உலகில் உலா வருகிறது. அதாவது நம்மை மட்டுமல்ல டைனோசர்களை கூட விட்டுவைக்கவில்லை. குளிர் நடுங்கும் தூந்தரவெளி முதல் வெயில் காயும் பாலை வரை எங்கும் கொசு உள்ளது; உலகில் சுமார் 3,000 வகை கொசுக்கள் உள்ளன. கடித்து ரத்தம் உறிஞ்சுவதற்கு ஏதேனும் விலங்கு மற்றும் சற்றே ஈரப்பதம்; மற்றும் வெப்பநிலை; அது மட்டும் போதும் கொசு உயிர் வாழும். மழையோ வெயிலோ கொசுக்கடியில் இருந்து நாம் தப்ப முடியாது.
அறிவியல் என்பது வெறும் கற்பிதம் அல்ல; பரிசோதனைகளின் அடிப்படையில் தான் கருத்துக்களை சோதனை செய்து பார்த்து ஏற்பதுதான் அறிவியல் அணுகுமுறை எனவே தாமே ஆராய்ச்சி செய்து உறுதி செய்யப் புகுந்தார் ஹு. அவரது ஆய்வுக் கருவியை கண்ணாடியாலான செயற்கை மழைப் பெட்டி. பெட்டியின் மேலே தண்ணீர் ஊற்றி வைக்க தொட்டி போன்ற அமைப்பு இருக்கும். அதன் கீழே சல்லடை போன்ற ஷவர் அமைப்பு தொட்டியில் நீர் ஊற்றினால் சல்லடை வழி கசிந்து மழை துளி போல பெட்டிக்குள் தொடர்ந்து கீழே விழும். கொசுக்களை அடைத்து தமது செயற்கை மழையை துவக்கினார் ஹு.
மழைத்துளிகள் இடையே கொசு என்ன செய்கிறது ? நடனமாடுகிறதா ? இப்படி அங்கும் இங்கும் சடார் சடாரெனத் திரும்புகிறது? எப்படி கொசுவின் இயக்கத்தை அறிவது ? நொடிக்கு ஆயிரம் புகைப்படம் எடுக்கும் நவீன உயர் வீடியோ கருவி தான் ஹுவிற்கு துணை. அதிவேக கேமரா கொசுவின் இயக்கத்தைத் துல்லியமாகப் படம் எடுத்து நமக்குக் காட்டும். அதிலிருந்து கொசு எப்படி மழைத்துளிகளுக்கு நடுவே நடனம் ஆடித் தப்புகிறது என்பதைக் காணலாம் என்பது ஹுவின் ஊகம்.
சரியாக கொசுவை மேல் மழைத்துளி வந்து விழும்போது கொசுவை விட 50 மடங்கு எடை கொண்ட நீர்த்துளியால் கொசு நசுக்கி விடவில்லை மாறாக நீர்த்துளியின் வடிவம்தான் சிதைந்தது. உள்ள படியே வீடியோ படத்தில் மழைத்துளி கொசுக்கள் மீது மோதுவது தெளிவாகப் பதிவாகி இருந்தது. நீர்த்துளி கொசுவின் மீது வழிந்து உருண்டுஓடி சென்று விடுவதும் படத்தில் தெளிவாகப் புலப்பட்டது. மோதலின் விளைவாக கொசு சற்றே பக்க வாட்டில் தள்ளப்பட்டதும் தெளிவானது.
ஒப்பீட்டில் குறைவான நிறை; குறைவான வேக கதி கொண்டுள்ள கொசுவுக்கு குறைவான ஜடத்துவம் உள்ளது. குறைவான ஜடத்துவம் உள்ள கொசுவின் மீது மழைத் துளி மோதும் போது குறைவான ஆற்றலே செலவாகிறது. எனவே கொசுவுக்கு பாதிப்பு இல்லை. நீர்த்துளியும் இந்த சிறு கொசுவின் மீது மோதும் போது நீர்த்துளி சிதறுவது இல்லை. அதன் உருவம் மட்டும் சற்றே மாறி, கொசுவின் உடல் மீது உருண்டு விழுந்து விடுகிறது. எனவே விழும் நீர்த் துளியின் விசையில் மிகக் குறைந்த அளவே கொசுவுக்குச் செல்கிறது. அதனால் மோதலின் விளைவாக கொசுவுக்கு அதன் இயக்கத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது நன்றாக விளங்கியது.
மீண்டெழும் வேங்கைகள் என்ற இந்த அத்தியாயத்தில் சாலையோரப் பாறையின் மீது அமர்ந்திருந்த மூன்று வேங்கைக் குட்டிகள் சிவிங்கிப்புலி எனப்படும் வேங்கைகளைக் கண்டதும் காரிலிருந்து இறங்கினார் பஸ்தார் பகுதியின் சர்குஜா மகாராஜா ராமானுஜ் பிரபாத் சிங். காட்டு விலங்குகளை வேட்டையாட வாய்ப்பு கிடைத்த களிப்பில் மகாராஜா தனது துப்பாக்கியை எடுத்து இரண்டு முறை சுட்டார் ஒரு குண்டு ஒரு வேங்கையைக் கொன்றது. இரண்டாவது குண்டு இரண்டாவது வேங்கையின் உடலில் பாய்ந்து பின்னர் மூன்றாவது குண்டு மூன்றாவது வேங்கையையும் பலி கொண்டது. மூன்று வேங்கைகளும் மடிந்தன.
தனது மனைவியுடன் சண்டை பிடித்து அந்தப்புரம் விட்டு வெளியேறிய மகாராஜா கோபத்தில் இருந்தார் எனவும் அந்த வெறியில் தான் இந்த மூன்று ஆண் வேங்கைகளைக் கொன்றார் எனவும் சிலர் கூறுகின்றனர். அது உண்மையோ பொய்யோ தெரியாது.ஆனால் இந்த மூன்று வேங்கைகள் (Cheeta) தான் இந்தியாவில் கடைசியாகத் தென்பட்ட வேங்கைகள். இந்த மூன்று வேங்கைகளின் மரணத்தோடு இந்தியாவில் வேங்கைகள் இல்லவே இல்லை என்று ஆகிப்போனது.
வடமொழியில் புள்ளிகள் கொண்ட என்ற பொருள்படும் சித்ராஸ் என்ற பெயர் மருவி ஆங்கிலத்தில் சீட்டா என அழைக்கப்படுகிறது. சீட்டாவிற்கு பெயர் தந்த இந்த இந்திய மண்ணில் இன்று வேங்கைகள் அறவே இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
பல்லுயிரியம் (Biodiversity) என்ற தமது நூலில் ச. முகமது அலி, பலரும் சிறுத்தை புலி தான் என தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி இரண்டும் வேறு வேறு என்கிறார். Cheetah எனும் விலங்கைத் தான் வேங்கை என்றும் சிவிங்கப் புலி என்றும் குறிப்பிடுவார்கள் என்றும் ஒரு காலத்தில் தமிழகத்தில் இந்த விலங்கு பரவலாக இருந்தது என்றும் கூறுகிறார்.
சிறுத்தையும் (leopard) வேங்கை எனும் சிவிங்கிப் புலியும் (cheeta) பார்வைக்கு ஒன்று போல் இருக்கும். இரண்டுமே பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய விலங்குகள். இரண்டின் பழக்கவழக்கங்களும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால் இரண்டும் வெவ்வேறு விலங்குகள். புவியில் விரைவாக சடுதியில் ஓடும் விலங்கு வேங்கை தான். சுமார் 500 மீட்டர் வரை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது வேங்கை. மூன்றே மூன்று வினாடியில் வேங்கை ஓட்டமில்லா நிலையிலிருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் என்ற வேகத்திற்கு முடுக்கு வேகம் பெற முடியும். இவ்வாறு தனது இரையைத் துரத்திப் பிடித்து உண்ணும் திறம் பெற்றது வேங்கை.
முகலாய மன்னர்கள் வேங்கையை வேட்டைக்காக வளர்த்தனர்.வேட்டை நாய் போல வளர்க்கப்பட்ட வேங்கையைக் கொண்டு காட்டு விலங்குகளை வேட்டையாடும் பற்பல முகலாயச் சித்திரங்கள் இதற்குச் சான்று.அக்பர் தனது 13ஆம் வயதில் ஒரு வேங்கையை பரிசாகப் பெற்றார். அவரது பேரார்வம் காரணமாக ஆயிரம் வேங்கைகளை வளர்த்தார். அவரது மகன் ஜஹாங்கீர் வேங்கை மீது பற்றுக் கொண்டு வளர்த்தார். முகலாய மன்னர்களின் இந்த போக்கினை வழி ஒற்றி பின்பற்றி ஏனைய மன்னர்களும் வேங்கையை வளர்க்கத் துவங்கினார். தமது ஆண்மை பலம் முதலியவற்றைக் குறிக்கும் படியாக வேங்கை வளர்ப்பு அமைந்தது. முகலாய மன்னர்கள், குறுநில மன்னர்கள் என ஒவ்வொருவரும் தாமும் வேங்கை வளர்ப்போம் என தொடங்கியதும் கண்டுபிடித்தது சனி. மன்னர்களின் வேங்கை தேவையை ஈடுகட்ட மேலும் மேலும் வேங்கைகளைக் காடுகளிலிருந்து பிடிக்கும் படி ஆயிற்று. ஒரு கட்டத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து வேங்கை இறக்குமதி செய்யப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பரோடா சமஸ்தானம் தன் பங்கிற்கு வேங்கைப் பிடிப்பது எப்படி,கூண்டில் அடைப்பது எப்படி, நாயைப்போல பழகுவது எப்படி எந்த உணவு கொடுப்பது, எப்படி பராமரிப்பது எனப் பல தகவல் அடங்கிய புத்தகம் ஒன்றைக் கூட பிரசுரித்தது.
மன்னர்கள் ஏற்படுத்திய தலைவலி ஆங்கிலேயர்களின் காலனிய ஆட்சி இந்தியாவில் அமைந்த பின்னர் வேங்கைகளுக்குத் திருகு இலயாக அவலமடைந்தது. மன்னர்கள் காட்டிலிருந்து வேங்கையை பிடித்து வளர்த்தார்கள். ஆனால் ஆங்கில அதிகாரிகள் பொழுதுபோக்கிற்காக வேங்கைகளை வேட்டையாடக் கிளம்பினர். தமது வீரத்தை வெளிப்படுத்த ஒவ்வொரு ஆங்கில அதிகாரியும் கையில் துப்பாக்கியுடன் காடு நோக்கி கிளம்பினர். புலி தான் அவர்களது முக்கிய குறி. கிடைக்கவில்லை என்றால் சிறுத்தை சிறுத்தை இல்லையென்றால் வேங்கை என துரத்தித் துரத்தி வேட்டையாடினர். பல ஆயிரம் தொகை கொண்ட வேங்கை வெகு சில ஆண்டுகளிலேயே சில நூறு எனக் குறைந்தது.
ஒரு காலத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆப்பிரிக்கா,ஈரான்,இந்தியா எனப் பரவியிருந்த வேங்கை இனம் இன்று ஆப்பிரிக்காவில் நமீபியா, கென்யா போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா முதலிய பகுதிகளில் சுருங்கிவிட்டது. ஈரானில் வெறும் 100 வேங்கைகளும், ஆப்பிரிக்காவில் வெறும் 5000 வேங்கைகளும் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன.
புலி, சிங்கம் போன்ற விலங்குகளை ஒப்பிட்டால் வேங்கை சற்றே சாதுவானது. புலி ,சிங்கம் போல வேட்டையாடும் விலங்கு தான் வேங்கை என்றாலும் இவை கால்நடைகளை தீண்டாது. எனவே கிராமத்தில் ஆடுகள், மாடுகள் பொதுவாக இவற்றால் ஆபத்தில்லை.மனிதனையும் இவை தாக்குவது இல்லை.
புற் காடுகளில் வசிக்கும் வேங்கை புல்வெளிக் காடுகளின் முக்கிய விலங்கு. வேட்டையாடும் ஆண்டிலோப் மற்றும் கஸல் முதலிய மான் வகைகள், முயல், காட்டுப்பன்றி முதலியவை தான் வேங்கையின் இரை.
முயல் மற்றும் சிறு பறவைகளும் அடங்கும். புலி,சிங்கம் போன்றவை பதுங்கிப் பாய்ந்து தனது இரையை பிடிக்கும். ஆனால் வேங்கையோ வெகு வேகமாக ஓடி, துரத்தி தனது இரையைப் பிடிக்கும். முதலில் தனியாக நிற்கும் ஒரு மிருகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.பின்னர் மிகச்சாதாரணமாக அவற்றின் அருகில் நடந்து சென்று திடீரென விரட்ட ஆரம்பிக்கும்.
குறுகிய கால இடைவெளியில் விரைவாக முடுக்கு வேகம் பெற்று ஓடக்கூடிய திறனைப் பெற்றிருப்பதால் சட்டென்று தனது இரையை முழுபலத்தையும் சேர்த்து விரட்டிப் பிடிக்கும். இவற்றின் அதிவேக ஓட்டமும் திடீரென திரும்பி ஓடும் திறனும் தான் சில நொடிகளில் தனது இரையை வெற்றிகரமாக வேட்டையாட இதற்கு உதவுகிறது.இவற்றின் நீண்ட வால் வேகமாக ஓடும்போதும் ஓடிக்கொண்டே திரும்பும்போதும் கீழே விழாமல் தன்னை சமநிலைப் படுத்திக் கொள்ள உதவுகின்றன.
கழைக்கூத்தாடி கயிற்றின் மேல் நடக்கும் போது தன்னை நிலைப்படுத்திக் கொள்ள நீண்ட கழியை பயன்படுத்துவது போல வேங்கையை நீண்ட வால் வேகமாக ஓடும் போதும் பாயும் போது திடீரென திரும்பும்போதும் நிலைப்படுத்திக் கொள்ள உதவுகிறது.
உள்ளபடியே வேங்கைகள் அழிவு என்பது இந்தியக் காடுகளின் அழிவிற்கு இட்டுச் சென்றுள்ளன எனவேதான் ஆப்பிரிக்காவில் இருந்து 10 வேங்கைகளை இறக்குமதி செய்து மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ பல்பூர் வனவிலங்கு சரணாலயம் மற்றும்நெளராதேஹி வனவிலங்கு சரணாலயம். மேலும் ராஜஸ்தானில் உள்ள ஷாகர்ஸ் வனப்பகுதி ஆகிய மூன்று வனப்பகுதிகளில் வேங்கைகளுக்கு மீண்டும் மறுவாழ்வு திட்டம் தீட்டியுள்ளனர். Project Cheetah என்ற திட்டத்தின் மூலமாக இந்தியாவில் மீண்டும் வேங்கைகளே மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவிலிருந்த வேங்கைகள் வேட்டைகளின் மூலமாக முழுவதுமாக அழித்து அழித்து ஒழிக்கப்பட்ட நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து வேங்கைகளை இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட வனப்பகுதிகளில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சத்தியமங்கலம் காடுகளும் உகந்தது என்ற கருத்தும் இருக்கிறது.
ஆசிய வேங்கைகளும் ஆப்பிரிக்க வேங்கைகளும் இரண்டும் வெவ்வேறு உயிரினங்கள் என இந்த ஆய்வு தெளிவுபடுத்தியது.அந்நிய உயிர்களை பரப்புதல் கூடாது என்பது சுற்றுச்சூழல் கருத்து சர்வதேச விதி. அதனடிப்படையில் ஆப்பிரிக்காவில் இருந்து வேங்கைகளைக் கொண்டு வரும் இந்திய அரசின் முயற்சி குறித்து சில
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்க உச்ச நீதிமன்றம் போதிய அறிவியல் ஆய்வு இல்லாமல் வேங்கைகளை இறக்குமதி செய்வதை தற்காலிகத் தடை செய்தது. ஆப்பிரிக்காவிலிருந்து வேங்கைகளே இறக்குமதி செய்து மறுபடி இந்தியக் காடுகளில் இந்தியக் காடுகளில் இந்த வனவிலங்கை மறுகுடியேற்றம் செய்வதில் உள்ள சாதக பாதகங்களைக் குறித்த சர்ச்சை இன்னமும் முடிவடையவில்லை. இனி மறுபடியும் இந்தியக் காடுகளில் வேங்கை சீறும் சப்தம் எப்போது கேட்கும் என்று தெரியவில்லை. வேங்கைகளே காப்பாற்ற நாம் நம்மால் முடிந்த செயல்களை செய்வோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து பூனை குடிக்கும் பால் என்ற கட்டுரையில் பாலைக் குடிக்கும் பூனையின் அழகில் சொக்கி வியந்தார் ந ரோமன் ஸ்டாக்கேர்(Roman Stocker) என்ற உயிரி இயற்பியலாளர். நாம் பாலைப் பருகுவது குவளையில் இடப்படும் பாலை வாயின் அருகே கொண்டு சென்று வாயில் ஊற்றி அருந்திக் குடிக்கிறோம். வாயால் உறிஞ்சி குடிக்கிறோம். நாய், பூனை போன்ற விலங்குகள் அவ்வாறு அறிந்து குடிக்க முடியாது. ஆயினும் அவை நீர் முதற்கொண்டு பல்வேறு திரவங்களை அருந்துகின்றன.
பாலை குடிக்கும் நாய் தனது நாக்கை ஆங்கிலJ எழுத்து போல வளைக்கிறது. வளைந்த நாக்கு கரண்டி போல இருக்கும். கரண்டியை வைத்து பாத்திரத்திலிருந்து நீர், பால் முதலியவற்றை எடுக்க முடியும் அல்லவா ; அது போல நாய் வளைந்த நாக்கு வழியே எடுக்கிறது. தனது வாய்க்குள் நாக்கை உள்ளிழுத்துக் கொண்டு பாலைப் பருகுகிறது.
நாய் போல பூனையும் தனது நாக்கை மடித்து ஜே வடிவில் செய்தது. கரண்டி போல் ஆக்கியது. ஆனால் பூனையின் நாக்கு நன்கு பாலில் அமிழ்ந்து பாலை முக்கவில்லை. நாக்கின் அடிப் பாகம் மட்டுமே பாலில் பட்டது. ஆயினும் கண்ட பாம்பு போல பால் நாக்கின் வழி பூனையின் வாயில் சென்றது. புவியின் ஈர்ப்பு சக்திக்கு எதிராக பால் நாக்கின் வழி மேலே சென்ற செயல் இந்த ஆய்வாளர்களை சிந்திக்கத் தூண்டியது.
பூனை பால் குடிக்கும் விந்தையைப் புரிந்துகொள்ள ஒரு சிறு சோதனை செய்து பாருங்கள். ஆள் காட்டி விரலை பாத்திரத்தில் உள்ளே வைத்து சட்டென்று வெகு வேகமாக வெளியே இழுங்கள். சற்றே நீர் உங்கள் விரலோடு வெளி வரும். பின்னர் புவியின் ஈர்ப்பு சக்தி காரணமாக விரலிலிருந்து நீர் வடிந்து சொட்டாக கீழே விழுவதைப் பாருங்கள்.
பூனையின் நாக்கும் பாலைத் தொட்டு வெகு வேகமாக உள்ளே இழுக்கப்படும் போது நாக்குடன் பால் வெளி வருகிறது. சுமார் 78 சென்டி மீட்டர் அதாவது மணிக்கு சுமார் 3 கிலோமீட்டர் வேகத்தில் பூனையின் நாக்கு உள்ளே வெளியே பாய்கிறது எனக் கண்டனர் ஆய்வாளர்கள். வெகு வேகமாகப் பாயும் நாக்கின் துணையால் பால் பூனையின் நாக்குடன் மேலே எழும்புகிறது.
வெளியே இழுபடும் விரலில் இருந்து நீர் கன நேரத்தில் ஈர்ப்பு சக்தியால் கவரப்பட்டு கீழே கொட்டி விடும் அல்லவா ? அதுபோல இந்த பாலும் ஈர்ப்பு சக்தியால் கன நேரத்தில் கீழே சொட்ட வேண்டும். இங்கு தான் பூனையின் மற்றொரு இயக்கம் செயல்படுகிறது. நாக்கு வாய்க்குள் வந்தவுடன் தாமதமின்றி பூனை தன் வாயை மூடிக் கொள்கிறது. ஆகவே நாக்கில் ஒட்டி வரும் பால் மறுபடி சிந்தாமல் சிதறாமல் வாயிலேயே தங்குகிறது. இதுவே பூனை பால் குடிக்கும் ரகசியம்.
அடுத்து கண்ணாடியே சுவர் கண்ணாடியே…! என்ற கட்டுரையில் இந்த கண்ணாடியில் உள்ள பிம்பங்கள் கண்டறியும் முறை பற்றி அறிவியல் பூர்வமாக விளக்கிக் கூறியுள்ளார் ஆசிரியர்.
அடுத்து தென்னையின் தாயகம் பற்றிய இந்த கட்டுரையில் பதினைந்தாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் கால்பதிக்க துவங்கிய பின்னர் தேங்காய் கண்டு பயந்தனர் மூன்று கண்களுடன் பார்வைக்கு பூச்சாண்டி பூதம் போலத் தென்பட்டது என கருதி போர்ச்சுகீசிய மொழியில் பூச்சாண்டி எனும் பொருள் உடைய கோ கோ(coco) என்று பெயரிட்டனர். கோகோவின் விதை என்பது தான் கோகோநட் (cocoanut) என்று ஆகி ஆங்கில முதல் ஐரோப்பிய மொழிகளில் வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தில் நட் அதாவது “விதைக்கொட்டை” என தேங்காய் கருதப்பட்டாலும் உள்ளபடியே இது உள்ளொட்டுத் தசைக்கனி ஆகும். கால்பந்து அளவில் விளையும் தேங்காய் மேலே வெளித்தோல் அதனடியில் நார் அடங்கிய பகுதி உள்ளே கடினமான ஓடு அதனுள்ளே தசைப்பகுதி இளநீர் என அமைந்த “பழம்” ஆகும். மேலே மூன்று கண்கள் போன்ற அமைப்பு இருக்கும். தேங்காய் வளர்ந்து முற்றிய பின் அதன் உள்ளே பூஞ்சான் போன்ற “பூ” உருவாகும். கண்கள் வழி முளைகள் தோன்றி ஏதுவான சூழல் இருந்தால் தேங்காய் விதை முளைக்கும்.
தென்னை மரத்தின் எல்லா பகுதிகளும் நமக்கு உதவுகின்றன. தேங்காய் பருப்பை உணவாகக் கொள்ளமுடியும். உள்ளபடியே இது மிகுந்த சத்துக் கொண்டது ஆகும். தென்னை இளநீர் வைட்டமின் செறிவு மிக்க மிகு ஆற்றல் பொதிந்த பானம். தென்னை நார் கயிறு திரிக்க பயன்படும். தென்னை மட்டை கொண்டு ஓலை வேய்ந்து வீடு கட்டிக் கொள்ளலாம். தென்னை மரம் கட்டுமரம் செய்ய உகந்தது. இவ்வாறு பல வகைகளில் நமக்கு உதவும் தென்னை வெப்பமண்டலப் பகுதிகளில் வெகுவாக வளர்க்கப்படும் மரமாக இருப்பதில் ஒன்றும் வியப்பில்லை. எனவே தான் மகாகவி பாரதி தனக்கு காணி நிலம் வேண்டும் என கோரி பராசக்தியிடம் பாடும் போது அதில் பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் வேண்டும் என்ற கூடுதல் கோரிக்கையை வைக்கிறார்.
உலகில் இன்று சுமார் 89 நாடுகளில் மொத்தம் 120 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் தென்னை பயிரிடப்படுகிறது. ஆனால் தென்னையின் தாயகம் எது என்ற புதிர் சமீப காலம் வரை தீர்க்கப்படவில்லை. குண் பீ, லுக் புடெளயூன் கேன்னெத் ஓல்சென்; ,(Gunn,Bee,Luc Baudouin,Kenneth Olsen) முதலியோர் அடங்கிய ஆய்வுக்குழு இந்த புதிருக்கு விடை கண்டு உள்ளது. தென்னையில் விளையும் தேங்காயில் வடிவம் கொண்டு இரண்டு வகை என இதுகாறும் பிரிக்கப்பட்டு வந்தது. நயு கபா மற்றும் நயு வய் (Nui Kafa Nui Vai) என்று அழைக்கப்படும். இந்த இரண்டு பெரும் வகைத் தேங்காயில் நயுகபா வகை நீள்வட்ட உருண்டை வடிவில் நார் மிகுந்து தடிமனான மட்டை கொண்டு காணப்படும்.நயு வய் வகைத் தேங்காய் சற்றே உருண்டை வடிவில் இளநீர் மிகுந்து காணப்படும். மட்டை தடிமன் குறைந்து காணப்படும். இளநீர் கொண்டு சுவையான தேங்காய் விழுது கொண்டு இருக்கும்.
இதைத் தவிர தென்னை மரம் சில குட்டையாகவும், சில நெட்டையாகவும் இருக்கும். உலகில் வெறும் 5 சதவீதம் மரங்கள் மட்டுமே குட்டை வகை. இவை பெரும்பாலும் மனிதன் தேர்வு செய்து வளர்த்த வகையாக இருக்க வேண்டும் என கருதப்படுகிறது. பொதுவாக குட்டை மரங்கள் மனிதக் குடியிருப்புகளுக்கு அருகிலும் மரபணு வேற்றுமை குறைந்தும் காணப்படுகிறது. இந்த இரண்டு தெங்கு வகைகளில் குட்டை வகை இளநீர் மற்றும் இளம் காய் எடுக்க குட்டை மரங்களும் நெட்டை மரங்கள் தேங்காய் எண்ணெய் எடுக்கவும் மற்றும் நார் உறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது .
நெட்டைத் தெங்கு சுமார் 60-80 ஆண்டுகள் பயன்தரும் எனவே இதை “மூன்று தலைமுறை பயிர்” என்பர். ஆனால் மரம் வளர்ந்து பருவமெய்தி காய் விளைவிக்க ஆறிலிருந்து பத்து ஆண்டுகள் எடுக்கும். குட்டை தென்னை சட சடவென வளர்ந்து விரைவில் காய் தள்ள துவங்கும் ஆயினும் சுமார் பத்து பதினைந்து ஆண்டுகள் தான் பயன் தரும். பார்வைக்கு தென்படும் வடிவங்கள் கொண்டு இதுவரை நயு கபா வகைதான் முதலில் தோன்றிய இயற்கை வகை எனவும், பிற்காலத்தில் மனிதனின் தேர்வு வழி உருவானதே குட்டை நயு வய் வகை எனவும் வகை எனக் கருதி வந்தனர். மிகுந்த மட்டை கொண்ட நயூ கபா இயல்பில் கடலின் மூலம் தீவுகள், கடற்கரைகள் என எல்லா இடமும் பரவியது எனவும், சுவையான இளநீருக்காக குட்டை நயு வய் வகையைத் தேர்வு செய்து மனிதன் வளர்த்தான் எனவும் கருதி வந்தனர்.
இரண்டு வகைகள் உள்ளன. A வகை தென்னையின் தாயகம் தென் கிழக்கு ஆசியாவில் எனவும் B வகை தென்னையின் தாயகம் இந்தியா,இலங்கை எனவும் இந்த ஆய்வுகள் சுட்டுகிறது. பசிபிக் பகுதியில் பரவியுள்ள பயிரிடப்படும் தென்னை முதன்முதலில் பிலிப்பைன்ஸ் அல்லது மலேசியாவில் துவங்கி இருக்க வேண்டும். பின்னர் இது பசிபிக் தீவுகள் என பரவியிருக்க வேண்டும்.சுமார் ஐயாயிரம் முதல் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை சுமத்திரா தீவு, ஆஸ்திரேலியா எனப் பரவியது. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் வழி இதுபற்றி உங்கள் பகுதியில் பரவியது.பின்னர் இது ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் பரவியது.
இந்திய பெருங்கடல் வகை தென்னிந்தியா அல்லது ஸ்ரீலங்காவில் முதன்முதலில் பயிரிடப்பட்டு இருக்க வேண்டும் என ஆய்வுகள் சுட்டுகின்றன.இந்தியா, இலங்கையைத் தாயகமாகக் கொண்ட வகைத் தென்னை இந்த பகுதியில் மட்டுமே இருந்தது. அரேபிய வியாபாரிகள் வழி இது ஆப்பிரிக்கா மற்றும் மாலத்தீவு முதலிய பகுதிகளுக்குச் சென்றது. வாஸ்கோடகாமா வருகைக்குப் பிறகு ஐரோப்பியரின் வழி தான் B வகை கரீபியன் தீவுகள், ஆப்பிரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளுக்குச் சென்றது என இந்த ஆய்வு தெளிவுபடுத்துமிறதுபகுதியில்.வாகவே இந்தியப் பெருங்கடலில் ஒரு வகையும் பசிபிக் பகுதியில் வேறு ஒரு வகையும் இருந்தாலும் இதில் வித்தியாசமாக இருப்பது மடகாஸ்கர் பகுதி. இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்தாலும் இங்கு விளையும் தென்னை பசிபிக் வகை கலந்த வகை. சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு பசிபிக் வகை ஆப்பிரிக்க மடகாஸ்கர் பகுதியில் பொருத்தப்பட்ட தினமும் எனவேதான் மடகாஸ்கரில் பகுதியில் புகுத்தப்பட்டது எனவும், என்வே தான் மடகாஸ்கரில் உள்ள பசிபிக் தென்னை அதற்கு வடக்கு பகுதியில் உள்ள சிசெல்ஸ் தீவுகளில் இல்லை எனவும் அறியப்படுகிறது.
இவ்வாறு அவசியமான பல தகவல்களை இந்த புத்தகத்தை படித்து அதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது அனைவரும் வாசித்து பயன் பெறுங்கள்.