சொல்வலை வேட்டுவம் கவிதை – யாழ் ராகவன்

சொல்வலை வேட்டுவம் கவிதை – யாழ் ராகவன்




சொல்லொன்று உரசிப்பிடித்த தீயில்
வெந்து தணிந்த காடு
இன்னொரு காட்டுக்கு எருவானது

பொல்லா சொல்பட்டு சரிந்த தலைகள்
சரித்திரத்தில் துருத்தி நிற்கின்றன
செந்நா புலவனை

கிணற்றில் விழுந்து
தற்கொலை செய்த சொல்
பூத ரகசியங்களை ஆவியாக்கிபடி
உயிர்த்தெழுகிறது

பச்சை உதடுகளின் முத்த வெடிப்பில்
நிலத்தை நிமிண்டிப் பழித்தன
புதைச் சொற்கள்

தேவனைப் பிடிக்க
மனிதர்களைப் பயிற்றுவித்து

மனிதர்களுக்கு வீசுகிறது ஆதிச்சொல்

– யாழ் ராகவன்