மௌனத்தின் வார்த்தைகள் கவிதை – ரா.சிவக்குமார்

மௌனத்தின் வார்த்தைகள் கவிதை – ரா.சிவக்குமார்




நீள் மௌனங்களை
உடைக்கும் முதல் சொல்
நீள் வாதங்களை
உடைக்கும் முதல் மௌனம்
இதற்கு நிகர் உண்டோ?

நீண்ட மௌனங்களும்,
நீண்ட வாதங்களும்,
வீரியமற்றதே!

மௌனம் சில நேரம்
வெல்கிறது!
மௌனம் சில நேரம்
கொல்கிறது!

உலகின் மாபெரும்
திறந்தவெளி சிறை
மெளனம்!.

மௌனத்தை உடைத்தே
பூக்களும் புரட்சியும்
மலர்கின்றன!.

வாயைக் கட்டியதும்
சப்தங்கள் நின்று போயின
மனதின் கூச்சல் மட்டும்
இன்னும் அடங்கவில்லை!.

வார்த்தைகளை விற்றுவிட்டு
மௌனத்தை வாங்கி வையுங்கள்
மௌனத்தின் செலவு அவசியம் தேவை!.

மெளனங்களாலயே
பட்டை தீட்டப்படுகின்றது
மனம்!

அவளது கண்கள்
என் இதயத்தை களவாடி
மெளனத்தால் பேசுகின்றது!

அருகினில் அமர்ந்திருந்தும்
மௌனத்தின் பெருவெளியை
கடக்க முடியவில்லை!

கருவறைக்கும், கல்லறைக்கும் இடையே
மௌனம் வார்த்தைகளால்
வெட்டி வீழ்த்தப்படுகின்றது!

மெளனத்தைக் கலைக்க
சப்தங்கள் தேவையில்லை
இளந்தென்றலின் தீண்டல்
போதும்!

மனதின்
மெளனமே ஞானம்!.

ரா.சிவக்குமார்
சென்னை
9884824086

நூல் அறிமுகம் : பூவை அமுதனின் சிந்தனையாளர் சாக்ரடீஸ் – சி.பி.கிருஷ்ணன்

நூல் அறிமுகம் : பூவை அமுதனின் சிந்தனையாளர் சாக்ரடீஸ் – சி.பி.கிருஷ்ணன்




“சிந்தனையாளர் சாக்ரடீஸ்” என்று பூவை அமுதன் எழுதி, பிரேமா பிரசுரம் வெளியிட்ட 94 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒரே மூச்சில் படிக்கும் அளவிற்கு சுவாரசியமானது.

”பெரிய சாக்கிரட்டீஸ் மாதிரி கேள்வி கேட்க வந்துட்டான் பார்” என்ற சொல்லாடல்  நீண்டகாலமாகவே உண்டு. சிறு வயதிலிருந்தே சாக்ரடீஸ் மீது ஓர் ஈர்ப்பு உண்டு. ஏதோ ஒரு நாட்டில் எப்போதோ வாழ்ந்து மறைந்த ஒரு நபர் இன்றளவும் நினைவு கூறப்படுகிறார் என்றால் சமுதாயத்திற்கு அவரின் அசாத்தியமான பங்களிப்பை போற்றாமல் இருக்க முடியாது.

கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரத்தில் கி.மு. 469ம் வருடம் வறுமையான குடும்பத்தில் பிறந்தார் சாக்ரடீஸ். 40 வயது வரை ராணுவத்தில் பணியாற்றி மூன்று போர்களில் நேரடியாக பங்கேற்று போராடி பல பதக்கங்களை வென்றார்.  கிரேக்க நாட்டில் ஏறக்குறைய 2400 ஆண்டுகளுக்கு முன்பே குடியாட்சி இருந்தது.

உலகின் முதல் கேள்வியின் நாயகன் சாக்ரடீஸ் தான். ஏன்? எதற்காக? எப்படி? எதனால்? எவ்வாறு? என்று அடுக்கடுக்காக கேள்விகளால் மக்களின் சிந்தனையை தூண்டியவர். ”எதையும் கேள்வி கேட்காமல் ஏற்காதீர்கள்” என்று மக்களிடம் தொடர்ந்து போதனை செய்தார். ’பக்தி’ என்ற நம்பிக்கையால் சிந்திக்க தவறாதீர்கள் என்று மூடநம்பிக்கைக்கு மூடுவிழா நடத்த முனைந்த உலகத்தின் முதல் முற்போக்காளர் சாக்ரடீஸ். ”சிந்திப்பதும், சிந்திப்பதை சொல்வதும் ஒவ்வொரு தனி மனிதனின் பிறப்புரிமை ஆகும்” என்றார்.

சப்பை மூக்கும், தடித்த உதடுகளும், பெருத்த மண்டையும், பெரிய கண்களும், சரிந்த தொப்பையும். அழுக்கு ஆடையுமாக வசீகரமற்ற தோற்றம் கொண்டவர் சாக்ரட்டீஸ். ஆனால் அவர் சந்தை. கோவில், விளையாட்டுத் திடல் போன்று மக்கள் திரளாக உள்ள இடங்களுக்குச் சென்று உரத்த குரலில் பேச ஆரம்பித்துவிட்டால், இளைஞர் முதல் முதியோர் வரை ஆண், பெண் அனைவரும் ஆர்வத்துடன் அவரின் பேச்சை கேட்பார்கள். மாற்றம் விரும்பிய, எழுச்சி உள்ளம் கொண்ட இளைஞர் கூட்டம் தேன் கூட்டை மொய்க்கும் தேனீக்களாக அவரை சூழ்ந்து கொண்டனர்.

பொய்யையும், புளுகையும் மூலதனமாக வைத்து மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மக்களை சிந்திக்க விடாமல் தடுத்து வைத்திருந்த கூட்டம் சாக்ரடீஸை கண்டு நடுங்கியது. சாக்ரடீஸின் பகுத்தறிவுக் கொள்கைகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டால் தாங்கள் செல்லாக் காசாகி விடுவோம் என்று அஞ்சிய பழமைவாதிகளும், மதவாதிகளும் அவருக்கு எதிராக திரண்டனர்.

“அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் கடவுளை சாக்ரடீஸ் வணங்குவதில்லை. புதிய மதக் கோட்பாடுகளை புகுத்துகிறார். ஏற்கனவே உள்ள நம்பிக்கையை சிதைக்கிறார்…..….இளைஞர்களை தன் பேச்சு வன்மையால் கெடுத்து விடுகிறார்” என்று சாக்ரடீஸ் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

”ஒரு மனிதனை குழந்தையாக தாய் ஈன்றார்; தந்தை படிக்க வைத்தார்; குரு போதித்தார்; அரசு மனிதனாக்கியது; நண்பர்கள் நல்லவனாக்கினார்கள்,  இவ்வளவு பேர் சேர்ந்து நல்லவனாக்கிய ஒருவனை நான் கொடுத்து விட்டேன் என்றால் எனக்கு அவ்வளவு பேரையும் விட அதிக சக்தி இருப்பதாகத் தானே அர்த்தம்? அதற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்பார் சாக்ரடீஸ்.

பெயருக்கு ஒரு விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை முடிவில் நீதிபதிகளாக அமர்ந்திருந்த 501 பேரில் சாக்ரடீஸ் குற்றவாளி என்று 281 பேரும், குற்றவாளி அல்ல என்று 220 பேரும் வாக்களித்தனர். அவருக்கு அப்போதிருந்த சட்ட திட்டங்களின் படி ஹெமலாக் என்ற கொடிய நஞ்சு கொடுக்கப்பட்டு கிமு.399ம் ஆண்டு அவரின் எழுபதாவது வயதில் கொல்லப்பட்டார்.

அவர் சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில், அங்கிருந்து தப்பிப்பதற்கு அவருடைய நண்பர்கள் சிலர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் சாக்ரடீஸ் அதனை தீர்மானமாக மறுத்துவிட்டார். ”உயிருக்கு பயந்து அடுத்த நாட்டில் கோழையாக வாழ நான் ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன்” என்று கூறி மரணத்தை இன் முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்பு அவர் ஆற்றிய உரையில் “நான் இளைஞர்களைக் கெடுக்கிறேன் என்று என் மீது குற்றம் சாட்டி எனக்கு மரணதண்டனையை விதித்து விட்டீர்கள். விரைவில் என்னை நீங்கள் அழித்து விடலாம். ஆனால் என்னோடு என் கருத்துக்களையும் அழித்துவிடலாம் என்ற உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. எனக்குப் பின்னால் எண்ணற்ற இளைஞர்கள் என்னைப்போலவே ஏதன்ஸ் நகர மக்களை நல்வழிப்படுத்த தோன்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் அத்தனை பேரையுமே உங்களால் அழித்து விட முடியாது. என்னதான் முயன்றாலும் என் கொள்கைகளை மண்ணோடு மண்ணாக்கிட முடியவே முடியாது என்பதை காலம் கட்டாயம் உங்களுக்கு மெய்ப்பித்து விடும்.” என்று குறிப்பிட்டார் சாக்ரடீஸ்.

தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த சாக்ரடீஸின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அவரின் சீடரானார் ’உயர்ந்த’ குலத்தில் பிறந்த பிளேட்டோ. சாக்ரடீஸின் சிந்தனைகளுக்கு எழுத்து உருவம் கொடுத்தவர் அவர். பின்னாளில் ”காரல் மார்க்சின் பொதுவுடமை புரட்சி கருத்துக்களுக்கும், ரூசோவின் புரட்சி எண்ணங்களுக்கும், இங்கர்சாலின் மூடநம்பிக்கையை எதிர்த்த கருத்துக்களுக்கும் முன்னோடியாக விளங்கியவர் சாக்ரடீஸின் முற்போக்கு கருத்துக்களுக்கு எழுத்துருவம் தந்த பிளேட்டோ” என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதிகாரி நச்சுக் கோப்பையுடன் வந்தார். ”நண்பா நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தயவுசெய்து சொல்லு” என்று நிதானமாக அவரிடம் கேட்டார் சாக்ரடீஸ்.  ”ஐயா இந்த விஷத்தை நீங்கள் குடிக்க வேண்டும். பிறகு நடக்க வேண்டும். கால்கள் மரத்துப்போகும் வரை நடந்து கொண்டே இருக்க வேண்டும். பின்னர் படுத்துக்கொள்ளலாம். நஞ்சு தன் காரியத்தை நடத்தி முடித்து விடும்” என்று அந்த அதிகாரி வேதனையுடன் கூறினார்

சாக்ரடீஸ் மனதில் ஆண்டவனை தொழுதுவிட்டு விஷக் கோப்பையை வாய்க்கு அருகில் கொண்டு சென்று நிதானமாக பருகினார். பிறகு அவர் அமைதியாக நடக்க ஆரம்பித்தார். அவர் கால்கள் மரத்துப்போகும் உணர்வு வரும்வரை நடந்து கொண்டே இருந்தார். பின்னர் மல்லாந்து படுத்துக் கொண்டார். மரணம் அவரை தழுவிக் கொண்டது.

”பிறர் குறை காண்பவன் அரை மனிதன்; தன்குறை காண்பவனே முழு மனிதன்”
”மருத்துவ நூல் மருந்துகளின் நன்மைக்காக இல்லை; உடலின் நன்மைக்காக உள்ளது. அது போலவே ஆட்சி புரியும் கலை ஆள்பவர்களின் நன்மைக்காக இல்லை; ஆளப்படுகின்ற மக்களின் நன்மைக்காகவே இருக்கிறது”
”எங்கே என்னுடையது, உன்னுடையது என்ற எண்ணம் மறைந்து பொதுவுடமை நிலவுகிறதோ அங்கேதான் யாவருக்கும் பொதுவான மனநிறைவு ஏற்படும்”
போன்ற சாக்ரடீஸின் பல கருத்துக்கள் இன்றளவும் மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளன.
மக்களுக்காக அயராது பாடுபட்டவரின் வரலாறு பற்றிய இந்த நூல் அனைவருக்கும், குறிப்பாக வளரும் தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளது.

நூல் : சிந்தனையாளர் சாக்ரடீஸ்
எழுத்தாளர் : பூவை அமுதன்
பதிப்பகம் : பிரேமா பிரசுரம்
பக்கங்கள்:94

நூல் அறிமுகம்: ஆர்.விஜயசங்கர் எழுதிய சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது. (கட்டுரை) வெற்று பிம்பத்தை போட்டு உடைக்க – என்.சிவகுரு நூலாற்றுப்படை தீக்கதிர்

நூல் அறிமுகம்: ஆர்.விஜயசங்கர் எழுதிய சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது. (கட்டுரை) வெற்று பிம்பத்தை போட்டு உடைக்க – என்.சிவகுரு நூலாற்றுப்படை தீக்கதிர்




வெற்று பிம்பத்தை போட்டு உடைக்க.
என்.சிவகுரு / நூலாற்றுப்படை / தீக்கதிர்

சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது.
ஆர்.விஜயசங்கர்.
உயிர்மை பதிப்பகம்
விலை: ரூ.100

ஒரு புத்தகம் வாசிக்கும் போது ஏற்படும் உணர்வுகள், நம்மில் பல சிந்தனை மாற்றங்களை உருவாக்கும். நாம் பல ஆண்டு காலம் தேக்கி வைத்திருந்த பழைய நம்பிக்கைகளை உடைக்கும்.
அதுவும் சரித்திர ஆதாரங்களோடு தருவிக்கப்பட்டால், புத்துணர்ச்சி உருவாகும். எதிரிகளை எந்த களத்திலும் நேரிடையாக சந்திக்க புது உத்வேகம் கிடைக்கும். அம்மாதிரியான நூலை நமக்கு தந்துள்ளார் ஆர்.விஜயசங்கர்.

79 பக்கங்களில் பல்வேறு தரவுகளோடு வலதுசாரிகள் இன்று கட்டமைக்கும் பிம்பத்தை போட்டு உடைக்க இது ஒரு கருத்து பேராயுதம். கலாச்சார தேசியம் இந்துத்துவ சக்திகளின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர் சாவர்க்கர். அவர் இந்தி யாவை இந்துத்துவ நாடாக மாற்றிட பல முக்கிய கருத்தோட்டங்களை பரப்பியவர். சனாதன குடும்பத்தில்
(சித்பவன பிராமணர்) பிறந்து தீவிர இந்துத்துவ சிந்தனையை தன்னுடைய இளமை காலத்திலேயே வரித்து கொண்டவர்.

இந்தியா என்பது கலாச்சார ரீதியாக இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டிய ஒரு நாடு. மற்றைய மதத்தினர் அனைவருமே அயல் நாட்டினர்; இங்குள்ளவர்களை துரத்தி விட்டு, வஞ்சகமாக நாட்டை பிடித்தனர் என்று பேசிய வர். உதாரணமாக, முகலாய ஆட்சியை பற்றிய அவரின் மதிப்பீடு இது தான்: “பழைய முகலாய வம்சாவளியின் ஆட்சி இந்த மண்ணின் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அப்பட்டமான பலாத்காரம் மூலமாக திணிக்கப்பட்டது. மேலோட்டமாக பார்த்தால் இது சரி என்றே தோன்றும். ஆனால் அதுவா உண்மை… அந்த உண்மையை இந்த புத்தகத்தில்ஆதாரங்களோடு நிறுவியிருக்கிறார் நூலாசிரியர்.

இந்து கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டால், இந்து இனம் விரும்பும் வரையில் கிறித்துவர்கள், முஸ்லிம்கள் இங்கு இருக்கலாம் என்பது தான் சாவர்க்கரின் கொள்கையின் சாரம். இதிலிருந்து தான் அவரின் கலாச்சார தேசியத்தை நாம் உள்வாங்க வேண்டும். அது எவ்வகையானது என்பதை இந்த நூல் பேசுகிறது. தேசியம் எனும் கருத்தாக்கத்தை ஒரு மதம் சார்ந்த கலாச்சாரத்தோடு முன்வைத்து பிற்போக்கு கொள்கைகளை முன்வைத்தார்.

இன்று பாஜக பேசும் இந்த கொள்கைக்கு அடித்தளம் இட்டவர், தீவிர இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தியதும் இவரே. அந்தமான் சிறையின் வீரரா? தற்போதுள்ள ஆளும் பாஜக தங்களின் சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாக வினாயக் தாமோதர் சாவர்கரையே முன்னிறுத்துகிறது. அதாவது தங்களின் மேல் உள்ள தீராப்பழியை இவரை வைத்தே துடைக்க பார்க்கிறது.

இந்தியாவின் சுதந்திர போராட்டத் தில் மக்களை திரட்டியோ, பெரும் போராட் டங்களையோ நடத்தியதாக அவர்களிடம் எதுவும் இல்லாத போது, சாவர்கார் அந்த மான் சிறையில் அடைக்கப்பட்டு, பெரும் துன்ப துயரங்களுக்கு ஆளாகி, அதனாலேயே இங்கே பேரெழுச்சி உருவானதைப் போல ஒரு பெரிய பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். அவர் அந்தமான் சிறையில் இருந்தது, கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் சிட்டகாங் எழுச்சியில் புரட்சிகாரர்களை போல், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடி உயிர் துறக்கவில்லை. பகத்சிங்,குதிராம் போஸ் ஆகியோரை போல உயிரே போனாலும் சரி என்று தியாகம் செய்யவும் இல்லை என்பதை ஆய்வாளர் சுபோரஞ்சன் தாஸ்குப்தா கூறுகிறார் எனும் ஆதாரம் இந்நூலில் உள்ளது.

மற்றொரு மூத்த பத்திரிக்கையாளர் மானினி சாட்டர்ஜி சாவர்கரின் சிறைவாசம் எப்படிப்பட்டது இரு வரிகளில் அழகுற கூறு கிறார்: “அவரின் சிறை வாழ்க்கை, ஏகாதி பத்திய எதிர்ப்பை ஆழமாக்கவில்லை, மாறாக அதை முடித்து வைத்து விட்டது.” அவர் மேலும் சொல்கிறார்: “சிறையின் சூழல் மனிதத் தன்மையற்றது, ஆனால் சாவர்க்கரை போல், மற்றைய எவரும்
மன்னிப்பு கோரவில்லை. கம்பீரமாக கொடுமைகளை எதிர்த்து நின்றனர். உயிர் துறந்தனர். விடுதலை வேள்வியில் தங்களை அர்ப்பணித்த னர்.” சிறைக் கைதிகளின் ஒப்பீடு இந்த நூலின் முக்கியமான சிறப்பு அந்தமான் சிறையில் சாவர்க்கரோடு இருந்த 8 போராட்ட தியாகிகளை பற்றி இதில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

அந்த பக்கங்களை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது, சர்வ நிச்சயமாக கண் கலங்க வைக்கும். அதில் இதோ ஒரு உதாரணம்… சத்ரா சிங்; சிறையில் போராட்டம் நடந்த காலத்தில் இவர் கண்காணிப்பாளரை அடித்துவிட்டார். அதற்காக அவர் மயக்கமடையும் வரை அடித்துவிட்டர்கள், அவரைஒரு கொட்டடிக்குள் தள்ளினர். இரண்டு ஆண்டுகள் அவரை தொடர்ந்து சித்ரவதை செய்தனர். அவருக்கென்று கம்பி வலையைக்கொண்டு வராண்டாவில் ஒரு கூண்டு அமைக்கப்பட்டது. அதற்குள்ளேயே தான் உண்பதும், உறங்கு வதும், இயற்கை உபாதைகளை தீர்த்து கொள்வது… கற்பனைக்கு எட்டாத துன்பம், கொடுமை. ஆனால் சாவர்க்கரோ ஏன் நீங்கள் போராட்டங்களுக்கு தலைமை ஏற்கவில்லை என கேட்டபோது பின்வருமாறு பதிலளிக்கிறார்:

“நான் போராட்டங்களுக்கு தலைமை ஏற்றி ருந்தால், அதிகாரிகள் அதை வாய்ப்பாக பயன் படுத்தி, எனக்கு, மற்றும் பல சிறை கைதிகளுக்கு வழங்கியிருந்த பல சலுகைகளை விலக்கி, மீண்டும் என்னை தனிமை சிறையில் அடைத்திருப்பார்கள், மேலும் நான் இந்தியாவுக்கு கடிதம் எழுதும் சலுகைகள் பறிக்கப்பட்டிருக்கும்.” ஆஹா என்னே ஒரு வீரம்… மன்னிப்பு கடிதம் எழுதிப்பிழைத்த இவரைத்தான் ‘வீர’ சாவர்க்கார் என அழைக்கி றார்கள். ஆங்கிலேயருக்கு ஆதரவாக… பல முறை மன்னிப்பு கடிதம் எழுதி கடைசியில் விடுதலை பெற்று இந்தியாவுக்கு வந்த சாவர்கர் அரசாங்கத்தின் போர் முயற்சிக்கு எவ்வாறு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை பின்வரும் வரிகளில் சொல்கிறார்:
“இந்தியாவின் பாதுகாப்பை பொறுத்தவரையில், இந்து நலன்களை பாதுகாக்கும் அரசாக இருத்தல் அவசியம். அதற்காக ஒத்துழைப்பு முழுவதுமாக கொடுத்திடல் அவசியம், போர் நடவடிக்கைகளில் பங்கேற்று நமது இந்து இனத்தையும் ராணுவமயமாக்க வேண்டும்”. அதோடு சேர்ந்து அவர் ஆங்கில இராணுவத்திற்கு ஆள் எடுக்கும் முகாம்களை அமைப்ப தில், அதில் முன் நின்று இந்துக்களை சேர்த்தார் என்பதை இந்த நூல் ஆதாரத்தோடு சொல்கி றது. அது மட்டுமல்ல, துவக்க காலத்திலிருந்தே இந்திக்கு ஆதரவாகவும், உருது மொழிக்கு எதிராகவும் பல விஷம் தோய்ந்த கருத்துக்களை சொன்னவர் சாவர்க்கர். இப்படி இந்தநூல் ஒரு கோழையின் மற்றொரு பக்கத்தை நமக்கு தோலுரித்து காட்டுகிறது. கருணை மனுக்கள் எழுதுவது வரலாற்றுப் பிழையல்ல.. ஆனால் அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு ஒப்பீட்டை இதில் கொண்டு வந்துள்ளார் நூலாசிரியர்.
காந்தி இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு பார்த்தார், மாவீரன் பகத்சிங் எப்படி கம்பீரமாக தன்னுடைய கடிதத்தை ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எழுதினார் என்பதை இந்த நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
“தூக்கிலிடப்படுவதை விட சுட்டுக் கொல்லப்படுவதையே நாங்கள் விரும்பு கிறோம்” என்றார் பகத்சிங்.
வலுவான சரித்திர ஆதாரங்கள், ஏராளமான தரவுகள், உண்மையை உரக்கச் சொல்லும் தகவல்கள் ஏராளமாக உள்ளன. ஒரு சிறு புத்தகத்தில் இத்தனை அம்சங்களை உள்ளடக்கி விஜயசங்கர் சொல்லுவார் என புத்தகத்தை வாசிக்கத் துவக்கும் போது தெரியவில்லை. ஆனால் பக்கங்கள் போகப் போக ஒரு அப்பட்டமான கோழையை தங்கள் குறியீடாகக் காட்டி கொண்டு ஒரு வெற்று பிம்பத்தை கட்டமைக்க நினைக்கின்ற காவி கூட்டத்தை அம்பலப்படுத்துகிறார். அனைத்து தளத்திலும் சமர் புரிய உதவும் ஒரு ஆயுதம் இந்நூல் என்றால் மிகையாகாது.
80 பக்கங்களை கொண்டது தானே என எளிதாக இதை வாசித்து விட்டு அலமாரியில் வைத்திட முடியாது. முகமூடிகளைப் போட்டுக்கொண்டு இன்று நாம் பணியாற்றும் அனைத்து தளங்களிலும் ஊடுருவியிருக்கும் சங்கிகளின் போலி தேசப்பற்றை, வெட்டி வீரத்தை அம்பலப்படுத்தும் முயற்சிகளுக்கு இளைஞர்களை, முற்போக்காளர்களை நம் பக்கம் கொண்டுவர நம்மோடு எப்போதும் இருக்க வேண்டிய புத்தகம் இது.
இந்திய சிறைகளில் இப்போதும் மனு(அ)தர்மத்தின் சாதி அடிப்படையிலேயே உழைப்புப் பிரிவினை மேற் கொள்ளப்பட்டு வருகிறது – சுகன்யா சாந்தா (தமிழில்: ச.வீரமணி)

இந்திய சிறைகளில் இப்போதும் மனு(அ)தர்மத்தின் சாதி அடிப்படையிலேயே உழைப்புப் பிரிவினை மேற் கொள்ளப்பட்டு வருகிறது – சுகன்யா சாந்தா (தமிழில்: ச.வீரமணி)

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ள சிறைக்குள் அனுமதிக்கப்பட்ட முதல்நாளன்றே அஜய் குமார் எதிர் கொண்ட சம்பவங்கள் மிகவும் மோசமானவைகளாகும். சித்திரவதை, பழைய உணவு, கடும் குளிர், கடுமையான வேலை என திரைப்படங்கள் பலவற்றில் சித்தரிக்கப்பட்டிருப்பதை அவர் பார்த்திருந்தபோதிலும், அவற்றை நேரடியாக அனுபவிக்கும் நிலை அஜய் குமாருக்கு ஏற்பட்டது. அஜய்…