'சிக்கன நடவடிக்கை' என்ற பெயரில் அரசு அடக்குமுறை | Government repression in the name of 'austerity' - Politics - Modi Government - https://bookday.in/

‘சிக்கன நடவடிக்கை’ என்ற பெயரில் அரசு அடக்குமுறை

'சிக்கன நடவடிக்கை' என்ற பெயரில் அரசு அடக்குமுறை சோவியத் யூனியனில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து இன்றளவும் பல விளக்கங்கள், ஆராய்ச்சிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பெருமளவிலான ஆய்வுகள் சோசலிசம் தோல்வி அடைந்த ஒரு சமூக அமைப்பாக சித்தரிக்கின்றன. சோசலிச முறையை…
Election2024 | மோடி அரசு -சுற்றுச்சூழல்

2024 நாடாளுமன்றத் தேர்தல்: மக்கள் களம் – “சுற்றுச்சூழல்”

எண்: 16 மோடி அரசாங்கத்தின் பொய்கள், பொய்கள் மேலும் பல பொய்கள் சுற்றுச்சூழல் சொன்னது "எங்களைப் பொறுத்தவரை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது அடிப்படையில் நம்பிக்கைக்குரிய விஷயம். நம்மிடம் இப்போது இயற்கை வளங்கள் உள்ளன. ஏனென்றால் நமது முன்னோர் இந்த வளங்களை பாதுகாத்தனர்.…
Election Special Poem - N.V.Arul | தேர்தல் சிறப்புக் கவிதை - நா.வே.அருள்

தேர்தல் சிறப்புக் கவிதை – நா.வே.அருள்

  அறிவிக்கப் படாதொரு அவசர நிலைகாலம் வறுமைக்கு ஜதி கட்டி வாழ வைக்கும் வாய்ஜாலம் தெரிவிக்கப் படாதொரு தேசத்தின் போர்க்காலம் தெருவதிர நடந்தாலே திருவடிக்குச் சிறைக்காலம் கனவு கண்டாலே கைது நடவடிக்கை கார்ப்பரேட் கட்டளைக்குக் கைகட்டி உடன்படிக்கை ஊடலிலும் நாட்டின் உள்துறையே…
Election2024- sanitation | மோடி அரசு -சுகாதாரம்

2024 நாடாளுமன்றத் தேர்தல்: மக்கள் களம் – “சுகாதாரம்”

எண்: 15 மோடி அரசாங்கத்தின் பொய்கள், பொய்கள் மேலும் பல பொய்கள் சுகாதாரம் சொன்னது அரசாங்கத்தின் முக்கிய கூற்றுக்களில் ஒன்று, அதன் திட்டம் – அதாவது, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) - பராமரிப்பு செலவுகள் காரணமாக பல…
Election2024- EDUCATION | மோடி அரசு -கல்வி

2024 நாடாளுமன்றத் தேர்தல்: மக்கள் களம் – “கல்வி”

எண்: 14 மோடி அரசாங்கத்தின் பொய்கள், பொய்கள் மேலும் பல பொய்கள் கல்வி சொன்னது 2014 மக்களவைத் தேர்தலின்போது, மத்திய பட்ஜெட்டில், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்குவதன் மூலம் கல்விக்கு உயர் முன்னுரிமை வழங்கப்படும் என்று பாஜக…
Election2024-Public Distribution Scheme | மோடி அரசு - பொது விநியோகத் திட்டம்

2024 நாடாளுமன்றத் தேர்தல்: மக்கள் களம் – “பொது விநியோகத் திட்டம்”

எண்: 13 மோடி அரசாங்கத்தின் பொய்கள், பொய்கள் மேலும் பல பொய்கள் பொது விநியோகத் திட்டம் சொன்னது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 80 கோடி மக்களுக்கு 5 கிலோ இலவச ரேஷன் ஒதுக்கீடு (பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா…
Election2024- Modi- Dalits | மோடி அரசு - தலித்துகள்

2024 நாடாளுமன்றத் தேர்தல்: மக்கள் களம் – “தலித்துகள்”

எண்: 10 மோடி அரசாங்கத்தின் பொய்கள், பொய்கள், மேலும் பல பொய்கள் தலித்துகள் சொன்னது 'அனைவரையும் இணைத்துக் கொள்வோம்’ (சப்கா சாத்), ‘அனைவரின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவோம்’ (சப்கா விகாஸ்) என்ற முழக்கத்தோடு, அனைத்து தரப்பினரும் பாதுகாப்பாக இருக்கும் சூழலை நாட்டில் உருவாக்கியுள்ளதாக…
The destructive act of destabilizing LIC Article in tamil translated By S Veeramani. எல்ஐசியை சீர்குலைத்திடும் நாசகரமான நடவடிக்கை - தமிழில்: ச.வீரமணி

எல்ஐசியை சீர்குலைத்திடும் நாசகரமான நடவடிக்கை – தமிழில்: ச.வீரமணி




மோடி அரசாங்கத்தின் தனியார்மயக் கொள்கையின் மிகவும் மோசமான அம்சங்கள் முன்னுக்கு வந்திருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களில் நிதித்துறையில் தங்கக் கிரீடமாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் என்னும் எல்ஐசி-யின் பங்குகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கான தொடக்கப் பங்கு விற்பனை (IPO-Initial Public Offering) என்னும் நடவடிக்கை வரும் பிப்ரவரி தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் காப்பீட்டுக் கழகம், நாட்டில் ஆயுள் காப்பீட்டுக் கலாச்சாரத்தைப் பரப்பிக்கொண்டிருப்பதில் முன்னோடி நிறுவனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிகரற்ற நிறுவனமாகும். நாட்டின் மக்களுக்கு, குறிப்பாக ஏழை மற்றும் வடுப்படத்தக்க நிலையில் உள்ள மக்களுக்கு, அரசாங்கத்தின் மூலம் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் எதுவும் வலுவானவிதத்தில் வழங்கப்படாத நிலையில் எல்ஐசி மூலமாக மிகவும் விரிவான அளவில் மக்களுக்குக் காப்பீடு அளிக்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

எல்ஐசி தனித்துவமிக்கதோர் அமைப்பாகும். இது, சாமானிய மக்களுக்கு காப்பீடு அளித்திட வகை செய்கிறது. இதன் மூலம் வரும் லாபப் பங்கீடு, இதன் பிரதான முதலீட்டாளராக விளங்கும் அரசாங்கத்திற்கு, வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே அளிக்கப்பட்டு, மீதம் உள்ள 95 சதவீதமும் பாலிசிதாரர்களுக்கே அளிக்கப்படும் விதத்தில் விதிகள் வகுக்கப்பட்டிருக்கிறது. (இப்போது எல்ஐசியின் பங்குகளைத் தனியார்மயத்திற்குத் தள்ளிவிட வேண்டும் என்கிற நோக்கத்துடன், பாலிசிதாரர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த அளவு 90ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது.) இவ்வாறு, இதர காப்பீட்டு நிறுவனங்களைப் போல் அல்லாமல், எல்ஐசி-யின் லாபங்கள் பங்குதாரர்களுக்கு (shareholders) வழங்கப்படாமல், பாலிசிதாரர் களுக்கே (policyholders) ஒதுக்கப்பட்டிருக்கிறது.

எல்ஐசி, 1956இல் அமைக்கப்பட்டதிலிருந்து, ஆயுள் காப்பீடு முழுமையாக வழங்கப்படுவதற்காக அதற்கு நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்களை முழுமையாக அது நிறைவேற்றியிருக்கிறது. குறிப்பாக, கிராமப்புறப் பகுதிகளுக்கும், சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு விரிவான அளவில் அது காப்பீடு வழங்கியிருக்கிறது.

இன்சூரன்ஸ் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதித்த பின்னரும் கூட, எல்ஐசி நிறுவனம் ஆயுள் இன்சூரன்ஸ் வர்த்தகத்தில் தன் ஆதிக்க நிலையைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. 2020-21ஆம் ஆண்டில் ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசிகள் வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக, எல்ஐசியின் சந்தைப் பங்கு என்பது அனைத்து நிறுவனங்களும் பெற்றுள்ள ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசிகளில், எல்ஐசி மட்டும் அநேகமாக நான்கில் மூன்று பங்கு பாலிசிகளைப் பெற்றிருக்கிறது. எல்ஐசி 40 கோடி பாலிசிதாரர்களைப் பெற்று, 3.03 லட்சம் கோடி ரூபாய் பிரிமியம் வருமானத்தை ஈட்டியிருக்கிறது. அது துவக்கப்பட்டதிலிருந்து, அரசாங்கத்திற்கு டிவிடிண்ட் தொகையாக 28,695 கோடி ரூபாய் அளித்திருக்கிறது. மேலும் அது வங்கிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு முதலீடுகளைச் செய்திருக்கிறது. மாநிலங்களில் அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும், சமூக நலத்திட்டங்களுக்காகவும் மிகப்பெரிய அளவில் பங்களிப்புகளைச் செய்திருக்கிறது. இவ்வாறு அது அளித்துள்ள பங்களிப்புகள், 2020-21ஆம் ஆண்டில் சுமார் 26,322 கோடி ரூபாய்களாகும்.

இவ்வாறு அனைத்து விதங்களிலும் நிகரற்று விளங்கும் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தை இந்திய மற்றும் அந்நிய தனியார் முதலீட்டாளர்களுக்குத் திறந்துவிட ஒன்றிய அரசாங்கம் முன்வந்திருக்கிறது. இவ்வாறு எல்ஐசியைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்காக 2021-22ஆம் ஆண்டு நிதிச் சட்டமுன்வடிவின் மூலமாக எல்ஐசி சட்டத்திற்குத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அரசாங்கம், எல்ஐசியில் உள்ள தன் பங்குகளை அடுத்த பத்தாண்டுகளில் தனியாருக்குத் தாரை வார்த்திடும் விதத்தில் நீர்த்துப்போகச் செய்வதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறது. இப்போது முதல்கட்டமாக அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் அரசாங்கத்தின் பங்குகள் 75 சதவீதத்திற்குக் குறைக்கப்படும் என்றும், அதன்பின்னர் அரசாங்கம் எல்ஐசியில் தன் பங்ககுகள் 51 சதவீதமாக இருந்திடும் என்றும் அறிவித்திருக்கிறது. இது எல்ஐசியின் முகத்தோற்றத்தையே கடுமையாக மாற்றியமைத்திடும். இதில் முதலீடு செய்திடும் இந்திய மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் எல்ஐசி தற்போது அரசமைப்புச்சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு (directive principles of the Constitution) உட்பட்டு மேற்கொண்டுவரும் சமூக நலத் திட்டங்களை ஓரங்கட்டச் செய்வதற்கு நிர்ப்பந்தங்களை அளித்திடுவார்கள்.

பொதுத்துறை மற்றும் பொதுச் சேவைகள் மீதான மக்கள் ஆணையம் (The People’s Commission on Public Sector and Public Services), எல்ஐசி பங்கு விற்பனை குறித்து தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எல்ஐசி பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவு, சமூகத்தில் அனுகூலமற்ற பிரிவினருக்கு எல்ஐசி அளித்துவரும் பங்களிப்பில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். பல லட்சக்கணக்கான அதன் சிறிய பாலிசிதாரர்கள் ஆற்றி வரும் முக்கிய பங்கினை நீர்த்துப்போகச் செய்திடும், லாபம் ஈட்டும் பணக்கார முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக மாறிடும். இம்முடிவானது மறைமுகமாக, இது மிகப்பெரிய அளவிலான குடும்ப சேமிப்புகளை அந்நிய மற்றும் தனியார் முதலீட்டாளர்களுக்கு, முட்டாள்தனமாக முறைமாற்றிவிடுவதையே காட்டுகிறது.”

எல்ஐசி பங்கு விற்பனை தொடர்பாக மதிப்பீட்டுமுறை (valuation procedure), எவரும் புரிந்துகொள்ளமுடியாத விதத்தில் தெளிவின்றி இருக்கிறது. எல்ஐசியின் மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாய் என்றும் அதன் உட்பொதிக்கப்பட்ட மதிப்பு (embedded value) நான்கு லட்சம் கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டிருப்பது, முற்றிலும் குறைந்த மதிப்பீடாகும். இவ்வாறுதான் இந்த அரசாங்கத்தால் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள் குறைத்து மதிப்பிடப்பட்டு, தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு எல்ஐசி பங்கு விற்பனை என்பது தனியார் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு எல்ஐசி பணத்தை அப்படியே முழுமையாக அள்ளிவழங்கிடும் ஒரு நடவடிக்கை என்று மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதில் உள்ள ஊழல், சமீபத்தில் ஒன்றிய அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறையின் (Department of Scientific and industrial Research) கீழ் இயங்கிவந்த பொதுத்துறை நிறுவனமான சிஇஎல் எனப்படும் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL-Central Electronics Limited) நிறுவனம் விற்பனை செய்யப்பட்டதில் அப்பட்டமாகத் தெரிந்தது. சிஇஎல் நிறுவனம், நந்த்லால் ஃபைனான்ஸ் அண்ட் லீசிங் பிரைவேட் லிமிடெட் (Messrs.Nandlal Finance and Leasing Private Limited) என்னும் தனியார் நிறுவனத்திற்கு வெறும் 210 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. சிஇஎல் நிறுவனமானது, சோலார் செல்கள் (solar cells), சோலார் இயந்திரங்கள் (solar plants), ரயில்வே சமிக்ஞை அமைப்புமுறைகள் (railway signaling systems) மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு பொருள்கள் போன்று மின்னணுத்துறையில் மிகவும் முக்கியமான பொருள்களை உற்பத்தி செய்துவந்த முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்த நிறுவனம் இந்தத்துறையில் எவ்விதமான அனுபவமுமில்லாத, இரண்டகமான கடந்தகால வரலாற்றைக்கொண்டுள்ள ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு விற்கப்பட்டிருக்கிறது. சிஇஎல் நிறுவனத்திற்குச் சொந்தமான 50 ஏக்கர் நிலத்தின் சந்தை மதிப்பே தற்போது 440 கோடி ரூபாய்களாகும். இந்நிறுவனம் 2021 நிதியாண்டில் 124 கோடி ரூபாய்கள் மொத்த லாபம் ஈட்டியிருந்தது. இவ்வாறு அரசாங்கத்திற்கு லாபத்தை அள்ளித்தந்த நிறுவனத்தை அரசாங்கம் அடிமாட்ட விலைக்கு விற்க முன்வந்திருப்பது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பலமாகக் கூக்குரல் எழுந்ததை அடுத்து அரசாங்கம் இப்போது விற்பனையைச் சற்றே ஒத்திவைத்திட நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

மோடி அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களையும், நாட்டின் சொத்துக்களையும் இந்திய மற்றும் அந்நிய கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க முன்வந்திருக்கும் திட்டமானது நாட்டின் பொருளாதார இறையாண்மையை அரிக்கச் செய்திடும் நாசகரமான நடவடிக்கையாகும், சமூக மற்றும் பொருளாதார சமத்துவம் தொடர்பாக அரசமைப்புச்சட்டத்தில் உள்ள வழிகாட்டும் நெறிமுறைகளை (Directive Principles of the Constitution) சீர்குலைத்திடும் நடவடிக்கையாகும், கடந்த பல ஆண்டுகளாக மக்களால் கட்டி எழுப்பப்பட்ட நாட்டின் வளங்களை இந்திய மற்றும் அந்நிய கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதற்கு வழியேற்படுத்தித்தரும் நடவடிக்கையாகும்.

எல்ஐசி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சீர்குலைத்திடும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு நாடு சூறையாடப்படுவதைத் தடுத்திட நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக மற்றும் நாட்டுப்பற்றுகொண்ட சக்திகளும் விரிவான அளவில் அணிதிரளவேண்டியது அவசியத் தேவையாகும். எல்ஐசி, பொது இன்சூரன்ஸ் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்கள் அரசின் இத்தகைய தனியார்மயத்திற்கு பொதுத்துறை நிறுவனங்களைத் தாரைவார்த்திடும் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டப்பாதையில் இறங்கி இருக்கிறார்கள். இவர்களின் போராட்டம் மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்கள்-ஊழியர்களாலும் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தின் ஓர் அங்கமாக மாறிட வேண்டும்.

மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் கூட்டுமேடை வரும் பிப்ரவரி 23-24 தேதிகளில் நடத்திடவிருக்கும் இரண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் இந்தப் போராட்டத்தில் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்திடும்.

நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

New plan to save the earth Article by Sajeev Kumar புவியைக் காக்க புதிய திட்டம் - சஜீவ் குமார்

புவியைக் காக்க புதிய திட்டம் – சஜீவ் குமார்




பிடல் காஸ்ட்ரோ ஒருமுறை பத்திரிக்கையாளரிடம் கேட்டார்,”நீங்கள் சோசலிசத்தின் தோல்வி பற்றி கேட்கிறீர்கள், ஆனால் முதலாளித்துவத்தின் வெற்றியை உங்களால் கூற இயலுமா?”.

ஏற்கனவே நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்த முதலாளித்துவம் இன்று கோவிட் பெருந்தொற்று காரணம் மேலும் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது. உலகில் உள்ள மாந்தர்களில் 237 கோடி பேர் உணவுக்கு திண்டாடும் நிலையில் உள்ளனர். இவர்கள் வளர்ச்சி இல்லாத நாட்டு மக்கள் மட்டுமல்ல வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களும் அடங்குவர்.(கட்டுரையாளர்)

நிலைமை இப்படி இருக்க உலகளாவிய பல்பரிமாண வறுமைக் குறியீடு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) அக்டோபர் 2021 ல் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அது பெரும்பாலானோர் கவனத்தை ஈர்க்காமலேயே போனது. அதில் இனம், சாதி, பாலினம் ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளின் முகமூடி அவிழ்த்தல் என்ற உப தலைப்பில் கூறப்பட்டுள்ளது மிகுந்த கவனத்திற்குரியது. இன்று சர்வதேச வறுமைக்கோடு என்பதைவிட (அதாவது ஒருநாள் 1.90 அமேரிக்க டாலர் வருவாய்) இந்த பல்பரிமாண வறுமை அளவீடு என்பது துல்லியமானது.

உடல் நலம் (ஊட்டச்சத்து, சிசு மரணம்), கல்வி (பள்ளி செல்லும் காலம், பள்ளி வருகை), வாழ்க்கைத் தரம் (சமையல் எரிவாயு பயன்பாடு, சுகாதாரம், தண்ணீர், மின்சாரம், வீடு, சொத்து) ஆகிய 3 அச்சுகளில் 10 குறிகாட்டிகள் மூலம் பல்பரிமாண வறுமை அளவிடப்படுகிறது. 109 நாடுகளில் 590 கோடி மக்களின் வாழ்வியல் சூழலிலிருந்து பல்பரிமாண வறுமை பற்றிய ஆய்வை இந்த குழு மேற்கொண்டது. அதில் அவர்கள் கண்டறிந்தது உலகில் 130 கோடி பேர் (ஐந்தில் ஒருவர்) பல்பரிமாண வறுமையில் வாழ்கின்றனர்.

* அதில் 64.4  கோடி அதாவது ஏறக்குறைய பாதி பேர் 18 வயதுக்கும் குறைவான குழந்தைகள்.
* அதில் 85% பேர் சகாரா கீழ்மை (sub-Sahara) ஆப்பிரிக்காவில் உள்ளனர்.
* 100 கோடி பேர் சுவாசக் கோளாறு உண்டாக்கும் விறகு போன்றவை பயன்படுத்தி சமைக்கின்றனர், சுகாதாரமற்ற கழிப்பிடம் மற்றும் தரமற்ற வீடுகளிளை பயன்படுத்துகின்றனர்.
* 56.8 கோடி பேர் குடிநீருக்காக 30 நிமிடங்களுக்கு மேல் நடக்க வேண்டியுள்ளது.
* பல்பரிமாண வறுமை கொண்ட 78.8 கோடி பேர் உள்ள குடும்பங்களில் குறைந்தது ஒருவராவது ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவராக இருக்கின்றனர்.
* இத்தகைய வறுமையில் வாழ்பவர்களில் கிட்டத்தட்ட  66% பேர் வாழும் குடும்பங்களில் ஒருவர் கூட குறைந்தது 6 வருடங்கள் கல்விச்சாலை செல்லாதவர்களாக உள்ளனர்.
* 67.8 கோடி பேருக்கு மின்சார வசதி இல்லை.
* 55 கோடி பேருக்கு  வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, கணிப்பொறி, விலங்கு பூட்டிய வண்டி, மிதிவண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் குளிர்சாதன பெட்டி போன்ற எட்டு வகை சொத்தில் ஏழும் இல்லாதவர்களாக உள்ளனர்.

அறுதி எண்ணிக்கை பார்க்கும்போது UNDP அறிக்கையில் உள்ளது குறைவாக தோன்றலாம். உதாரணம் உலக வங்கி 2019-ல் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் உலக மக்கள் தொகையில் 90% பேருக்கு மின்சார வசதி உள்ளது. (அதாவது அன்றைய மக்கட்தொகை படி 76.7 கோடி பேருக்கு மின் வசதி இல்லை-கட்டுரையாளர்). அதேபோல 2020-ல் நடந்த ஆய்வில் 350 கோடி பேருக்கு மின் வசதி இல்லை என்கிறது. ஆனால் UNDP அறிக்கையோ 67.8 கோடி பேருக்கு மட்டுமே மின் வசதி இல்லை என்று சொல்கிறது. அறுதி எண்ணிக்கை குறைவு என்றாலும் UNDP அறிக்கை தரும் செய்தி மிகவும் அதிர்ச்சி தரக்கூடியது, அது என்னவெனில், நாள் தோறும் ஏற்றத்தாழ்வு வளர்ந்துவரும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முதல் முறையாக UNDP ஏற்றத்தாழ்வுகள் நுட்பமான விஷயங்களில் கவனத்தை குவித்து -இனம், சாதி படிநிலைகள் மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. சமத்துவமற்ற சமூக அடுக்குகள், மரபுவழி வந்த பண்டைய பழமைவாத பாரம்பரியம் போன்ற மனித சுயமரியாதையை தாக்குதலுக்கு உள்ளாக்கும் மோசமான விஷயங்கள் வேறு எதுவும் இருக்க முடியாது. 41 நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் பல்பரிமாண வறுமை என்பது சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களை மிக மோசமாக பாதிக்கிறது என்று UNDP அறிக்கை கூறுகிறது. உதாரணமாக இந்தியாவில் பட்டியல் சாதி/ பட்டியல் இன மக்களை வறுமை மற்றும் பாகுபாடு அதிகமாக பாதிக்கிறது, அது அவர்களின் ஏழ்மையை மேலும் பூதாகரமாக்குகிறது.

பல்பரிமாண வறுமைக்கு உள்ளாகும் 6-ல் 5 பேர் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள். 2010 புள்ளிவிவரப்படி ஒவ்வொரு வருடமும் மருத்துவ செலவு காரணமாக 6.3 கோடி இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படுகின்றனர் (அதாவது ஒரு நொடிக்கு 2  இந்தியர்). பெருந்தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை கூடியிருக்க வாய்ப்பு உள்ளது ஆனால் சரியான தகவுகள் சேகரிப்பது கடினமானதாக உள்ளது. பட்டியல் சாதி பட்டியல் இன மக்கள் பெரும்பாலும் மருத்துவ சுகாதார கட்டமைப்புகளுக்கு வெளியே உள்ளதால் பெருந்தொற்று இச்சமூகங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்ற வருடம் இலத்தின் அமேரிக்கா நாடுகளின் பொலிவாரியன் கூட்டமைப்பு மற்றும் மக்களின் வர்த்தக ஒப்பந்தம் (ALBA- TCP) ஆகியவற்றின் பொதுச்செயலாளர் சாச்சா லோரண்டியின் வேண்டுகோளுக்கிணங்க, முக்கண்டம் (Tricontinental) சமூக ஆய்வு  நிறுவனம் மற்றும் காரகாசின்(வெனிசுலா) சைமன் போலிவார் நிறுவனம்  மற்றும் உலகளாவிய 26 ஆய்வு நிறுவனங்கள் உதவியுடன் சமகால நெருக்கடிகளைப் பற்றி சர்வதேச கலந்துரையாடலை துவங்கப்பட்டது. அதன் விளைவுதான் “புவியை காக்க ஒரு திட்டம்”.

இரண்டு வகையான உரைகள், ஒன்று,  உலக பொருளாதார  மன்றம் முதல் அனைவர்நலம் உள்ளடக்கிய முதலாளித்துவ சபை வரை உள்ள பிற்போக்கு தாராளவாத அறிவு ஜிவிகள், மற்றொன்று, தொழிற்சங்க கோரிக்கைகள், இடதுசாரி அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் ஆகியவற்றின் உரைகளை கூர்மையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் பின்னதில் இருந்து எடுத்த தகவல்கள் முன்னதின் குறைபாடுகளை புரிந்துகொள்ள உதவியது. உதாரணம், பழைமைவாத, தாராளவாத உரைகள் பெருந்தொற்று காலத்தில்  முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்த வளர்ந்த நாடுகளின் வங்கிகள் 16 டிரில்லியன் ( 16 லட்சம் கோடி) அமேரிக்க டாலர்களை பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடாமல் நிதி துறை நிறுவனங்களையும் தொழில் நிறுவனங்களையும் காப்பாற்ற பயன்படுத்தியுள்ளதை கண்டுகொள்வதில்லை. இந்த நிதி மிகச்சிறப்பான பொது சுகாதாரத்துக்காகவோ அல்லது படிம எரிபொருளுக்கு மாற்றான மாசு அற்ற பசுமை ஆற்றல்களை உருவாக்கும் முதலீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். 

இந்த திட்டம் ‘ஜனநாயகமும் உலக அமைப்பும்’ என்பதில் துவங்கி “டிஜிட்டல் உலகம்” வரை 12 முக்கிய அம்சங்களை விவாதிக்கிறது. அதில் கல்வி பற்றிய பகுதியின் பரிந்துரைகள் பின்வருமாறு உள்ளது.

  1. பொதுப்பள்ளி மூலம் கல்வி தனியார்மயமாவதையும், கல்வி சரக்காக மாறுவதையும் தடுத்தல்.
  2. கல்வியாளர்களை கல்வி நிறுவனங்களின் நிர்வாக பொறுப்பில் அமர்ந்துதல்.
  3. அடித்தட்டு மக்களை பயிற்சி மூலம் ஆசிரியர்களாக உத்திரவாதப்படுத்துதல்.
  4. மின்சார இணைப்பு மற்றும் எண்மின் (digital) இடைவெளிகளை நிரப்புதல்.
  5. பொதுத்துறை மூலம் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அதிவேக இணைய வசதிகளை உருவாக்குதல்.
  6. பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வியின் அனைத்து கூறுகள் மற்றும் கல்விக்கு அப்பாற்பட்ட செயல்முறைகள் ஆகியவற்றுக்கான வாய்ப்பு உருவாக்குதல்.
  7. மாணவர்கள் உயர்கல்விகளில் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பங்கேற்க வழிகள் உருவாக்குதல்.
  8. கல்வியை வாழ்நாள் முழுதும் பெறவேண்டிய வாய்ப்பை வாழ்க்கையின் அனைத்து நிலையில் உள்ள மனிதர்களும் பெற ஏற்பாடு செய்தல். அதன் மூலம் கல்வி என்பது வேலைவாய்ப்பு பெறுவதற்கு என்பது மாறி அது அறிவு மற்றும் சமூகத்தின் நீடித்த வளர்ச்சியை உருவாக்கும் சமூகக் கட்டுமானத்துக்கு உறுதுணையாவதாக இருக்கவேண்டும்.
  9. அனைத்து வயதுள்ள தொழிலாளர்களும் அவரவர் துறையில் உள்ள உயர்கல்வி மற்றும் தொழில் கல்விக்கு மானியம் அளித்தல்.
  10. உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்வியும் அவரவர் பேசு மொழியில் பயில்வதற்கான வாய்ப்புகளை மொழிபெயர்ப்பு மூலம் பெறுவதற்கு அரசாங்கம் உத்திரவாதப்படுத்துதல்.
  11. தொழில், விவசாயம் மற்றும் சேவை துறைக்கு தேவைப்படும் கூட்டுறவு மேலாண்மை கல்வி நிலையங்களை நிறுவுதல்.

 “புவியைக் காக்கும் திட்டம்” என்பது  1945ல் ஐ.நா. சாசனம் ஏற்படுத்திய கோட்பாடு காரணமாக, இதுவரை 193 நாடுகள் கையெழுத்திட்ட, அனைத்து நாடுகளும் கட்டுப்படவேண்டிய நிபந்தனையும் கொண்டதன் அடிப்படையில் உருவானதாகும். இந்த திட்டம் உருவானதன் நோக்கம் இதை விவாதப்பொருளாக்கி விரிவாக்க வேண்டும் என்பதே. இந்த திட்டம் நிகழ்காலத்தை விமர்சிப்பது மட்டுமன்றி எதிர்கால சமூகத்தை நிகழ்காலத்தில் கட்டமைபதற்கான முயற்சியும் ஆகும்.

(தோழர் விஜய் பிரசாத் டிரைகாண்டினண்டல் தளத்தில் எழுதிய கட்டுரையை தழுவி எழுதப்பட்டது)