Writer Nandini Sukumaran's novel Mayankuvadeno Maduravane won the prize எழுத்தாளர் நந்தினி சுகுமாரனின் மயங்குவதேனோ மதுரவனே நாவல் பரிசு பெற்றது

எழுத்தாளர் நந்தினி சுகுமாரனின் மயங்குவதேனோ மதுரவனே நாவல் பரிசு பெற்றது




எழுத்தாளர் நந்தினி சுகுமாரன் எழுதிய மயங்குவதேனோ மதுரவனே திருமதி ரங்கம்மாள் தமிழ் நாவல் பரிசு ரூ.50,000/

கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் 18ம் ஆண்டு அமரர் உயர்திரு சீனிவாசன் அவர்களால் கலை மற்றும் இலக்கிய முன்னேற்றத்திற்காக தோற்றுவிக்கப்பட்டது.
இலக்கிய முன்னேற்றத்திற்காக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் வெளியாகும் சிறந்த தமிழ் நாவலுக்கு ரொக்கப்பரிசினை திருமதி ரங்கம்மாள் பரிசு என்ற பெயரில் வழங்கி வருகிறது.

2019 – 2020ம் ஆண்டுகளில் வெளியான 37 நாவல்கள் இவ்வாண்டு பரிசுப் போட்டிக்கு வந்தன. அவற்றுள் எழுத்தாளர் நந்தினி சுகுமாரன் எழுதிய “மயங்குவதேனோ மதுரவனே” என்ற நாவல் நோஷன் பிரஸ் மூலம் சொந்த வெளியீடு, 2021ம் ஆண்டு திருமதி ரங்கம்மாள் பரிசுக்கு தகுதியென நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்டு எழுத்தாளர் நந்தினி சுகுமாரன் அவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.50,000/- வழங்கப்பட்டது.

மயங்குவதேனோ மதுரவனே – ஒரு மதிப்பீடு

பொதுவாகவே மனித உணர்வுகள் விசித்திரமானது. எதையும் தனக்கு மட்டும் தான் என எண்ணும் சுயநலம் கொண்டது. விதிவிலக்காய் மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்கும் மனிதம் நிறைந்த மனிதர்களும் இருப்பதுண்டு. அவர்கள் சிலநேரங்களில் சூழ்நிலைக் கைதிகளாகவும் மாறுவதுண்டு. எதிர்பார்புகள் ஏமாற்றங்களாகவும், ஆசைகள் நிராசைகளாகவும், ஏக்கங்கள் தேடல்களாகவும் மாறும் பொழுது எந்த ஒரு மனிதனும் தடம்மாறி போவதுண்டு அவனது வாழ்க்கையும் வழி மாறுவதுண்டு இக்கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் இதை போல் சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். அதை அவர்கள் எவ்வாறு கையாண்டு, தன் வாழ்க்கைக்கான பாதையை அமைக்கின்றனர் என்பதைச் சில செவிவழி அறிந்த உண்மை செய்திகளோடு எனது கற்பனையையும் இணைத்து சொல்ல முயன்றிருக்கிறேன்.