Posted inPoetry
செ.புனிதஜோதியின் கவிதை
அருள்
********
துக்கம்
நெஞ்சடைக்கும் வேளையில்
உன்னை வந்துசேர
என்னை வந்து சேர்கிறாயா என்ன?
புரியாத புதிராய்
வலம் வந்துகொண்டிருக்கிறேன்…
உன் அஷ்டோத்திரத்தை
நாதொடுத்து மாலையாக்கி
சமர்பிக்கிறேன்…
பொதியை இறக்கிவிட்ட
கழுதை போல பெருமூச்சுவிட்டுக்கொள்கிறேன்
உன்சன்னதியில்…
உணர்வின் கொதிகலன்
அடிபிரதட்சணையைப் போல்
மெல்ல,மெல்ல முன்நோக்கி நகர்த்துகிறது..
உன் முன்நின்று
தீபாராதனை போல்
என் மனநிலையை ஆரத்தியாக்குகிறேன்..
கண்சிமிட்டி
உன்னிலிருந்து உருண்டுவிழுகிறது
மலர்..
உன் கருணையில்
நனையும்
மரமாய் மெய்மறந்து நிற்கின்றேன்
செ.புனிதஜோதி