புதிய கரகாட்டக்காரன் கட்டுரை – இரமணன்

புதிய கரகாட்டக்காரன் கட்டுரை – இரமணன்





புதிய கரகாட்டக்காரன் காமெடி

கவுண்டமணி (பொதுமக்கள்) – டே நான் உன்கிட்ட என்ன செய்ய சொன்னேன்?

செந்தில் (தொலைதொடர்புத் துறை) – அலைக்கற்றையை ஏலம் விடச் சொன்னீங்க.

க.ம (பொ.ம) – விட்டயா?

செந்தில்(தொ.தொ.து) – விட்டேனே!

க.ம – எப்ப விட்ட?

செந்தில் – 2012,13,14,16 இத்தனை வருசம் விட்டேன்.

க.ம – அதுக்கு ரேட்ட பிக்ஸ் செஞ்சியா?

செந்தில் – செஞ்சேன் அண்ணே

க.ம – அவங்க அதைக் கட்டினாங்களா?

செந்தில் – கட்டலையே!

க.ம – இவ்வளவு பெரிய தொகைய எத நம்பிடா அவங்களுக்குக் கொடுத்த?

செந்தில் – பேங்க் கியாரண்டி கொடுத்தாங்க அண்ணே.

க.ம – சரி பரவாயில்ல. இத்தன வருசமா கட்டாம இருந்தா நீ சும்மா இருந்தியா?

செந்தில் – போங்கண்ணே. உங்களுக்கு எப்பவுமே என் மேல் நம்பிக்கையே இல்ல.

க.ம – கோவிச்சாக்காதடா. மக்கள் வரிப்பணம் இல்ல?. நம்மள நம்பித்தானே
ஒப்டைச்சிருக்காங்க. சரி. நீ என்ன செஞ்சன்னு சொல்லு.

செந்தில் – கேட்டு கேட்டுப் பார்த்தேன். அப்பறமா கேஸ் போட்டேன்.

க.ம – தீர்ப்பு யாருக்கு சாதகமா வந்தது?

செந்தில் – நமக்குத் தான் அண்ணே. இப்பவாவது என் புத்திசாலித்தனத்தை ஒத்துக்குங்க.

க.ம – டே நீ என்கூட பழகிட்டு இவ்வளவு அறிவு கூட இல்லைன்னா அப்புறம் என்னைத்தாண்டா

காறி துப்புவாங்க. சரி தீர்ப்பு என்னன்னு சொல்லு.

செந்தில் – நிலுவைத் தொகைய உடனே கட்ட சொன்னாங்க.

க.ம – அப்புறம் என்னடா பணத்த வாங்கி கல்லாவில போடா வேண்டியதுதானே?

செந்தில் – இல்லைண்ணே வருமானமே இல்லன்னு ஆதித்திய பிர்லா, சுனில் மிட்டல் எல்லாரும்

வந்து அழுதாங்க.

க.ம – உடனே உனக்கு இரக்கம் பொத்துகிட்டு வந்திருச்சா?

செந்தில் – என்னண்ணே இவ்வளவு பெரிய மனுசங்க நிலுவைய கட்ட பணம் இல்லைன்னு
சொல்றாங்க. ஏதாவது செய்ய வேண்டாமா?

க.ம – என்ன செஞ்ச?

செந்தில் – நாலு வருஷம் கழிச்சு கட்டுங்கன்னு சொன்னேன்.

க.ம – அப்பா 2025இல பணம் மொத்தமும் வந்திருமா?

செந்தில் – என்னண்ணே நீங்க புரியாம பேசறீங்க? கட்டறதுக்கு அதென்ன பத்தா நூறா?
15000,10000 கோடிண்ணே.

க.ம – அதினால?

செந்தில் – பத்து தவணையா கட்ட சொன்னேன்

க.ம – ஆமாண்டா நாங்க கரெண்டு பில் கட்டலன்னா பீஸ் கட்டாய பிடுங்குவீங்க. பொன் பில்
கட்டலைன்னா கனெக்க்ஷன கட் பண்ணுவீங்க. டிராக்டர் டியூ கட்டலைன்னா வீட்டுக்கு
முன்னாடி வந்து சத்தம் போடுவீங்க. பள்ளிக்கூட பீஸ் கட்ட முடியலைன்னா சாதி பேர சொல்லி
திட்டுவீங்க. டாட்டா பிர்லான்னா பத்து வருஷம் கழிச்சும் கட்ட மாட்டங்க. நாலு வருஷம் தள்ளி
அப்புறம் இன்னம் பத்து தவணை கொடுப்பீங்க.

க.ம – அதெல்லாம் போகட்டும். முதல்ல என்ன சொன்ன

செந்தில் – பேன்க் கியாரண்டி வாங்கியிருக்கேன்னு சொன்னேன்.

க.ம – அத வெச்சு இந்த நிலுவை தொகைய வசூலிக்க வேண்டியதுதானே?

செந்தில் – அததான் திருப்பிக் கொடுத்திட்டேனே?

க.ம – என்னாது? திருப்பிக் கொடுத்திட்டியா? ஏண்டா?

செந்தில் – அவங்ககிட்டிருந்துதான் இப்ப நிலுவை ஒண்ணும் இல்லையே?

க.ம – டேய் நான் உன்ன கொலை பண்ணறதுக்கு முன்ன ஒழுங்கா சொல்லு.
அவங்க ஏலம் எடுத்தாங்களா?

செந்தில் – எடுத்தாங்கண்ணே.

க.ம – எவ்வளவுக்கு எடுத்தாங்க?

செந்தில் – அதான் சொன்னேனே 15000,10000 கோடின்னு எடுத்தாங்க.

க.ம – எது பேர்ல இவ்வளவு பெரிய தொகைக்கு கொடுத்த?

செந்தில் – உங்களுக்கு ரொம்ப மறதி வந்திருச்சு.பேன்க் கியாரண்டி பேர்ல கொடுத்தேன்.

க.ம – வருசா வருஷம் பேசின தொகைய கட்டினாங்களா?

செந்தில் – இல்லையே?

க.ம – நீ என்ன செஞ்சிருக்கணும்?

செந்தில் – பேன்க் கியாரண்டிய வச்சு வசூல் பண்ணியிருக்கணும்.

க.ம – இவ்வளவு தெளிவா இருக்கே. அப்புறம் ஏன் அத செய்யல?

செந்தில் – அதான் சொன்னேனே பெரிய மனுசங்க வந்து அழுதாங்க. நிலுவைய தள்ளி வச்சு பத்து
தவணையில கட்டுங்கன்னு சொன்னேன்.

க.ம- சரி தொலைஞ்சு போ. அந்த பேன்க் கியாரண்டிய ஏண்டா திருப்பிக் கொடுத்தே?

செந்தில் – இப்பதான் அவங்ககிட்டிருந்து நமக்கு வர வேண்டிய தவணை எதுவும் இல்லையே.

கவுண்டமணி அவனை அடிக்கப் போகிறார். மற்றவர்கள் வந்து தடுக்கிறார்கள்.

கோவை சரளா – இந்தா நீ எது பேர்ல அலைக்கற்றை கொடுத்த?

செந்தில் – பேன்க் கியாரண்டி பேர்ல கொடுத்தேன்.

கோ.ச – அவங்க தவணைய கட்டினாகளா?

செந்தில் – கட்டல

கோ.ச – நீ என்ன செஞ்சிருக்கணும் ?

செந்தில் -பேன்க் கியாரண்டிய வச்சு வசூல் பண்ணியிருக்கணும்.

க.ம – இவ்வளவு தெளிவா இருக்கே. அப்புறம் ஏன் அத செய்யல?

செந்தில் – அதான் சொன்னேனே பெரிய மனுசங்க வந்து அழுதாங்க. நிலுவைய தள்ளி வச்சு பத்து
தவணையில கட்டுங்கன்னு சொன்னேன்.

கோ.ச – சரி தொலைஞ்சு போ. அந்த பேன்க் கியாரண்டிய ஏண்டா திருப்பிக் கொடுத்தே?

செந்தில் – இப்பதான் அவங்ககிட்டிருந்து நமக்கு வரவேண்டிய தவணை எதுவும் இல்லையே
இப்ப எல்லோரும் சேர்ந்து செந்திலை அடிக்கப் போகிறார்கள்.

லைவ் மின்ட் செய்தியாளர் குல்வீன் அலாக் அவர்களின் கட்டுரையைப் படித்தததில் தோன்றியது)

வோடபோன், ஏர்டேல்