குஜராத் திரைக்குப் பின்னால் (Gujarat Thiraikku Pinaal)

ஆர்.பி.ஸ்ரீகுமார் எழுதிய “குஜராத் திரைக்குப் பின்னால்” நூல் அறிமுகம்

குஜராத் மாநில காவல்துறை, உளவுப் பிரிவில் கூடுதல் காவல்துறைத் தலைவராக இருந்த இந்நூலின் ஆசிரியர் ஆர்.பி. ஸ்ரீகுமார் I.P.S அவர்கள் குஜராத்தில் 2002ல் மதவெறிக் கும்பலால் இஸ்லாமிய சொந்தங்கள் நரவேட்டை ஆடப்பட்ட போது களத்தில் நின்று குஜராத் காவல்துறை, அரசு ஆகிய…
Vasikkatha Puthakathin Vasani (வாசிக்காத புத்தகத்தின் வாசனை)

கொ.மா.கோ. இளங்கோ எழுதிய “வாசிக்காத புத்தகத்தின் வாசனை” நூல் அறிமுகம்

மரங்கள் வெட்டிக் கடத்துதல் என்பது எங்கும் காணும் செய்தியாகவே இருந்து வருகிறது பல பெரும்புள்ளிகளின் துணையோடு. ஆனால் அப்படி காட்டை அழித்து சுற்றுச்சூழலை சீரழிக்கும் கடத்தல் கும்பல்களிடையே புத்தகத்தின் வாசனையை முகர்ந்த ஒரு குழந்தையின் கதைதான் இந்நூல். ஆம் ஆப்பிரிக்க மண்ணில்…
ஓங்கில் கூட்ட புத்தக வெளியீட்டு விழா சிறப்புரை-இரா.சண்முகசாமி

ஓங்கில் கூட்ட புத்தக வெளியீட்டு விழா சிறப்புரை-இரா.சண்முகசாமி



ஓங்கில் கூட்டத் திருவிழா!

அறிவியல் பூர்வமான சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் ஆதிவள்ளியப்பன், பஞ்சுமிட்டாய் பிரபு, இ.பா.சிந்தன், உதயசங்கர், நாராயணி சுப்பிரமணியன், ஹேமபிரபா, நா.பெரியசாமி, ராஜேஷ் கனகராஜன், திவ்யா பிரபு ஆகியோரின் 10 புத்தகங்களை 04.04.2023 அன்று ஓங்கில் கூட்டம், பாரதி புத்தகாலயம், சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணைந்து வெளியிட்டனர்.

தோழர் Udhaya Sankar அவர்கள் தலைமையேற்க, தோழர் Vishnupuram Saravanan அவர்கள் ஒருங்கிணைக்க, நூல்கள் பற்றி எழுத்தாளர்கள் நாராயணி சுப்பிரமணியன், சாந்த சீலா, ஜோசப் பிரபாகர், வெற்றிச்செழியன், விஷ்ணுபுரம் சரவணன் ஆகியோர் கருத்துரைகள் வழங்க தோழர் க.நாகராஜன் அவர்கள் நன்றி கூறினார்கள்.

யதார்த்தமாக தோழர் Chinthan Ep மற்றும் Prabhu Rajendran அவர்களின் முகநூல் பதிவை பார்க்க நேரிட்டது “சென்னை பாரதி புத்தகாலயம் அரும்பு நிலையத்தில் 10 புத்தகங்கள் வெளியீட்டு விழா” என்று.

ஏதோ பக்கத்து டீக்கடையில் டீ சாப்பிட்டு வரலாம் என்பது போல புதுவையிலிருந்து புறப்பட்டு மாலை சரியாக 6.15 மணிக்கு சென்னை சென்றேன். விழா சரியாக 6.30 மணிக்கு தொடங்கியது. ஆளுமைகளின் நூல்களை ஆளுமைகள் பலர் வெளியிட குழந்தைகள் அவர்களைக் குழந்தைகள் என்று சொல்லமுடியாது அவ்வளவு சிறப்பாகவும், பொறுமையாகவும் அமர்ந்து நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூல்களை பெற்று நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர். அவ்வப்போது திரும்பித் திரும்பி புன்னகைப் பூக்களை உதிர்த்துக்கொண்டே இருந்தனர்.

சரியாக இரவு 8.40 மணிக்கு நிகழ்ச்சி முடிவுற்றது. மறுபடியும் டீ குடித்து வீட்டுக்குத் திரும்புவது போல் அவசரமாக எழும்பூர் ரயில் நிலையத்தில் பாண்டியன் ரயிலைப் பிடித்து ஊர் வந்து சேர்ந்தேன் இரவு 2.30 மணிக்கு.

வாசிப்பு மனிதனை பல தளங்களுக்கு பரந்து விரிந்து அழைத்துச் செல்லும் என்பதை புத்தகங்கள் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. வாசிப்பு உலகில் நுழைந்தவர்களுக்கு அது நன்குத் தெரியும். பறவை கூட்டுக்குத் திரும்பும் நேரம் போக மற்ற நேரங்களில் வானில் சிறகை விரித்து பறப்பது போல புத்தகங்களின் பக்கங்களை புரட்டுபவர்களுக்கு வானம் வசப்படுவது நன்குத் தெரியும். அந்த வாசிப்பு வான்வெளியை தமிழக மக்களுக்கு நன்கு திறந்து காண்பிக்கும் பணியை #பாரதிபுத்தகாலயம் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை மிகச்சிறப்பாக செய்து வருகிறது. அதில் ஒரு அடுத்தக்கட்ட நகர்வுதான் #ஓங்கில்கூட்டம் வழியாக சிறுவர், பதின்பருவ குழந்தைகளுக்கான நூல்களை வழங்கும் ஆகச்சிறந்த எழுத்தாளர்கள் கொண்ட வெளியீடு தான் மேற்கண்ட நிகழ்வின் பாத்திரம்.

04.04.2023 நிகழ்வு மிகச்சிறப்பு. அதற்காக பாடுபட்ட அத்தனை தோழர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளையும், நெஞ்சம் நிறைந்த நன்றியினையும் உரித்தாக்ககிறேன்.

வாசிப்போம்!
உலகை நேசிப்போம் தோழர்களே!!

Roy Moxham in The Oru Ilaiyin Varalaaru book review R. Shanmugasamy. Book day website is Branch of Bharathi Puthakalayam

நூல் அறிமுகம்: *’தே’ ஒரு இலையின் வரலாறு* – இரா.சண்முகசாமி

'தே' ஒரு இலையின் வரலாறு ஆசிரியர் : ராய் மாக்ஸம் தமிழில் : சிறில் அலெக்ஸ் வெளியீடு : கிழக்கு பதிப்பகம் ஆண்டு : 2021 முதல் பதிப்பு விலை : ரூ 325 பக்கம் : 272 தேயிலை இது…
Writer Devikapuram Siva in Meghnad Saha the story of a revolutionary scientist book review

நூல் அறிமுகம்: *மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை* – இரா. சண்முகசாமி

மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை ஆசிரியர் : தேவிகாபுரம் சிவா வெளியீடு : பாரதி புத்தகாலயம் ஆண்டு : 2015 முதல் பதிப்பு விலை: ரூ.230 பக்கம் : 288 புத்தகத்தை பெற : 044 24332924 அல்லது https://thamizhbooks.com/product/meghnad-saha-devikapuram-siva/…
RSS Facts To Know Book Review

நூல் அறிமுகம்: ஆர்.எஸ்.எஸ் அறிய வேண்டிய உண்மைகள் – இரா.சண்முகசாமி 

நூல்: ஆர்.எஸ்.எஸ் அறிய வேண்டிய  உண்மைகள் ஆசிரியர் : மஞ்சை வசந்தன் வெளியீடு :  திராவிடர் கழக (இயக்க) வெளியீடு ஆண்டு : 2019 இரண்டாம் பதிப்பு விலை : ரூ. 90 பக்கம் : 96 நூலை பெற :…