அடர் மழை (கவிதை) - இராஜேஷ் சங்கரப்பிள்ளை

அடர் மழை (கவிதை) – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

பல மனிதர்கள் பல வாசனைகள் ஒன்றுக்கொன்று திணறடிக்க... முகம் சுளிக்காமல் சுவைத்துக் கொண்டிருந்தேன் ... ஆம்.... சக பயணியாய். அமைதியான மனிதர்கள் . முழுக்க தெம்பற்ற தேகம் கை காட்டுகிறார். பேருந்தும் நிற்கிறது. திரும்பவும் கை காட்டி போ.... என்கிறார். அடுத்த…
Father -Poem | அப்பா - கவிதை

ச.சக்தி கவிதைகள்

வரைதல்  யானையையும் காட்டையும் ஒருசேர  வரைந்து பார்க்கிறேன் வரைவதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகியே  நிற்கிறது காட்டையும் தன் தாயையும் ‌ இழந்த அந்த குட்டி யானை , நிறம் மரத்தடி நிழலில் படரும் வெயிலின் நிழலை வரைந்து வரைந்து அழிக்கிறேன் தொடர்ந்து கொண்டே…
n.k.thuraivan kavithaikal ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள்

1. காற்றின் விசையில் மெல்ல வீசும் பூந்தூரல் அதில் நனைவதற்குப் பெருவிருப்பம் எனக்கு எப்போதும் சிறுதூரல் வந்தால் போதும் நசநசவென பெய்கிறது என்று பலரும் வெறுப்பாய்ச் சபித்துப் பேசுவர். சட்டென வேகமெடுத்து ஆலங்கட்டிகள் வீசி பெய்திடும் மழை குழந்தைகளைச் சிரிக்க வைத்து…
ayyanar edadi kavithaikal அய்யனார் ஈடாடி கவிதைகள்

அய்யனார் ஈடாடி கவிதைகள்

  1.நம்பிக்கை அதிகாலைச் சூரியன் உதயத்தின் மடியில் கசாப்புக்கடையில் முட்டி மோதுகிறது வெள்ளாட்டங்கெடாக்கள் கொடி நரம்புகள் அறுபட்டு கொதிக்கும் உதிரம் திரண்டோட தலை கீழாகத் தொங்கும் தாய் ஆட்டினைப் பார்த்து. பசிக்கும் வயிற்றில் பூவரசம் பூக்களை இலையோடு மெல்ல கடிக்கிறது தூக்குச்சட்டியோடு…

தங்கேஸ் கவிதைகள்

ஞாபகமாக.. பசும் புல்லைப் போல வளர்ந்து செழித்திருக்கிறது நம் நேசம் இதே நிலவை மீண்டும் பார்க்க ஆயிரம் வருடங்கள் கூட ஆகலாம் நாம் அப்போது பறவைகளாக மாறியிருப்போம் அல்லது பேசும் நட்சத்திரங்களாக இப்போது நம் நேசத்தை கருவுற்றிருக்கும் அப்போது இருக்குமோ என்னவோ?…
ச.சக்தி : கவிதை sa.sakthi : kavithai

ச.சக்தி: கவிதை


நினைவு மழை…!!!
மழையில்
நனையும் பொழுதெல்லாம் நினைவுகளில் முளைக்கிறது
சிறு வயதில்
நனையாதே யென்று
கையை பிடித்து
உள்ளே அழைத்து
தன் மாராப்பு துணியால் ‌
தலை துவட்டி விட்ட
அம்மாவின் பழைய
நினைவின் துளிகள்.
மழையில் நனையும் பொழுதெல்லாம் நினைவுகளில் முளைக்கிறது சிறு வயதில் நனையாதே யென்று கையை பிடித்து உள்ளே அழைத்து தன் மாராப்பு துணியால் ‌ தலை துவட்டி விட்ட அம்மாவின் பழைய நினைவின் துளிகள் ,

நினைவு மழை கவிதை கவிஞர் சக்தி ninaivu mazhai kavitha sakthi


மழையில்
நனையும் பொழுதெல்லாம் நினைவுகளில் முளைக்கிறது
சிறு வயதில்
நனையாதே யென்று
கையை பிடித்து
உள்ளே அழைத்து
தன் மாராப்பு துணியால் ‌
தலை துவட்டி விட்ட
அம்மாவின் பழைய
நினைவின் துளிகள் ,
மாரியம்மன் திருக்கல்யாணம் கவிதை — பேரா. முனைவர் எ. பாவலன்

மாரியம்மன் திருக்கல்யாணம் கவிதை — பேரா. முனைவர் எ. பாவலன்மாரியம்மன் திருக்கல்யாணம்

                          

 எங்க ஊரு மாரியாத்தாளுக்கு

ஆடி மாச(ம்) மூணாவது செவ்வா

காப்புக் கட்டி கெடா வெட்டி

செவ்வாவோட செவ்வா

எட்டா நாளு கூவு ஊத்தி

தேரு ஈத்து திருவிழா

பண்ணுவது வழக்கம்!

 

மாரியாத்தா தா(ன்)

எங்க ஊரு கட்டிக் காப்பாத்தறவ

அதனால பிறாத்தன காரங்களா(ம்)

தலா ஒரு பொறுப்பு ஏத்துக்குவாங்க

 

அப்படித்தா(ன்)

எங்க பக்கத்து வூட்டுலகீறவரு

எட்டு நாளைக்கு

கெரகம் சிங்காரிக்கிர வேலையும்

அதுக்கு பூவு பூஜை எல்லா

செலவையும் ஏத்துக்கினாரு.

 

எட்டா நாளு

கூவு ஊத்துருது முன்னால

வயனியன் பம்பவுடுக்க காரங்களும்,

எல்லா(ம்) சாமிகளையும்

வர்ணிச்சி ஆத்தா மேல் இட்டுக்கட்டி

பாடுவா(னு)ங்க.

 

அப்பதா(ன்) எங்கீருக்கிற

சாமியும் ஓடியாரு(ம்)

நான் சேத்து காளி செல்லிடா…

நான் கன்னிமாடா…

நான் நாகாத்தம்மாடா…

நான் ஊத்துக்கோட்டைகாரிடானு…

சொல்லுங்க.

 

எல்லார்கிட்டடையும்

கூவூத்த சம்மதமா ஆத்தான்னு

வயனியனும்

பூசாரி பெரியண்ணனும் கேப்பாங்க.

 

எல்லோரு(ம்)

எனக்கு மனப்பூர்வ சம்மதடா

எனக்கு முழு திருப்திடா

எனக்கு பண்ண இந்த திருக்கல்யாணத்துல

சம்மதம்……  சம்மதம்….. முழுசம்மதடா…

ஊத்துடா

இந்த ஊர் மக்களுக்கு கூவன்னுங்க….

கடைசியா அவுங்கவுங்க

வாய்க்கு வந்த வார்த்தையே

சட்டு புட்டுன்னு சொல்லிட்டு

போய்டுங்க!

 

அப்பதா(ன்) பார்வதி அக்கா

அவுங்க வூட்டுக்காரருக்கு

சோறு போட்டுக்குனு

இருக்கும்போது

வயனிய பம்ப உடுக்க

மைக்ல ஊர் முழுவதும் கேக்குனும்னு

ஸ்பீக்கர் பாக்ஸ் சத்தத்தில்

அடிச்சுக்குனே இருந்தா(ன்).

 

பார்வதி அக்கா

சோறு போடும் போது தலையைச்

சோங்கி… சோங்கி ஆடிக்கினே

சோறு போட்டுச்சு.

 

என்னாடி ஆச்சின்னாரு

அவங்க வூட்டுக்காரு

ம்ம்ம்….. ம்ம்ம்………ம்ம்ம்…….

(உறுமல் சத்தம்)

 

உடுக்கை அடிக்குறாங்களே!

தெரியலையா(டா)னுச்சு

 

அவுங்க வூட்டுக்காருக்கு

வந்துச்சு கோவம்

உட்டாரு ஒன்னு

அப்படியே ஒதுங்கிச்சி சாமி(!)

 

அவர் சாப்பிட்டு வெளியே போனாரு

 

சத்தம் போட்டுக்குனே

அங்கிருந்து ஆடிக்கினே வந்துச்சு

அய்யய்யோ…..

மாரியாத்தா வரா…..

வழிவுடுங்கோன்னு ஒதுங்கிட்டாங்க.

 

எனக்கு கொஞ்சம் கூட

சம்பந்தம் இல்லை டா….

என்னைய யாருனா கேட்டீங்களான்னுச்சு(?)

கூவூத்தன பிறகு மாரியாத்தா!

 

கூடியிருந்த இளவட்ட எல்லா(ம்)

பார்வதி அக்கா

உங்க வீட்டுக்காரு

குடிச்சிட்டு வராருனுடாங்க.

 

சட்டுனு அதுவும்

ஊர்ல மழை வர வைக்க மாட்டே(ன்)

ஊரக் கட்டிக் காப்பாத்த மாட்டே(ன்)

மூணு தலைச்ச புள்ளைகள

காவு வாங்குவேன்னு

சொல்லிட்டு மலயேறிடிச்சி.

 

எங்க ஆயா…

அதெ எங்க

அப்பா பெத்த கிழுவி.

அங்க இங்க போவாதன்னும்

ஏன்னு கேட்டா?

நான் தலைச்ச புள்ளைன்னும்.

 

ஆனாலும்….

ஒவ்வொரு ஆடிமாசமும்

ஊர்ல மாரியம்மனுக்கு

காப்பு கட்டி கூழ் ஊற்றும் போது….

 

சொரணை கெட்ட தனமாக

வருவது பார்வதி அக்காவா?

இல்ல….

மாரியாத்தாவா?

அப்படின்னு எங்களால

இன்னிக்கு வரைக்கும் சொல்ல முடியல!!

                                 

                                              – பேரா. முனைவர் எ. பாவலன்

 

சரகு கவிதைகள்

சரகு கவிதைகள்
தீயாக்கல்
***************
பிணைத்துக் கொண்ட மேகங்கள் ..
வெள்ளிப் பாலாய்க்
கொட்டிய மழை..
அடங்காத அன்பின் ஊற்றால்..
ஆகாசந்தொட்ட நெடுமரங்கள்..
பச்சைக்குப் பட்டா?!..
பட்டுக்குப் பச்சையா?!..
பிதுங்கி நின்றன
வியப்பின் விழிகள்..

ஓசோனின் சேலை வைத்து..
மனிதர்கள் சூதாட ..
துரியோதனன்கள் சபை கூட..
துச்சாதனன்கள் உருவத் தொடங்க..
காட்டின் வயிறு எரிகிறது..

அணைக்க முயல்க…

பணமாக்கல்
***************
ஏழையின் வீட்டில் ..
வயிறு எரியாமல் ..
விறகு எறிந்தால் ..
பணக்காரன் பதறுவது … ஏன்?

– சரகு

மு. சரவணக்குமார்,
ஈரோடை.
9488076070.