Posted inPoetry
அனுபவம் கவிதை – ராஜூ ஆரோக்கியசாமி
கடந்து போகட்டுமென
சிலவற்றை விடுகிறேன்
அம்பாக்கும் சிலரை
புன்னகைத்தே ஜெயிக்கிறேன்
என் வாழ்க்கை
சிறந்த புத்தகம்
அட்டைகளை விடுத்து
உள்ளே அனுபவங்கள்
வெற்றுப் பாறைதான்
அதிலொரு செடி
வார்த்தைகளின் வெறுமையில்
ஆன்மஞானம் கவிதையில்
யாருக்கும் வாய்க்காதது
எனக்கு வாய்த்துள்ளது
வாழ்க்கையை காதலிப்பது
காதலித்ததை கவிதையாக்குவது
– ராஜூ ஆரோக்கியசாமி
