கலர் சட்டை சிறுகதை – சக்தி ராணி

கலர் சட்டை சிறுகதை – சக்தி ராணி




புதுத்துணி எடுக்க கடைக்குப் போறோம் இன்னிக்கு… சீக்கிரம் கிளம்பு அகல்யா.

என்ன…இப்போ சொல்றீங்க… எவ்ளோ வேலை இருக்கு
தெரியுமா???அதெல்லாம் செய்யாம எப்படி வாரது…

அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்… இப்போ கிளம்பு…
ம்ம்ம்…கிளம்புறேன். புது ட்ரெஸ் எடுக்கனா… வேண்டாம் என்பேனா…

யார் யாருக்கு… என்னென்ன ட்ரெஸ் எடுக்கலாம்…யோசித்தவாறே கிளம்பினாள் அகல்யா…

கார் வாசலில் காத்திருந்தது. ராமுவையும், அகல்யாவும்
அழைத்துச்செல்ல…

இந்த ஊர்லயே… பெரிய கடை இது தான் அகல்யா…
உனக்கு.உன் அக்கா தங்கைக்கு…அம்மா அப்பாக்கு…என்னென்ன ட்ரெஸ் வேணுமோ எல்லாமே இங்கேயே கிடைக்கும்…

எல்லாமே… ஒரே கடையிலயா… என அண்ணாந்து கடையின் அழகை சுற்றிப்பார்த்தாள்.
ஏன்னா… அகல்யா வளர்ந்தது கிராமத்துல. ஒரு ட்ரெஸ் எடுக்க ஒன்பது மைல் தூரம் நடந்தே பயணம் செய்யனும். அதும் கடைக்காரங்க எடுத்துப் போடும் இரண்டு… மூன்று உடைகளில் ஒன்றைத் தேர்வு செய்யனும்.

இப்போ… கடல் மாதிரி ஒரு கடை… ஏகப்பட்ட ட்ரெஸ் பார்த்ததும் அகல்யாவின் கண்கள் விரிந்தும்… புன்னகையின் உறைவிடமாய் முகமும் காட்சியளித்தன…

தன்னுடைய… குடும்பத்துல உள்ள எல்லாருக்கும் எடுத்துக்கவா… என்றே மெது குரலில் கேட்டாள்.

என்ன கேள்வி… இது உனக்கு பிடிச்சது எல்லாமே எடுத்துக்கோனு தான் சொன்னேன் என்றான் ராம்..
ம்ம்ம்…. என்றே… கடையில் உள்ள அனைத்து மாடல்களையும் ஆராய ஆரம்பிச்சுட்டா…

ஒவ்வொரு தளமும் ஏறி இறங்கி தன் அம்மா… அக்காவிற்கு… சேலை… தங்கைகளுக்கு சுடிதார்… என ஒவ்வொன்றும் அவள் விருப்பமாய் எடுத்துக்கொண்டாள்.

எல்லாருக்கும் எடுத்தாச்சா… என்ற ராம்..

அப்பாக்கு என்றே யோசிச்சான்.

எங்க அப்பா… என் சின்ன வயசுல இருந்தே வெள்ளை வேட்டி… வெள்ளை சட்டை மட்டும் தான்… அதனால் எடுக்குறது ரொம்ப ஈஸி என்றாள்…

ஏன் அகல்யா… மாமா கலர் சட்டை போடுறதில்ல…

ம்ம்… அதற்கான காரணம் தெரியல… அது கெத்தா இருக்கும் எங்க அப்பாக்கு… அதனால நாங்க ஏன்னு கேள்வி கேட்டதும் இல்ல…

எப்போதும் போல இல்லாம… இந்த முறை கலரா சட்டை எடுக்கலாம் மாமாக்கு…

இல்லைங்க… அப்பா அத விருப்ப மாட்டார்

அவர் சொன்னாரா… உங்கிட்ட.

இல்லைல நான் செலக்ட் பண்றேன்… நீ கொஞ்சம் அமைதியா இரு… என்றே தேடத் துவங்கினான்.
ஒவ்வொரு சட்டை பார்க்கும் போது அவன் கற்பனையில் எப்படி இருக்கும்னு நினைச்சுப் பார்த்துப்பான்.

ஆனா… அகல்யா மனசு குழப்பமா இருந்தது. அப்பா இது ஏத்துப்பாரா. வேண்டாம் சொல்லி மனசை கஷ்டப்பட விடுவாரா… னு

கடைசியா… ஒரு பச்சை நிற சட்டையை எடுத்து இது பில் போடுங்க என்றான் ராம்.

என்னங்க… அப்பா…. இத.

அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். எல்லாருக்கும்‌ எடுத்தாச்சா… வா என்றான்.

எல்லாத்துக்கும் பில் செட்டில் முடிச்சுட்டு புன்னகையோடு பார்த்தான். ஆனா அகல்யா முகத்துல அவ்ளோ சந்தோஷம் இல்லை.

அப்பா என்ன சொல்லுவாரோ… பயம் தான் மனசை தின்னுக்கிட்டு இருந்தது…

சின்ன வயசுல இருந்தே அப்பா என்ன நினைக்குறாறோ… அது தான் செய்யனும் சொல்வார். இப்போ… புதுசா ஏதாவது செய்தா… அப்பாக்கு …
என்றே பின்னோக்கி காலம் அசைபோட ஆரம்பிச்சது.

ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அப்படித்தான் ஒரு பொங்கல் பண்டிகைக்கு… சந்தனக்கலர்ல சட்டை எடுத்ததுக்கு… இது என்ன கண்டிராவி என் தோற்றத்தை மாத்த நினைக்கிறீங்களோ னு… சண்டையைத் தூக்கி எறிந்தார்…

இன்னிக்கு என்ன நடக்கப்போகுதோனு எதிர்கால பயத்தை தூக்கி சுமந்துகிட்டாள்.

காரின் வேகம் சற்று நேரத்தில் நடுவப்பட்டி கிராமத்தை அடைந்தது… வழி நெடுகிலும் வயல்வெளி…

ஆலமரம் அங்கங்க பெருசுகளின் சிறு உறக்கம் என பார்க்க அழகாகத்தான் இருந்தது.

இங்க தான் நாங்க விளையாடுவோம்… இந்த ஸ்கூல்ல தான் நான் படிச்சேன். இதோ… இந்த இடம் தான்னு ஒவ்வொரு இடத்திற்கும் விளக்கம் கொடுத்துட்டே இருந்தா அகல்யா.

சற்று நேரத்தில் வீட்டை அடைந்தார்கள்.

யாரு… நம்ம கிருஷ்ணமூர்த்தி மவ அகல்யா வா வந்துருக்குறது.

ஆமா. பாட்டி நான் தான்… நல்லாருக்கீங்களா… என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே.

அகல்யாவின்… தங்கையும்… அக்காவும் அவளை கட்டி
அணைத்துக்கொண்டார்கள்.

எப்படி இருக்க, நான் நல்லாருக்கேன்… என்றே வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.

என்னம்மா… அக்கா பார்த்ததும் மச்சான் மறந்துடுச்சா என்றே குரலை உயர்த்தினான் ராம்.

ஐயோ… அப்படிலாம் இல்ல மச்சான்… மன்னிச்சிருங்க. ரொம்ப நாள் கழிச்சு பார்க்குறோம் அதான்.

ரொம்ப நாளாளா… நாலு நாள் தான் ஆகுது. அதுக்குள்ளயா என்றான்.
சாரி மச்சான். சும்மா தான் விளையாண்டேன். நீங்க அக்காவ பாருங்க.

ஆமா… மாமா எங்க…?
காட்டுக்கு வேலைக்கு போயிருக்காங்க.
இப்போ வந்துடுவாங்க. உட்காருங்க மச்சான் என்றே பாயை விரித்துக்கூறினாள்.

ஏம்மா… லஷ்மி யாரு வந்துருக்கா என்றே ஒரு குரல் கதவைத்திறந்தது.

அப்பா… நாங்க தான் என்றே எழுந்து நின்றாள் அகல்யா.

என்னம்மா கண்ணு எப்போ வந்த… வருவனு நினைக்கல.

மாப்பிள்ளை சௌவுக்கியமா என்று அருகில் அமர்ந்தார்.

ம்ம்… நல்லாருக்கேன் மாமா. இன்னிக்கு ஆபிஸ் லீவ். அதான் ஒரு எட்டு இங்க பார்த்துட்டு போலாம் வந்தேன். அப்போ தான் அகல்யாவும் சந்தோஷமா இருப்பா.

சரியா சொன்னீங்க மாப்பிள்ளை பெண் பிள்ளைகளுக்கு பொறந்த வீடு சொர்க்கம் தான்.

சரி அகல்யா… வாங்கிட்டு வந்து ட்ரெஸ் எல்லாத்துக்கும் கொடு.

ஆமாங்க,பேசுறதுல எல்லாம் மறந்துட்டேன்.

இந்தா லட்சுமி உனக்கு… கௌசி… இது உனக்கு… இது அம்மாக்கு என ஒவ்வொன்றாய் எடுத்துக்கொடுத்தாள்.

அப்பா…. இது… இது… உங்களுக்கு என்றே கை நீட்டினாள்.

எனக்கு எதுக்கு கழுத இதெல்லாம்.

இல்லப்பா… இவங்க எடுத்துக்க சொன்னாங்க… அதான்…

இருக்கட்டும் மாமா நான் தான் எடுக்க சொன்னேன். வீட்டுக்கு வரும் போது வெறும் கையா வாரது எப்படி… அதான்.

லட்சுமியும். கௌசியும் ட்ரெஸ் ஸ கண்ணாடி முன் வைச்சு வைச்சு அழகு பார்த்தாங்க.

அக்கா சூப்பர் செலக்சன். இங்க இது மாதிரிலாம் கிடைக்காதுக்கா என்றே.

சரி சாப்பிட ஏதாவது கொடுத்தீங்களா என்றார்.

இப்ப தான் மோர் கொடுத்தேன். சாப்பாடு ரெடி பண்றேன் என்றாள் ஜெயா உள்ளிருந்தே.

மாமா… ட்ரெஸ் பிரிச்சுப்பாருங்க என்றான் ராம்.

எங்கோ இருந்த அகல்யா விழிகள் அப்பா பக்கம் திசை திரும்பியது.

ம்ம்… பார்க்குறேன் மாப்பிள்ளை.

என்ன கிருஷ்ணமூர்த்தி மவ வந்துருக்கா போல என்றே விருஷ் மாமா உள்வந்தார்.

மாமா நல்லாருக்கீங்களா?நல்ல நேரத்துல வந்தீங்க என்றே வரவேற்றாள்.

ஆமா புள்ள காட்டுக்கு போறேன்.நீ வந்துருக்க சொன்னாங்க. பார்த்துட்டு போகலாம் வந்தேன். நல்லாருகீங்கள்ள என்றே பொதுவாய் பேசி கிளம்பினார்.

சாப்பாடு ரெடி. கை… கால் கழுவிட்டு வாங்க.. சாப்பிடலாம் எல்லாரும் என்றாள்.

கிருஷ்ணமூர்த்தி மவ வாங்கிக்கொடுத்த ட்ரெஸ்ஸ கீழ் கூட வைக்காம… ரூமுக்குள்ள எடுத்துட்டுப்போனார்.

எல்லாரும் சாப்பிட அமர்ந்தார்கள்.

மாமா எங்க காணோம். மாமா‌ சாப்பிட வாங்க என்றே அழைத்தான் ராம்.

பரிமாறப்பட்ட உணவுக்குள் கை வைப்பதற்கு முன் கிருஷ்ணமூர்த்தி கதவைத்திறந்து வந்தார்.

சாப்பிடுங்க மாப்பிள்ளை… சாப்பிடு அகல்யா மா… நல்லா சாப்பிடனும்னு கொழம்பு… கறி கூட்டு அவர் கையால‌எடுத்து வைத்தார்.

அப்பா… என்றே… அகல்யா விழி முழுதும் அப்பா மீதே இருந்தது.

சட்டை சூப்பரா இருக்குல எனக்கு ஜெயா…
என் பொண்ணு, மாப்பிள்ளை ‌செலக்சன் சும்மாவா
என்றே புன்னகைத்தார்.

– சக்தி ராணி

காணாமல் போன புன்னகை சிறுகதை – சக்தி ராணி

காணாமல் போன புன்னகை சிறுகதை – சக்தி ராணி




‘லேட் ஆச்சே ஆபிஸ் போகணுமே…’ என்று அவசர அவசரமாகப் படுக்கையில் இருந்து எழுந்தான் ராம்.

அலாரம் வைத்த கைபேசியைத் தேடினான். படுக்கையில் இல்லை. அதைத் தேடுவதற்கும் அவனுக்கு நேரம் இல்லை. பல் துலக்கிக் கொண்டே பாத்ரூமிற்குள் ஓடினான்.

.” பிரியா…டவல் எடுத்துட்டு வா” என்று குரல் கொடுக்க, “வருகிறேன்…வருகிறேன்” என்று மெதுவாக வந்தாள்.

“லேட்…லேட்….எல்லாம் லேட்…ஏன்டி இப்படி பண்ற, சீக்கிரம் எழுப்பியிருந்தா நான் இப்படி ஓட வேண்டியிருக்குமா?” என்றான்.

“உங்களுக்குத் தான் உங்க கைப்பேசி இருக்கே அப்புறம் என்ன நான் ? அது தான் எப்போதும் உங்களோட பேசிக்கிட்டே இருக்கும்”.

“அதைத் தான்டி காணோம்…ரவிக்கு போன் பண்ணி கார் கொண்டு வரச் சொல்லணும். அப்போ தான் ஆபிஸ்க்கு போக முடியும்…மீட்டிங் வேற கரெக்ட் ஆ ஆரம்பிச்சுருவாங்க” என்றபடி தேடத் துவங்கினான்.

“எங்கு தேடியும் கைப்பேசி காணவில்லை. கார் ஸ்டாண்ட்ல போய் பார்த்துக்கிறேன் கார் இருக்குதானு…ம்ம்..” என்று ஓட ஆரம்பித்தான்.

சுட்டெரிக்கும் வெயிலில் வேகமாக ஓடினான். வியர்வை சட்டையை நனைத்தது. எதையும் பொருட்படுத்தவில்லை. காரில் ஏறி, ‘அம்பத்தூர் செல்ல வேண்டும்’ என்றான்.

டிரைவரும், ‘சரி சார்!’ என்று புறப்பட்டார். கொஞ்ச தூரம் பயணித்ததுமே போக்குவரத்து நெரிசலில் கார் புகுந்தது.

“என்ன சார்… இப்படி நெரிசல்ல போறீங்க. வேற வழி இல்லையா…நான் சீக்கிரமா போகணும்” என்றான்.

“எல்லா பாதையும் இப்படி தான் சார் இருக்கு. இருங்க சார்… சீக்கிரம் போய்டலாம்” என்றார் அவர்.

கோபத்தின் உச்சியில் இருந்தாலும் மனதின் படபடப்பு அடங்கவே இல்லை… ‘போக்குவரத்து நெரிசலும் குறையவில்லை. கையில் போன் இல்லையே… எந்த தகவலும் சொல்லவும் முடியல. என்ன நடக்குனு தெரிஞ்சுக்கவும் முடியல…’ என முணுமுணுத்துக்கொண்டே அமர்ந்திருந்தான்.

ஓரளவு நெரிசல் குறைய…ஆபிஸ் வந்தடைந்தான். காருக்குப் பணம் கொடுத்துவிட்டு வேக வேகமாக ஓடினான். அவன் கதவைத் திறக்கும் நேரம் மீட்டிங் முடிந்திருந்தது.

‘ஐயோ…’ எனத் தலையில் கை வைத்தவனாய் தரையில் அமர்ந்தான்…மிகுந்த கோபத்துடன் அலுவலக உரிமையாளர் “அப்படியே…வீட்டிற்கு போய்விடு.. ஒரு வேலை கொடுத்தா அதைப் பண்ண வழியில்லை” என்று கடிந்து கொண்டார்.

எவ்வளவோ மன்னிப்பு கேட்டும் உரிமையாளர் மனம் கொஞ்சமும் இறங்கவில்லை…மனம் நொந்தவனாய் வெளியில் வருகிறான்.

கைப்பேசி இல்லாமல் எவ்வளவு நஷ்டம் என நினைத்துக்கொண்டே நடக்க ஆரம்பிக்கிறான். கஷ்டம்…அவமானம் மனதிற்குள் இருந்தாலும் தனிமையில் அவனை உணர அவனுக்கே நேரம் கிடைத்தது போல் உணர்கிறான்.

லேசான புன்னகை…அருகேயிருக்கும் டீ கடையில் அமர்ந்து டீ குடிக்கிறான்…அங்குள்ள தொலைக்காட்சியில் கிரிக்கெட் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது.

தோனியின் இரசிகனாய் சிறுவயதில் பார்ப்பது போல் உணர்வுப் பூர்வமாய் பார்க்கத் துவங்குகிறான்.

கைப்பேசியில் அலுவல் நேரங்களில் மறைத்து மறைத்து ஸ்கோர் மட்டும் தான் பார்த்தோம் நேத்து வரை…இன்னைக்கு இப்படி பார்க்கமுடியுது என்று எண்ணியவாறே புன்னகைத்தான்.

மேட்ச் முழுவதும் பார்த்துவிட்டு சிறுவன் போல துள்ளிக்குதித்து வீட்டிற்கு வந்தான்.

“என்னங்க அதுக்குள்ள ஆபிஸ் முடிஞ்சா…?” என்று மனைவி கேட்க நடந்ததைக் கூறுகிறான்.

நம்மை எதுவும் குற்றம் சொல்வாரோ என்ற எண்ணத்தில் பிரியா அவனைப் பார்க்க… அதைப் புரிந்து கொண்டவனாய்… வா.. நாம சேர்ந்து சமைக்கலாம். காய்கறிலாம் நானே கட் பண்றேன் என்று செய்ய ஆரம்பித்தான்…

ஆச்சர்யமாய்ப் பார்த்த பிரியா, “நீங்களா இது…முகம் கொடுத்து பேசுறதுக்கே நேரம் இல்லைன்னு சொல்வீங்க. இப்ப என்னனா , எனக்கு உதவிலாம் செய்றீங்க!” எனக் கேட்டாள்.

“எல்லாம் அப்படித்தான்” என்றான்.

இருவரும் புன்னகையும், உரையாடலுமாய் சமைத்துக் கொண்டிருக்கும் போது கைப்பேசியின் சிணுங்கல் எங்கிருந்தோ கேட்க வேகமாய்த் தேடி ஓடினான்.

உரிமையாளரின் அழைப்பு, மீண்டும் உடனே அலுவலகம் வா என்றழைக்க, “கிடைத்து விட்டது கைபேசி. என் புன்னகை தொலைந்து விட்டது” என புறப்பட்டான்.

– சக்தி ராணி

கூட்டாஞ்சோறு சிறுகதை – சக்திராணி

கூட்டாஞ்சோறு சிறுகதை – சக்திராணி




தெருவெல்லாம் எப்போதும் சிறார்களின் கலகலப்பு சப்தம்…
“யாருமே…வீட்டிற்குள்ள விளையாட மாட்டோம்…”
“மண் கலந்த புழுதியோடு தான் எங்க விளையாட்டு ஆரம்பமாகும்…”

எல்லா விளையாட்டும் விளையாடி முடிஞ்ச அப்புறம் பசி வந்த பிறகும்… எல்லாரும் ஒண்ணு சேர்ந்து அவங்க அவங்க வீட்ல செஞ்ச சாப்பாடெல்லாம் வாங்கி வந்து…
ஒண்ணா அமர்ந்து… கதையெல்லாம் பேசி முடிச்சு சாப்பிட்டு மறுபடியும் விளையாட ஆரம்பிச்சா… நைட்டு தான் வீட்டுக்குள்ளேயே போவோம்…”
என்று தன்னுடைய சின்ன வயது நினைவுகளை தன் மகனுக்கு கதையாக கூறினாள் அகல்யா…

“அம்மா கதை கேட்கவே…ஜாலியா இருக்கு…”
இதெல்லாம் என் லைஃப் ல இருந்தா எவ்ளோ ஜாலியா இருக்கும்…

“ஆமாமா…தங்கம்…ஜாலி தான்”

“எனக்கும் ஆசையா இருக்கு…ஆனா…இப்போ…நீ…நான்…அப்பா மட்டும் தான் சேர்ந்து சாப்பிடுறோம்…”
“அப்பப்போ…அப்பா கூட வேலை வேலைன்னு வெளியில போயிடுறாரு…”
“எனக்கு விளையாட ஃப்ரண்ட்ஸ் இல்லை அம்மா…”

“சரி…சரி…யு…டோண்ட் வொர்ரி…ஓ.கே…அம்மா தான் உன் கூடவே இருக்கேனே…”

“ம்ம்ம்…யு ஆனா மை பெஸ்ட் ம்ம்மி…”

இருவரும் புன்னகைத்தே தூங்கச் செல்கின்றனர்.

விழிகள் தூங்கினாலும் அகல்யாவிற்கு தன் மகனின் ஏக்கம் தூங்க விடாமல் தடுத்தது… சூரிய உதயம் வரும் முன்னே… எழுந்து…குளித்து…பையில் தேவையான பொருட்கள் என அத்தனையும் எடுத்து வைத்தாள்…

ராம்…எழுந்திரிடா…சீக்கிரம்…

“என்னம்மா…இவ்வளோ… சீக்கிரம் எழுப்புற…’
“எங்க போறோம்…என்றே பாதி விழிகள் திறந்தும் திறக்காத வாய் கேட்க…”

“உனக்கு ஒரு சர்ப்ரைஸ்…”

‘சர்ப்ரைஸா…என்ன அம்மா… சீக்கிரம் சொல்லு…’

“ கார் வந்துடுச்சு….கண்ணு…வா…வா கிளம்பலாம்…

‘கா…ரா….என்று கேட்பதற்குள் அவனைத்தூக்கி குளிப்பாட்டத் துவங்கினாள்.’

“என்னம்மா…புது ட்ரெஸ் லாம் எடுத்துருக்க…”

“எல்லாமே…உனக்கு தான் டா…வா..வா என்றே அவசரப்படுத்தி கிளம்பினாள்…”
“ஜன்னலோர பயணத்தில் சில்லென்ற காற்றில்…இயற்கை இரசித்தே…இருவருக்குமான பயணத்தில் புறப்பட்டனர்.”

“ஏம்மா…எங்க போறோம்…இப்போதாவது சொல்லேன்…அப்பா கூட வரல நம்ம கூட…”

“அப்பாக்கு…எப்போதும் போல வேலை டா…நேர நாம் எங்க போறோமோ அங்க வந்துருவாரு…

“ம்ம்…ம்ம்…எல்லாம் ஃப்ளான்…பண்ணி தான் நடக்குது… ஓ.கே…ஓகே…” என்றே ஜன்னல் வழி வேடிக்கை பார்க்கத் துவங்கினான்…
சிறிது நேரத்தில் கார் ஓர் இடத்தில் நின்றது…’ ஆர்வமாய் கதவுகளைத் திறந்து வெளியில் வந்தான்…ராம்”

“ அம்மா…இது என்ன இடம்…இங்க நிறையா மரங்கள்…பூக்கள் லாம் இருக்கே…”
‘சூப்பர் மா…நீ…”

“ஆமா..டா…வா…உள்ள‌போலாம்…

உனக்காக நிறைய பேர் வெயிட் பண்றாங்க…”

“எனக்காகவா…அப்போ வா ம்ம்மா…உள்ள போலாம்..”

“கர ஓசை அதிர…ராம்‌ உள்ளே அழைக்கப்பட்டான்…”
‘’வேகமாக நடந்த நடையில் சற்றே தயக்கம்…சுற்றும்…முற்றும் பார்த்துக் கொண்டே நடந்தான்…” அம்மாவின் கரங்களை இறுகப்பற்றினான்…

“அம்மா…இவங்கலாம் யாரு???”

இவங்க…நம்ம பாட்டி…தாத்தா…

“பாட்டி…தாத்தாவா…நிறையா பேர் இருக்காங்க…”

ஆமா…டா…அம்மா நேத்து சொன்னேன்ல…இவங்களும் கூட்டாஞ்சோறு சாப்பிடத்தான் சேர்ந்து இருக்காங்க…

‘என்னம்மா…சொல்ற.

கூட்டாஞ்சோறு சாப்பிடவா…”

ஆமா….இன்ன்க்கு நாம இவங்க கூட சேர்ந்து கூட்டாஞ்சோறு சாப்பிடலாம்…”

“எல்லாரும் சேர்ந்து சாப்பிட போறோமா…ரொம்ப ஹேப்பி மா…என்றே சத்தமாக புன்னகைத்தான்…”
அம்மாவின் கதை போல் அவர்களோடு சேர்ந்து விளையாடி…ஒன்றாக சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்தான்… பொழுதும் விரைவாக ஓடியது…இன்று ராமுக்கு…
நேரமாயிட்டு…

ராம்…கிளம்புவோமா…

வேண்டாம்மா…இங்கேயே இருக்கலாம்…

இன்னொரு நாள்…வருவோம் டா…

விடை பெறும்‌நேரம் கையசைத்தும்…முத்தமிட்டும் பிரியாவிடை அளித்த ராம்…
“காருக்குள்‌ ஏறிய பின்னும்…ஜன்னல் வழியாக அவர்களை இமைக்காமல் பார்த்தான்…”
இந்த இடத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்றே சிந்திக்கும் நொடியில் “முதியோர் இல்லம்”வரவேற்கிறது என்ற பலகை விழிகளில் கடந்து…சிந்தனையைத் தூண்டியது…. கூட்டாஞ்சோறு மகத்துவம் நிறைந்ததென….

– சக்தி ராணி

என் தாய் சுதா பரத்வாஜ் அவர்களை தயவு செய்து விடுதலை செய்யுங்கள் – மாயிஷாவுடன் பிரசன்னா நடத்திய உரையாடல்…(தமிழில் : ராம்)

என் தாய் சுதா பரத்வாஜ் அவர்களை தயவு செய்து விடுதலை செய்யுங்கள் – மாயிஷாவுடன் பிரசன்னா நடத்திய உரையாடல்…(தமிழில் : ராம்)

உங்களிடம் அவரின் குற்றத்திற்கான ஆதாரம் இல்லாத போது, எப்படி அவரை நீங்கள் சிறையில் வைக்க முடியும்? ஆகஸ்ட் 28,2020 அன்றோடு மதிப்புமிக்க வக்கீலும் மனித உரிமை ஆர்வலருமான சுதா பரத்வாஜ் அவர்கள் சிறையில் இரண்டு வருடங்களைக் கழித்திருப்பார்.  எல்கர் பரிஷாத் வழக்கில்…
நாங்கள் ஆன்லைன் கல்விக்கு எதிராகவும் இணைய இடைவெளிக்கு எதிராகவும் இருக்கிறோம் – டிவி சவால் தொடங்கப்பட்ட காரணம் குறித்து இந்திய மாணவர் சங்க தேசிய தலைவர் வி.பி.சானு

நாங்கள் ஆன்லைன் கல்விக்கு எதிராகவும் இணைய இடைவெளிக்கு எதிராகவும் இருக்கிறோம் – டிவி சவால் தொடங்கப்பட்ட காரணம் குறித்து இந்திய மாணவர் சங்க தேசிய தலைவர் வி.பி.சானு

  ஜூன் 4அன்று திரைப்பட இயக்குநர் ஆஷிக் அபு ஐந்து புதிய தொலைக்காட்சி பெட்டிகளை வாங்கினார். ஆனால், அவை ஐந்துமே அவருக்காக அல்ல. மாறாக, அவர் இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் விடுத்திருந்த டிவி challengeக்காக கொடுத்துவிட்டார்.…
வைரஸ் நோய் தொற்றுக்கு எதிரான கேரளத்தின் வெற்றிகர போர் – எழுத்தாளர் பால் சக்கரியா (தமிழில் : ராம்)

வைரஸ் நோய் தொற்றுக்கு எதிரான கேரளத்தின் வெற்றிகர போர் – எழுத்தாளர் பால் சக்கரியா (தமிழில் : ராம்)

        தளராத உறுதி மற்றும் வைராக்கியம் ஆகியவற்றால் வைரஸ் நோய் தொற்றுக்கு எதிரான போரில் கேரள இடது முன்னணி அரசு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. பலகாலமாய் தேவையற்ற அரசியல் சண்டகளாலும், உடனுறைகின்ற அதிகார திமிராலும் மற்றும் பரவலான ஊழலாலும் தவித்துக் கொண்டிருந்த கேரள மாநிலத்திற்கு கோவிட்-19 நோய் தொற்றுக்கான சமீபத்திய ஊக்கம் நிறைந்த செயல்பாடு வேறு எவரையும்…
அரசிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை – பி.சாய்நாத் (தமிழில் ராம்)

அரசிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை – பி.சாய்நாத் (தமிழில் ராம்)

26 மார்ச் வரை நகர்ப்புற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் மூலமாக வரும் சேவைகள் குறைந்த உடன் தான் அவர்கள் மீதான பார்வை  திரும்புகிறது. - பி.சாய்நாத். கோவிட்-19 பெருந்நோய் தொற்று மற்றும் அதன் தொடர்ச்சியான தேசம்…
வியட்நாமும், கேரள மாநிலமும் கோவிட்-19 நோய் தொற்று பரவலை எளிமையாக கட்டுப்படுத்தின – எகனாமிஸ்ட் இதழ் (தமிழில் ராம்)

வியட்நாமும், கேரள மாநிலமும் கோவிட்-19 நோய் தொற்று பரவலை எளிமையாக கட்டுப்படுத்தின – எகனாமிஸ்ட் இதழ் (தமிழில் ராம்)

வியட்நாமும் இந்திய கேரள மாநிலமும் கோவிட்-19 நோய் தொற்று பரவலை எளிமையாக கட்டுப்படுத்தியுள்ளன. அதன் ரகசியம் என்பது விரைந்த திறமையான பொது சுகாதார அமைப்பில் உள்ளது. டெலிபோன் மணி ஒலிக்கையில் போன் எடுக்கிறார் டாக்டர். “வெண்டிலேட்டர்கள் அனைத்தும் பயன்பாட்டில் உள்ளது, இன்னும்…