Reality Poem By Jeyasri Balaji யதார்த்தம் கவிதை - ஜெயஸ்ரீ பாலாஜி

யதார்த்தம் கவிதை – ஜெயஸ்ரீ பாலாஜி

காரணங்கள் பல இருக்கலாம்
இப்போது தான் தோன்றுகிறது

அவர் இறக்கும் போது
தாடியை ஆண்களுக்கும்
தடியைப் பெண்களுக்கும்
கண்ணாடியைச் சமுதாயத்திற்கும்
கொடுத்து விட்டுச் சென்றிருக்கலாம்

வைக்கோம் வீரர் உழைத்தது போதவில்லை
அதற்கு இன்றளவும் சமூகம்
சாட்சியாகத் தான் நிற்கிறது

ஊடகத்தைப் பார்த்து கருத்து பேசியே
காலத்தைத் தீர்ப்பதும்
பொருட்காட்சியைப் போலவே

கடந்து செல்வதும்
இயல்பாகி விட்டது