Karl Marx Frederick Engels The Communist Manifesto (மார்க்ஸ் - எங்கெல்ஸ் பார்வையில் கற்பனா சோசலிஸ்டுகள்)

மார்க்ஸ், எங்கெல்ஸ் பார்வையில் கற்பனா சோசலிஸ்டுகள்  – எஸ்.வி.ராஜதுரை

கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களோ அல்லது மார்க்ஸியத்தில் அக்கறை உள்ளவர்களோ விமர்சனப் பகுப்பாய்வுக் கற்பனாவாத சோசலிசமும்  கம்யூனிசம் பற்றி – குறிப்பாக  சேன் சிமோன் (Saint-Simon), சார்ல்ஸ் ஃ பூரியே (Charles Fourier),  இராபர்ட் ஓவன் (Robert Owen) ஆகியோரைப் பற்றி முதன்…
 அரசும் புரட்சியும் – எஸ்.வி.ராஜதுரை

 அரசும் புரட்சியும் – எஸ்.வி.ராஜதுரை

  லெனினின் நூற்றாண்டு நினைவு போற்றப்படும் இந்த ஆண்டில் அவரிடமிருந்து கம்யூனிஸ்டுகள் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம். அவரது மிகச் சிறந்த படைப்புகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றை இளம் தலைமுறைக் கம்யூனிஸ்டுகளுக்கு அறிமுகப்படுத்துவது கம்யூனிஸ்ட் கட்சிகளின் கடமை. அவர்கள் செய்ய வேண்டிய…
தொடர்:3 நிறவெறிகோடு  உலக குத்துச்சண்டை பட்டயம் - அ.பாக்கியம் thodar:3 niraverikkodu ulaga kuthusandai pattayam -a.bakkiyam

தொடர்:3 நிறவெறிகோடு  உலக குத்துச்சண்டை பட்டயம் – அ.பாக்கியம்

  முகமது அலி குத்துச்சண்டை களத்திற்கு வருவதற்கு முன்பாக அமெரிக்காவில் கருப்பர்கள் விளையாடுவதற்கு தடை இருந்தது. குறிப்பாக ஜிம் க்ரோ சட்டங்கள் (Jim Crow laws) அமலில் இருந்தது. ஜிம் க்ரோ சட்டங்கள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும்…
மகளிர் தின சிறப்பிதழ்: புரட்சியும் பெண்களும் கட்டுரை – பி.சுகந்தி

மகளிர் தின சிறப்பிதழ்: புரட்சியும் பெண்களும் கட்டுரை – பி.சுகந்தி




பி.சுகந்தி
அகில இந்திய துணைச் செயலாளர்,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

பசி, பட்டினி, ஓய்வின்மை இவற்றை எதிர்த்தும், எட்டு மணி நேர வேலை, ஓய்வு, உறக்கம், வாக்குரிமை என்ற கோரிக்கைகளை முன்வைத்தும் பெண்கள் வீதிகளில் இறங்கி வெற்றி பெற்ற நாள் தான் சர்வதேச மகளிர் தினம்.

உலகம் முழுவதிலும் 18-ம் நூற்றாண்டுகளில் தொழில் புரட்சிகள் ஏற்பட்டு ஆண்களுக்கு நிகராய் பெண்களும் தொழிற்சாலைகளில் உழைத்தனர். ஆண்களை விட இன்னும் கூடுதலாக உழைத்தனர். ஆனாலும் அவர்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லை.

10 ,16 மணி நேரம் எந்திரங்களை போல இயங்கிக் கொண்டே இருந்தார்கள். பெண்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க உலகம் முழுவதிலும் பெண்களுக்கான ஒரு தினத்தை கொண்டாட வேண்டும் என ஜெர்மனியைச் சார்ந்த சோஷலிச ஜனநாயக கட்சியின் தலைவர் தோழர். கிளாரா ஜெட்கின் முதன் முதலில் அறிவித்தார்.

1910-ல் கோபன்ஹேகனில் நடைபெற்ற சர்வதேச சோசலிச பெண்கள் மாநாட்டில் 17 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில் உலக மகளிர் தினமாக ஒரு தினம் அறிவிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை அவர் முன்மொழிந்தார். அத்தகைய தீர்மானமே இன்று மார்ச் 8 உலக மகளிர் தினமாக அனுசரிக்கப்படுவதற்கு வழிவகுத்தது.

பெண் விடுதலை சாத்தியம் தானா?

மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டாலும் பெண் விடுதலை உலகமெங்கும் சாத்தியமானதா? எப்போது பெண் விடுதலை சாத்தியப்படும்? பொருளாதார சுதந்திரம் மட்டும் பெண்களுக்கு விடுதலை தந்து விடுமா? முரண்பாடுகள் நிலவும் இந்த சமூகத்தில் அனைத்து பெண்களின் நலன்களும் ஒரே மாதிரியாக இருக்குமா? பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், அரசியல் என அனைத்திலும் பெண்களுக்கு சம உரிமைகள் எப்போது கிடைக்கும்?

இப்படி பல கேள்விகளுக்கு தலைசிறந்த தொழிற்சங்கவாதி அலெக்ஸாண்ட்ரா குலந்தாய் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பதிலளித்து விட்டார். ஆண்களின் உலகைப் போலவே பெண்களின் உலகமும் இரண்டாக பிளவுபட்டுள்ளது. எனவே ஒரு பகுதியினரின் நலன்களும், எதிர்பார்ப்புகளும் மற்ற பகுதியினரிடமிருந்து வேறுபடுகிறது. பெண் விடுதலை என்ற கோஷத்தை முன்வைக்கும் ஒரு பணக்கார பெண்ணும், உழைக்கும் பெண்ணும் எதிர்பார்க்கும் சமூகம் என்பது வேறு வேறானது. உழைக்கும் பெண் சுரண்டலற்ற ஒரு சமூகத்தை எதிர்பார்க்கிறாள். புரட்சிகரமானவர் என்று தன்னை கூறிக் கொள்ளும் ஒரு பெண்ணியவாதி சமூக ,பொருளாதார அமைப்பை மாற்றி அனைவருக்கும் பொதுவான சமத்துவ அமைப்பை எதிர்பார்ப்பதில்லை. ஆகையால் வர்க்க சுரண்டலை தகர்க்காமல் பெண் விடுதலை சாத்தியமில்லை. பெண் விடுதலையும், மானுட விடுதலையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்று அன்றே அவர் கூறினார்.

புரட்சிக்கு முன் சோசலிச நாடுகளில் பெண்களின் நிலைமை

சோசலிச புரட்சி நடந்த நாடுகளில் புரட்சிக்கு முன்பு பெண்கள் இருந்த நிலை குறித்த பல்வேறு ஆய்வுகள் உள்ளன. முன்னாள் சோவியத் யூனியன், மக்கள் சீனம், வியட்நாம், கியூபா, முன்னாள் ஜெர்மனிய ஜனநாயக குடியரசு, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகிய நாடுகள் சோசலிச அமைப்பை உருவாக்கி பல பிரமிக்கத்தக்க சாதனைகளை புரிந்த நாடுகளாகும். இன்று பல சிதைவுகள் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்நாடுகள் சோசலிச கட்டுமானத்தின் மூலம் சாதித்தவற்றை அழிக்க இயலாது. முன்னால் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள வயதான பெண்கள் மீண்டும் அதே சோசலிச கட்டமைப்பு வர வேண்டும் என விரும்புகிறார்கள். சமூக மாற்றம் நடைபெற்ற நாடுகள் அனைத்திலுமே புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்பட்டு வந்தனர். ரஷ்யாவில் 1897-இல் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் அங்கு பெண்களின் கல்வி அறிவு வெறும் 13% மட்டுமே என்கிறது. தொழிற்சாலைகளில் 12 முதல் 14 வயது சிறுமிகள் 18 மணி நேரம் கடுமையாக உழைத்தனர். தொழில் வளர்ச்சி சிறுமிகளையும், பெண்களையும் வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து நூதனமான முறையில் அடிமைகளாக்கியது. கிராமங்களில் சொத்து இருப்பவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. பெண்கள் ஆண்களின் சொத்தாகவே கருதப்பட்டனர்.

மக்கள் சீனத்தில் புரட்சிக்கு முன் பெண்கள் அடிமைகளாகவே கருதப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியில் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். பெண்கள் போக பொருளாகவே நடத்தப்பட்டனர். வியட்நாம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைதான் இருந்தது. உயர் குடும்பங்களை சார்ந்த பெண்கள் மட்டுமே பொது வெளியில் தென்பட்டனர்.

கியூபாவில் பெண்களை புரட்சியில் ஈடுபட வைப்பதென்பது புரட்சிக்குள் ஒரு புரட்சியாக இருந்ததாக பிடல் காஸ்ட்ரோ குறிப்பிடுகிறார். பழமையில் ஊறிப்போன பெண்களை புரட்சி பணியில் ஈடுபட வைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. .வீட்டுக்கு வெளியே சென்று உழைத்த பெண்கள் பொருளாதார நெருக்கடியினால் வேலை செய்தார்களே தவிர, பெண் விடுதலை பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் வேலை செய்யவில்லை. புரட்சிக்கு முன்பு ஏராளமான பெண்கள் பாலியல் தொழிலால் சுரண்டப்பட்டனர். பெண்கள் நர்ஸூகளாக, ஆசிரியர்களாக, குமாஸ்தாக்களாக பணியாற்றினார்களே தவிர, அவர்களுக்கு அதிகாரம் இல்லை. புரட்சிக்குப் பின்னர் பெண்களுக்கான கூட்டமைப்பு துவங்கப்பட்டது. அதன் நோக்கம் பெண்களுக்கான உரிமைகளை பெற்று தர வேண்டும் என்பதைவிட பெண்களை சோசலிச கட்டுமான பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பதாக இருந்தது.

*புரட்சியில் பெண்களின் பங்களிப்பு*

உலகில் புரட்சி நடந்த பல்வேறு நாடுகளில் புரட்சியில் பெண்களின் பங்களிப்பு என்பது மகத்தானது. சோவியத் யூனியனில் புரட்சியில் பங்கு பெற்ற பெயர் தெரியாத பல கதாநாயகிகள் ஏழைகள். கிராமங்களில் இருந்தவர்கள், சூறையாடப்பட்ட நகரங்களில் இருந்து வந்தவர்கள், கிழிந்த பாவாடை, தலையில் சிவப்பு ஸ்கார்ப். குளிரில் இருந்து தப்பிக்க ஒட்டு போட்ட கோட் போட்ட இளம்பெண்கள், மூதாட்டிகள், ராணுவ வீரர்களின் மனைவிகள், கூலித் தொழிலாளிகள், வீட்டோடு இருக்கும் பெண்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி, சோவியத் புரட்சியில் பெண்களின் பங்கு மகத்தானது. சுயநலமின்றி மகிழ்ச்சியுடன் ஒரே நோக்கத்தோடு பங்கேற்றனர். ராணுவத்தில் மக்கள் தொடர்பாளர்களாக பணியாற்றினர். பெண்கள் பல நூற்றாண்டுகளாக கிராமங்களில் நிலவிய நிலபிரபுத்துவத்தை ஓட ஓட விரட்டினர். அலை அலையாக பெண்கள் திரண்டு கடல் போல் வந்தனர். பெண்கள் செங்கொடியையும், கம்யூனிசத்தையும் தூக்கிப் பிடித்தனர். இப்பெண்களை ஒன்று திரட்டுவதில் அலெக்ஸாண்ட்ரா கொலந்தாய், குரூப்ஸ்கயா (புரட்சியாளர் லெனினின் இணையர்) உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் பங்கு மகத்தானது. பெண்கள் பங்கேற்காத எந்தப் போராட்டமும் வெற்றி பெறாது என்பதை சோவியத் புரட்சி நிரூபித்தது. புரட்சிக்கு பின்னரும் ஆண்களுக்கு சமமாக அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர்கள் இவர்கள்.

வியட்நாம் புரட்சியை வழிநடத்திய ஹோச்சிமின் போன்றவர்கள் பெண்களின் பங்களிப்பு இல்லாமல் புரட்சியை தொடர இயலாது என்பதை உணர்ந்து பெண்களைத் திரட்டினர். வியட்நாம் சமூக அமைப்பில் தாய் வழி சமூகத்தின் சுவடுகளைக் காண முடிந்தது. 1930-ல் வியட்நாம் தேசிய இயக்கம் உருவாக்கப்பட்டது. பெண்களின் சங்கம், பெண்கள் பங்களிப்பில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் குறித்து வலியுறுத்தியது. வியட்நாம் புரட்சியில் மட்டுமின்றி அந்நாடு ஒவ்வொரு முறை போரை சந்திக்க நேரிட்ட போதும் பெண்கள் ஆண்களுக்கு சமமாக போரில் பங்கேற்றனர். துப்பாக்கி ஏந்திய போராட்டம், கொரில்லா தாக்குதல் என இவர்கள் சளைக்கவில்லை. வயல்வெளிகளில் உணவு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டே எதிரிகளை தாக்கவும் செய்த வீராங்கணைகள் இப்பெண்கள் .

1945 முதல் 75 வரை 30 ஆண்டுகள் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டனர். கிராமங்களை காவல் காப்பது, தகவல் தெரிக்கும் நபர்களாக செயல்படுவது, பிரச்சாரம் செய்வது, ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பது என பெண்கள் ஆற்றிய பணிகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. தாய்மார்களாக, மனைவிகளாக, சகோதரிகளாக அனைத்து பாரம்பரிய பணிகளை செய்து கொண்டே, நாட்டைக் காக்கும் பணிகளையும் செய்து வந்தனர்.

*சீனப் புரட்சி*

சீனா அதிகம் கிராமங்களை கொண்ட நாடு. பெண்கள் கடுமையாக உழைத்த போதிலும் சம உரிமைகள் இல்லை. கிராமப்புறங்களில் பெண்கள் நிலப்பிரபுக்களை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்தினர். நகரங்களில் இளம் பெண்கள், மாணவிகள் பெரும் எண்ணிக்கையில் புரட்சியில் பங்கேற்றனர். அடிமை நிலையில் இருந்து அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக புரட்சி அமைந்தது. கிராமப்புறங்களில் பெண்கள் பங்கேற்கும் கூட்டங்களில் தன்னுடைய கசப்பான அனுபவங்களை பேச அனுமதிக்கப்பட்டனர். தங்களுக்கு நியாயம் வேண்டி பெண்கள் பேசுவதற்கு முடிந்தது. 1927-ல் துவங்கி ஏராளமான பெண்கள் சீனாவில் பெண்களின் உரிமைகளுக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் பெருமளவில் போராட்டங்களில் பங்கெடுத்தனர்.

கிழக்கு ஜெர்மனி மற்றும் இதர கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோவியத் புரட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், அந்த நாடுகளிலும் பெண்களின் உரிமைகளுக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் நடைபெற்ற போராட்டங்களில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் பணக்கு பெற முடிந்தது.

சோசலிச நாடுகளில் பெண்கள்

சோவியத் ரஷ்யாவில் லெனின் தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த அலெக்ஸாண்டரா கொலந்தாய் உலகுக்கே முன்மாதிரியான சட்டங்களை இயற்றி பெண் விடுதலைக்கான வலுவான சமூக அடித்தளத்தை உருவாக்கியவர். பழைய அமைப்புகள் எல்லாவற்றையும் தகர்த்து புதிய சமுதாயம் படைக்கத் தயாரானால், குடும்ப அமைப்பை மட்டும் தொடக்கூடாது என்று பதறுகின்றவர்களை கடுமையாக விமர்சித்தவர் இவர். பெண்களின் பணிகள் புதிய சோசலிச சமூகத்தில் சமூகமயமாக்கப்படுவதை உறுதிப்படுத்தினார். அங்கு கல்வி நிறுவனங்கள் பெண்களின் திறனை வளர்க்க உதவுவதாக மாற்றப்பட்டன. கற்பதற்கான நேரம் பெண்களுக்கு கிடைக்கும் இடத்தில், பொது அடுக்களை, பொது சாப்பாட்டறை, பொது சலவையகம், பராமரிப்பு வசதி பொது குழந்தைகள் காப்பகம், குழந்தைகள் இல்லங்கள் ஆகியவற்றை உருவாக்குவதை சட்டம் ஆக்கினார். எதெல்லாம் பெண்களின் வேலை என்று குடும்ப அமைப்பு திணித்து வைத்ததோ அதையெல்லாம் அரசின் வேலையாக மாற்றினார். மாமேதை லெனின் வார்த்தைகளில் சொன்னால் நச்சரிக்கும் வீட்டு வேலையில் இருந்து பெண்களை விடுதலை செய்ய சட்டபூர்வமான ஏற்பாடுகளை செய்தார் அவர்.

சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சி மேலை நாடுகளில் பெண்களிடையே புதியதொரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

சம வேலைக்கு சம ஊதியம், பணியிடங்களில் பாதுகாப்பு சட்டங்கள், மகப்பேறு வசதி, தொழிற்சங்கத்தில் பெண்களின் பிரச்சனைகளை விவாதிப்பதில் முக்கியத்துவம் போன்றவை குறிப்பிடத்தக்க ஒன்றாக, சோசலிச சோவியத்தில் நிலவியது. மேலும் திருமண உறவுக்கு அப்பால் பிறந்த குழந்தைகளுக்கு முழு உரிமைகள், பெண்களுக்கு விவாகரத்து கோரும் உரிமை, திருமணம் செய்து கொள்ளும் உரிமை போன்றவை உறுதி செய்யப்பட்டன. பெண்களின் இரட்டை சுமையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் அன்று மேற்கொள்ளப்பட்டன. அனைத்திற்கும் மேலாக கல்வியில் அதிகம் குறிப்பாக கணிதம், அறிவியல், மருத்துவ கல்வியில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. 1975-ல் கல்லூரிகளில் ஆண்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பெண் மருத்துவர்கள் எண்ணிக்கை ஆண் மருத்துவர்களை காட்டிலும் அதிகமாக இருந்தனர்.

அறிவியல் துறையிலும், பொறியியல் துறையிலும் பெண்கள் பிரகாசிக்கத் துவங்கினர். வான்வழி ஆய்வில் கூட அவர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றினர். எனவே தான் முதன் முதலில் ஒரு பெண்ணை (வாலன்டிணா தெரஸ்கோவா) விண்வெளிக்கு அனுப்ப முடிந்தது. விளையாட்டு துறையில் உலக அளவில் இப்பெண்கள் பல சாதனைகளை படைத்தனர். சோவியத் யூனியன் சிதைந்த பின்னரும் விளையாட்டுத் துறையில் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் முன்னணியில் இருப்பதற்கு காரணம் சோசலிச அரசு கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் கொடுத்தது தான். குழந்தைப் பருவம் முதல் அவர்களுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து, அதில் முன்னேற, கொடுக்கப்பட்ட அனைத்து வாய்ப்பு வசதிகளும் இத்தகைய சாதனைகளை அவர்கள் செய்வதற்கு வழிவகை செய்தது. சோசலிச கட்டுமானம் இல்லாமல் இத்தகைய சாதனைகள் சாத்தியமில்லை.

கியூபா

கியூபாவில் புரட்சிக்கு பின் பெண்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கி தரப்பட்டது. தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள பிரத்தியேக பயிற்சிகள் குறிப்பாக கல்வி கட்டமைக்கப்பட்டு நாட்டின் உற்பத்தியில் பெண்களின் பங்கை கூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கியூபாவில் கணவனும், மனைவியும் குடும்ப வேலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. விவாகரத்து ஆண் பெண் இருவருக்கும் சமத்துவமான உரிமைகளை கொடுத்தது. கியூபாவில் ஒரு மாத காலத்தில் விவாகரத்து வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 1960-களிலேயே, மிக ஆரம்ப நிலையிலேயே கியூபப் பெண்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பெண்களை வேலைவாய்ப்பிற்குள் கொண்டு வந்து அவர்களை மேலாளர் நிலைக்கு உயர்த்துவது, கியூபப் பெண்கள் கூட்டமைப்பின் முன்னுரிமையாக எப்போதுமே இருந்து வருகிறது. இது அன்றாடப் பொருளாதார சமூகக் கண்ணோட்டத்தில், பெண்களை மேலும் சுதந்திரமானவர்களாக வாழ வழிவகுக்கிறது.

பொருளாதாரத்தில் பெண்களின் பங்கேற்கும் விகிதம் 39.3%. வேலைக்குப் போகும் பெண்களின் கல்விநிலை உயர்ந்து கொண்டே வருகிறது. 53.1% பேர் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும், 34.2% பேர் பல்கலைக் கழக அளவிலான கல்வியும் பெற்றிருக்கிறார்கள்.

பெண் மேலாளர்கள் 38.6%, தொழில்நுட்பவியலாளர்களில் 66.6%, நிர்வாகப் பணிகளில் 69%, சேவைத் துறையில் 45.4%, தொழிலாளர்களில் 16.7% பெண்கள். பொது மருத்துவம் மற்றும் சமூக உதவித் திட்டங்களில், 70.95% பயனாளிகளாகப் பெண்கள் உள்ளார்கள். கல்வியில் 68.9%, அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் 49.3%, பண்பாடு மற்றும் விளையாட்டில் 43.6% பெண்கள் பங்கேற்பு உள்ளது. மொத்த விவசாயிகள் 25%. இவர்களில் 13% நேரடி உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். 42% பெண்களால் விவசாய அமைப்பின் அறிவியல் திறன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் முடிவெடுக்கும் செயல்பாட்டில் கியூபப் பெண்கள் தீவிரமாகப் பங்கேற்கிறார்கள். மக்கள் அதிகார தேசிய சபை எனும் அவர்களது நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகளில் 52.3% பேர் பெண்கள். மாகாண சபைகளில் 53.3% பேர் பெண்கள்.

4 பெண் ஆளுநர்கள், 12 பேர் பெண் துணை ஆளுநர்கள் கியூபாவில் இருக்கிறார்கள். நகர்மன்ற சபைகளில் 88 பெண் தலைவர்கள் இருக்கிறார்கள். இது மொத்தத்தில் 52.7% ஆகும். 58 பெண் மேயர்கள் உள்ளனர். இது மொத்தத்தில் 35.4% ஆகும்.

ஜெர்மன் ஜனநாயக குடியரசில் 1949- 89 இந்த குறுகிய காலத்தில் பெண்கள் நிலை பெரிதும் மேம்படுத்தப்பட்டது. பெண் விடுதலை பெற பொருளாதார சுதந்திரம் தேவை என்பதை கணக்கில் கொண்டு, பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆட்சியில் இருந்த சோசலிஸ்ட் யூனிட்டி கட்சி மூன்று முக்கிய நோக்கங்களை கொண்டிருந்தது.

1.ஆண் பெண் சமத்துவம்.
2.உழைக்கும் பெண்களை உயர்த்துதல்.
3.தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் பிரத்தியேக பாதுகாப்பு அளித்தல்.

இவையே அந்த அரசின் நோக்கமாக இருந்தன. முதல் பத்தாண்டுகளில் பெண்களை அந்நாட்டில் உழைக்கும் சக்தியுடன் இணைக்கும் பணியினை மேற்கொண்டனர். உலகப்போரின் காரணமாக பெண்கள் பெரும் எண்ணிக்கையில் உழைப்பு சந்தைக்குள் வந்துவிட்டனர். பெண்களுக்கான நிறைய சட்டங்கள் இந்த காலகட்டத்தில் கொண்டு வரப்பட்டன. பெண்களுக்கான கமிட்டிகள் அமைக்கப்பட்டன. பாசிச எதிர்ப்பு பிரச்சாரம், கலாச்சார விழிப்புணர்வு போன்றவற்றில் முன்னுரிமை அளிக்கப்பட்டன. ஜனநாயக மகளிர் சங்கம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. பெண்களை ஒன்று திரட்டி அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கும் பணியை மேற்கொண்டனர். ஆண் பெண் சமத்துவத்தை முன்னெடுத்துச் செல்ல தொழிற்சங்கங்கள் நல்ல வாய்ப்பை அமைத்தது. தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கையில் 37% பேர் பெண்கள் என்ற நிலை அதிகரித்தது.

வியட்நாம்

வியட்நாமில் புரட்சிக்கு பின்னர் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆசிய நாடுகளிலேயே நிர்வாகத் துறையில் மிக அதிக எண்ணிக்கையில் பெண்கள் இருந்ததற்கு காரணம், சோசலிச அடித்தளம் ஆகும். சம வேலைக்கு சம ஊதியம், உழைக்கும் பெண்களுக்கு சாதகமான ஏராளமான சட்டங்கள், திருமணம் மற்றும் குடும்ப சட்டம் போன்றவை பெண்களின் உரிமைகளை பாதுகாக்க கொண்டு வரப்பட்டன.

மக்கள் சீனா

மக்கள் சீனத்தை பொருத்தவரை மாவோ தலைமையில் அரசு அமைந்தவுடன் பாலின சமத்துவ கருத்துக்கள் முன்னிறுத்தப்பட்டன. பெண் வெறும் போகப் பொருள் அல்ல என்பதை உணர்ந்து பாலியல் தொழிலை ஒழிக்க கறாரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. 2018 மார்ச் மாதம் பெண்களின் சரித்திர மாதம் என அனுசரிக்கப்பட்டது.

விரும்பியவரை திருமணம் செய்து கொள்ளும் உரிமை, வயது வந்த இருவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் மூன்றாவது நபர் நுழைந்து, அதை தடுக்க இயலாதபடி சட்டம், வரதட்சணை கொடுமைக்கு எதிரான சட்டம், திருமணத்திற்கு பின் சேரும் சொத்துக்களில் ஆண் பெண் இருவருக்கும் சம உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்கள் ஓரளவு ஆளுமை பெற்றவர்களாக இருந்தனர். 1950-லேயே பெண்களுக்கு விவாகரத்துக்கு உரிமை அளிக்கப்பட்டது. 2005-ல் குடும்ப வன்முறை குற்றமயமாக்கப்பட்டு விட்டது. பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கொண்டு வரப்பட்டது. எனவே, இத்தகைய சம்பவங்கள் குறைய துவங்கின. பெண்கள் இரவிலும் சுதந்திரமாக நடமாட முடியும் என்ற நிலை சீனாவில் வந்தது. சீன மக்கள் தொகை அதிகம் என்பதால் குடும்ப கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டது. அப்படி பிரச்சாரம் செய்யும் போது கூட கணவன் மனைவி இருவரையும் அழைத்துப் பேசி அதன் அவசியத்தை உணர்த்தினர். பெண்ணை மட்டும் மையமாக வைத்த குடும்ப கட்டுப்பாடு நடத்தப்படவில்லை. கல்வி, ஆரோக்கியம், விளையாட்டு ஆகிய துறைகளில் சில பெண்கள் உலகில் முன்னணியில் இருந்தனர். உழைப்பு சந்தையில் பெண்களின் மதிப்பு கணிசமாக இருந்தது. 1997-ல் கொண்டுவரப்பட்ட அர்பன் துபாயோ திட்டம் அனைவரையும் சமூக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து விட்டது. மக்கள் சீனத்தில் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி குடிபெயர்தல் சமீப காலத்தில் அதிகரித்துள்ளன. குடிபெயரும் பெண்களின் பிரத்தியேக பிரச்சனைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அரசியலில் பெண்களின் பங்கு 30.4% என தெரிகிறது. எனவே இதில் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதை அரசு உணர்த்துகிறது.

எந்தப் பாதை?

சோசலிச சமூக அமைப்பே பெண்களுக்கு சாதகமானது. சோசலிச நாடுகளில் அனைத்து வளங்களும் பொதுவுடமை ஆக்கப்படுகின்றன. ஆண் பெண் பாகுபாட்டை சோசலிச கட்டமைப்பு ஏற்பதில்லை. சோசலிச புரட்சி, பெண்களை பொதுவெளிக்குள் கொண்டு வந்திருக்கிறது என்பதை நாம் காண முடிகிறது. புரட்சி முடிந்த உடனேயே சமத்துவம் வந்துவிடாது என்பதை லெனின், மாவோ, காஸ்ட்ரோ, ஹோசீமின் போன்ற தலைவர்கள் உணர்ந்திருந்தனர். இதனால் பாலின சமத்துவத்திற்கு அடிப்படை தேவைகள் என்னவோ அவற்றை செய்ய முயன்றனர். அதற்கான சட்டங்களை கொண்டு வந்தனர். அமுல்படுத்தி ஓரளவு வெற்றியும் கண்டுள்ளனர். சோசலிசம் என்பது பொருளாதார சமத்துவத்தை மட்டும் நிலைநிறுத்துவது அல்ல. அது சமூக சமத்துவத்தையும் உள்ளடக்கியது. சமூக சமத்துவத்தின் வழியாக பாலின சமத்துவத்தை நிலைநிறுத்துவதை குறிக்கோளாக கொண்டது.

சுரண்டலில்லாத ஒரு அமைப்பில் மட்டுமே மனிதர்கள் சுதந்திரமாக வாழ இயலும். பெண் விடுதலை மானுட விடுதலையோடு இணைந்தது. மனிதகுல விடுதலையை சோசலிசம் மட்டுமே சாத்தியமாக்கும். அத்தகைய சமூகத்தை காண தொடர் போராட்டங்களை நடத்த மகளிர் தினத்தில் உறுதியேற்போம்.

புரட்சியின் பயணம் கவிதை – சந்துரு ஆர்.சி

புரட்சியின் பயணம் கவிதை – சந்துரு ஆர்.சி




கட்டிட வேலை செய்யும்
வட இந்திய இளைஞன்
பனியனைத் தடவிக்கேட்டேன்
அவர் யார் எனத் தெரியுமா என்று…
காரை படிந்த பற்கள் சிரிக்க
நை மாலும் என்று
கைவிரித்தான்
பின் அவனே
ஷினிமா இஸ்டார் என்றான்…

கிராமத்து விவசாயியிடம்
அவர் அணிந்திருந்த ஆடையை காட்டி
யார் இவர் என்றேன்
தன் மகனுக்குத்தான்
அது தெரியுமென்று
பதிலை மடை மாற்றி
வேலைக்கு நகர்ந்தார்

நகரத்தின் தெருவோரச் சிறுவனிடம்
செல்லமாய் கேட்டேன்
யாரடா இவரென்று
சிகரெட் ஊதும் பாவனையில்
விரலிடுக்கில் உதடுகுவித்து
ரஜினி ஸ்டைல் என்றான்

நடுத்தர வாலிபனின்
தோள் தொட்டு கேட்டேன்
தெரியுமா இவரை என்றேன்
சிறு புன்னகையை பதிலாய் தந்து
தலையசைத்து
வேறிடம் நகர்ந்தான்

கல்லூரி இளைஞனின்
கரம்பற்றி கேட்டேன்
அவனோ அவரை
அவரை ஒரு
விளம்பர மாடல் என்று
சந்தேகமாய் உறுதி செய்தான்

ஐ.டி. இளைஞனைக்
கேட்டுப்பார்த்தேன்
மே பி ஹி இஸ் அன்
ஹாலிவுட் ஆக்டர் என்று
தோள் குலுக்கி
நம்மிடமே பதிலைத் திருப்பினான்

ஒரு நாள்
நண்பரின் வீட்டில்
குவியலாய் கிடந்த
அவர் படத்தைப்பார்த்து
அவர் மனைவியிடம் கேட்டேன்
இப்படி கரித்துணியாய்
வைத்திருக்கிறீர்களே
இதிலிருக்கும் மனிதர்
யார் எனத்தெரியுமா என்று..
அப்பாவியாய் சிரித்துக்கொண்டே
போஸ்டர்ல பாத்திருக்கேன்
சுடு தண்ணி தூக்கவும்
சோறு வடிக்கவும்
இந்த துணிதான் வழுக்காம
சூடு தாங்குதுண்ணா
வெள்ளந்தியாய்ச் சொன்னார்

இறுதிவரை யாருக்குமே
தெரியவில்லை
இவர் யாரென்று

கடைசியாய்
விளையாடி முடித்து
வழியில் நடந்து செல்லும்
பள்ளிச் சிறுவனிடம் கேட்டேன்
தயங்காமல் சொன்னான்
சேகுவேரா என்று..
அடையாளம் கேட்டதற்கு
பிறந்தது அர்ஜெண்டைனா
வென்றது கியூபாவில்
வாழ்வது உலகத்தின் இதயத்தில்.
பராட்டை எதிர்பாராமல் கடந்து செல்கிறான்

உலகில்
புரட்சியின் அடையாளமாய்
அறியப்பட்டவரை
யாரெனத்தெரியாமலே
தங்கள் பனியன்களில்
அணிந்துகொண்டு
திரிபவர்கள் மத்தியில்
இளங்குருத்திடம் அழுத்தமாய்
அவர் சேர்ந்திருப்பதுடன்
தெரிந்தவர் தெரியாதோர்
எல்லோருடனும் சேர்ந்து
அதே புன்னகையுடன்
மீண்டும் ஒரு புரட்சியைக் காணமுடியும்
என்ற நம்பிக்கைகளோடு
வெவ்வேறு வடிவங்களில்
சேவும் பயணிக்கிறார்…

சந்துரு ஆர்.சி

சாந்தி சரவணன் கவிதைகள்

சாந்தி சரவணன் கவிதைகள்




மானுட உன்னதம்
*********************
உடலினுள் மட்டுமே
குருதி பரவட்டும்!
உலகநாடுகளின் திறந்தவெளியில்
மானுடம் தழைக்கட்டும்!
புவியெங்கும்
மனிதம் மட்டுமே மலரட்டும்!

போரற்ற உலகம்
********************
ஹிட்லர் மாண்டான்
ஆனால்
போர் அழியவில்லையே
ஏன்? என்று யோசித்து கொண்டு இருந்த
பிரபஞ்சத்திற்கு
பதில் கிடைத்தது !

தனிமனிதன் ஹிட்லர் தானே மாண்டான்!

தனி மனிதனுள் இருக்கும் ஹிட்லர் இன்றும் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறான்!

அந்த ஹிட்லரின் மரணத்தில் தான் ஜனிக்கும்
“போரற்ற உலகம்” என்று!

உலக சமாதானம்
********************
திகைத்து ஸ்தம்பித்து நின்றது
இராணுவம் !
மழலையர் செல்வங்களின்
அணிவகுப்பு!
பிஞ்சு கரங்களில்
புகார் மனு !
அமைதி புறாக்களை
காணவில்லையென!
…..

காலுடைந்து தவிக்கிறது
வெண்புறா!
சிறகடித்து அழைக்கிறது
இளைஞிகளை-
இளைஞர்களை!
சிகிச்சை எடுக்க!
நம்பிக்கையோடு
வானில் மீண்டும் பறக்க!
…….

சிறகடித்து சுதந்திரமாக பறந்த
வெண்புறாவை காணவில்லை!
தொலைத்த வெண்புறாவை
கண்டுபிடிக்க ஆணையிட்டது
நேற்றைய தலைமுறை
இன்றைய தலைமுறைக்கு !
வருங்கால தலைமுறைக்காக!
……..

கால்கள் உடைக்கப்பட்டுள்ளது
சிறகுகள் பிடுங்கப்பட்டுள்ளது
கண்கள் பறிக்கப்பட்டுள்ளது
என் மாய சொற்களின் ஊடே முடமாக முடங்கி கிடக்கிறது
வெண்புறா!

மாற்றம் ஒன்றே மாறாதது!
விடியல் புலரும்
மாய சொற்கள் மறையும்
மீண்டும்
வானில் வெண்புறா
உலகச்
சமாதானத்தின் சின்னமாக
உல்லாசமாக சிறகடித்து பறக்கும் என்ற நம்பிக்கையில்
உலக நாடுகள் !

உலகப் புரட்சி நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ
**************************************************
வீண் முயற்சி எது?
விடா முயற்சி எது?

தயங்குபவர் யார்?
துணிந்தவர் யார்?

தயக்கம் எது?
துணிவு எது?

மனிதன் யார்?
மாமனிதன் யார் ?

விதைத்தவன் உறங்கலாம்
விதைகள் ஒருபொழுதும் உறங்குவதில்லை

என எல்லாம் சொல்லி சென்றாய்?

பொன்மொழிகள் என‌ அன்று சட்டத்தில் எழுதி விட்டத்தில் மாட்டிவிட்டனர்!

இன்றோ வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் ஆகிவிட்டாய்!

என்று எங்கள் குருதியில் கலப்பாய்?

இப்படிக்கு

இளைஞ்சிகள்

திருமதி.சாந்தி சரவணன் 

பகத்சிங்கிற்கும் நமக்கும் இடையே ஒவ்வோராண்டும் இடைவெளி அதிகரித்தபோதிலும், அவரின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக்கொண்டிருக்கின்றன கட்டுரை சீத்தாராம் யெச்சூரி – தமிழில்: ச.வீரமணி

பகத்சிங்கிற்கும் நமக்கும் இடையே ஒவ்வோராண்டும் இடைவெளி அதிகரித்தபோதிலும், அவரின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக்கொண்டிருக்கின்றன கட்டுரை சீத்தாராம் யெச்சூரி – தமிழில்: ச.வீரமணி



1. பகத்சிங் பிறந்தநாள் ஆண்டுவிழா:

(பகத்சிங்கிற்கும் நமக்கும் இடையே ஒவ்வோராண்டும் இடைவெளி அதிகரித்தபோதிலும், அவரின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக்கொண்டிருக்கின்றன)

சீத்தாராம் யெச்சூரி
(தமிழில்: ச.வீரமணி)

2020 செப்டம்பர் 28, இந்தியாவின் மாபெருமளவில் புகழ்பெற்ற தியாகி பகத்சிங்கின் 113ஆவது ஆண்டு பிறந்த தினமாகும். ஒவ்வோராண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி அதிகரித்தபோதிலும், அவர் தன் வாழ்நாளில் ஏற்படுத்திய பங்களிப்புகளின் அலைகள் இன்றையதினம் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மிகவும் பொருந்தக்கூடிய விதத்தில் மிகவும் நெருக்கமான முறையில் அதிர்வலைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கின்றன.

இந்த ஆண்டு, பகத்சிங்கால் கூர்நோக்கி அவதானிக்கப்பட்ட பல அம்சங்கள் இன்றைய நாட்டு நடப்புகளுடன் பொருந்தக்கூடியதாகவும், அவற்றுக்கு எதிராக அவசரகதியில் நாம் செயல்படவேண்டிய நேரத்திலும் வந்திருக்கின்றன. பகத்சிங், தன்னுடைய வாழ்நாளில் மிகவும் குறுகிய காலமே, அதாவது 23 வயது வரையிலுமே, வாழ்ந்திருந்தபோதிலும், நாம் மிகவும் வியக்கும் விதத்தில் சமூகத்தின் அனைத்துவிதமான பிரச்சனைகள் மீதும் அளவற்ற பங்களிப்பினை ஏற்படுத்திச் சென்றிருப்பது, நம்மை பிரமிப்புக்கு உள்ளாக்குகிறது. உண்மையில் பகத்சிங் சமூக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தொட்டிருக்கிறார். அவர் ஏராளமாகப் படித்தார், அவர்தன் வாழ்நாளில் நடைபெற்ற புரட்சிகர நடவடிக்கைகளுடன் தன்னை இணைத்துக்கொண்டார், சர்வதேச அளவில் நடைபெற்ற நிகழ்ச்சிப்போக்குகளை ஆழமாகவும் கவனமாகவும் பின்பற்றினார், உலகின் பல முனைகளிலிருந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் எழுத்துக்களிலிருந்து உத்வேகம் பெற்றார், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சிகர விடுதலைக்கான லட்சியத்தை உறுதியுடன் உயர்த்திப் பிடித்தார்.

விடுதலை நாயகன் பகத்சிங் 2

பகத்சிங்கின் வாழ்க்கை குறித்தும், பணிகள் குறித்தும் பின்னாட்களில் ஏராளமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து இந்திய இளைஞர்களின் பல தலைமுறையினருக்கும் அவர் உத்வேகமாக விளங்குவது தொடர்கிறது. பகத்சிங்கின் வளமான பங்களிப்புகளின் மத்தியில், இன்றைய சமகால நிலைமையில் ஒருசில முக்கியமான அம்சங்கள் குறித்து இப்போது நாம் விவாதிப்பது அவசியமாகிறது.

தில்லி வெடிகுண்டு வழக்கு

இன்றைய இந்திய நாடாளுமன்றத்தில், அன்றைய தில்லி மத்திய சட்டமன்றத்தில், 1929 ஏப்ரல் 8 அன்று, எவருக்கும் தீங்கிழைக்காத வெடிகுண்டுகளை வீசியது நாட்டின் கவனத்தையும், உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக, இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையின் சார்பில் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:

இது, கேளாச் செவியினரைக் கேட்க வைக்கும் விதத்தில் உரக்கக் குரல் கொடுத்திருக்கிறது. இத்தகைய இறவாப்புகழ் படைத்த வார்த்தைகள், இதேபோன்று வேறொரு நிகழ்வின்போது, தியாகி வைலண்ட் என்னும் பிரெஞ்சு அராஜகவாதி (anarchist) எழுப்பிய முழக்கமாகும். அதனை எங்களுடைய இந்த நடவடிக்கைக்கும் வலிமையாக நியாயப்படுத்துவதற்காக நாங்கள் எடுத்துக் கையாண்டிருக்கிறோம்.

இந்த வெடிகுண்டு வழக்கு, ‘வன்முறைக் கலாச்சாரத்தின்’ வெளிப்பாடு என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, பகத்சிங், தில்லி அமர்வு நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், பி.கே.தத்துடன் இணைந்து கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்:

சட்டமன்றத்தில் உள்ள எவராவது எங்களின் நடவடிக்கையில் ஏதேனும் அற்ப காயங்கள் அடைந்திருந்தாலோ அவர்களுக்கு எதிராகவோ அல்லது வேறு எவருக்கு எதிராகவோ மனக்கசப்போ அல்லது எவருக்கும் கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணமோ எங்களுக்குக் கிடையாது. மாறாக, மனிதசமுதாயத்தின் வாழ்க்கை எங்கள் வார்த்தைகளைவிட புனிதமானது என்று நாங்கள் உயர்த்திப்பிடிக்கிறோம் என்பதை திரும்பவும் நாங்கள் கூறுகிறோம். எவரையும் காயப்படுத்த வேண்டும் என்பதைவிட மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக எங்கள் உயிரை விரைவில் நாங்கள் இழப்பதற்குத்தான் எங்களை நாங்கள் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எவ்விதமான மனஉறுத்தலுமின்றி பிறரைக் கொல்லும் ஏகாதிபத்திய ராணுவத்தின் கூலிப்படையினர் போன்றவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் மனிதகுலத்தை நேசிக்கிறோம். எங்கள் பலம் அதில்தான் இருக்கிறது. நாங்கள் இந்த மனிதசமூகத்தைப் பாதுகாக்க முயற்சிக்கிறோம். அந்த அடிப்படையில்தான் வேண்டுமென்றே எவரும் இல்லாத சட்டமன்றத்தின் அறைக்கு வெடிகுண்டை நாங்கள் வீசினோம் என்று இப்போதும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எனினும் உண்மைகள் உரத்துப் பேசும், எங்கள் நோக்கம் எங்கள் நடவடிக்கையின் விளைவிலிருந்து தீர்மானிக்கப்படும்.

புரட்சி ஓங்குக (இன்குலாப் ஜிந்தாபாத்):

பகத்சிங்கும், அவருடைய தோழர்களும், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையும் மிகவும் தெளிவாக இருந்தனர். தங்களுடைய குறிக்கோள், பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து அரசியல் விடுதலை பெறுவது மட்டுமல்ல, இவ்வாறு பெறும் சுதந்திரம் பொருளாதார, சமூக மற்றும் மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களுக்கும் விரிவாக்கப்படக்கூடிய விதத்தில் முழுச் சுதந்திரமாக அமைந்திட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். வேறொரு சூழலில், பகத்சிங் கூறியதாவது: “எங்கள் விடுதலை, பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து தப்பிப்பதை மட்டும் அர்த்தப்படுத்தவில்லை. இதன் அர்த்தம், முழுச் சுதந்திரம் – மக்கள், ஒருவர்க்கொருவர் பரஸ்பரம் சுதந்திரமாக ஒன்றிணையவேண்டும், மள அளவில் அடிமை மனப்பான்மை பெற்றிருப்பதிலிருந்தும் விடுதலை பெற வேண்டும்”

ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியப் புரட்சியாளன், பகத் சிங்! – Malaysiakini

பகத்சிங் மற்றும் பி.கே.தத் ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படும்போது, நீதிமன்ற வாயிலுக்குள் நுழையும் சமயத்தில், ‘புரட்சி ஓங்குக’ (‘இன்குலாப் ஜிந்தாபாத்’) என்று முழக்கமிட்டவாறே நுழைவார்கள். பிரிட்டிஷ் நீதித்துறை நடுவர் அவர்களைப் பார்த்து, இந்த முழக்கத்தின் பொருள் என்ன என்று கேட்டார். புரட்சி என்ற வார்த்தையின் மூலம் நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள் என்று கேட்டார். இவர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் எழுத்துமூலம் அளித்த பதில் வருமாறு:

 ‘புரட்சி’ என்கிறபோது அதில் ரத்தவெறிபிடித்த சண்டையோ அல்லது தனிநபர் பழிவாங்கும் செயல் எதுவுமோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கிக் கலாச்சாரமும் அல்ல. ‘புரட்சி’ என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருப்பது, வெளிப்படையாகவே அநீதியை அடிப்படையாகக்கொண்டுள்ள இப்போதை சமூக அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதேயாகும். உற்பத்தியாளர்கள் அல்லது தொழிலாளர்கள் இந்த சமூகத்தின் அவசியமான கூறுகளாக இருக்கிறார்கள் என்றபோதிலும், அவர்களின் உழைப்பால் விளைந்த கனிகள், சுரண்டல்காரர்களால் சூறையாடப்படுகின்றன, அவர்களின் அடிப்படை உரிமைகள் பறித்துக்கொள்ளப்படுகின்றன. அனைவருக்காகவும் உணவுப்பொருள்களை உற்பத்தி செய்திடும் விவசாயி தன் குடும்பத்துடன் பட்டினி கிடக்கிறான். உலகச் சந்தைக்கு ஜவுளித்துணிகளை அளித்திடும் நெசவாளி தன் உடலை, தன் குழந்தைகளின் உடலை மூடி மறைத்திட துணியில்லாமல் திண்டாடுகிறான். அற்புதமான அரண்மனைகளைக் கட்டும் கொத்தனார்கள், கொல்லர்கள், தச்சர்கள், சேரிகளில் விலக்கப்பட்டவர்களாக உழன்றுகொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் ஒட்டுண்ணிகளான முதலாளிகளும், சுரண்டலாளர்களும் தங்கள் சுகபோக வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான ரூபாய் விரயம் செய்கின்றனர். இத்தகைய கொடூரமான சமத்துவமின்மையும், வாய்ப்புகள் வலுக்கட்டாயமானமுறையில் மறுக்கப்பட்டிருப்பதும் இத்தகைய குழப்பத்திற்கு இட்டுச்செல்கின்றன. இந்த நிலைமை நீண்டகாலத்திற்கு நீடிக்க முடியாது.  ஒருசிலர் மட்டும் சுகபோக வாழ்க்கை வாழும் சமூகத்தின் இந்த நிலை எந்த நிமிடத்திலும் வெடிக்கக்கூடிய எரிமலையின் விளிம்பில் இருந்துகொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகும்

இந்த சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டிடமும் காலத்தே காப்பாற்றப்படாவிட்டால், தகர்ந்து வீழ்ந்துவிடும். எனவேதான் புரட்சிகரமான மாற்றம் அவசியம். இதனை உணர்ந்தோர், சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை மாற்றியமைத்திட வேண்டியது கடமையாகும். இதனைச் செய்யாவிட்டால், மனிதனை மனிதன் சுரண்டும் முறைக்கும், ஒரு நாட்டை இன்னொரு நாடு சுரண்டும் முறைக்கும் முற்றுப்புள்ளி வைத்திடாவிட்டால், மனித சமுதாயத்தின்மீது படுகொலைகளும், துன்ப துயரங்களும் ஏவப்படும் என்கிற அச்சுறுத்தலைத் தடுத்திட முடியாது. இதனைச் செய்யாமல் யுத்தத்தை நிறுத்தங்கள் என்று கூறுவதும், உலக அமைதிக்கான ஒரு சகாப்தத்திற்குக் கட்டியம் கூறுங்கள் என்று கூறுவதும், சந்தேகத்திற்கிடமில்லாத பாசாங்குத்தனமாகும்.

‘புரட்சி’ என்பதன் மூலம் நாங்கள் பொருள்கொள்வது என்னவென்றால், இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இடம்கொடுக்காத ஒரு சமூகத்தை இறுதியாக நிறுவுவது என்பதேயாகும். மற்றும் இதில் தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட வேண்டும். உலக அமைப்புகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் நுகத்தடியிலிருந்தும், ஏகாதிபத்திய யுத்தங்கள் விளைவித்திடும் துன்ப துயரங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டும்.

இதுவே எங்கள் லட்சியம். இந்தத் தத்துவத்தின்கீழ் உத்வேகம் பெற்று, நாங்கள் இந்த சுரண்டல் சமூகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் போதுமான அளவிற்கு உரத்து எச்சரிக்கிறோம்.

எனினும், இது செவிமடுக்கப்படாவிட்டால், இப்போதுள்ள அரசமைப்பு தொடருமானால், வளர்ந்துவரும் இயற்கையான சக்திகள் செல்லும் பாதையில் ஒரு முட்டுக்கட்டையாக இது இருக்குமானால், தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்படுவதற்கு, அனைத்துத் தடைகளையும் தூக்கி எறியக்கூடிய விதத்தில், புரட்சியின் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதற்கான பாதையை அமைப்பதற்கு ஒரு கடுமையான போராட்டம் மேற்கொள்ளப்படும். புரட்சி, மனிதகுலத்திடமிருந்து பிரிக்கமுடியாத உரிமையாகும். விடுதலை அனைவரின் அழிக்கமுடியாததொரு பிறப்புரிமையாகும். உழைப்புதான், தொழிலாளர்களின் இறுதி விதியின் இறையாண்மையாக, சமூகத்தை உண்மையாகத் தாங்கி நிற்கிறது.

சுதந்திரப் போராட்ட விடிவெள்ளி பகத் சிங் - Puthiya Vidial, Puthiya Vidiyal

சமூக அமைப்புக்கு எதிராகவே,
எந்தவொரு தனிநபருக்கெதிராகவும் அல்ல

தற்போது, இந்தியா, பாஜக-வினால் நாட்டின் நாடாளுமன்றம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அரித்து வீழ்த்துப்பட்டுக்கொண்டிருப்பதன் மூலம், இது மக்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக, அதே மக்களுக்கு எதிராக, ஆளும் வர்க்கங்களால் திருப்பிவிடப்பட்டிக்கிறது. இது, பகத்சிங்கின் எச்சரிக்கைகளை மீண்டும் உரத்தும் தெளிவாகவும் எதிரொலிக்கின்றன. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட புனிதமான தீர்மானங்கள் வெறுக்கத்தக்கவிதத்தில் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. …”  “நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் ஏற்கப்படமுடியாது என்று நிராகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளும், முன்மொழிவுகளும், வெறும் கையெழுத்து ஒன்றின்மூலமாக மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

“இந்திய மக்களாகிய நாம்,” என்று நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட மக்களின் இறையாண்மையைப் பிரதிபலித்திடும் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சங்களை உயர்த்திப்பிடித்திடப் போராடிக்கொண்டிருக்கும் நமக்கு, அரசின் பிரதான அங்கங்களில் ஒன்றான நாடாளுமன்றம் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், பகத்சிங் கூறிய  இந்தச் சொற்றொடர்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் இன்றையதினம் ஒரு சிலிர்க்க வைத்திடும் நினைவூட்டலாக இருக்கின்றன.

வகுப்புவாதம் (எதிர்) மதச்சார்பின்மை

1919இல் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்றவுடனேயே, பிரிட்டிஷார் மக்களை மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியை மிகவும் கூர்மையாக மேற்கொள்ளத் தொடங்கினர். அங்கே மிகவும் கொடூரமான முறையில் இரக்கமின்றி சீக்கியர்களும், முஸ்லீம்களும் இந்துக்களும் கொன்று குவிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றுதான் நாட்டின் விடுதலைக்கானப் போராட்டத்தில் பங்கேற்றுக்கொண்டிருந்தார்கள். இதன் பின்னர், நாடு முழுதும் மதவெறிக் கலகங்கள் வெடித்தன. 1924இல் பஞ்சாப்பில் கோஹாட் (Kohat) என்னுமிடத்தில் கோரமானமுறையில் ஒரு மதக்கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விடுதலை இயக்கத்தில் மதவெறிக் கலகங்கள் உருவாகிவருவது தொடர்பாக தேசிய அளவில் விவாதம் நடைபெறத் துவங்கின.

விடுதலை இயக்கம், இத்தகைய சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டியதன் தேவையை அங்கீகரித்தது. அப்போதிருந்த காங்கிரஸ் தலைமை இந்து – முஸ்லீம் தலைவர்கள் அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக முயற்சிகள் மேற்கொண்டது. இதனை பகத்சிங் ஆதரித்தார்.

இன்றையதினம் பாரத்வர்ஷா/இந்தியாவின் நிலைமை உண்மையில் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. ஒரு மதத்தின் பக்தர்கள், மற்றொரு மதத்தின் பக்தர்களை எதிரிகளாகக் கருதப் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். ஒரு மதத்திற்குச் சொந்தக்காரனாக இருப்பதே, இப்போது மற்றொரு மதத்தினனின் எதிரியாக இருப்பதற்குப் போதுமான காரணமாகக் கருதப்படுகிறது. இதனை நம்புவதற்கு நமக்குச் சிரமமாக இருக்கிறது என்றால், லாகூரில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களைப் பார்த்திடுவோம். … இத்தகைய நிலைமைகளில், இந்துஸ்தானத்தின் எதிர்காலம் மிகவும் இருண்டதாகவே தோன்றுகிறது. … இந்துஸ்தானத்தைப் பீடித்துள்ள இத்தகைய மதவெறிக் கலகங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று எவருக்கும் தெரியவில்லை.

இதற்கு மாற்றுமருந்து என்ன? . ‘மதத்தை அரசியலிலிருந்து பிரிப்பதிலேயே இது அடங்கி யிருக்கிறது’ என்று பகத் சிங் இதுகுறித்தும் தெளிவாகப் பதிலளித்திருக்கிறார்.

1914-15இல் தியாகிகள் மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரித்தார்கள். “மதம் ஒருவரின் தனிப்பட்ட சொந்த விஷயம். எவரொருவரும் இதில் தலையிட முடியாது. அதேபோன்று எவரொருவரும் மதத்தை அரசியலுக்குள் புகுத்தக்கூடாது. ஏனெனில் அனைவரையும் ஒன்றுபடுத்தாது, அனைவரையும் ஒன்றிணைந்து செயல்பட துணைசெய்யாது. அதனால்தான் கதார் கட்சி போன்ற இயக்கங்கள் வலுவாக இருந்தன. தூக்குமேடையை நோக்கிச் சென்றபோதும்கூட சீக்கியர்கள் முன்னணியில் இருந்தனர். இந்துக்களும் முஸ்லீம்களும்கூட இதில் பின்தங்கிடவில்லை,” என்று அவர்கள் நம்பினார்கள்.

தற்போது, இந்தியத் தலைவர்கள் சிலரும்கூட மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது, இரு மதத்தினர்க்கிடையே ஏற்படும் சண்டைகளை ஒழித்துக்கட்ட ஓர் அழகான பரிகாரமாகும். நாங்கள் இதனை ஆதரிக்கிறோம்.

மதம், அரசியலிலிருந்து தனியே பிரிக்கப்பட்டால், பின் நாங்கள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும்கூட, நாங்கள் அனைவரும் ஒன்றாக அரசியலில் பங்கெடுக்க முடியும்.”

எனினும், பகத்சிங், வகுப்புவாதத்தை ஒழித்துக்கட்ட இறுதித் தீர்வு வர்க்க உணர்வே என்று அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தினார். அவர் எழுதுகிறார்:

“இத்தகைய மதவெறிக் கலவரங்கள் குறித்து இதயத்தைப் பிழியும் விதத்தில் சம்பவங்களை ஒருவர் கேட்கும்போதும், இதற்கு முற்றிலும் வேறான விதத்தில் கல்கத்தா கலவரங்கள் குறித்தும் ஆக்கபூர்வமான முறையில் சில விஷயங்களை ஒருவரால் கேட்க முடிகிறது. தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலவரங்களில் பங்கேற்கவில்லை. ஒருவர்க்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, அனைத்து இந்துக்களும், முஸ்லீம்களும் ஒருவர்க்கொருவர் தாங்கள் பணிபுரியும் ஆலைகளில் இயல்பாக நடந்துகொள்கின்றனர்.  கலவரங்கள் நடந்த இடங்களில்கூட அவற்றைத் தடுத்து நிறுத்திட முயற்சிகள் மேற்கொண்டனர். இதற்குக் காரணம், அவர்களின் வர்க்க உணர்வுதான். தங்கள் வர்க்கத்திற்கு எது பயன் அளிக்கும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து அங்கீகரித்திருக்கிறார்கள். மதவெறிக் கலவரங்களைத் தடுத்து நிறுத்திட, இத்தகைய வர்க்க உணர்வே அழகான பாதையாக அமைந்திருக்கிறது.”

Remembering Udham Singh: The avenger of the Jallianwala Bagh Massacreஊடகங்கள்

மதவெறிக் கலவரங்கள் குறித்து நுண்ணாய்வு செய்து பகத்சிங் எழுதியதாவது:

“நாங்கள் பார்த்தவரையில், இந்தக் கலவரங்களுக்குப் பின்னால் மதத் தலைவர்களும், செய்தித் தாள்களும் இருக்கின்றன.சில செய்தித்தாள்கள் மதவெறிக் கலகத்திற்கான தீயைக் கொளுத்திப் போடுவதில் சிறப்பு பங்கினைப் புரிந்திருக்கின்றன.”

“இதழியல் தொழில் ஒரு காலத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருந்தது. ஆனால் அது இப்போது மிகவும் அருவருப்பானதாக மாறியிருக்கிறது. இந்தப் பேர்வழிகள், ஆத்திரமூட்டும் தலைப்புகளை மிகவும் பிரதானமாகப் பிரசுரித்து, மக்களிடையே ஒருவர்க்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளும் விதத்தில்  வெறியுணர்ச்சியைக் கிளப்பிவிடுகிறார்கள். இவை கலகங்களுக்கு இட்டுச்செல்கின்றன.  ஓரிரு இடங்களில் மட்டுமல்ல, பல இடங்களில் வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டதற்குப் பிரதானமான காரணம், உள்ளூர் ஏடுகள், மிகவும் மூர்க்கத்தனமான கட்டுரைகளை வெளியிட்டதுதான். இதுபோன்று கலவரங்கள் நடைபெற்ற நாட்களில் வெறித்தனமின்றி, நல்லறிவுடன், அமைதியாக இருந்தவர்கள் மிகச் சிலரேயாவர்.

“செய்தித்தாள்களின் உண்மையான கடமை மக்கள் மத்தியில் கல்வியைப் போதிப்பது, மக்களிடம் காணப்படும் குறுகிய மனோபாவத்தை ஒழித்துக்கட்டுவது, மதவெறி உணர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்திட ஊக்கப்படுத்துவது, அனைவருக்கும் பொதுவான இந்திய தேசிய உணர்வை உருவாக்குவதாகும். ஆனால், அவைகள் தங்களுடைய பிரதான பணியாக, அறியாமையைப் பரப்புவது, குறுகிய மனோபாவத்தைப் போதனை செய்வது, பிற மதத்தினருக்கு எதிராக கலவரங்களுக்கு இட்டுச்செல்லும் விதத்தில் தவறான எண்ணத்தை உருவாக்குவது, இவற்றின் மூலமாக பொதுவான இந்தியத் தேசியவாதம் என்பதை இடித்துத்தரைமட்டமாக்குவது என்ற வகையில் அமைத்துக் கொண்டிருக்கின்றன. இதுதான், இந்தியாவின் இன்றைய நிலைக்குக் காரணமாக அமைந்து, நம் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவைத்திருக்கிறது. நம் இதயத்தில், “இந்துஸ்தான் என்னவாக மாறும்?” என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது.”        

இன்றைய தினம், ஒருசில விதிவிலக்குகள் தவிர, கார்ப்பரேட் ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதம், இதனை நமக்கு சிலிர்க்கும் விதத்தில் ஒத்துப்போகின்றன.

Introduction of electoral bond is violation of Constitution: Sitaram Yechury

சமூக நீதி

பகத்சிங், சமூக நீதி மற்றும் அனைத்து மனிதசமுதாயத்தின் சமத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து தீர்மானகரமான முறையில் அவர் எழுதியிருப்பதாவது:

“… அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.  மனிதர்களுக்கிடையே எவ்விதமான வகுப்புப் பிரிவும், தீண்டுதல் – தீண்டமைப் பிரிவும் இருக்கக்கூடாது. ஆனால் சனாதன தர்மம் இவ்விதம் சாதிப் பாகுபாட்டை ஏற்படுத்துவதற்கு ஆதரவாக இருக்கிறது. இன்றைய இருபதாம் நூற்றாண்டில்கூட, ஒரு தாழ்ந்த ஜாதி சிறுவன், பண்டிட் அல்லது மௌல்வி போன்ற தலைவர்களுக்கு மாலை அணிவிக்க முடியாது.  அவ்வாறு அணிவித்துவிட்டால் பின்னர் அவர்கள் தாங்கள் அணிந்திருந்த உடையுடன் குளித்துவிட்டு வர வேண்டும். அதுவரை தங்கள் பூணூலை அணியக்கூடாது. தீண்டத்தகாதவர்களைத் தொடக்கூடாது. இத்தகைய மதத்திற்கு எதிராக எதுவும் கூறுவதில்லை என்று உறுதி எடுத்திருக்கிறோமா அல்லது இதற்கு எதிராகப் போராடப் போகிறோமா?”

பகத்சிங், “நான் ஏன் நாத்திகன்” கட்டுரையை எழுதியபோது, அவரிடம் இதுபோன்று பகுத்தறிவு, பொருள்முதல்வாதப் புரிந்துணர்வு மற்றும் மார்க்சிய உலகக் கண்ணோட்டம் செல்வாக்கு செலுத்தியது. ஆனால், இதில் மிகவும் முக்கியமாக, அவர் மதம் அல்லது மக்களின் மதவுணர்வுகளை தங்களுடைய குறுகிய மதவெறிக்குப் பயன்படுத்திக்கொள்பவர்கள், மக்களின் எதிரிகள் என்று பகத்சிங்கால் பார்க்கப்பட்டார்கள். மக்களுக்கு முழுச் சுதந்திரத்தை அளிப்பதை மறுப்பதற்கு, மக்களின் மத உணர்வுகளையேப் பயன்படுத்திக்கொள்வதை ஒரு வலுவான ஆயுதமாக இப்போதுள்ள ஆட்சியாளர்கள் கொண்டிருக்கிறார்கள். அன்றைக்கிருந்த பகத்சிங்கின் சிந்தனையோட்டம் இன்றைக்குள்ள நிலைமைக்கு எவ்வளவு சரியாகப் பொருந்துகிறது!

இத்தகைய மாபெரும் புரட்சியாளருக்கு நாம் அஞ்சலி செலுத்தும் அதே சமயத்தில், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, நம் மக்களுக்கு உண்மையான முழுமையான விடுதலையைக் கொண்டுவர பகத்சிங் அளித்துள்ள பங்களிப்புகளின் முக்கியமான அம்சங்கள் சிலவற்றை முன்னெடுத்துச் செல்ல, உணர்வுபூர்வமாகச் செயல்படுவோம்.

நூல் அறிமுகம்: மாக்சிம் கார்க்கியின் ’தாய் நாவல்’ – பூங்கொடி கதைசொல்லி

நூல் அறிமுகம்: மாக்சிம் கார்க்கியின் ’தாய் நாவல்’ – பூங்கொடி கதைசொல்லி




நூல் : தாய் நாவல்
ஆசிரியர் : மக்சீம் கார்க்கி
விலை : ரூ.₹195
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

உலகம் முழுவதும் பல மொழிகளிலும் பதிப்பிக்கப்பட்டு, கோடிக்கணக்கான மக்களால் வாசிக்கப்பட்டு, இன்னும் மக்களால் தொடர்ந்து விரும்பி வாசிக்கப்படும் நூல்களில் தாய் நாவலும் ஒன்று.

புரட்சி என்பது ஒரே நாளில் விளைந்து விடுவது அல்ல. படிப்படியாக நெஞ்சில் கனல் மூண்ட மக்கள் எப்படி ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எழுச்சியூட்ட படுகிறார்கள் என்பதை ஒரு சிறந்த கதை அம்சத்தோடு, மக்சிம் கார்க்கி அவர்கள் எழுதியுள்ளார். அதை மிக சிறப்பான முறையில் தமிழில்மொழிபெயர்த்துள்ளார் தொ. மு.சி.ரகுநாதன். 1917 ரஷ்ய புரட்சிக்கு முன்பு, 1906 ஆண்டு இந்த நாவல் எழுதப்பட்டு வெளிவந்துள்ளது.. இந்த நாவலின் மற்றும் முக்கிய கதாப்பாத்திரம் நீலவ்னா பெலகேயா.. அந்தப் புரட்சி தாய் பற்றிய கதை தான் தாய் நாவல்.
ஜார் அரசரின் ஆட்சியின் போது, தொழிலாளர்களும் விவசாயிகளும் சுரண்டப் பட்டார்கள். அடக்குமுறை தலை விரித்தாடியது. தொழிற்சாலை இயந்திரங்கள் தேவையான மட்டும் தொழிலாளர்களது சக்தியை உறிஞ்சி தீர்த்து விடுவதோடு, மனிதனும் தனது சவக்குழியை நோக்கி ஓரடி முன்னேறி செல்கிறான்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த ஜனங்கள் 10 மணி வரையிலும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். கண்ணியமான இல்லற வாசிகள் தங்களிடம் இருக்கும் சிறந்த ஆடை அணிகளை அணிந்துகொண்டு,பிரார்த்தனைக்காக தேவாலயத்திற்கு செல்வார்கள். வீட்டிற்கு வந்து விட்டு சாப்பிட்டு விட்டு மாலை வரை தூங்குவார்கள். கொஞ்சம் அடாவடி ஆட்கள் சாராயக் கடைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்ததும் மனைவியோடு சண்டை பிடித்து அவர்களை தங்கள் கைகள்  வலிக்கும் வரை அடிக்க செய்வார்கள்.
இளைஞர்களோ அடிபட்ட முகங்களுடன் வீடு திரும்புவார்கள். சிலர் சாராயக்கடை  தரையில் போதை மயக்கத்தில் கிடப்பார்கள். அவர்களை பெற்றோர்கள் தேடி கண்டு பிடித்து வீடு வந்து சேர்ப்பார்கள். அடுத்த நாள் காலையில் தொழிற்சாலையின் சங்கொலி ஒலிக்கும் போது வழக்கம் போல தங்களுடைய சக்தியை இயந்திரங்களின் முன் இழக்கச் சென்றுவிடுவார்கள்.
இப்படி ஆடுமாடுகளைப் போல வாழ்கின்ற மனிதர்களில்  மிகயீல் விலாசவ் தொழிற்சாலையின் சிறந்த தொழிலாளி மிக பலசாலி கூட.. ஆனால் பயங்கரமான குடிகாரன். குடிப்பதும், மனைவியை அடிப்பதும் அவனின் அன்றாட செயல்களில் ஒன்று. அவனின் மனைவி தான் நீலவ்னா பெலகேயா. ஒரே மகன் பாவெல். குடித்து குடித்து குடல் வெந்து இறந்து விடுகிறான். அதுவரை நீலவ்னா பெலகேயா அடி உதையை தவிர எந்த ஒரு சுகமும் அனுபவித்ததில்லை. படிப்பறிவும் இல்லாதவள். அதிக உலக அறிவும் இல்லாததால், அடி உதை வாங்கினாலும் தன் கணவன், தன் பிள்ளை என்று வாழ்கிறாள்.
கணவனை இழந்த பிறகு தன் ஒரே மகன் தனக்கான ஆறுதல் என்று இருக்கும் பொழுது, தன் கணவனைப் போலவே தன் மகனும் குடித்துவிட்டு வீடு திரும்புவதை , பார்த்ததும் அவளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி.
” உன் அப்பா உனக்கும் சேர்த்து குடித்து தீர்த்துவிட்டார். அவர் என்னை படாத பாடு படுத்தினார். உன் தாய் மீது நீ கொஞ்சமாவது பரிவு காட்ட கூடாதா? “
என்ற தாயின் கண்ணீர் , அந்த மகனை மாற்றியது. அவன் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாய் மாறத்தொடங்கியது. மகன் வீட்டிற்கு புத்தகங்கள் கொண்டு வர ஆரம்பித்தான். அவற்றை எல்லாம் ரகசியமாக படிப்பான். படித்ததும் ஒளித்து வைத்து விடுவான். வெளியே சென்று வெகு நேரம் கழித்து வந்தாலும் குடிக்காமல் வீடு திரும்புவான். மெல்ல மெல்ல அவன் பழகும் முறையும் எளிமையும் மென்மையுமாக் மாறிக்கொண்டே இருந்தது. ஒரு நாள் அவன் வீட்டில் ஒரு  மூன்று மனிதர்கள் உரையாடியபடி ஒரு பாதையின் வழியே நடக்கும் படத்தைக் கொண்டு வந்து சுவரில் மாட்டி வைத்தான். அவன் அலமாரிகளில் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. அவன் பேச்சும் நடவடிக்கையும் தாய்க்கு பிடித்திருந்தாலும் ஏதோ ஒரு பய உணர்ச்சி அவளுக்கு இருந்தது.  ஒருநாள் மகனுடன் உரையாடும் பொழுது தடை செய்யப்பட்ட புத்தகங்களை அவன் வாசிக்கிறான் என்பது தெரிகிறது.
ஆயுசு முளைக்க உழைக்கும் தொழிலாளியின் வாழ்க்கை இப்படி அவலமாய் இருக்க, இரண்டு கட்டடங்களாக இருந்த தொழிற்சாலைகள் எல்லாம் என்று ஏழு எட்டு பத்து என்று  அதிகரித்துக்கொண்டே போகி றதே…அதன் காரணம் என்ன?  நம்முடைய வாழ்க்கை ஏன் இவ்வளவு கஷ்டம் நிறைந்ததாக இருக்கிறது என்பதையெல்லாம் நான் தெரிந்துகொள்ள வேண்டுமானால் இது மாதிரியான புத்தகங்கள் வாசிக்கத்தான் வேண்டும் மகன் தாயிடம் மிகப் பொறுமையாக விளக்குகிறான்.
அவருடைய நண்பர்களும் வீட்டுக்கு வருகிறார்கள். புத்தகங்களைப் படிக்கிறார்கள் அவற்றைப் பற்றி எல்லாம் விவாதிக்கிறார்கள். அதில் ஹஹோல் அந்திரெய் என்பவன் யாரும் இல்லாததால் அவனையும் தங்களோடு தங்க வைத்துக் கொள்கிறார்கள்.
மகனின் நண்பர்களும் தோழிகளும் எல்லாம் வரும்போது, தாய்ப் படிப்பறிவு இல்லாதவராக  இருந்தாலும் கூட, அவர்களுக்கு தேநீர் தயாரித்துக் கொடுத்து விட்டு அவர்கள் உரையாடல்களை கவனிக்கிறாள். மெல்ல மெல்ல தாங்கள் வாழ்கின்ற வாழ்க்கையின் அவலத்தை உணரத் தொடங்குகிறாள். தன் மகனின் நண்பர்களையும் தன்னுடைய குழந்தைகளை போல் நேசிக்கத் தொடங்குகிறாள். இந்த உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களும் துன்புற்றுக் கொண்டு தான் இருக்கிறது என்பதை உணர்கிறாள். மெல்ல மெல்ல அவள் இதயமும் புரட்சிப் பாதையில் ஈர்க்கப்படுகிறது.
பாவெல் தான் பணியாற்றும் தொழிற்சாலையில் துண்டு பிரசுரங்களை நிர்வாகத்துக்கு தெரியாமல் விநியோகம் செய்கிறான். அதை அறிந்து காவல்துறை அதிகாரிகள் அவன் வீட்டை சோதனை செய்கிறார்கள். மகனை கைது செய்து சிறைக்கு அழைத்து செல்கிறார்கள். மகன் விட்டு சென்ற பணியை தொடர தாய் முடிவு எடுக்கிறாள். அதுவரை சாதாரண பெண்ணாக இருந்த அந்த தாய் , புரட்சி பெண்ணாக அங்கு தான் மெல்ல உருமாறத் தொடங்குகிறார். உணவு விற்பனை செய்யும் பணியாளாக தொழிற்சாலை உள்ளே நுழைகிறார். யார் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்கிறார்கள் என்று நிர்வாகம், காவல்துறையினர் குழம்பி போகின்றனர்..விடுதலை ஆகி வரும் மகன் தாயின் செயலால் பெருமிதம் அடைந்து , அவரிடம் இன்னும் நெருக்கம் அடைகிறான். புரட்சி இயக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து, மக்களிடையே புரிதலை ஏற்படுத்தி வருகிறது. அந்த சூழலில் வரும் மே தின அணிவகுப்பில் பாவெல் செங்கொடியை கையில் ஏந்திய படி அணிவகுப்பை தலைமை தாங்கி செல்கிறான். மீண்டும் காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறான். தோழர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தாய் தன் வீட்டில் இருந்து வெளியேறி , நிகலாய் என்ற தோழரின் வீட்டில்  தங்கி, தன்னால் ஆன எல்லா வழிகளிலும், புரட்சி இயக்கத்துக்கு உதவி செய்கிறாள். பல வேடங்களில் , சென்று தோழர்களுக்கு புத்தகங்கள் கொண்டு சேர்க் கிறார்.
இந்த கதையில் நீலவ்னா போன்று நிறைய புரட்சிப் பெண்கள் வருகிறார்கள். சாஷா, சோபியா, நதாஷா, லுத்மீலா, தத்யானா போன்ற பெண்கள் எல்லாம் சிறந்த புரட்சிப் பெண்களாக வருகிறார்கள். அதிலும் சாஷா, நிலப்பிரபுவின் மகளாக இருந்தாலும், அவரின் அடக்குமுறைகளால் வெறுப்பு உண்டாகி புரட்சி இயக்கத்தில் இணைந்து பணியாற்றுகிறார். பாவெல் நேசிக்கும் பெண். லூத்மீலா துண்டு பிரசுரங்களை அச்சிட்டு தரும் பெண். சிறையில் இருந்து தப்பிக்க உதவிகள் செய்ய வெளியில் இருக்கும்  தோழர்கள் முயற்சி செய்தாலும், பாவெல் அதை ஏற்றுக்கொள்ளாமல் நீதிமன்றத்தின் விசாரணைகாக காத்திருக்கிறான். விசாரணை எவ்வாறு நடந்தது? இறுதியில் என்னவாயிற்று என்பது தான் மீதிக்கதை.
ஆரம்பத்தில் தன் மகனின் செயலில் பயம் அடைந்தாலும், சமூகத்தில் நிலவி கிடக்கும் இந்த ஏற்றத்தாழ்வுகளை மாற்றி, ஒரு சோசலிச சமுதாயத்தை உருவாக்கும் மகத்தான பணியில் தன் மகன் ஈடுபட்டிருக்கிறான் என்பதை உணர்ந்து, தன்னுடைய ஆன்மாவையும் அந்தப் பயணத்தில் மாற்றிக்கொண்ட ஒரு அற்புதமான தாயின் கதை தான் இந்த நாவல்.
” இந்தச் சமுதாய அமைப்பு தனிமனிதனின் உடலின் மீதும், உள்ளத்தின் மீதும் சுமத்தி இருக்கும் சகல விதமான அடிமைத்தனத்தையும், சுயநலத்தின் பேராசையால் மனிதர்களை நசுக்கிப் பிழியும், சகலவிதமான சாதனங்களையும் எதிர்த்து போராடிய தோழர்களின் கதை.   ‘தனிச்சொத்துரிமை ஒழிக’ ‘உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் மக்கள் கையில் ‘. ‘அதிகாரம் அனைத்தும் மக்களிடம்’… ‘உழைப்பது ஒவ்வொருவருக்கும் கடமை’ இந்த மகத்தான கோஷங்களை முன்வைத்து தான், இந்தப் புரட்சிகள் எல்லாம் எழுச்சி பெற்றது. இந்தப் புரட்சிகள் எல்லாம் இல்லை என்றால், இன்னும் நேரம் காலம் பார்க்காமல், அடிமைகளாய் வேலை பார்க்கும் தொழிலாளர்களாகத் தான் நம்மில் பெரும்பாலானோர் இன்றும் இருந்திருப்போம். இது போன்ற கதைகள் வாசிப்பதற்கு மட்டுமல்ல, வரலாற்றில் எத்தனை விதமான கடின பாதைகளை கடந்து தாண்டி, இன்றைய சொகுசு வாழ்க்கை நமக்கு கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளவும் தான்.
தனது ஆன்மாவை விற்று விடாத நேர்மை நிறைந்த ஒரு தொழிலாளி, மகனின் பாதையில் இணைந்து பயணிக்கும் ஒரு புரட்சித் தாய் இவர்களின் கதை தான் இந்நூல்.

நூல் மதிப்புரை: ஜோசப் ராஜாவின் ‘முற்றுகை’ – பெரணமல்லூர் சேகரன்

நூல் மதிப்புரை: ஜோசப் ராஜாவின் ‘முற்றுகை’ – பெரணமல்லூர் சேகரன்




காற்றைப் போலக் கடத்திச் செல்லவேண்டிய கவிதைகள்
இடதுசாரி எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படித்துக்கொண்டிருப்பதில் இயல்பாகவே திருப்தி தழுவிக்கொள்கிறது. ஏனெனில் கவிதையாகட்டும்,
சிறுகதையாகட்டும், நாவலாகட்டும், கட்டுரையாகட்டும் அப்படைப்பில் மனிதநேயம் இழைந்தோடுவதைக் காணமுடியும். வாசிக்கையில் நம்பிக்கை
ஊற்றெடுத்து உள்ளத்தைக் குளிர்விக்கும். அவ்வகையில் தான் இடதுசாரி எழுத்தாளரான  ஜோசப் ராஜாவின் நூல்களையும் படைப்புகளையும் வாசிப்பதில்  அலாதியான திருப்தி இயல்பாய் ஏற்படுகிறது.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் நாள் இந்தியாவின் தலைநகரான தில்லியில்  துவங்கி விவசாயிகள் போர் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றது. உலகம்
முழுவதும் பேசப்பட்ட இப்போராட்டம் குறித்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த தில்லியில் கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு உலகம் சுற்றாமல்
உள்நாட்டில் முடங்கிக் கிடந்தபோதிலும் போராடும் விவசாயிகளைக் கண்டு உரையாடவோ போர்க்களத்தில் பலியான விவசாயிகளுக்காகத் தமது கட்டுரையில்
ஒருவார்த்தைகூட இரங்கல் தெரிவிக்கவோ விரும்பாத பிரதமர்தான், ரோம் பற்றி எரிந்தபோதே பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னன் போன்ற நரேந்திர
மோடி. இவரோ மயிலுக்கு இரைகொடுத்து இறகைவருடிக் கொண்டிருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறைந்த அவையில்
விவசாயத்தைப் பெரு நிறுவனங்களுக்குப் பலி கொடுக்காமலிருக்க விவசாயிகள் போராடி வருவது குறித்து எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. மாறாக
‘மனதின் குரல்’ என்ற பெயரில் வளர்ந்த தாடியுடன் ‘உலகமகா நடிப்பை’ நடித்துக்கொண்டிருந்தார் நரேந்திர மோடி. விவசாயிகள் மழையில், குளிரில், பனியில்,
வெயிலில் எனப் பருவ நிலை மாறிக்கொண்டிருந்த போதிலும் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளும், உலக
நாடுகளின் குரலும், அரசியல் கட்சிகளின் குரலும், பஞ்சாபைச் சேர்ந்த ஒன்றிய பெண் அமைச்சரின் ராஜினாமாவும் பிரதமராலும் அமித்ஷாவாலும் அலட்சியம்
செய்யப்பட்டன.

‘அந்தோலன்ஜீவி’ என்விவசாயிகள் கேவலப்படுத்தப்பட்டதோடுஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களில் எந்த மாற்றத்தையும் செய்யமாட்டோம், ரத்து
செய்யும் பேச்சுக்கே இடமில்லை எனகர்ஜித்தனர் மோடி அமித்ஷா இரட்டையர். வர்க்கப் போராட்டமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்த விவசாயிகளின்
போராட்டத்துக்குத் தொழிலாளி வர்க்கம் நாடு முழுவதும் கிளர்ச்சிப்பிரச்சாரம் செய்து தில்லியிலும் போர்க்களத்தில் உடனிருந்தது நம்பிக்கையை விதைத்தது.

இந்நிலையில் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என எழுத்தாலும் பேச்சாலும் வரலாற்றுக் கடமையாற்றினார். அதன் ஒரு பகுதியாக எழுத்தாளர் ஜோசப் ராஜாவின்  கவிதைகள் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 முதல் 2021 டிசம்பர் 14 வரை ஓராண்டாக வலம்வந்தன. இவரது எழுத்துக்கள் களத்தில் நின்று விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி போர்த்தீயைவளர்த்தன.

“எழுந்து நிற்பது எவ்வளவு அழகு
அதிலும் எதிர்த்து நிற்பது எவ்வளவு அழகு
சேர்ந்திருப்பது எவ்வளவு அழகு
அதிலும் ஒன்றாய்ப் பத்தாய் நூறாய் ஆயிரமாய்
லட்சமாய்க் கோடியாய் சேர்ந்திருப்பதெல்லாம்
உண்மையிலேயே பேரழகல்லவா”
என வர்ணிக்கும் நூலாசிரியர்..

“ஏ புரட்சிக்காரர்களே
ஒவ்வொரு புரட்சியின்
ஒவ்வொரு வெற்றியிலும்
உங்களுடைய ஆன்மா
எப்படியெல்லாம் மகிழ்ந்திருக்கும்
அந்த மகிழ்ச்சியைக்
கொஞ்சமாக உணரத்தாருங்களேன்”

என புரட்சி ருசிக்காண விழைகிறார் ஜோசப் ராஜா.

இந்தியாவின் சுதந்திரப் போரில் பங்குபெறாத ஆளும் வர்க்கம் தங்களைமட்டுமே ‘தேசபக்தர்கள்’ எனவும் தங்களை விமர்சிப் போரை ‘தேச  விரோதிகள்’ எனவும்
கதைத்துவரும் காலத்தில் போராடும் விவசாயிகளை ..

“இந்த தேசத்தின்
உறுதியான தேசபக்தர்கள்
இந்த தேசத்தின் உண்மையான தேசபக்தர்கள்”
என்கிறார்.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மட்டும் விரோதமானவையல்ல. மாறாக ஒட்டுமொத்த இந்தியர்களுக்கே விரோதமானவை. இதைப் புரிந்து கொள்ளாதவர்களைக் கேள்விக்குட்படுத்துகிறார் நூலாசிரியர்.

சரியான கேள்விதானே.”உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்” என்னும் மகத்தான குறளை மனதின் குரலில் கொச்சைப்படுத்தும் பிரதமர் போலவே தமிழ் மக்கள். பிரதமர் மோடியின் கட்சியைப் பாராளுமன்றத் தேர்தலில் மாற்றாக நிராகரித்தவர்கள் அல்லவா தமிழக வாக்காளர்கள்! எனின் விவசாயிகள் போராட்டத்தை வேடிக்கைபார்ப்பதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் கேள்விக்கலகளை காளால்துளைக்கிறார் கவிஞர்.
போராட்டக் காரர்கள் அழகானவர்களாகத் தெரிகிறார்கள் நூலாசிரியருக்கு‌. போராட்டக்காரர்கள் மட்டுமல்ல. போராட்டத்திற்குத் துணைநிற்பவர்கள் கூடத்தான்.

“மனிதகுல வரலாறு நெடுகிலும்
போராடும் மானுடமே பேரழகாய்
ஒளிவீசிக் கொண்டிருக்கிறது”
எனக் கவிதைக்கு அழகுசேர்க்கிறார் கவிஞர்.

“அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும்
போராடிக்கொண்டிருக்கும்
விவசாயப் பிரதிநிதிகளுக்கும்
நடக்கும் பேச்சுவார்த்தையில்
நம்பிக்கைக்குப் பதிலாக
நல்ல பதிலுக்குப் பதிலாகக்
கொடுக்கப்பட்ட உணவை
வேண்டாமென்று ஒதுக்கி
தாங்கள் கொண்டுவந்த
எளிய உணவிலும்
தங்கள் எதிர்ப்பை
பதிவு செய்கிறார்கள்”

ஊடகங்கள் மறைத்ததை வெளிச்சம்போட்டுக் காட்டி விவசாயிகள் சங்கத்தின் மேன்மைக்கு மெருகு சேர்க்கிறார் நூலாசிரியர்.
ஒரு பானைச் சோற்றுக் குஒருசோறு பதம் போலப் பெண் விவசாய போராளியைத் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார் ஜோசப் ராஜா.

ஒரு வயதான பெண்மணி சொல்கிறார்:
“எல்லாவற்றையும் இழந்துவிட்ட நாங்கள்
கடைசியாக எங்கள் கைகளில் இருக்கும்
நிலத்தையும் இழந்துவிட விரும்பவில்லை
எங்கள் நிலத்திற்காக எங்கள் சந்ததிகளுக்காக
இந்த உயிரே போனாலும்  பரவாயில்லை” யென்று
கம்பீரமாகக்
காளியைப் போலக் கம்பீரமாக
எல்லையை நோக்கி நடந்து செல்கிறாள்.

“விவசாயிகளின் வளர்ச்சிக்காகத்தான்
இந்தச் சட்டங்கள்
என்ற ஆட்சியாளர்களின் வாக்குறுதிகளை
இதற்கு முன்னால் கேட்ட
எண்ணிலடங்கா வாக்குறுதிகளைப் போலவே
அர்த்தமற்ற ஒன்றாகத்தான்
புரிந்துகொள்கிறார்கள்”

என ஆட்சியாளர்களின் பொய் முகத்தைக் கிழித்துத் தொங்கவிடுகிறார் ஜோசப் ராஜா.
குடியரசு தினம் வழக்கமாக உழைக்கும் வர்க்கத்தின் பங்கேற்பில்லாமல் களையின்றி காட்சிப்படுத்தப்படும். ஆனால் 2021 குடியரசு தினத்தன்று

“முதல் முறையாகக்
குடியரசு தின அணிவகுப்பைச்
சீருடை அணியாத
எளிய மனிதர்கள் சிறப்பிக்கிறார்கள்”
எனப் போராளிகளுக்கு மகுடம் சூட்டுவது சிறப்பு.

ஆனால் அதிகார வர்க்கமோ..

“வாழ்விற்காகப் போராடும்
உழைப்பாளிகளை
இந்த உலகத்தின் கண்களுக்குக்
கெட்டவர்களாகவும் மோசமானவர்களாகவும்
காட்டுவதற்காக எடுத்த முயற்சிகள்
தோல்வியடைந்து போகின்றன”
எனும் நூலாசிரியர்…
“எல்லைகளுக்குத் திரும்பி
நங்கூரத்தை இன்னும் ஆழமாகப்
பாய்ச்சிக் கொள்கிறார்கள்
இப்போது
அவர்களின் மேலே
இன்னும் பிரகாசமாக
ஒளிரத் தொடங்குகிறது சூரியன்”

எனும் கவிதை சிறப்பு.

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் செங்குருதி சிந்தி இன்னுயிர் நீத்த விவசாயிகள் ஏராளம். அவர்களுள் ஒருவருடன் தமது கவிதையால் உரையாடுகிறார் நூலாசிரியர்.

“என்னால் மறக்கமுடியாத
ஒருசில முகங்களில்
இரத்தம் சொட்டச் சொட்டக் காட்சிதரும்
உன்னுடைய முகமும்
நிலைத்திருக்கும் என்றென்றும்
எனக்குத் தெரியும் தோழா
உனக்குள் ஒளித்துவைத்திருந்த புயலை
எனக்கு நன்றாகத் தெரியும் தோழனே
இன்னும் அடங்கியிருக்கும் நெருப்பை
நான் நன்றாக அறிவேன் தோழனே
உண்மையைச் சொன்னால்
நான் காத்திருப்பதுகூட
புயலைப் பற்றிய கவிதைகளையும்
நெருப்பைப்பற்றிய கவிதைகளையும்
எழுதிக் கொடுப்பதற்காகத்தான்”

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகள் போராட்டத்தை நசுக்க மேற்கொண்ட அரக்கத்தனமான முயற்சிகளை முறியடித்து முன்னேறிய விவசாயிகளின் வீரத்தை வர்ணிக்கும் நூலாசிரியர் அதேநேரத்தில்..

“அதிகாரத்தின் கரங்களால்
அழுத்தி அறையப்பட்ட
ஆணிகளுக்கு முன்னால்
அன்பின் மலர்ச் செடியை
நட்டுக்கொண்டிருக்கிறார்
வயதான ஒரு விவசாயி
எண்ணிலடங்கா விதைகளை
தன் வாழ்நாளெல்லாம் விதைத்திருந்த
அந்த வயதான கைகளின் பக்குவம்
ஒற்றைச் செடி நடுகையிலும் கூட
ஒளிர்ந்துகொண்டிருப்பதை
வாஞ்சையோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்”
எனப் புகழ்மாலை சூட்டுகிறார் கவிஞர்.

முதலாளிகள் ஆட்சியாளர்களையும், ஆட்சியாளர்கள் காவல்துறையையும் நம்பினாலும் மக்கள் தங்களைத் தாங்களே நம்பத் தொடங்கிவிட்டார்கள் என்பதைக் கிராமங்களின் மகாபஞ்சாயத்துகள் நிரூபிக்கின்றன. இத்தகைய மகாபஞ்சாயத்துகள் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் தீயாய்ப்பரவி விவசாயிகளின் ஒற்றுமையைப் பறைசாற்றினால் ஆயிரம் மோடி அமித்ஷா அதிகாரத்துக்கு வந்தாலும் துடைத்தெறியப்படுவார்கள்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு அடிபணிந்த பா.ஜ.க. அரசு விவசாயச் சங்கங்களின் தலைவர்களை அழைத்துப் பேசாமல் தாமாகவே வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தது. வெறும் அறிவிப்பை மட்டுமே நம்பத்தயாராக இல்லை விவசாயிகள். எனவேதான் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற சட்ட மசோதா நிறைவேறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தது.

“கோரிக்கைகள் நிறைவேறியபின்னும்
இந்தப் போராட்டம் தொடரவேண்டும்
மிகப்பெரிய மாற்றத்திற்காகவும்
புத்தம் புதிய வாழ்விற்காகவும்
புத்தம் புதிய விடியலுக்காகவும்
போராடும் தேவையிருக்கிறது என்பதை
எப்போதும் மறந்து விடாதீர்கள்”

என்னும் ஜோசப் ராஜாவின் விழைவுதானே நம் விழைவும். இந்திய விவசாயிகளின் புரட்சியாக இப்போர் இந்திய வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் நிலையில் அடுத்தகட்ட நகர்வுக்கு இட்டுச்செல்லும் வண்ணம் இலக்கியங்கள் பல பூக்கவேண்டியது போர்க்கள தட்ப வெப்பநிலையின் கட்டாயம். அத்தகைய இலக்கியங்களுள் ‘முற்றுகை’ எனும் ஜோசப் ராஜாவின் கவிதைத் தொகுப்பு நன்முத்தாய் மிளிர்கிறது எனின் மிகையன்று.

கவிதைகளுக்கு இணையாக ‘போராட்டமும் கவிதையும்’ என்னும் முன்னுரை அமைந்துள்ளது. அதன் உள்ளடக்கத்தை, கவித்துவத்தை, உணர்வுப் பொழிவைத் தவறவிடாமல் இந்நூலை வாங்கிப்படிக்கப் பரிந்துரை செய்கிறேன். ஏனெனில் முன்னுரையும் முத்தான கவிதைகளும் வாசிக்க  வாசிக்கத்தான் மானுடத்தை இன்னும் இன்னும் நேசிக்கவைக்கும்.

நூல்: முற்றுகை
பக்கங்கள் 72
விலை ₹ 75
வெளியீடு: தமிழ்அலை
3 சொக்கலிங்கம் காலனி
தேனாம்பேட்டை
சென்னை 600 086
தொடர்புக்கு:044-24340200
                              7708597419

– பெரணமல்லூர்சேகரன்