Suthanthira Katru Poem By R. Sivakumar சுதந்திர காற்று கவிதை - ரா.சிவக்குமார்

சுதந்திர காற்று கவிதை – ரா. சிவக்குமார்

பெண்ணே நீ வலிகளால்
உருவாக்கப்பட்டவள் அல்லள்
வழிகளை உருவாக்கப் பிறந்தவள்.

சுவாசக் காற்றை
சிறைவைத்த சரித்திரம் உண்டா
உன் சுதந்திரமும், உன் உரிமையும்
உன் சுவாசக் காற்றென்பதை
உணர்ந்து கொள்.

வண்ணப்பூக்கள் மலர்வதற்கோ
வண்ணத்துபூச்சிகள் சிறகடிக்கவோ
யாரிடத்தேனும் அனுமதி கோருமா?

விழிநீரில் சரித்திரம் எழுதாதீர்கள்
விண்மீனாய் வெளிச்சமிடுங்கள்
நட்சத்திரப் பிழம்பாய் மனச்சிறகை விரி
சிறகின் தகதகப்பில் தடையெல்லாம்
தகர்ந்துபோகட்டும்.

உன் பாதம் படும் இடம் எல்லாம்
பாதைகள் தான்
முதல் அடியைப் பதித்துவிடு
உன் பாதை தேடி இலட்சம் பாதங்கள்.

தடைகளின் தோள் மீதேறி
தொடுவானம் பார் தோழி
எல்லாம் எட்டிவிடும் தூரம்தான்…

Palina Salugaigal VS Palina Samathuvam Article By ManiMathavi பாலின சலுகைகள் Vs பாலின சமத்துவம் - மணிமாதவி

பாலின சலுகைகள் Vs பாலின சமத்துவம் – மணிமாதவி

காலைலயே கொஞ்சம் வெளில போக வேண்டியது இருந்தது. பைக் எடுத்தப்ப பெட்ரோல் பிளிங் அடிச்சது.. சரி போற வழில போட்டுக்குவோம்னு பங்க்குக்கு வண்டியவிட்டேன்…. ஒரு நாளு பேர் நின்னுட்டு இருந்தாங்க நானும் பின்னாடி நின்னேன்… எனக்கு முன்ன நின்ன ஒரு அங்கிள் முன்ன போமான்னு சொன்னாரு… இல்ல அங்கிள் நீங்க போடுங்க நான் அடுத்து போடுறேன்னு சொன்னேன்….. அவர்க்கு அதுல உடன்பாடில்லை … பொம்பளபிள்ளை நீ முதல்ல போட்டு கெளம்பு நிக்காதன்னு சொன்னாரு….

எனக்கு அவ்வளவு வெறி…. அவருக்கு அடுத்து பெட்ரோல் போட்டா எனக்கு அப்படி ஒன்னும் நேரம் ஆகிடப்போறதில்ல…. அப்படி அவர் விட்டு கொடுத்து நான் முன்னாடி போய் போட்டு நான் எதையும் சாதிக்கபோறதுமில்லை…. நானும் நீங்க போங்க முதல்ல நான் போட்டுக்குவேன்னு சொல்ல…. அவரும் விடாப்படியா நான் பொம்பள பிள்ளைக்கு விட்டு கொடுத்தே ஆவேன்னு நிக்க…. கடைசில பங்க்காரங்க வந்து நீங்க அந்த பக்கம் போங்க… அவங்களுக்கு இந்தபக்கம் போட்டுகுறோம் இரண்டும் ஒரே நேரம்தான் ஆகும்னு சொன்னப்பறம் மனசேயில்லாம முன்ன போனார்….. இதை ஏன் இப்ப சொல்றேன்னு நினைக்காதிங்க மக்கா….. இங்க பாலின சமத்துவம் எந்த அளவு பேசப்படுதோ அதே அளவு பேசப்படவேண்டியது பாலின சலுகைகள்….‌

நீ பொண்ணு அதனால முன்னாடி பெட்ரோல் போட்டு போ…. நீ பொண்ணு பஸ்ல நிக்கவேண்டாம் உட்கார்ந்துக்கோ….. நீ பெண்எழுத்தாளர் உனக்கு இந்த தளம்…. நீ பெண்வேலையாள் அதுனால ஆறுமணிக்கு மேல வேலைபார்க்க வேணாம்…. நீ பெண் போலிஸ் அதனால உனக்கு இந்த பணிலயிருந்து விலக்கு தாரேன்….. இதெல்லாம் சில நாள்களாய் என்னை சுத்தி வண்டா அரிக்குது…. கத்தனும்னு இருக்கு.. நாங்க கேட்குறது பாலின சமத்துவம் பாலின சலுகையில்லன்னு….

இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு…. சலுகைங்குறது நீங்க பார்த்து எங்களுக்கு கொடுக்குறது… சமத்துவம்ங்குறது எங்களுக்கான உரிமை…. எதை ஒரு பெண் செஞ்சாலும் முன்னாடி ஒரு அடைமொழி கொடுக்கபடுது…. பெண் எழுத்தாளர், பெண் இயக்குனர், பெண் காவலர், பெண் வாகன ஓட்டுனர்….. இப்படி எல்லாத்துக்கும் முன்ன பெண் அப்படிங்குறது சொருகலா வந்து தொக்கி நிக்குது…‌‌… சமத்துவம்னு பேசுற பலரே இதை முன்மொழியுறது நடக்குது…..

பெண்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை முற்போக்குதனமா நிறைய பேசப்படுது ஆனால் உண்மையில் இதுதான் பொதிந்திருக்கும் பிற்போக்கு தனம்…… சமீபத்துல அரசு பெண் போலிஸ் அதிகாரிகளுக்கு பந்தோபஸ்து பணியில் சலுகை அறிவிச்சாங்க‌… அப்ப பலரும் முக்கியமா பெண்ணியவாதிகள் பலரும் ஆதரிச்சோம்… சந்தோசப்பட்டோம்.. அப்ப ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி அவங்களோட அதிருப்தியை வெளியிட்டுருந்தாங்க… அதாவது பாலின அடிப்படையில் இப்படி பணியை பங்கிட்டு கொடுக்குறது பழமைவாதத்தை புகுத்துவது…. பெண்கள் பாதுகாப்பு பணில ஈடுபடும்போது ஏற்படும் குறைகளை கலையதான் முயற்சி எடுக்கணுமே தவிர அதுலயிருந்து விலக்கு கொடுக்குறது சிறந்ததல்லன்னு….

அதுவரை அந்த பணிச்சலுகை சரிதான்னு தோனுன எனக்கு அதற்கு பின் கொஞ்சம் எப்படி இந்த சலுகை சரியானதா இருக்கும்னு தோன தொடங்குச்சு…. இங்க பாலின சமத்துவத்துக்கும் பாலின சலுகைக்கும் வேறுபாடு தெரியாம பல பெண்களே பாலின சலுகைக்குதான் போராடுறோம்… பாலின சலுகைக்கும் பாலின பேதத்துக்கும் அதிக வேறுபாடு கிடையாது..‌ இரண்டுமே பிற்போக்கு தனம்தான்…. இப்பதான் கொஞ்ச காலமா வெளில வந்துருக்கோம்..

இப்ப மறுபடி பாலின சலுகைகளை கொடுத்து கொடுத்து முடக்கறத எப்படி ஏத்துக்கப்போறோம்… ஏன் பொண்ணுனா கம்ப்யூட்டர் முன்ன உட்கார்ந்து பார்க்குற வேலைக்கு மட்டும்தானா…. இப்ப சம உரிமை சம ஊதியம்னு குரல் கொடுக்குற நாம் இந்த சலுகைகளை ஏத்துக்கிட்டா உரிமையை பெற முடியுமா…. இந்த வேலைக்கு இந்த சம்பளம்தான்னு பேசுனா என்ன செய்ய முடியும் நாம….

சலுகைக்காக யார்ட்ட போய் நின்னாலும் மரியாதை கிடைக்காது…. எல்லாம் எங்களால் முடியும்னுதானே நாங்க வெளில வாரோம்… அப்பறம் பெண் அப்படிங்குறதால கொடுக்கப்படும் சலுகைகள் எங்களோட திறைமையை குறைச்சு மதிப்பிடுறதில்லையா…. போட்டியே போட விடாம பரிசு கொடுக்குறதுதான் இந்த சலுகை…. ஆணும் பெண்ணும் சமம்ன்னுதான் நாங்க வாரோம்…. நீங்க பொண்ணுன்னு சொல்லி பாவம் பார்த்து கொடுக்குற சலுகைகள் எல்லாம் பழையபடி எங்களை முடக்கத்தான் செய்யும்….

பெண்களுக்கு பணியிடங்கள்ல கொடுக்கப்படுற சலுகைகள் அவங்களோட தகுதியை குறைக்கும்…‌ கழிப்பறை பிரச்சனை, மாதவிடாய் பிரச்சனை, கர்ப்பகால பிரச்சனை போன்றவை, இதுதான பெண்கள் பணியிடங்கள்ல சந்திக்கும் பிரச்சனைகள்….. அதை தீர்க்கதான் வழிபார்க்கணுமே தவிர… இதை காரணம் காட்டி அவங்களுக்கு சலுகைகள்ங்குற பெயர்ல ஒதுக்கக்கூடாது.

சுழற்சிமுறை வேலை கொடுக்கலாம்…. பணியிடங்கள்ல தேவையான வசதிகள் செஞ்சு கொடுக்கலாம்… சலுகைகள் வழங்குறதுக்கும்…. தீண்டாமைன்னு சொல்லி ஒதுக்குனதுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல…. இதை பெண்களுக்கு பழக்கப்படுத்தி பெண்ணுரிமைக்கும் சலுகைக்கும் வித்தியாசம் இல்லாம போய்டுது…. இந்த சலுகைகள் எல்லாம் மறைமுக பிற்போக்கு தனம்தான்… இப்ப சலுகையா இருக்கும் பின்னாள்ல இதை காரணம் காட்டி மறுபடி முடக்க செய்ற சூழல் வரும்….

சலுகைகள் வேற…. உரிமைகள் வேற…. பாலினத்துல பேதமில்லை…. பாலின சமத்துவம் வேணும்னு குரல் கொடுத்து… என்னாலயும் எல்லாம் செய்யமுடியும்னுதான் போராடி போராடி வெளிலவந்துருக்கோம்…. அதையெல்லாம் சலுகைகள்ங்குற பெயர்ல குலைக்காதிங்க… குலைக்கவிடாதிங்க…. எங்களோட திறமை தகுதியை காட்டி நாங்க பெறும் வெற்றிதான் எங்கள் போராட்டத்தோட வெற்றி…. அதுயில்லாம சலுகைகளால எங்கள முன்னிறுத்துறது எங்களுக்கான தோல்விதான்….. எங்களுக்கு சலுகைகள் வேணாம் சமத்துவம் போதும்.

Karkaviyin Kavithaigal 14 கார்கவியின் கவிதைகள் 14

கார்கவியின் கவிதைகள்

பெண் சுதந்திரம் அறிவோம்
**********************************
பெண்ணிற்கு சுதந்திரம் என்பது எல்லா இடங்களிலும் பேசலாம், ஆனால் எப்படி பேசவேண்டும்,என்ன பேசவேண்டும் எந்த விதத்தில் பேச வேண்டும் என்பது அறியாமல் பேசும் பெண்கள் பெண் சுதந்திரத்தை பற்றி பேசும் தகுதியை இழக்கின்றனர்…
ஆடை சுதந்திரம் பெண்ணை போற்றும் படி இருக்க வேண்டும்….!
பேச்சில் சுதந்திரம் பிறர் மனம் கவலைக் கொள்ளாத நிலையில் இருத்தல் வேண்டும்…..!
அனைத்திலும் சுதந்திரம் தேடும் பெண்… அனைத்தையும் நல்வினையில் சாதிக்கும் எண்ணம் கொண்டிருத்தல் வேண்டும்…

சுதந்திரமும் வேண்டும்…
சுற்றமும் தவறாக எண்ணும் அளவிற்கு இருத்தல் வேண்டும் என்றால் எவையும் சரியாகாது….!
வாழ்க்கையை வட்டத்திற்குள் வைக்க வேண்டாம்…
வழிமுறைகளை சரியாக கையாண்டால் போதும்…

பெண்மை..
பல இடங்களில் போற்றப்படுகிறது…!
பல இடங்களில் தூற்றப்படுகிறது…!

ஒவ்வொரு புள்ளியும் முற்றுப்புள்ளியே..!
***********************************************
அதீத தேடலில் நமது மனம் ஒருவரை வெறுக்கும்..
பலரை ஏற்கும்…!
மனித மனம் குரங்கின் பரிமாணம் எப்படியும் பழம் தீர்ந்தபின்பு அடுத்த மரம் பாய்ந்தே தீரும்….!

இருக்கும் வரை இனிக்கும் உறவுகள்..
சில நேரங்களில் இல்லாமை வருத்தம் சார்ந்த இன்ப கவலைகளே….!

நல்லவரை தீயவராக மிகை புரிந்தால் அவர் எவ்வகை நன்மை செய்தினும் தீயவனாகவே அனைவருக்கும் தோற்றமளிக்கிறார்…
தீயவரே ஆனாலும் நன்மை செய்வதை கண்டுவிட்டால் அவர் எத்தீமை செய்யினும் நன்பெயரை பெற்றுக்கொண்டே இருப்பார்….

ஒவ்வொரு சூழலிலும் நமக்குள் உண்டாகும் தயக்கம்…!
ஏதோ ஒரு நல்லதை நாம் தள்ளிபோடும் நிலைக்கு கொண்டு செல்லும்…
மனம் அறியாத பக்கங்கள்….

நேரம் வரும்
****************
நீண்ட நேரமாக வண்டியை உயவினைத் தூண்டும் மனிதனின் வியர்வை சோர்வில் அழுகிறது,
விழி பிதுங்கும் கண்ணீரில் அழுகிறது…!

அதைப் பார்த்துகொண்டே செல்லும் சாலைப்பயணி அருகில் சென்றதும. சற்று குணிந்து சில அடிதூரம் கடந்து தலையை நிமிர்த்துகிறார்…!
யாரும் காணாதது போல் திரும்பிக்கொண்டும், அலைபேசியை காதினில் அடைத்து திணித்துக்கொண்டும் நகர்கிறார்கள்..!
அனைத்தையும் பார்த்து சலித்த அந்த நபர் கோவத்தில் உதைக்கிறார் உயவுபொருள் இயந்திரத்தில் வழிக்கு வந்தது…

என்னவென்றெ அறியாத குழந்தை அருகில் வந்து தாத்தா நான் தள்ளிவிடவா என்றது…
அன்பில் நிறைந்த மனிதம் நம்மைத் தேடி வரும்..
அதற்கான நேரம் வரும்…

Chennaiyin Marupakkam Book By A. Bakkiam Bookreview By V. Meenatchi Sundaram நூல் அறிமுகம்: அ. பாக்கியத்தின் சென்னையின் மறுபக்கம் - வி. மீனாட்சிசுந்தரம்

நூல் அறிமுகம்: அ. பாக்கியத்தின் சென்னையின் மறுபக்கம் – வி. மீனாட்சிசுந்தரம்




நூல்: சென்னையின் மறுபக்கம்
ஆசிரியர்: அ. பாக்கியம்
விலை: 90
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.in

சென்னை மாநகராட்சி தேர்தல் நெருங்குகிறது. ஆங்காங்கு மாணவர்கள் அமைப்புகள், வாலிபர்சங்க அமைப்புகள் பகுதி மக்களின் பிரச்சினைகளை தொகுத்து தீர்வு கோறும் இயக்கத்தை தொடங்கிவிட்டனர். பிப்ரவரி 4, 5 தேதிகளில் வட சென்னையில் உள்ள மாணவர் அமைப்பு போட்டோ கண்காட்சிமூலம் புறக்கணிக்கப்பட்டதை, அவலத்தை காட்டியது.. அடாணி துறைமுக கட்டமைப்பால் உருவாகும் பிரச்சினைகள் மின் நிலையங்கள் சாம்பலை கொசத்தலை ஆற்றில் கலப்பதால் சாக்கடையாகும் சோகம் புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு விளையாட்டுத்திடல் காணாமல் போனது. பூங்காக்கள் அமைக்கும் திட்ட அறிவிப்புகள் கனவாய் போனது இவைகளை எழுத்தால் சொல்வதை விட படங்களால் காட்டுவதால் அதன் தாக்கம் வலிதாகும்.

அதோடு பாரதி புத்தகாலயம் சென்னையின் மறுபக்கம் என்ற கையேடு படங்களால் காட்ட முடியாத பல நிஜங்களை எழுத்துக்களால் படம் பிடிக்கிறது. எழுதியவர் அ.பாக்கியம் மார்க்சிஸ்ட்கட்சியின் மாநில குழு உறுப்பினர், மழைநீர் சாலைகளில் புகுமிடங்களை படம் பிடிக்கலாம் ஏன் புகுகிறது என்பதை எழுத்தால்தான் சொல்லமுடியும், வட சென்னையில் அமில மழை ஏன் பெய்கிறது என்பதை சொல்லால் காட்டமுடியும் புறம்போக்கு ஆக்கிரப்பு வகைகளை அரசே பெரும் நிறுவனங்களுக்கு வழங்குவது, ரீயல் எஸ்டேட் மாஃபியாக்கள் அரசின் உதவியுடன் ஆக்கிரமிப்பது இதுவே அதிகம் வறியவர்கள் வேறு வழியின்றி வாழ அமைக்கும் வாழ்விடங்கள், அறிவியல்பூரவமாக குடியிருப்பு பற்றிய கொள்கை அரசிற்கு இருக்குமானால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.

தவறான நிலப்பயன்பாட்டால் பலகேடுகள் விளைந்ததை ஆதாரங்களுடன் இப்புத்தகம் விளக்குகிறது, அரசின் அறிவியலடப்படையற்ற இச் செயல்களே மழைவெள்ளம் சாலைகளிலும் வீடுகளில் புகும் நிலவரத்தை உறுவாக்குகின்றன என்பதை புரியவைக்கிறது . சாலை போக்குவரத்து வேக தடைகளுக்கும், சாலை அமைப்பால் ஏற்படும் முதுகுவலி நோய்களுக்கும் உள்ள தொடர்பை படம் பிடிக்கிறது.

சமூக நீதி என்றால் சாதி. மத. வர்க்க பேதமின்றி அனைத்துமக்களுக்கும் ஆரோக்கியமாக வாழும் உரிமையை பாதுகாப்பதை அரசு கடமையாக கருத வேண்டும். அதனை உள் ஆட்சி அமைப்பு மூலமே உறுதிபடுத்த முடியும்.என்பதை இப்புத்தகம் உணர்த்துகிறது.

சேவை மணப்பாண்மையுடன் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சிறந்த கை யேடு. சென்னை நகர மக்களுக்கு விடிவு காலம் ஏற்படும்வரை போராடும் அரசியல் கள போராளிக்கு அறிவியல் பூர்வமாக பிரச்சினைகளை அணுக உதவும் புத்தகம். தேர்தல் நேரத்தில் பெருமளவில் சென்னை மக்களின் கவணத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய கையடக்க நூல்.

Anandhavalli Book Written By Lakshmi Balakrishnan Bookreview By Malan நூல் அறிமுகம்: லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் ஆனந்தவல்லி - மாலன்

நூல் அறிமுகம்: லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் ஆனந்தவல்லி – மாலன்



ஜீவன் உள்ள எழுத்து

நூல்: ஆனந்தவல்லி
ஆசிரியர்: லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
தொலைபேசி: 044-24332424
விலை: ரூ 230
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

வரலாற்று சாட்சியம்-1
“ ஒரு கிருகஸ்தன் சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஆபீசுக்குப் போயிருக்கிறான். அவன் சம்சாரம் வேலைகளை முடித்துவிட்டுக் குழந்தையுடன் உட்கார்ந்திருக்கிறாள்.அக்கம் பக்கம் யாருமில்லை. ஓர் ஆள் வந்து சீட்டு ஒன்றைக் கொடுத்தானாம். அதில், ’உன் புருஷன் சாகுந் தறுவாயில் இருக்கிறான். உடனே வா!” என்றிருக்கிறது. இவள் வீட்டைப் பூட்டிக் கொண்டு முன் பின் யோசனை இல்லாமல் புறப்பட்டாள் அந்த நீசன் ஒரு மணிக்குப் புறப்படும் கப்பல் துறைமுகத்திற்கு அவளை அழைத்துச் சென்றான்.

“கப்பலுக்கு எதற்கு வந்தார்?” என்று கேட்டாளாம். “ஆபீஸ் அதிகாரி கப்பல் தலைவனுக்கு ஒரு காகிதம் கொடுத்தனுப்பினார். கப்பலுக்கு வந்து கம்பிப்படிகளில் ஏறும் போது தலைசுற்றி விழுந்து மண்டை உடைந்தது என்றானாம் அவன். அந்தப் பெண் அதையும் நம்பிக் கப்பலில் ஏறினாளாம். மேல் மாடிக்குப் போவதற்குள் கப்பல் புறப்பட்டு விட்டது. அங்கே இவளைப் போல அநேகம் பெண்கள் இருந்தார்களாம். எல்லோரும் கப்பல் நகர்ந்தவுடன் அழுதார்களாம். ஏன் என்று இந்தப் பெண் கேட்க, “நாம் அடிமைகள்!.பிஜித்தீவில் இருக்கும் அடிமைகளுடைய சுகத்திற்காக நாம் நாசம் செய்யப்பட்டோம்!” என்று கதறினார்களாம். இப்படி எவ்வளவு குடும்பங்கள் நாசம் செய்யப்பட்டனவோ!”
– பாரதி சொன்னதாக யதுகிரி – (யதுகிரி அம்மாள், பாரதி நினைவுகள், சந்தியா பதிப்பகம், சென்னை பக்.34)

வரலாற்று சாட்சியம் -2
1662ல் மதுரையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு வேலை தேடி வந்த ஒரு தமிழனின் கதை டச்சுக்காரர்களின் ஆவணங்களில் விவரிக்கப்படுகிறது. மதுரையில் மனைவி மக்களை விட்டுவிட்டு நாகப்பட்டினம் வந்த அவன் வேலை கிடைத்ததும், ஒரு மாதம் கழித்து. அவர்களை அழைத்துவர மதுரைக்கு வந்தான். வந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவனது பக்கத்து வீட்டுக்காரன், பணத்திற்கு ஆசைப்பட்டு, அந்த மனைவியையும் குழந்தைகளையும், டச்சுக்காரர்களிடம் விற்று விட்டான். மதுரைத் தமிழன் பதறி அடித்துக் கொண்டு தரங்கம்பாடிக்கு ஓடினான். அதற்குள் அதிக விலை வைத்து அந்த அடிமைகளை டச்சுக்காரர்கள் போத்துக்கீசியருக்கு விற்று விட்டார்கள். எனவே இவன் அவர்களைத் தன்னுடன் அனுப்பக் கோரிய போது போர்த்துக்கீசிய பாதிரி மறுத்துவிட்டதோடு அல்லாமல், இவனையும் பிடித்து வைத்துக் கொண்டார். அவன் பெரும் போராட்டத்திற்குப் பின் தன்னை விடுவித்துக் கொண்டு மயிலாப்பூர் பிஷப்பிடம் தன் மனைவி மக்களை விடுவிக்குமாறு மனுக் கொடுத்தான்.

மனு நிராகரிக்கப்பட்டது. சரி என் மனைவியை நான் மறுபடி மணம் செய்து கொள்கிறேன், அனுமதியுங்கள் என்று கோரிக்கை வைத்தான். பாதிரி விலைகொடுத்து வாங்கிவிட்டதால் மனைவியும் மக்களும் அவரது உடமை. அவர் சம்மதிக்காமல் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் தன் மனைவியையே மறுபடி மணக்க விரும்பிய அவன் கோரிக்கையும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவன் தீவிரமாக இருப்பதைக் கண்ட பாதிரி, அந்த அடிமைகளைக் கூடுதலாக விலை வைத்து ஒரு இந்து வியாபாரியிடம் விற்றுவிட்டார். அவன் மறுபடியும் இந்து மதத்திற்குத் திரும்பினான்.19
– Nicolao Manucci, Storio de Mogur Vol III Page 128-129 ( எஸ்-ஜெய்சீல ஸ்டீபன் எழுதியுள்ள காலனியத் தொடக்கக் காலம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்)

வரலாற்று சாட்சியம் -3
17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை டச்சுக்காரர்களின் அடிமை வியாபாரம் கொடிகட்டிப்பறந்தது. கிருஷ்ணப்ப நாயக்கரது மறைவுக்குப் பின் விஜயநகர அரசின் பெரும்பகுதி மராத்தியர் கைக்கு வந்தது. தேவனாம்பட்டினம், கடலூர், பரங்கிப்பேட்டை, தரங்கம்பாடி, பழவேற்காடு ஆகிய இடங்களிலிருந்து செயல்பட்டு வந்த டச்சுக்காரர்களின் அடிமை வியாபாரத்தை சிவாஜி தடை செய்தார். டச்சுக் கிழக்கிந்திய கம்பெனியை மூடச் செய்தார். அவர்கள் கடையைக் கட்டிக் கொண்டு மசூலிப்பட்டினத்திற்கு நகர்ந்தார்கள்
– K.A. Nilakanda Sastri, Shivaji’s Charters to the Dutch on the Coromandel Coast, Proceedings of the Indian History Congress Calcutta, 1936

ஐரோப்பியக் காலனியத்தால் கடலுக்கு அப்பால் அனுப்பப்பட்ட நம் பெண்களின் துயர்களைச் சூட்டுக் கோலால் நம் இதயத்தில் எழுதியவர் பாரதி. ” பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது செத்திடும் செய்தி”யை வாசிக்கும் ஒருவர் உள்ளம் நொறுங்கி ஒரு நிமிடமாவது உறைந்து போகாமல் இருக்க முடியாது (வாசித்தால்தானே?)
அயலகத்திற்கு அனுப்பப்பட்ட அடிமைப் பெண்களைப் பற்றி பாரதியாவது எழுதினார்.

ஆனால் உள்ளூர் அடிமைகளின் துன்பங்கள் பற்றி தமிழில் எழுதியவர் அதிகம் இல்லை. பன்னெடுங்காலமாக, சங்ககாலத்திலிருந்தே, தமிழ்நாட்டில் பெண்களை அடிமைப்படுத்தும் வழக்கம் இருந்து வந்திருப்பதால் அதைக் குறித்த சிந்தனை அற்றுப் போயிருக்கலாம் சங்க காலத்தில் வாணிபம் செழித்து வளர்ந்த நெய்தல் பகுதிகளிலும், உணவு உற்பத்தி செய்து வந்த மருத நிலப்பகுதிகளிலும் அடிமை முறை வழக்கிலிருந்தது. போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் தோற்ற மன்னர்களின் மனைவியரையும், பிற பெண்டிரையும் சிறை பிடித்து வந்ததைச் சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு சிறை .பிடித்துக்கொண்டு வரப்பட்ட பெண்கள் காவிரிபூம்பட்டினத்திலுள்ள அம்பலங்களில் விளக்கேற்றி நிற்பதை “கொண்டி மகளிர் என்று ‘பட்டினப் பாலை’ குறிப்பிடுகிறது. ( இது குறித்து விரிவாகப் பேச இங்கு இடமில்லை.புலம் பெயர்தலும் இலக்கியமும் என்று சாகித்ய அகாதெமியில் ஒரு முறை விரிவாக உரையாற்றினேன். அந்தக் கட்டுரையை வாசிக்க விரும்புகிறவர்கள் தகவல் பெட்டிக்கு செய்தி அனுப்புங்கள்)

இந்த நெடும் மரபிலிருந்து விலகியவராக, லக்ஷ்மி பாலகிருஷ்ணன், பெற்ற தகப்பனாலேயே அரசுக்கு அடிமையாக விற்கப்பட்ட இளம் பெண்ணைப் பற்றி எழுதியிருக்கும் நாவல்தான் ஆனந்தவல்லி.அதிலும் டச்சுக்காரர்களின் அடிமை வணிகத்தைத் தடை செய்த சிவாஜியின் வழித்தோன்றல்களாலேயே வாங்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறார்.’உண்மைச் சமபவத்தின் மீது எழுந்து நிற்க்ம் புனைவு’ என்று அவர் குறிப்பிடுவதாலும் அது தொடர்பான ஆவணங்களைப் பார்வையிட்டிருப்பதாகக் கூறுவதாலும் எனக்கு அதைக் குறித்த சந்தேகங்கள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தப் புனைவின் பாத்திரமான கும்பகோணம் சபாபதிப் பிள்ளையினுடைய போராட்டம் மேலே வரலாற்று சாட்சியம்-2 ல் குறிப்பிட்டுள்ள மதுரைத் தமிழனின் வாழ்க்கை போலவே இருப்பது எனக்கு வியப்பும் மகிழ்சியும் அளித்தது. வியப்பு அவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமை. மகிழ்ச்சி புனைவு வாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பதால்.

உண்மையில் இது ஆனந்தவல்லியின் கதையல்ல. அந்த சபாபதியின் கதைதான். நாவலின் பிற்பகுதி வரை அதிகம் விவரிக்கப்படவில்லை என்றாலும் வியக்க வைக்கும் பாத்திரமது. ஏமாற்றி, அவனது ஜாதிக்கு வெளியே, ஐந்து வயதுக் குழந்தைக்கு மணம் செய்வித்து வைக்கப்படும் அவன், அவள் பூப்பெய்தும் முன்னரே பிரிந்து விடும் அவன், அவளோடு ஒரு முறை கூட உடலுறவு கொண்டிராத அவன், மறுமணம் செய்து கொள்ளும் யோசனைகளைப் புறந்தள்ளி, அவளை மீட்பதற்காக அதிகாரங்களோடு நயந்தும் மோதியும் போராட்டங்கள் மேற்கொள்ளும் ஆண் மகன் அவன். அவனை செலுத்துவது எது? ‘அவள் என் சொத்து’ என்கிறான் ஓரிடத்தில்.அது மாத்திரம் காரணமாக இருந்திட முடியாது. ஏனெனில் அது ஈடு செய்யமுடியாத சொத்து அல்ல.

அந்த உந்து சக்தியைப் பற்றி லக்ஷ்மி விளம்பப் பேசவில்லை. அவனுடைய பாடுகளை சித்தரிக்கும் அவர் ஓரிடத்தில் கூட ஆனந்தவல்லி அவள் விலை போய்விட்ட பின்னரோ, அதன் முன்னரோ, அவனைப் பற்றி சிறு கீற்றுப் போலக் கூட நினைப்பதாகக் காட்டவில்லை

அவரின் நோக்கங்களில் ஒன்று உடன்கட்டை ஏறுவதைப் பற்றிய சிந்தனைகளை உசுப்புவது. குடிப்பெருமையை நிலைநாட்ட உயர்குடிப் பெண்களிடம் கணவனின் சிதைக்குள் தீப்பாயும் மனநிலை கட்டமைக்கப்பட்டதாகவும், பொருளாதாரத்தில் அடிநிலையில் இருக்கும் பெண்கள் அத்தகைய அழுத்தங்களுக்கு உள்ளாவதில்லை என்பதைப் பாத்திரங்களின் வழி நிலைநாட்டுவதில் வெற்றி கண்டுள்ளார். சதி குறித்தும் தமிழில் அதிகம் எழுதப்பட்டதில்லை. பிரபல மராத்தி எழுத்தாளர் ரஞ்சித் தேசாய் மராட்டியத்தில் பிரபலமான ரமாபாய் (மாதவராவ் பேஷ்வாவின் மனைவி) பற்றி எழுதிய ‘ஸ்வாமி’ எண்பதுகளின் பிற்பகுதியில் பிரபலமடைந்ததைப் போல இதுவும் புகழ் பெறட்டும் என வாசிக்கும் போது வாழ்த்தினேன்

இந்த நாவலின் சத்தான அம்சங்கள் பல. மூன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். பாத்திரப் படைப்புகள் நாச்சியார்கோயில் வெண்கல வார்ப்புப் போலிருக்கின்றன. அத்தனை அழுத்தம். நயம். நுட்பம். (நாச்சியார் கோயில் வார்ப்பைப் பார்க்க வேண்டுமானால் வீட்டிற்கு வாருங்கள்.ஏதோ வேலையாகக் கும்பகோணம் போன போது நாச்சியார் கோயிலிருந்து ஒரு குழலூதும் கிருஷ்ணன் வாங்கி வந்தேன். ஒரு காலை ஒயிலாக மடித்துக் கொண்டு வேய்குழல் வாசிக்கும் வேணு தன் வாசிப்பில் தானே கிறங்கி நிற்பதை ரசித்து அனுபவித்து வார்த்திருந்தார் சிற்பி. நானும் கிறங்கிப் போய்த்தான் வாங்கினேன். ஊதுகிற கிருஷ்ணனை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்றார்கள் அடப் போங்கய்யா என்று அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன்)

இரண்டாவது செறிவான மொழி. “தைலத்த தேச்சு தலையெழுத்தை அழிக்க முடியுமா?’ ‘சமயக் கட்ட மாடு கன்னு போட்ட எடமாட்டம் ஆக்கி வைச்சிருப்பா’ ஆசிரியர் விரிவாக வாசிக்கும் வழக்கமுள்ள படிப்பாளி என்பதையும் ஊகிக்க அவரது நடை இடமளிக்க்கிறது.’ கண்டனன் கற்பினுக்கு அணியை என்பதைப் போல அரசருக்கு ஆசுவாசமளித்தார்’ ‘சிருங்கார மாளிகையில் இருந்தாலும் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ எனும்படிக்கு கெட்ட பெயரெதுவும் எடுக்காமல்’ தஞ்சை வழக்கு தாரளமாகப் புழங்குகிறது. என்றாலும் சில சொற்கள் (எ-டு: தோஷோரோபம்,தேசஸ்த பிராமணர், ராஜகோரி, தர்ஜமா) இளந்தலைமுறைக்கு அந்நியமாக இருக்கும். அவற்றின் தலையில் நட்சத்திரமிட்டு, காலடிக் குறிப்பில் அவற்றை விளக்கியிருக்கலாம்

மூன்றாவது கதை சொல்லும் விதம். பெண்கள் ஜடை பின்னிக்கொள்ளும் வழக்கமிருந்த காலத்தில் கூந்தலை மூன்றாக வகிர்ந்து கொண்டு ஒவ்வொரு காலையும் மற்றொன்றின் மீது மாற்றி மாற்றிப் போட்டு சரசரவென்று பின்னலை வளர்த்தெடுப்பார்கள். லக்ஷ்மியும் கால இழைகளை முன்னும் பின்னும் மாற்றிப் போட்டு வந்தாலும் வாசிப்பவனுக்கு குழப்பமில்லாமல் இட்டுச் செல்கிறார்

நிறைய வாசித்திருப்பார், நிறைய உழைத்திருக்கிறார். தி.ஜானகிராமனுடன் பேசிக் கொண்டிருந்த ஒரு சமயம் நல்ல சங்கீதம் பற்றிப் பேச்சு வந்தது. “பாட்டில ஜீவன் தெரியணும். சிரமம் தெரியக் கூடாது” என்றார் அவர். பின் ஒரு சின்ன இடைவெளிக்குப் பின் “எழுத்திலும்தான்” என்றார் புன்னகைத்தபடி.
“சிரமம் இல்லாவிட்டால் ஜீவன் இல்லை” என்றேன். அதற்கு வார்த்தையாக பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால் அதைப் புன்னகையால் அங்கீகரித்தார்.
இது ஜீவன் தெரியும் எழுத்து.

Samam ShortStory By Shanthi Saravanan. சமம் சிறுகதை - சாந்தி சரவணன்

சமம் சிறுகதை – சாந்தி சரவணன்




அந்த குளிர்ந்த கழிப்பறை கதவை பாட்டு பாடிய வண்ணம் திறந்த நீலுவிற்கு ஆச்சரியம். துப்புரவு பணியாளர் முனியம்மா அக்கா மும்மரமாக வாஷ்பேஷன் ஸ்லாப் மேல் பேப்பர் வைத்து ஏதோ சிந்தித்த வண்ணம் எழுதிக் கொண்டிருந்தார். நீலு வந்ததை கூட அவர் உணரவில்லை.

நீலு, “அக்கா என்ன உங்க அத்தானுக்கு லவ் லெட்டரா” எனக் குரல் கேட்டவுடன் திடுக்கிட்டு திரும்பினார்.

“மன்னிச்சுக்கோங்க மா”, என்று அந்த தாளை பரபரப்பாக மறைக்க முயற்சித்தார்.

“என்ன மறைக்கிறீங்க காட்டுங்க”, என்றாள் நீலு

தயங்கியவாறே முனியம்மா அக்கா, அந்த தாளை காண்பித்தார்.

முத்து முத்தான கையெழுத்தில் இருந்த அந்த தாளை வாங்கி வாசித்தவள் மலைத்து போனாள், நீலு.

“பயணம்” என்ற தலைப்பில் சிறுகதை எழுதி இருந்தார்

அக்கா, “இது நீங்க எழுதிய கதையா? நீங்க எழுதுவீங்களா?”

முனியம்மா அக்கா தயக்கத்தோடு, “எழுதுவேங்க மா” என்றார்

“என்ன படிச்சிருக்கீங்க?”

“எட்டாவது வரைக்கும் படிச்சிருக்கேன் மா” என்றார்.

“ஏன் இதுவரைக்கும் எங்கள் யாரிடமும் கதை எழுதுவேன் என சொன்னதில்லை, அக்கா” என கேட்ட நீலுவை பார்த்து, “நாங்க எல்லாம் படிச்சிருக்கோம் என்று சொன்னாவே ஒத்துக்க மாட்டாங்க மா? கதை எழுதுவோம் என சொன்னா நம்பவா போறாங்க மா?” “அது மட்டும் இல்லாமல்‌ நாங்க எல்லாம் பாத்ரூம் கழுவ தான் லாக்கி” என்று சொல்லுவாங்க என்றார் ஆதங்கத்தோடு.

“ஏன் அப்படி சொல்றீங்க?”.

“நிஜம் தான்”, மா எங்க வீட்டிலேயே நம்ப மாட்டாங்க. வீட்ல யாருக்கும் தெரியாம நான் எழுதிய கதைகளை என் புடவை வைக்கிற அலமாரியில் உள்ளே மறைத்து வைத்து விடுவேன்.

நான் வேலை எல்லாம் முடிச்சு ராத்திரிதாமா புத்தகம் படிப்பேன், கதை எழுதுவேன். வாசிக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். எழுதுவதும் பிடிக்கும். எல்லா கதையும் சின்ன சின்ன பேப்பர்ல எழுதி ஒரு பையில் போட்டு தான் வீட்டில் வைச்சிருக்கிறேன். எப்போவேல்லாம் நேரம் கிடைக்குதோ அப்ப எல்லாம் என் கதைக்கு நானே ஒரு வாசகரா படித்து பார்த்து கொள்வேன்,” மா என்ற முனியம்மாவை ஆச்சிரியத்தோடு பார்த்து, “இது வரைக்கும் எத்தனை கதை எழுதி இருக்கீங்க அக்கா?” என கேட்டாள் நீலு.

மெதுவாக, “ஒரு 15 கதை எழுதி இருக்கேன்” மா என்ற முனியம்மாவை பார்த்து

“15 கதையா” என ஆச்சரியத்தோடு!”, கேட்டாள் நீலு.

“ஆமாம்மா”

நாளைக்கு கண்டிப்பா அந்த கதைகளை இங்கே எடுத்துட்டு வாங்க அக்கா.

என்னுடைய தோழி ஒரு பதிப்பகம் வச்சிருக்காங்க அந்த கதைகளை நாம அவங்ககிட்ட கொடுக்கலாம். அவங்க அத படிச்சு பார்த்துட்டு தேர்வு செஞ்சு புத்தகமாக வெளியிட வாய்ப்பு இருக்கு என்றாள் நீலு.

நம்பமுடியாமல் முனியம்மா நீலுவை பார்த்துக் கொண்டே இருந்தார்.

“என்னக்கா நான் சொல்றது புரியுதா நாளைக்கு கண்டிப்பா அந்த கதைகளோட என்ன வந்து பாருங்க…

தயக்கத்தோட, “சரி மா”, என்றார்.

ரெஸ்ட் ரூம் போயிட்டு தன்னுடைய கேபினுக்கு வந்த நீலு தன் தோழி சங்கீதாவை அலைபேசியில் தொடர்பு கொண்டாள்.

“என்னங்க மேடம் எப்படி இருக்கீங்க”.

“நான் தான் அதை கேட்கும்”, நீலு. இப்போ தான் உனக்கு டைம் கிடைத்ததா பேசுவதற்கு

“சாரி டி” என்றாள் நீலு.

தோழிகள் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு… “சங்கீதா எனக்கு ஒரு உதவி வேண்டும்” என்றாள் நீலு

“சொல்லு”, நீலு

எங்க ஆபிஸில் வேலை செய்யும் முனியம்மா அக்கா சிறுகதை எழுதுவாங்களாம். எனக்கே இப்போது தான் தெரிந்தது. “பயணம்” என்ற சிறுகதை மிகவும் சிறப்பாக இருக்கு பா‌.

இன்னொரு விஷயம் அவங்க 15 கதை எழுதி வீட்டில் வைத்து இருக்காங்களாம்.

“என்னடி சொல்றே” என்று ‌ஆச்சிரயத்தோடு சங்கீதா கேட்க

“ஆமாம் பா. நீ எப்படியாவது அவுங்க கதையை வெளிவர செய் பா…. அது அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை தரும்….” என்றாள்

“சர்டன்லி …. நீ அவுங்களை நாளைக்கு வந்து‌ என்னை பார்க்க சொல்லு. கதை எல்லாம் எடுத்து வர சொல்லு” என்றாள்.

“தேங்க்யூ பா”, என்றாள் மகிழ்ச்சியாக.

உடனே, “முனியம்மாவை இன்டர்காமில் அழைத்தாள்”, நீலு

“சொல்லுங்க ‌மா”

நாளைக்கு மறக்காம இந்த ‌அட்ரஸ்ஸுக்கு உங்க கதையெல்லாம் எடுத்துக் கொண்டு போங்க கா. அங்கே சங்கீதா என் பிரென்ட் இருப்பாங்க. உங்களைப் பற்றி சொல்லி இருக்கேன். கண்டிப்பாக உங்க கதைகள் வெளிவரும். நாளைக்கு லீவ் எடுத்துக்கோங்க. நான் மேனேஜரிடம் ‌சொல்லிவிடுகிறேன் என்றாள் நீலு சங்கீதாவின் முகவரியை கொடுத்தாள்.

முனியம்மா குரலில் ஒருவித மகிழ்ச்சி.

“மிகவும் நன்றி மா….” என தழுதழுத்து அவர்களின் குரல்..

மறுநாள் நீலு ஆபிஸ்க்குள் நுழையும் போது முனியம்மா அக்கா மாப் செய்து கொண்டிருப்பதை பார்த்தவுடன் நீலுவுக்கு சட்டென்று கோபம் வந்தது‌

அக்கா “என் கேபினுக்கு வாங்க” என் சொல்லி விருட்டென சென்றாள்.

“அவளை தொடர்ந்தார்”, முன்னியம்மா

“நான் லீவு தானே எடுத்துக்கோங்க”, என சொன்னேன் என்ற நீலு நிமிர்ந்து பார்த்தபோது முன்னியமா அக்கா அழுதுக்கொண்டு இருந்தார்,

அக்கா “என்னாச்சு…சாரி … உங்க நல்லதுக்கு தானே சொன்னேன் என்றவளிடம்…

“நீங்க தான் மா என்னை மன்னிக்கனும். நேற்று ஆசையா அந்த கதையை எடுக்க போனேன். அந்த கதைகள் எல்லாம் கானோம் மா. வீடு முழுசா தேடிப் பார்த்துவிட்டேன். என் புருஷன் குடிக்க காசு வேணும் என்று அந்த கதை எழுதிய பேப்பர்களை பேப்பர் கடைக்காரனிடம் போட்டு விட்டானாம். என் தலை எழுத்து. நான் என்ன செய்வது. மகராசி நீங்க உதவறேன் சொன்னிங்க….. எல்லாம் என் தலை எழுத்து மா. ஆனால் நான் விட மாட்டேன் மா. திருப்பி எழுதுவேன். உங்க கிட்ட வந்து காமிப்பேன் என சொல்லிவிட்டு மாப் போட அழுதுக் கொண்டே வெளியே சென்றார்……

சங்கீதாவை அழைத்து தகவலை பகிர்ந்து கொண்டாள்.. நீலு

சரி நீலு, “கண்டிப்பாக அவர்கள் எழுதினால் நான் அந்த கதைகளை பதிவு செய்து தருகிறேன்” என்றாள். சிறிது நேரம் மனம் எதிலும் செல்லவில்லை. அமைதியாக சற்று நேரம் அமர்ந்து இருந்தாள் நீலு. அடுத்த நொடி ஆயிரம் அதிசயங்களை சுமந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே….

அதே போல, அடுத்த நொடி நீலுவிற்கு, ஆச்சரியம் காத்திருந்தது. குடும்ப சுற்றுப்பயணம் செல்ல இந்த முறை நிர்வாகம் அவள் பெயரை தேர்வு செய்து உள்ளதாக சுற்று அறிக்கை கொண்டு வந்த அட்டண்டர் கமல் சொன்னவுடன் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றாள். நீலு அவளின் கணவன் ராம் மகன் சுந்தர் மகள் சுஷ்மிதா நால்வரும் செல்லலாம். அதே சமயம்இன்டர்காம் அழைத்தது

‘ஹலோ”, என்றாள் .

மறுபக்கம் மேலாளர் “வாழ்த்துக்கள்”, நீலு. இந்த வருடம் ஃபேமிலி டிரிப்க்கு கம்பெனி உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் மலேசியா செல்ல தேர்ந்தெடுத்து உள்ளார் நீங்கள் கன்பார்ம் பண்ணவுடன் டிக்கெட்டுகள் புக் செய்துவிடலாம்.

“தேங்க்யூ சார்.”

மற்றொரு குட் நியூஸ் பிரோமஷன், மற்றும் இன்கிரிமெண்ட் 15,000/-

நீலுவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “நான் எதிர்பார்க்கவே இல்லை சார் மிகவும் நன்றி சார்” என்றாள்.

“என்ஞ்சாய் யூர் ஃபேமிலி டிரிப்” என மேலாளர் மறுபடியும் வாழ்த்துகள் கூறி வைத்தார் ‌

அடுத்த நிமிடம் நீலு கணவன் ராமிற்கு போன் செய்தாள். “என்னங்க இன்று வீட்டுக்கு வந்தவுடன் ஒரு சர்ப்ரைஸ்” என்றாள்.

ராம், “என்ன? இப்பவே சொல்லு? எனக்கு வேலை இருக்கிறது” என்றான்

“இல்லை இல்லை வீட்டுக்கு வந்த தான் சொல்லுவேன்”, என போனை வைத்து விட்டாள்.

அப்பா, அம்மா, தம்பி அனைவரையும் அழைத்து அந்த சந்தோஷமான செய்தியை சொல்லிவிட்டாள்.. அனைவருக்கும் மகிழிச்சி… அம்மா, கோயிலுக்கு போய் அர்ச்சனை செய்துவிட்டு போ மா.. டிரஸ் எல்லாம் பத்திரமா எடுத்து வைத்திடு. பசங்க பத்திரம்.
“சரி மா,….சரி” என்றாள்

அதன் பின் அவளுக்கு வேலையே ஓடவில்லை..எப்போது மணி ஐந்து ஆகும் என காத்திருந்தாள். அலுவலக தோழர்களுக்கு அதற்குள் விஷயம் தெரிந்துவிட்டது. சிலர் உள் அன்போடும் பலர் வயிற்றில் பயரோடும் வாழ்த்துகளை சொல்லி சென்றனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை வீட்டுக்கு சென்று அனைவைரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என காத்திருந்தாள்.

நிமிடங்கள் மெதுவாக சென்றது. மாலை ஐந்து ஆனவுடன் தன்னுடைய ஸ்கூட்டி பெப் எடுத்துக்கொண்டு வேகமாக அடையார் ஆனந்தபவன் சென்று அனைவருக்கும் பிடித்த பாதாம் அல்வா வாங்கி கொண்டு வீட்டுக்கு விரைந்தாள்.

இந்தச் செய்தியை கேட்டவுடன் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சி மழையில் நனையப் போகிறார்கள் என நினைத்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

“அத்தை மாமா ராம் செல்லம்ஸ்”, அனைவரும் இங்கே வாங்க ‌

சலித்துக்கொண்டே அத்தையும் மாமாவும் வர ராமும் தான்…….குழந்தைகள் ஆர்வத்தோடு வெளியே வந்தார்கள்.

முதலில் கையில் இருந்த லிஸ்ட்டை அத்தை மாமாவிடம் கொடுத்துவிட்டு, “அத்தை மாமா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க என்றாள்”.

எதற்கு என்று அறியாமல் பார்த்த அத்தை மாமாவிடம்,”எனக்கு ப்ரமோஷன் கிடைத்திருக்கிறது இன்கிரிமெண்ட் கொடுத்திருக்கிறார்கள் ஃபேமிலி டிரிப் மலேசியா செல்ல எங்கள் நான்கு பேருக்கும் டிக்கெட் எடுத்து தருவதாக சொல்லி இருக்கிறார்கள் அத்தை” என்றாள்.
உடனே அத்தை “என்நேரமும் ஆபிஸிலேயே இருந்தா கிடைக்காமல் என்ன செய்யும் என” கூறிவிட்டு ஒரு வாழ்த்து கூட சொல்லாமல் உள்ளே சென்று விட்டார். மாமா பின் தொடர்ந்தார்.”

இது தான் விஷயம் என்று எனக்கு போனிலேயே சொல்லி இருக்கலாமே என்றான் ராமு.

ஃபேமிலி டிரிப் எல்லாம் வேண்டாம் இதை வைத்து உங்கள் ஆபீஸில் உன்னை மேலும் வேலை வாங்குவார்கள். அதுவுமில்லாமல் அப்பா அம்மாவிற்கு இது பிடிக்காது நாளை ஆஃபீஸ் போனவுடன் வேண்டாம் என்று சொல்லிவிடு சாரிமா… என சொல்லி எதுவும் நடக்காத மாதிரி, தலை வலிக்கிறது ஒரு காபி போட்டு கொண்டு வா பிளிஸ் என்று சொல்லி காலை வந்த நாளிதழை எடுத்துக்கொண்டு ரூமுக்குள் சென்று விட்டான்.

குழந்தைகள் இருவரும், “அம்மா அம்மா மலேசியா போலாமா ப்ளீஸ்மா நல்லா இருக்குமா ஜாலியா இருக்கும்” என்றார்கள்.

நீலு “நீங்க பெரியவங்க ஆன அப்புறம் போலாம்” என்றாள் அமைதியாக.

இந்தாங்க ஸ்விட் எடுத்துக்கிங்க என கொடுத்துவிட்டு, ஏதும் சொல்லாமல் கைப்பையை ஹாலில் போட்டுவிட்டு காபி போட அடுப்பங்கரை சென்றாள்.

குழந்தைகள் ஸ்வீட் எடுத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்கள்.

வீட்டுக் காலிங் பெல் அடித்தது.

நீலு போய் கதவைத் திறந்தாள்.

வாசலில் விமலா அவளுடைய நாத்தனார்.

வாங்க வாங்க… “அத்தை மாமா அண்ணி வந்து இருக்காங்க ” பாப்பா என்ன திடிரென்று என்று கேட்டுக்கொண்டு மாமாவும் அத்தையும் முகத்தில் மகிழ்ச்சியேடு அவர்களை வரவேற்றார்கள்.

“அப்பா அம்மா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க”

“என்னமா என்ன விசேஷம்” என்றனர்.

“எனக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு. அயிரம் ருபாய் இன்கிரிமெண்ட் கொடுத்திருக்காங்க. அது மட்டுமல்ல ஊட்டிக்கு குடும்பத்தோடு சென்று வர டிக்கெட் எடுத்துக் கொடுத்து இருக்காங்க நாளைக்கு கிளம்புறோம் உங்ககிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்

“சூப்பர்மா. ரொம்ப மகிழ்ச்சி நீ புத்திசாலி. உனக்கு கிடைக்காமல் அது யாருக்கு கிடைக்கும். எல்லாம் உன் உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் மா ” என்றார் மாமியார் புன்னகையோடு.

டேய் ராம் “இங்க வாடா வந்து தங்கையை பாரு அவளுக்கு ஊட்டிக்கு ஃபேமிலி டிரிப் கொடுத்திருக்காங்களாம்.”

உள்ளே இருந்து வந்தான் ராம்

“சூப்பர் கங்கிராஜுலேசன் உன் திறமைக்கு இது எப்போதோ கிடைக்க வேண்டியது மா”….என …..

நீலு எல்லோருக்கும் காபி கொண்டு வா, மாப்பிளை என்ன சொன்னார் என கேட்டு கொண்டு இருந்தார் மாமனார்..

அவருக்கும் ரொம்ப மகிழச்சி பா. அவர் தான் டிரஸ் எல்லாம் பேக் செய்து கொண்டு இருக்கிறார்…

ஹாலில் குடும்பமாக மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்

கண்களில் வருகின்ற நீரைத் துடைத்துக் கொண்டு விமலாவுக்கு காபி போட்டு கொண்டு வந்து கொடுத்தாள் நீலு. “வாழ்த்துகள் அண்ணி எனக்கூறி” மாலை டிபன் ரெடி செய்ய அடுப்பங்கரை சென்றாள்…

மனதிற்குள் முனியம்மா அக்கா வந்து சென்றார் …. அவர்களின் முன்னேற்றத்திற்கு தகுதி, சாதி மட்டுமே தடையில்ல.

பெண்களுக்கு பல இடங்களில், ஏன் உறவுகளில் கூட சமம் இல்லை. பாராட்டுகளும் பரிசுகளும் அங்கிகாரங்களும் ஆட்களை பார்த்தே பல இடங்களில் கொடுக்கப்படுகிறது. ஏன்? இதற்கு பதில் பல உறவுகளில் இல்லை. பெண்களை சமமாக பார்க்க பழக வேண்டும். அதற்கு குடும்பத்தில் இருக்கும் பெண், ஆண் இருபாலரிடத்திலும் புரிதல் வேண்டும்.

தன் மகளின் திறமைகளை மதிக்க தெரிந்த அப்பா என்ற உறவில் இருக்கும் ஆண் மனைவியின் திறமைகளை மதிக்க தயங்குவது ஏன்? ஆதிக்கத்தை அன்பு இடமாற்றம் செய்யலாமே!

தன் தமக்கையின் திறமைகளை மதிக்க தெரிந்த அண்ணன் என்ற உறவில் இருக்கும் ஆண் மனைவியின் திறமைகளை பாராட்ட தயங்குவது ஏன்? அதிகாரத்தை அன்பினால் இடமாற்றம் செய்யலாமே!.

தன் மகளின் திறமைகளை மதிக்க தெரிந்த அம்மா என்ற உறவில் இருக்கும் பெண், மருமகளின் திறமைகளை மதிக்க தயங்குவது ஏன்? பொறாமையை, அன்பினால் இடமாற்றம் செய்யலாமே!.

தன் அம்மாவின் திறமைகளை மதிக்க தெரிந்த மகள் என்ற உறவில் இருக்கும் பெண், மாமியாரின் திறமைகளை மதிக்க தயங்குவது ஏன்? போட்டியை, அன்பினால் இடமாற்றம் செய்யலாமே!.

இப்படி பல சிந்தனைகள் அவளை ஆட்கொண்டது? எதற்கும் அவளிடத்தில் பதில் இல்லை. ஆனால் “புரிதல்” ஒன்றே தீர்வு என தோன்றியது.

இந்த அன்பினால் அடிமைப் பட்டு இருக்கும் பெண் சமூகம் இடையில் வந்ததே. தாய் வழி சமூகம் நமது சமூகம் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆண் மட்டுமே அன்றி பெண்னே பெண்ணின் வெற்றிக்கு தடை விதிக்க கூடாது.

மேகங்கள் கடந்து செல்லத்தான் வேண்டும். ஒரு நகர்வு அனைத்திலும் அவசியம். இல்லையெனில் அதை ஜடம் என்றே நினைத்து விடுவோம் என யோசித்தப்படி இருந்தாள் நீலு.

இதற்கிடையில் “அலுவலகத்தில் எதை சொல்லி வரவில்லை” என சொல்ல போகிறோமோ தெரியவில்லை என்ற மன சிக்கலில் இருந்து விடுபட்டு மேனஜர் அவர்களை அழைத்து அடுத்த முறை வாய்ப்பை பயன்படுத்தி கொள்கிறேன் என நாசுக்காக சொல்லி விட்டாள்.

அடுத்த தேர்விலிருந்த லில்லிக்கு அந்த வாய்ப்பு அளிப்பதாக மேனஜர் சொன்னார்.

லில்லியும் சக தோழமை தான். மனம் சற்றே லேசானாது.

அடுத்து அவள் சிந்தனையில் முனியம்மா அக்கா கதை விரைவில் வெளியிட முயற்சிக்க வேண்டும். அடுத்த முறை அமெரிக்கா வாய்ப்பு நமக்கு கிடைக்கும் கண்டிப்பாக பயணிப்போம்  என்ற நம்பிக்கையோடு…. இப்போது பிள்ளைகளின் பிராஜக்ட் வர்க் என்ன உள்ளது?….நாளை அலுவலகத்தில் என்ன என்ன பணிகள் உள்ளது,.. என மனதில் எண்ணியபடி, டிபன் பறிமாறி கொண்டு இருந்தாள் நீலு…….

The success of the peasant struggle will have great consequences Article in tamil translated by Sa Veeramani விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி விரிவான அளவில் விளைவுகளை ஏற்படுத்திடும் - தமிழில்: ச.வீரமணி

விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி விரிவான அளவில் விளைவுகளை ஏற்படுத்திடும் – தமிழில்: ச.வீரமணி




பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்து சரணாகதி அடைந்திருப்பதன்மூலம், சம்யுக்த கிசான் மோர்ச்சா என்னும் பதாகையின்கீழ் ஒன்றுபட்ட விவசாயிகளின் போராட்டம் வரலாறு படைத்திடும் வெற்றியை ஈட்டியிருக்கிறது. இந்த வெற்றியானது, விவசாயத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், மேலும் விரிவான அளவில் பல்வேறு விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய வெற்றியாகும்.

இதில் முதலாவதும், முதன்மையானதும் என்பது, விவசாயிகளின் அடிப்படையிலான விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதரங்களுக்கான உரிமையையும் வெற்றிகரமாகப் பாதுகாத்திருப்பதன் மூலம், மோடி அரசாங்கத்தால் பிடிவாதமானமுறையில் பின்பற்றிவரப்பட்ட கார்ப்பரேட் ஆதரவு நவீன தாராளமய நிகழ்ச்சிநிரலுக்குப் பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாகும்.

இரண்டாவதாக, விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி, ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதித்து எதேச்சாதிகாரமான முறையில் ஆட்சி செய்தவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள பலத்த அடியாகும். தொழிலாளர் வர்க்கத்தால் ஆதரவு அளிக்கப்பட்டு, பெரும் திரளான விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட இயக்கம் நாடாளுமன்றத்தையும், நாடாளுமன்ற நடவடிக்கைகளையும்கூட ஓரங்கட்டிவிட்டு, தானடித்த மூப்பாக நடந்துகொண்ட எதேச்சாதிகார நடவடிக்கைகள் மீது வீசப்பட்டுள்ள அடியுமாகும்.

மூன்று வேளாண் சட்டங்களும் முதலில் 2020 ஜூனில் அவசரச்சட்டங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டன. இவ்வாறு அவசரச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது எவரிடமும் கலந்தாலோசனைகள் செய்திடவில்லை. நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குக்கூட அனுப்பிடாமல், மாநிலங்களவையில் உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்குக்கூட விடாமல், இவற்றின்மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்புவதற்கும் அனுமதிக்காமல், மிகவும் அடாவடித்தனமான முறையில் நிறைவேற்றப்பட்டது. இத்தகைய எதேச்சாதிகார நடைமுறைக்குத்தான் மாபெரும் விவசாயிகளின் இயக்கம் மரணி அடி கொடுத்துள்ளது.

இதற்கு முன்பும் கூட, இந்த அரசாங்கம் 2015இல் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திருத்துவதற்காக ஓர் அவசரச்சட்டத்தைப் பிரகடனம் செய்தது. பின்னர் மக்களவையிலும் அது நிறைவேற்றப்பட்டிருந்தது. இருப்பினும், பூமி அதிகார் அந்தோலன் என்னும் ஒன்றுபட்ட விவசாயிகளின் மேடை இதற்கு எதிராகப் போராட்டங்களை நடத்திய பின்னர், அரசாங்கம் இதனைக் கைவிட்டுவிட்டது. ஆனாலும், இவர்கள், 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றபின்னர், அதனை மறந்துவிட்டு, அவசர கதியில் எண்ணற்ற அவசரச்சட்டங்களையும், நாடாளுமன்றத்தின்மூலம் அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்தது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவந்தது உட்பட பல ஜனநாயக விரோதச் சட்டங்களையும் நிறைவேற்றினார்கள். இனிமேலாவது மோடி அரசாங்கம், எதிர்காலத்தில் இதுபோன்று நடவடிக்கைகளை அவசரகதியில் எடுக்காது, ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்திட வேண்டும்.

மூன்றாவதாக, ஓராண்டு காலமாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டம், ஆட்சியாளர்களின் இந்துத்துவா-நவீன தாராளமயத்தின் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதற்கான வழியையும் காட்டி இருக்கிறது. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பலவீனமாகவும், சக்தியற்றும் இருக்கக்கூடிய நிலையில், ஒன்றுபட்ட மேடைகளின் மூலமாக வெகுஜனப் போராட்டப் பாதையில், மக்களை அணிதிரட்டி, எதிர்ப்பினைக் கட்டி எழுப்புவதே வழியாகும் என்பதைக் காட்டி இருக்கிறது.

இந்தக் கட்டத்தில் மோடி அரசாங்கம் பின்வாங்கியது ஏன்? போராட்டத்தின் குவிமையமாக இருந்தது பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசமாகும். போராடிய சீக்கிய விவசாயிகளை, மோடி அரசாங்கமும், ஆளும் கட்சியும் காலிஸ்தானிகள் என்றும், தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்தி அவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, போராட்டத்தை நசுக்க முயன்றது. இவ்வாறான ஆட்சியாளர்களின் அடக்குமுறை-ஒடுக்குமுறை நடவடிக்கைகள் பாஜகவிற்கு எதிராகவும், மோடி அரசாங்கத்திற்கு எதிராகவும் பஞ்சாப்பில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்தியுள்ளது. பஞ்சாப்பில் உள்ள எந்தக் கிராமத்திற்குள்ளும் எந்தவொரு பாஜக தலைவரும் நுழைய முடியாத அளவிற்கு நிலைமை உருவாகி இருக்கிறது. பஞ்சாப்பில் இன்னும் சில வாரங்களில் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், ஆடிப்போயுள்ள பாஜக எப்படியாவது இவ்வாறு தனிமைப்பட்டிருக்கும் நிலையை மாற்ற நடவடிக்கைகள் பலவற்றைப் பின்பற்றியபோதிலும் அவை எதுவும் அதற்கு உதவிடவில்லை. பஞ்சாப்பில் தேர்தலில் வெற்றிபெற முடியாது போனாலும் பரவாயில்லை என்று பாஜக நினைத்தாலும் அதேபோன்று உத்தரப்பிரதேசத்தையும் கைவிட அது விரும்பவில்லை. விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தால் பஞ்சாப் மட்டுமல்ல, உத்தரப்பிரதேசமும் தங்கள் கைகளிலிருந்து பறிபோய்விடும் என்று அது கருதியதாலும், அவ்வாறு பறிபோவதை எக்காரணம் கொண்டும் இடம்கொடுத்திடக்கூடாது என்றும் அது நினைத்தது.

மேற்கு உத்தரப்பிரதேசத்தில் சென்ற ஆண்டில் இருந்த நிலைமையை ஆராய்ந்தோமானால், அங்கே ஒட்டுமொத்த விவசாயிகளும் போராடிய விவசாயிகளுக்கு ஆதாரவாக ஒன்றுபட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. இங்கேயிருந்த விவசாயிகளில் கணிசமானவர்கள் 2014 மக்களவைத் தேர்தலிலும், 2019 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக-விற்கு வாக்களித்தவர்கள்.

முசாபர் நகரில் 2013இல் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்றக் கலவரங்கள் ஜாட் இனத்தவருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பகைமை உணர்வை அதிகப்படுத்தி இருந்தன. இத்தகைய பகைமை உணர்வு பாஜக-விற்கு உதவியது. ஆனால், இப்போது நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் இத்தகைய பகைமை உணர்வைச் ஒழித்துக்கட்டி, அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி இருக்கிறது. “சாதியைச் சொல்லி, மதத்தைச் சொல்லி, நம்மைப்பிரிக்கும் சூழ்ச்சிகளை இனியும் நாங்கள் அனுமதியோம்” என்றும், “ஒன்றுபட்டுப் போராடுவோம்,” என்றும் “சாதி வெறியர்களையும், மத வெறியர்களையும் தனிமைப்படுத்திடுவோம்” என்றும் முழக்கமிட்டு அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.

லக்கிம்பூர் கேரியில், ஒன்றிய இணை அமைச்சர் ஒருவரின் மகன் காரை ஓட்டிவந்து நான்கு விவசாயிகளைக் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் நடைபெற்றுவந்த விவசாயிகள் போராட்டத்திற்கு அனுதாபத்தையும், ஆதரவையும் ஏற்படுத்தியது. பாஜக-விற்கு உத்தரப்பிரதேசம் என்பது கிரீடத்தில் உள்ள ஆபரணம் போன்று பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அமித் ஷா, 2022 சட்டமன்றத் தேர்தல் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு வழிவகுத்திடும் என்று திரும்பத் திரும்பத் தன் அபிலாசையைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

மக்கள் மத்தியில் அபரிமிதமாக ஆதரவை சம்பாதித்துக்கொண்டிருக்கும் விவசாயிகள் இயக்கம் ஏற்படுத்தியிருக்கும் அச்சுறுத்தலும், ஆதித்யநாத்தின் அரக்கத்தனமான ஆட்சி காரணமாக மக்கள் ஆதரவு சரிந்துகொண்டிருப்பதும் இவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. எனவே உத்தரப்பிரதேசத்தில் இழப்பைச் சரிக்கட்டுவதற்காகத்தான் மோடி இவ்வாறு பின்வாங்குவது அவசியம் என முடிவெடுத்திருக்கிறார்.

இந்த நடவடிக்கைக்குப்பின்னே மற்றுமொரு காரணியும் இருக்கிறது. அதாவது, விவசாய இயக்கமும், அதனால் எழுப்பப்பட்டுள்ள பிரச்சனைகளும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சூழ்நிலையில், மக்களைப் பிளவுபடுத்திடும் தங்களின் மதவெறி நிகழ்ச்சிநிரலின்மீது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு பாஜகவிற்கு சிரமமாக இருக்கிறது. விவசாயிகள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டால், மக்கள் மத்தியில் தங்களுடைய ஆத்திரமூட்டும் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலைக் கொண்டுசெல்வதற்கு உகந்த சூழல் ஏற்படும் என பாஜக நம்புகிறது. ஆனால், விவசாயிகள் பிரச்சனைகள் மறையப்போவதில்லை. மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்திருப்பதுடன், அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக உத்தரவாதப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும், விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்திடும் மின்விநியோகத்தைத் தனியாரிடம் தாரை வார்க்க வகை செய்யும் மின்சாரத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் நிறைவேற்றப்பட என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா மிகவும் தெளிவாகத் தெரிவித்திருக்கிறது. இக்கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா தீர்மானித்து, செயலில் இறங்க இருக்கிறது.

எனினும், ஒரு விஷயம் மிகவும் தெளிவாகியிருக்கிறது. இந்துத்துவா-நவீன தாராளமய எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக போராட்டம் ஒரு புதிய கட்டத்தை அடைந்திருக்கிறது. விவசாய இயக்கத்தின் மூலமாக தொழிலாளர் வர்க்கமும், விவசாயிகளும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒன்றுபட்டிருக்கிறது.

2020 நவம்பர் 26 அன்று நடைபெற்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தின் அறைகூவலுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் ‘தில்லி செல்வோம்’ என்கிற அறைகூவலும் இணைந்து இந்த வெகுஜனப் போராட்டம் தொடங்கியது என்பதை நினைவுகூர்ந்திட வேண்டும். அதிலிருந்தே, தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்து கூட்டு இயக்கங்கள் பலவற்றிற்கு அழைப்பு விடுத்தார்கள். இடதுசாரிகள் தலைமையிலான விவசாய சங்கங்களும், தொழிற்சங்கங்களும் தொழிலாளர்கள்-விவசாயிகள் இடையே விரிவான அளவில் ஒற்றுமையைக் கட்டி எழுப்பிட கேந்திரமான பங்களிப்பினைச் செலுத்தின. நடவடிக்கைகளில் இவ்வாறான ஒத்துழைப்புதான் வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மத்தியத் தொழிற்சங்கங்களினால் விடுக்கப்பட்டுள்ள இரண்டு நாள் வேலைநிறுத்தம் உட்பட பல போராட்டங்களுக்கு உதவிட இருக்கின்றன.

இந்துத்துவா எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக ஒரு வலுவான மாற்றைக் கட்டி எழுப்புவதற்கு, இத்தகைய வளர்ச்சிப் போக்குகள் இடது மற்றும் ஜனநாயக சக்திகளை அணிதிரட்டும் திசைவழியில் ஒரு முக்கிய அடி எடுத்து வைத்திருப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி இயக்கமும் கருதுகின்றன.

(நவம்பர் 24, 2021)
நன்றி:பீப்பிள்ஸ் டெமாக்ரசி

Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுரு

விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் – விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுரு




Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுருதனது அரசாங்கம் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று அறிவித்தார். கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் அவசரமாகக் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் பற்றியே அவர் தன்னுடைய அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
சட்டங்களைத் திரும்பப் பெறுவதை அறிவித்த தன்னுடைய உரையில் ‘அவர்கள் [தங்களுடைய] வீடுகள், வயல்வெளிகள் மற்றும் [தங்களுடைய] குடும்பத்தினரிடம் திரும்பிச் செல்ல வேண்டும். நாம் மீண்டும் புதிதாகத் தொடங்குவோம்’ என்று விவசாயிகளிடம் அவர் கூறியிருந்தார். விவசாயிகள் மீது திணிக்கப்பட்ட சட்டங்களை எதிர்த்து ஓராண்டாகப் போராடிய விவசாயிகளை எதிர்மறையாகப் பாதிக்கின்ற சட்டங்களை தன்னுடைய அரசாங்கம் இயற்றியதைப் பற்றி எந்தக் கட்டத்திலும் மோடி ஒப்புக் கொண்டிருக்கவில்லை.
Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுருவிவசாயத்தை தனியார்மயமாக்குகின்ற கொள்கைகளை மோடி கைவிடவ் போவதில்லை; மாறாக அவர் வெவ்வேறு தொகுப்புகளின் மூலம் தனியார்மயத்திற்கே திரும்புவார் என்றே தோன்றுகிறது. தன்னுடைய உரையில் ‘எங்களுடைய அரசு விவசாயிகளின் நலனுக்காகச் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அதைச் செய்யும்’ என்றே அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெற்றியில் மகிழ்ச்சி
ஆனால் ‘விவசாயிகளின் நலனுக்காக’ பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான மோடியின் அரசாங்கம் வேலை செய்து வருகிறது என்ற எண்ணம் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. விவசாயிகள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளின் உணர்வை அறிந்து கொள்வதற்காக, முக்கியமான விவசாயிகள் சங்கங்களில் ஒன்றான அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (ஏஐகேஎஸ்) தேசியத் தலைவரும், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (எஸ்கேஎம்) தலைவருமான அசோக் தவாலேவிடம் நேர்காணலை நடத்தினேன்.
Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுருமூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக மோடி அளித்திருக்கும் வாக்குறுதி ‘போதுமானதாக இல்லாமலும், மிகவும் தாமதத்துடனும்’ இருப்பதாக தவாலே கூறினார். வலுவான குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி) கட்டமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட பிற கோரிக்கைகள் அனைத்தையும் தவிர்த்து விட்டு விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்றை (வேளாண் சட்டங்களை ரத்து செய்தல்) மட்டுமே ஏற்றுக் கொண்டிருப்பதால் மோடி அளித்திருக்கும் வாக்குறுதி போதுமானதாக இருக்கவில்லை; ஓராண்டு நீடித்த போராட்டம் ஏற்படுத்திய தனிமைப்படுத்தல், அரசாங்க அடக்குமுறைகள் காரணமாக எழுநூறு விவசாயிகள் தங்கள் உயிர்களை இழக்க நேரிட்ட பிறகு அறிவிக்கப்பட்டிருக்கும் அவரது வாக்குறுதி மிகவும் தாமதமாகவே வந்து சேர்ந்திருக்கிறது.

‘கடந்த ஏழு ஆண்டுகால ஆட்சியில் மிகவும் அவமானகரமான முறையில் மோடி இவ்வாறு கீழிறங்கி வந்திருப்பது இது இரண்டாவது முறையாகும்’ என்று கூறிய தவாலே ‘முதலாவதாக 2015ஆம் ஆண்டில் நாடு தழுவிய விவசாயிகளின் போராட்டத்தின் விளைவாக ‘2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை’ திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது’ என்றார். இந்திய விவசாயத்தை மிகப்பெரிய பெருநிறுவனங்களிடம் வழங்குவதற்கான திட்டத்தை 2014ஆம் ஆண்டு தான் ஆட்சியதிகாரத்திற்கு வந்ததில் இருந்தே மோடி முன்வைத்து வந்திருக்கிறார். அப்போதிருந்தே அவருடன் போராடி வந்த விவசாயிகள் இன்றைக்கும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

நவம்பர் 19 அன்று வெளியான மோடியின் அறிவிப்பிற்குப் பிறகும் விவசாயிகள் தங்கள் போராட்ட முகாமை விட்டு வெளியேறவில்லை. ‘வேளாண் சட்டங்கள் உண்மையில் [பாராளுமன்றம் மூலம்] ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் போராட்டக் களத்திலேயே இருப்பார்கள்’ என்று தவாலே கூறினார். மேலும் ‘விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை அவர்கள் அங்கேயே இருப்பார்கள். போரில் பாதி வெற்றியை அடைந்திருப்பது குறித்து நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இருந்த போதிலும் போராட்டத்தின் மற்ற நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதைக் காண வேண்டும் என்ற உறுதியும் விவசாயிகளிடம் இருக்கிறது’ என்றார்.

மோடி ஏன் சரணடைந்தார்
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மோடி முடிவு செய்ததன் பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாக தவாலே கூறினார். இந்தியத் தலைநகரான தில்லி எல்லையில் அமைந்திருக்கும் மூன்று முக்கிய மாநிலங்களில் (பஞ்சாப், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம்) வரப் போகின்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களுடன் தொடர்புடையதாக முதலாவது காரணம் இருக்கிறது. சமீபத்திய மாதங்களில் ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் போது தனக்கான ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருப்பதை பாஜக கண்டிருக்கிறது. அந்த இடைத் தேர்தல்களில் பாஜக அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருக்கவில்லை.
Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுருவட இந்தியாவில் தேர்தல் நடந்திருக்கும் அல்லது நடக்கவிருக்கும் ஆறு மாநிலங்கள் தில்லிக்கு அருகாமையில் உள்ள மாநிலங்களாகும். மேலும் தில்லியின் எல்லையில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களில் கலந்து கொண்ட விவசாயிகள் பலரின் சொந்த மாநிலங்களாகவும் அவை இருக்கின்றன. போராட்டங்கள் தொடருமானால் விவசாயிகள், தொழிலாள வர்க்கம் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் தங்களுடைய கட்சி மிகப்பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று பாஜகவில் உள்ள தலைவர்கள் கருதினர்.

விவசாயிகளின் உண்மையான போராட்டம், உறுதியைக் காட்டிலும் கவனத்தில் கொள்வதற்கு முக்கியமானவை வேறு எதுவுமில்லை என்று கூறிய தவாலே, எடுத்துக்காட்டாக செப்டம்பர் 5 அன்று கிசான் மகாபஞ்சாயத்திற்கு விவசாயிகள் ஏற்பாடு செய்ததைக் குறிப்பிட்டார். ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அழைப்பின் பேரில் நடைபெற்ற அந்த மகாபஞ்சாயத்தில் விவசாயிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுருஉத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை மோதலில் ஒன்பது பேர் இறந்த சில நாட்களுக்குப் பிறகு, அமிர்தசரஸ் புறநகர்ப் பகுதியில் 2021 அக்டோபர் 6 அன்று கூடிய விவசாயிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து முழக்கங்களை எழுப்பினர்.

மிகவும் ஆக்ரோஷத்துடன் இருந்த அந்தக் கூட்டத்தின் தொனி மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரானதாக மட்டும் இருக்கவில்லை. அது பாஜக அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறைக்கு எதிராகவும் விவசாயிகள் போராடி வருகிறார்கள் என்பதையே தெளிவுடன் காட்டியது. விவசாயிகள் போராட்டத்தின் அடிப்படைப் பார்வை மோடியின் தீவிர வலதுசாரி பாரதிய ஜனதா கட்சியின் ஹிந்துத்துவா அரசியல் சித்தாந்தத்திற்கு முற்றிலும் எதிரானதாக மதச்சார்பற்ற, சோசலிச இந்தியாவிற்காகப் போராடுவதாகவே இருந்தது.

போராட்டத்தின் வேகம் செப்டம்பர் மாதத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. செப்டம்பர் 27 அன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி இந்தியா முழுவதும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுத்தது. அது விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் போது நடைபெற்ற மூன்றாவது வேலைநிறுத்தமாக இருந்தது. லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், நடைபெற்ற மூன்று வேலை நிறுத்தங்களில் மிகவும் வெற்றிகரமானதாக அந்த வேலைநிறுத்தம் அமைந்தது என்று தவாலே கூறினார்.

மத வேறுபாடுகளைப் பயன்படுத்தி விவசாயிகளைப் பிளவுபடுத்துவதில் தோல்வியுற்ற பாஜக அரசுக்கு எதிராக ஒரு மாதத்திற்குப் பிறகு, அக்டோபர் 18 அன்று விவசாயிகள் நாடு முழுவதும் ரயில் தடங்களை (ரயில் ரோகோ) மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக மோடி அறிவித்த போதிலும், விவசாயிகள் கிளர்ச்சியின் முதல் ஆண்டு தினமான நவம்பர் 26 வெள்ளிக்கிழமையன்று தில்லி எல்லைகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடுவதற்குத் திட்டமிட்டுள்ளனர். நாடு முழுவதும் தங்கள் ஆதரவைக் காட்டும் வகையில் மற்றவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
திங்களன்று விவசாயிகளிடம் மோடி சரணடைந்த பிறகு, உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் மிகப்பெரிய கிசான் மகாபஞ்சாயத்தில் ஒன்றுகூடிய விவசாயிகள் அமைப்புகளின் தலைவர்கள் போராட்டத்தைத் தொடர்வது என்று உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். ‘வெற்றி குறித்த மனநிலையும், போராட்டத்தைத் தொடர்வது என்ற உறுதிப்பாடும் அங்கிருந்த அனைவரையும் தொற்றிக் கொண்டது’ என்று தவாலே கூறினார்.

தீர்க்கப்படாதிருக்கின்ற பிரச்சனைகள்
1995 மற்றும் 2018க்கு இடையிலான காலத்தில் நான்கு லட்சம் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் 2014ஆம் ஆண்டு மோடி பதவியேற்றதில் இருந்து ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தவாலே தெரிவித்தார். அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் விவசாயிகள் சார்பாக தலையீடு போன்றவற்றை நீக்கியது, பருவநிலை பேரழிவு ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றால் இந்தியாவில் உருவாகியுள்ள வேளாண் நெருக்கடியுடன் நேரடியாகத் தொடர்புடையவையாகவே விவசாயிகளின் தற்கொலைகள் இருந்துள்ளன.
Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுருவிவசாயிகள் தேசிய ஆணையத்திற்குத் தலைமை தாங்குமாறு புகழ்பெற்ற அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனை இந்திய அரசாங்கம் 2004ஆம் ஆண்டு கேட்டுக் கொண்டது. 2006வாக்கில் முக்கியமான பரிந்துரைகளின் நீண்ட பட்டியலுடன் அந்த ஆணையம் தயாரித்துக் கொடுத்த ஐந்து முக்கிய அறிக்கைகளில் இருந்த பரிந்துரைகள் எதுவுமே அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரித்து, வலுப்படுத்த வேண்டும் என்பது அந்தப் பரிந்துரைகளில் ஒன்று. விவசாயிகளின் நிலைமையை அரசாங்கங்களின் வெற்று அலங்கார வார்த்தைகள் சற்றும் மேம்படுத்தவில்லை; விவசாயிகளின் வருமானம் குறைந்துள்ளதாகவே சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை விவசாயிகள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். விளைபொருளின் விலைக்கான உதவி, கடன் தள்ளுபடி, மின்சார விலையுயர்வைத் திரும்பப் பெறுதல், தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்தல், மானிய விலையில் எரிபொருள் வழங்குதல் மற்றும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை அவர்கள் மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளார்கள். ‘இந்தப் பிரச்சனைகளே விவசாய நெருக்கடி மற்றும் விவசாயிகளின் பெரும் கடன் சுமைக்கு அடிகோலுகின்றன. விவசாயிகளின் தற்கொலை, விவசாய நிலங்களின் விற்பனை போன்ற நெருக்கடிகளுக்கும் அவையே வழிவகுத்துக் கொடுக்கின்றன’ என்கிறார் தவாலே.
Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுரு‘நமக்கான உணவை விவசாயிகள் பயிரிட்டுத் தர வேண்டுமென்றால், விவசாயிகளுக்குத் தேவையான உணவு அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென்றால், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று தவாலே கூறினார். இது இந்திய விவசாயிகளுக்கான கோரிக்கை முழக்கமாக மட்டும் இருக்கவில்லை. உலகம் முழுவதிலும் உள்ள விவசாயிகளின் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள இந்திய விவசாயிகள் தொடர்ந்து போராடுவார்கள்.

https://asiatimes.com/2021/11/indian-farmers-defend-rights-of-farmers-everywhere/
நன்றி: ஆசியாடைம்ஸ்
தமிழில்: தா.சந்திரகுரு