மலையேற்றம் சிறார் கதை – குமரகுரு
மலை மேல் ஏறி கொண்டிருந்தார்கள். மீப்பெரிய பாறைகளை சுமந்த பெரும்பாறையான அம்மலையின் மீது ஏறிய படியேத் துவங்கியது உரையாடல
“அப்பா இந்த மலையை ஏறி முடிச்சிட்டோம்னா நமக்கு என்ன கிடைக்கும்?”
“ஏறத் துவங்கிய போது என்ன நினைத்தாயோ அதைத்தான் அடைவாய்!”
“நீங்க மேல ஏறுறீங்கன்னுதான் நானும் மேல ஏறுறேன். எனக்கென்று ஒன்னும் யோசிக்கலையே?”
“அப்போ அதுதான் உனக்கு கிடைச்சிருக்கு?”
“ம்ம் ம்ம்… புரியலையே ப்பா!”
“நான் உன்னை மேல ஏறி சொல்லலை. நான் ஏறுறேன்னு நீயும் ஏறுற. அப்போ நான் ஏறும் போது நீ எங்கிட்ட ‘எதுக்குப்பா மேல் ஏறுறோம்?’ னு கேட்டிருக்கனும் இல்ல?”
“ஆமாம்!! ஆனா, நீங்க என்னோட அப்பாவாச்சே அதனால் நான் உங்ககிட்ட கேட்காமலே உங்களோட மேல ஏறிட்டேன்!”
“நான் உன்னோட அப்பாதான். ஆனா, நான் மலை ஏறுறதால நீயும் மலை ஏறனும்னு அவசியமில்லை. நீ கீழேயே என்கிட்ட கேட்டிருந்தா நான் உனக்குப் பிடிக்கலைனா வர வேண்டாம்னு சொல்லியிருப்பேன். இப்போ பாரு நாம் மலை உச்சியையே நெருங்கிட்டோம். இப்போ நீ கிழேயும் போக முடியாது”
“ஆமாம்தான். ஆனா எனக்கு உங்களோட மலை ஏறுறது பிடிச்சிருக்கப்பா. ”
“அப்போ சரி வா இன்னும் மேல ஏறலாம். ஆனா, ஒன்னு நினைவில வச்சிக்கோ அப்பா சொல்லுறாங்க ன்னும் அப்பா செய்யுறாங்கன்னும் எப்பவும் உனக்குக் தோன்றியதை செய்யாமலோ இல்லை பிடிக்காததை செய்யவோ கூடாது. இது மலை ஏற்றம் அதனால் பரவாயில்லை. ஆனா, வாழ்க்கையில இப்படி நான் சொன்னேன்னு ஒரு முடிவை ஏத்துக்கிட்டு, பிறகு அதுல சிக்கிக்கிட்டு கஷ்டப்படாம வாழ கத்துக்கோ. உன் வாழ்க்கையில் உன் முடிவுகளுக்கான முக்கியத்தைப் புரிஞ்சுக்கோ. வாழ்க்கைப் போனா வராது”
“ஆமாம்பா!! நான் இனிமே உங்ககிட்ட நிறைய கேள்வி கேட்குறேன். என்னோட விருப்பு வெறுப்புகளையும் பகிர்ந்துக்கிறேன்.”
குமரகுரு
9840921017
