Posted inPoetry
முகமற்றவர்கள் மொழிபெயர்ப்பு கவிதை – ரூபி கவுர் | தமிழில்: இரா. இரமணன்
இலட்சோப இலட்சம்
முன்னோடிப் பெண்களின்
தியாகக் குவியல் மீது
திடமாய் நிற்கிறேன்.
வருங்காலப் பெண்கள் பார்வை
தொலைதூரம் பாய
இந்த நெடுங்குன்றை
இன்னும் உயரமாக்க
என்ன செய்யலாம் என்று
சிந்தனையொன்று செய்கிறேன்.
பஞ்சாபில் பிறந்த ரூபி கவுர் இளம் வயதிலேயே கனடா நாட்டிற்கு குடி பெயர்ந்தார். கவிஞர், ஓவியர், புகைப்படக் கலைஞர், எழுத்தாளர் என பன்முக ஆளுமையாளர். இன்ஸ்டாகிராமில் கவிதைகள் எழுதி பிரபலம் ஆனவர். மூன்று கவிதை தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.