நூல் அறிமுகம்: எஸ்.ஏ. பெருமாள் ‘தத்துவங்களின் தேரோட்டம்’ – ராஜேஷ் நெ பி
நூல் : தத்துவங்களின் தேரோட்டம்
ஆசிரியர் : எஸ்.ஏ.பெருமாள்
விலை : ரூ.₹50/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
மேலைநாட்டு தலைவர்கள் மற்றும் அறிஞர்களின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு கி.மு அறநூறுகள் தொடங்கி 1800 வரையிலான அறிஞர்களின் தத்துவங்களில் குறித்தான ஆசிரியர்களின் பார்வையில் ஒரு அலசல் என்று கூறலாம் தத்துவங்கள் என்றால் என்ன அவற்றை எவ்வாறு அணுகுவது தத்துவங்கள் குறித்தான விளக்கம் என ஆசிரியர் தேசிய பெருமாள் அழகாக அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். முன்னுரைக்குப் பிறகு அழகாக மேல்நாட்டு அறிஞர்கள் கூறிய பல தத்துவங்களை பட்டியலிட்டு அவற்றை எழுத்தாளரின் பார்வையில் விளக்கிய விதம் அருமை. மேலைநாட்டு அறிஞர்களை காலவரிசைப்படி அறிமுகப்படுத்தப்பட்டு தத்துவங்களை விளக்கியுள்ளதால் அவர்களின் பெயர்களும் அவர்கள் சார்ந்த தேசம் வாழ்ந்த காலம் என நமக்கு வரலாற்றை முடிந்த வரையில் நினைவில் வைத்துக்கொள்ள எளிமைப்படுத்தி உள்ளார் ஆசிரியர். புத்தகத்தை வாசித்த பிறகு நமக்கு நமது நாட்டு அறிஞர்களின் தத்துவங்களை காலவரிசைப்படி படிக்கும் ஆர்வம் நேரிடுகிறது.
ராஜேஷ் நெ பி