Posted inPoetry
ச. அர்ஜுன் ராஜ் கவிதைகள்
இளந்தகப்பன் ============= குளிகுளித்து ஈரெட்டு வாரம் கழிந்த ஒரு மந்தகாச குளிரிரவது கண் துஞ்சா பனியிருட்டு ஒரு மோக உச்சாடனம் போர்வையை வெயிலாக்கிக்கொண்டிருந்தது குட்டிக் கொலுசின் குனுகும் சிணுங்கல்கள் ஒரு. சிறு... மூக்குத்தி வெளிச்சம் முலை ருசி கண்ட பசியின் ஓசை தொண்டைப் பூக்காம்பு தணிந்து மலருதடு கசிந்த பால்வாசனை ஜூவாலை ஊறிய தேகம் நெருப்பணைத்து மீண்டதுபோல் சுவாதீனம் திரும்ப சிங்கம் மிரட்டியதில் சிரித்துக்கொண்டிருந்தாள் குட்டிச் சின்ரெல்லா சன்னமாக சுண்டிப்போனது இளந்தகப்பனவனது காமத்துப்பாலின் கொதிநிலை. ◆◆◆◆ மின்சாரதத் துண்டிப்பிழந்த வீடு ===== மழையிரவில் தெரு ஒன்றில்…