எஸ். பாலபாரதி எழுதிய  பூமிக்கு அடியில் ஒரு மர்மம் - நூல் அறிமுகம் | boomiku adiyil oru marmam - S.Balabharathi - BookReview - https://bookday.in/

பூமிக்கு அடியில் ஒரு மர்மம் – நூல் அறிமுகம்

 பூமிக்கு அடியில் ஒரு மர்மம் - நூல் அறிமுகம் - மொ. பாண்டியராஜன் நூலின் தகவல்கள் :  நூல் :  பூமிக்கு அடியில் ஒரு மர்மம் (இளையோர் நாவல்) ஆசிரியர் : எஸ் பாலபாரதி வெளியீடு : வானம் பதிப்பகம் பக்கங்கள்…
யெஸ் பாலபாரதி எழுதிய “துலக்கம்”

யெஸ் பாலபாரதி எழுதிய “துலக்கம்”

தமிழ்ச் சமூகத்தில் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் நடமாடுகின்றனர். இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றவர்களிடம் அன்பு நிறைந்திருக்கிறது. ஆணோ, பெண்ணோ சிறப்புக் குழந்தைகளை பெற்றவர்களை சமூகம் பரிதாபமாகத்தான் பார்க்கிறது. அப்பார்வைகளில் ஏளனமும் நிறைந்துள்ளதை மறுக்க இயலாது. இப்படியான புரிதலற்ற மனிதர்கள்…
"பூமிக்கு அடியில் ஒரு மர்மம்" - யெஸ். பாலபாரதி (Bhumiku Adiyil Oru Marmam - S.Balabharathi)

யெஸ். பாலபாரதி எழுதிய “பூமிக்கு அடியில் ஒரு மர்மம்” – நூலறிமுகம்

இது ஒரு "அட்வென்ச்சர் நாவல்"ஆகும். விடுமுறையில் உறவினர் வீட்டில் சந்தித்துக்கொண்ட நான்கு குழந்தைகள் செய்த நல்ல காரியம் தான் இந்த கதை. கிராமிய சூழலில் உள்ள குழந்தைகள் பேசும் மொழியில் உள்ளது இந்த நூல். ஒவ்வொரு குழந்தைக்குமான கேரக்டர்கள் மிக அருமையாக…
யெஸ்.பாலபாரதி எழுதிய மரப்பாச்சி சொன்ன ரகசியம் - நூல் அறிமுகம் | S.Balabharathi - Marappachi Sonna Ragaciam - https://bookday.in/

மரப்பாச்சி சொன்ன ரகசியம் – நூல் அறிமுகம்

மரப்பாச்சி சொன்ன ரகசியம் - நூல் அறிமுகம் நூலின் தகவல்கள் :  புத்தகம்: மரப்பாச்சி சொன்ன ரகசியம். எழுத்தாளர்: யெஸ்.பாலபாரதி பதிப்பகம்: புக்ஸ் ஃபார் சில்ரன் பக்கங்கள்:79 விலை:ரூ.60/- கதையின் கரு: பிள்ளைகள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல். அந்த பேரவலத்தில் இருந்து…
Writers Gallery: S. Balabharathi's Marappachi Sonna Ragasiyam Book Oriented Interview With Writer Saravanan Parthasarathy. யெஸ். பாலபாரதி எழுதிய மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூல் குறித்து ஓர் உரையாடல்

எழுத்தாளர் இருக்கை: யெஸ்.பாலபாரதி எழுதிய *மரப்பாச்சி சொன்ன ரகசியம்* நூல் குறித்து ஓர் உரையாடல்



#MarappachiSonnaRagasiyam #Balabharathi #SahityaAcademyAward

செம்மரக்கட்டையால் செய்யப்பட்ட மரப்பாச்சிப் பொம்மை ஒன்று, ஷாலினி எனும் சிறுமிக்குக் கிடைக்கிறது. அப்பொம்மை திடீரெனப் பேசத் தொடங்குகிறது. ஷாலினிக்குக் கிடைக்கும் சுவாரசியமான அனுபவங்கள் தான் இந்நூல்.

சுற்றுச் சூழல் பற்றிய புரிதலை மிக எளிமையாகச் சொன்ன பாலபாரதியின் சிறுவர் நூலான ‘ஆமை காட்டிய அற்புத உலகம்‘ போல், மரப்பாச்சியும் மிக மிக முக்கியமான சமூக விஷயமொன்றைத் தொடுகிறது. பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பாற்ற தொடுதல் (Good touch, Bad touch) பற்றி மிக எளிமையானதொரு புரிதலை ஒரு கதையின் மூலம் உருவாக்குகிறது. நல்ல, கெட்ட என்ற சொல்லுக்கு மாற்றாக பாதுகாப்பான, பாதுகாப்பாற்ற எனும் சொற்களைப் பாலபாரதி பயன்படுத்தியுள்ளது சிறப்பாய் உள்ளது. தனக்கு நேருவதைப் பெற்றோர்களிடம் சொல்லவே பூஜா தயங்கும் பொழுது, மரப்பாச்சிப் பொம்மை அவளுக்கு க்யூட்டாய் உதவுகிறது. உதவுவதோடு அல்லாமல், மரப்பாச்சியான செஞ்சந்தன இளவரசி பூஜாவிற்காகச் செய்யும் சாகசம் அட்டகாசமாய் உள்ளது.

இளவரசியின் சாகசம் அதோடு முடிவதில்லை. பள்ளியில், ஷாலு கையில் இருந்து மரப்பாச்சியைப் பிடுங்கிக் கொண்டு ஓடும் சேட்டைக்கார நேத்ராவையும் மரப்பாச்சி படாதபாடு படுத்துகிறது. நீங்கள் கையில் வைத்திருக்கும் பொம்மை, உங்களை உண்மையை மட்டும் பேச வைத்தால் என்னாகும்? நேத்ராவிடம் கேளுங்கள்.

கடைசி அத்தியாயத்தில், சூர்யா அறிமுகமாகிறான். பாலபாரதியின் நூலான சுண்டைக்காய் இளவரசன் நூலில் பிரதான பாத்திரம் அவன். பூஜாவின் அத்தியாயத்தோடு நாவல் முழுமையடைந்து விடுவதால், சூர்யாவின் அத்தியாயத்தில் சுவாரசியம் கொஞ்சம் குறைகிறது என்றே சொல்லவேண்டும். ஆனால், வருத்தத்தில் இருக்கும் ஷாலினிக்குஅதிலிருந்து மீள அவன் சொல்லும் ஓர் அற்புதமான ரகசியத்தோடு இந்நூல் நிறைவடைவது சிறப்பு

யெஸ். பாலபாரதி
நூலாசிரியர்

சந்திப்பு:
சரவணன் பார்த்தசாரதி
எழுத்தாளர்

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy Otrai Siragu Oviya Tamil Book. Visit Us Below

https://thamizhbooks.com/

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924

நூல் அறிமுகம்: பூமிக்கு அடியில் ஒரு மர்மம் – முத்துசாமி ஜெய பிரபாகர்

நூல் அறிமுகம்: பூமிக்கு அடியில் ஒரு மர்மம் – முத்துசாமி ஜெய பிரபாகர்

நூல்: பூமிக்கு அடியில் ஒரு மர்மம் நூலாசிரியர்: யெஸ். பாலபாரதி அருமையான சிறார் நாவல்களை தொடர்ந்து படத்து வருகிறார். அந்த வரிசையில் இந்த நூல் மிளிர்கிறது. நூலின் விலை ரூபாய்.140/- (160 பக்கங்கள்) ~ வானம் பதிப்பகம் சென்னை (அலைபேசி எண். 9176549991)…