thodar-4 : sanadhanam : ezhuththum ethirppum - s.g. ramesh baabu தொடர்- 4 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் - எஸ்.ஜி. ரமேஷ்பாபு

தொடர்- 4 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

ஒத்த கருத்தும், கருத்தொற்றுமையும் கருத்து வேறுபாடும் ஒத்தக் கருத்து: சனாதனம் இந்தியாவை ஒற்றைக் கருத்துக்குள் அடைக்க துடிக்கிறது. இந்தியாவின் இயல்பு கருத்தொற்றுமைக்கான  உதாரணங்களை முன் வைக்கிறது. இங்கு எழும் கருத்து வேறுபாடுகள் ஜனநாயகத்துடன் விவாதிக்க அழைக்கிறது. இத்தகைய தத்துவார்த்த விவாதத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம், எதை தேர்தெடுக்கப் போகிறோம் என்ற கேள்வி நமது முன்னால் உள்ளது. கருத்து வேறுபாடும், கருத்தொற்றுமையும் மிகுந்த ஜனநாயக அர்த்தம் பொதிந்தவை. ஒத்த கருத்து ஓர்மை வாதம் பேசும் ஜனநாயகமற்ற பாசிசத் தன்மை கொண்டது. ஒத்தக் கருத்துடையோர் இங்கு வாழ்க அன்றில் வெளியேறுக என்பது சனாதனம், உலக வரலாற்றில் பாசிசமும் இதைதான் சொல்கிறது. மாற்றுக் கருத்துகள் கூடாது. எதிர்ச் சொல் ஆகாது,…