நூல் அறிமுகம் : பேரா. எஸ். சிவதாஸ் : தமிழில் டாக்டர். ப.ஜெயகிருஷ்ணனின் வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் – ந.சௌமியன்

நூல் அறிமுகம் : பேரா. எஸ். சிவதாஸ் : தமிழில் டாக்டர். ப.ஜெயகிருஷ்ணனின் வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் – ந.சௌமியன்




இந்த புத்தகத்தில் மொத்தம் 12 அத்தியாயங்கள் கொண்ட அற்புதமான புத்தகம் இரண்டே நாளில் படித்து முடித்து விட்டேன். ஒரு கழுதையின் கதை என்ற முதல் அத்தியாயத்தில் கதையின் முக்கியமான கருத்து நம் பார்வை. நம் பார்வையில் தான் இந்த உலகம் அடங்கிக் கிடக்கின்றது. நாம் காலை எழுந்தவுடன் நம் வீட்டை விட்டு வெளியே வந்து காணும் காட்சிகள் நம் வீட்டிற்கு அருகே உள்ள மின்சார கம்பங்கள் மீது அமர்ந்து உள்ள பறவைகளைக் காண்போம். அத்துடன் நம் வீட்டிற்கு அருகே உள்ள மரங்கள் மீது உள்ள பறவைகள் கூட்டில் உள்ள பறவை குஞ்சுகள் கத்தும் சத்தத்தைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்த இரண்டு விஷயத்திற்கும் சம்மந்தபடுத்தி யோசித்திருந்தால். நமக்கென்ன எங்கே பறவைகள் இருந்தால் என்ன. எங்கோ பறவைகளின் குஞ்சுகள் கத்தினால் என்ன. நமக்கு நம் வேலை தான் முக்கியம். ஆனால் ஒரு முறையாவது இதைப் பற்றி யோசித்துப் பார்த்திருப்போமா. நாம் காணும் விஷயங்களைச் சாதாரண பார்வையில் அடங்கி இருக்கும் பல உண்மைகளை நாம் உற்றுநோக்கும் போதுதான் கண்டறிய இயலும். ஒரு இரு விஷயத்தில் உள்ள சம்மந்தத்தை நோக்குதல் மூலம் பல அற்புதங்களைக் கண்டறிந்து உணரமுடியும். எந்த விஷயத்தையும் முக்கியமாக உற்று நோக்குதல் தேவை. இந்த புத்தகத்தில் வரும் அடுத்த அடுத்த தலைப்புகளும் அதில் வரும் சிறு சிறு கதைகளும் முதல் கதையின் தொடர்ச்சியாகப் பாலர் அரங்க ஆசிரியரும் மாணவர்களும் இயற்கை மனிதர்கள் மூடநம்பிக்கை விஞ்ஞானம் என்று இறுதி வரை உரையாடலாகச் சுவாரசியமாக எடுத்துச் செல்கின்றார் புத்தகத்தின் ஆசிரியர் சிவதாஸ்.

எனக்குப் பிடித்த ஒரு முக்கிய கருத்து இயற்கையைப் பற்றி யோசித்திருப்போம் அதில் அதன் இயல்பைக் கண்டு பயந்திருப்போம் ஆனால் அதில் உள்ள பண்புகளை உற்றுநோக்கி உணர்ந்தால் பயம் விலகி நேசிக்கத் தூண்டும். இயற்கையைத்தான் ஆசிரியர் வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் என்கின்றார்.

இந்த இயற்கையின் ஒரு பாகம் தான் நாம் அதுபோலவே விலங்கும் பூச்சிகளும் ஒரு பாகமே.
இயற்கை சமநிலையாக இருக்க வேண்டும் என்றால் இந்த இயற்கை உள்ள உணவு சுழற்சியில் உள்ள அனைத்து உயர் இனங்களும் சமமாக இருக்க வேண்டும்.

அதற்குச் சிங்கம் மானை வேட்டையாடுவதும், பாம்பு எளியையோ , தவளையையோ வேட்டையாடுவது சமநிலையாக இருக்க உதவும். மனிதர்களாகிய நாம் பாம்பு,எலி,பூச்சிகள்,தவளைகள் நமக்கு எதிரி என்ற எண்ணத்தைத் தவிர்க்க வேண்டும். இயற்கையில் உள்ள பல மர்மமான விஷயங்களும், பயங்கரமான விஷயங்களும் நம்மை ஆச்சிரியபடுத்துபவைகளை அறிவியல் பார்வை கொண்டு உற்று நோக்கினால் தான் மர்மம் விலகி பல வித்தியாசமான கருத்துகளைக் கற்றுக்கொள்ள முடியும்.அது நம் வாழ்வில் சில கடினமான நேரத்தில் உதவிடும்.இந்த புத்தகத்தில் உற்று நோக்குவதுடன் சேர்த்து டைரி எழுதுவது மேலும் இயற்கையின் இயல்புகள் தேட தூண்டும் ஒரு புத்தகமாக அமைத்தது.

– ந.சௌமியன்