கவிதை : வீரவணக்கம் செலுத்துவோம் - கு.தென்னவன் kavithai : veeravanakkam seluthuvom - ku.thennavan

கவிதை : வீரவணக்கம் செலுத்துவோம் – கு.தென்னவன்

வெண்மணியில் எரிந்த உயிர்த் தீ குமுறுகிறது எரிமலையாய் கண் மணிக்குள் இன்று சாதியத்தின் நீர் ஊற்றில் தீண்டாமைக் குளியல் நீந்தி மகிழ்ந்தது மனிதத்தை தின்று சாத்திரத்தின் மூத்திரத்தை ஆத்திகத்தின் வாத்தியத்தை அறுத்திடுவோம் கொன்று காட்டுத்தீ அணைத்திடலாம் அடிமைப் பூட்டு விலங்கை உடைத்திடலாம்…
பெற்றோர்களுக்காக குழந்தைகளா? குழந்தைகளுக்காக பெற்றோர்களா? கட்டுரை – சுதா

பெற்றோர்களுக்காக குழந்தைகளா? குழந்தைகளுக்காக பெற்றோர்களா? கட்டுரை – சுதா




இரண்டுமே இல்லை என்றே தோன்றுகிறது. நாம் ஒரு மனிதப் பிராணி நமது இனத்தை விருத்தி செய்வதற்காக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறோம். எப்படி மற்ற உயிரினங்களோ அப்படியே நாமும்.

அப்படி இருக்க குழந்தைகளுக்காக பெற்றோர்கள் அத்தனையும் விட்டுக் கொடுத்து தியாகம் செய்து. என் குழந்தைக்காக என் வாழ்க்கையில் இத்தனை இழந்தேன். இவ்வளவையும் தியாகம் செய்தேன். என்பது அத்தனை சரியானது அல்ல. குழந்தைகள் பெரியவர்களான பின் சினிமாவில் வருவது போல என் அம்மா இத்தனை தியாகங்கள் செய்தார் என் அம்மாவின் ஒரு வார்த்தைக்காக நான் தியாகங்கள் செய்வேன் போராடுவேன். பெற்றோர்களின் சொல்லுக்கு மறுசொல் பேசாத பிள்ளையாக இருப்பார்கள் என நினைப்பது ஆகச்சிறந்த முட்டாள்தனம்.
நம்மால் இந்த குழந்தைகள் இந்த உலகத்திற்கு வந்தார்கள் அவர்களை பேணிக்காப்பது வழி நடத்துவது அவர்களுக்குத் தேவையானவற்றை நாம் செய்து கொடுப்பது நமது கடமை. அவ்வளவுதான் உலக சூட்சுமங்களை அறிந்து கொள்வதற்கு அவர்களுக்கு கஷ்டங்கள் தேவை கஷ்ட காலங்களில் பின் நிற்பது நம் கடமை. கஷ்டங்களே இல்லாமல் பார்த்துக் கொள்வது அல்ல.
நான் சிலரை பார்த்திருக்கிறேன் என் குழந்தைகளுக்காக இதையெல்லாம் நான் தியாகம் செய்தேன் என்று சொல்வார்கள். அப்படி தியாகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கட்டாயம் நீங்கள் தியாகியாய் வாழ்வது போல் அவர்கள் உங்களுக்கான தியாகியாய் வாழப்போவது இல்லை.
ஒரு நாள் சென்னையில் ஒரு மீட்டிங் என் மகள் அன்று ஊருக்கு வருகிறாள் என்று நான் போகவில்லை. நீ வர அதனால நான் போகல அப்படின்னு சொன்னேன்.. ஏன் போகல நான் வந்தா என்ன நீங்க நீங்க பாட்டுக்கு உங்க வேலைக்கு போக வேண்டியது தானே… அப்புறம் போக முடியல நீ இங்கே இருந்து பொலம்ப வேண்டியது… என்று சொன்னாள்
உண்மைதானே… குழந்தைகளை வழிநடத்துவது குழந்தைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வது கடமையோ அதேபோல நமக்காக வாழ்வதும் கடமையே…
எல்லாவற்றையும் குழந்தைகளுக்காக கொடுத்து விடாதீர்கள் உங்களுக்கும் கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள். இது நம்பிக்கை இல்லா தன்மை அல்ல. பாதுகாப்பின் தன்மை.
யாருக்காகவும் யாருமல்ல அவரவருக்காக அவரவர்…

– சுதா

போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்த ஒரு நூற்றாண்டு – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)  

போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்த ஒரு நூற்றாண்டு – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)  

2020 அக்டோபர் 17, ஒரு வரலாற்றுச்சிறப்பு மிக்க தினமாகும். அது, முந்தைய சோவியத் யூனியனில் தாஷ்கண்ட் நகரில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை நூறு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தினத்தைக் குறிக்கிறது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு நூறாண்டு காலத்தில் சென்ற…