Arivu Thedal அறிவுத் தேடல்

“அறிவுத் தேடல்” கவிதை – கவிஞர் ச.சக்தி

பறையடிக்க மறுத்த யப்பனையும், தாத்தனையும் நீங்கள் கட்டி வைத்து அடித்த அந்த அரசமரத்து நிழலில் தான் நாங்கள் இப்போது கட்டியெழுப்பியிருக்கோம் "டாக்டர் அம்பேத்கர் நூலகம் ஒன்றை "                    …
கவிஞர் ச.சக்தியின் “வானம்” (கவிதை)

கவிஞர் ச.சக்தியின் “வானம்” (கவிதை)

  அருகில் படர்ந்திருக்கிறது மழை தூரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது தூரல் மடியினில் அமர்ந்திருக்கிறது ஈரம் நான் யாரோடு பேசுவது நீயே சொல்.... நீலம் சிவப்பு கருப்பு யென்ற மூவண்ணம் கொண்ட நீள் வானமே ........!!!!!!          …
s.sakthi kavithaikal ச.சக்தி கவிதைகள்

ச.சக்தி கவிதைகள்

1 சில்லரையை நீட்டி ஆசிர்வாதம் கேட்கிறாள் சிறுமி ஆசிர்வாதத்தை நீட்டி சூரையாடப்பட்ட தன் ‌காட்டைத் திரும்ப கேட்கிறது கோவில் யானை 2 யெப்பா இன்னைக்கு யெங்களுக்கு பள்ளிக்கூடம்பா ... காசு இருந்தா ஐந்து ரூபாய் கொடம்பா பேனா வாங்கணும் ... பீடி…
sakthi kavithai சக்தி கவிதை

சக்தி கவிதை

நீயே நேசி....!!! உன்னை நம்பித்தான் கண்களை மூடிக்கொண்டு‌ காற்றில் ‌நடந்தேன் அடுத்த கட்டம் பற்றி நீ பேசியவைகள் காதுகளில் இதமாக இன்னமும். அவ்வளவு தான் நான் இப்போதும் பார்க்கிறேன் என் கண்களால் ஆனாலும் என் விழியில் பார்வையில்லை அடுத்த கட்டமும் இல்லை…
kavithai: padarum mazhai - kavignar s.sakthi கவிதை: படரும் மழை - கவிஞர் ச.சக்தி

கவிதை: படரும் மழை – கவிஞர் ச.சக்தி

நேற்று இரவு பொழிந்த மழையில் நனையாமல் இருக்கிறது குழந்தையின் கனவுகள் கூரையின் எரவானத்தின் கீழே மண் சுவரில் மழையை வரைந்து கொண்டிருக்கும் சிறுவனின் கையில் முளைக்க ஆரம்பிக்கிறது ஒரு துளி காணல் நீர் வீடெங்கும் நிரம்பி வழியும் குழந்தையின் சிரிப்பொலியில் மறைந்து…
கவிதை : நானும் ஒரு நாய் - ச.சக்தி  kavithai : naanum oor naai - s.sakthi

கவிதை : நானும் ஒரு நாய் – ச.சக்தி 

நானும் ஒரு நாய்  பக்கத்தில் அமர்ந்தவாறு தன் கையை நாவால் நக்கி குழைந்துக்  கொண்டிருந்த நாய்க்குட்டிக்கு‌ ஓர் முத்தம் கொடுக்கிறேன் ‌ பதிலுக்கு அந்த நாய்க்குட்டியும் எனக்கொரு முத்தம் கொடுக்கிறது தூரத்திலிருந்து எனக்கும் ஒரு முத்தவேன்டுமென்றவாறு இன்னொரு நாய்க்குட்டியொன்று ஓடி வர…
சிந்தனைத் துளிகள்….!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி

சிந்தனைத் துளிகள்….!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி




வீட்டிற்கு வெளியே
மழை பொழிகிறதென்று
அம்மழையில் நனையாமலிருக்க
வீட்டிற்குள் நுழைகிறாள் அம்மா
அம்மாவின் பாதங்களையும்
சேர்த்து நனைத்தவாறே
தான் ‌ ‌‌வெளியேறுகிறது
வீட்டையும் அம்மாவையும்
நனைத்த அந்த
அந்தி நேர நீர் மழை ,
*******

நீங்கள்
ஒரு பறவையை
பார்க்கின்ற‌ பொழுதெல்லாம்
உங்கள் மனங்களை
ஒரு மரமாகவே வளர விடுங்களேன்
உங்கள் தேகங்கள் முழுவதும் முளைக்க தொடங்கிவிடுகின்றன
ஒரு கிளையும்
அக்கிளையில் பல இலைகளும்
அந்த இலைகளை
சுற்றிசு சில கூடுகளும் ,
********

எனது தூரத்து
கிளையில்
அமர்ந்துகொண்டு சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது
ஓர் சிட்டுக்குருவி
கையிலிருந்த
செல்போனினால் புகைப்படமொன்றை
எடுக்க முயல
மீண்டும் பறந்து போய்
பக்கத்துக் கிளையில்
அமர்ந்தது அந்த சிட்டுக்குருவி
மீண்டும் ஒரு புகைப்படத்தை
எடுக்க முயலும்
என் பார்வையிலிருந்து
தப்பித்து தூரம் போய்
மீண்டும் திரும்பி பார்க்கிற சிட்டுக்குருவிகளின்
கண்களுக்குள்
வானுயர வளர்ந்திருக்கிறது இலைகளற்ற சில கம்பிகளால்
பின்னிய பல கோபுர மரங்கள் ,
********

பற மோளம்
அடிக்கும் சாவு வீடு
ஆட்டம் பாட்டமென நீளும்
நடு சாம இரவு
ஊது பத்திப் புகையை
உள்ளிழுக்கும் மூக்குத் தூவாரங்கள்
பலரது கண்களிலிருந்து வழியும்
செத்துபோனவரின்
தண்ணீரான நினைவு வழித்தடங்கள்
கீழிருந்து வானம் ‌போய்
மேகம் ‌மீது மோதி வெடிக்கும்
வானவெடிப் பட்டாசுகள் ‌
வெத்தலை பாக்கு துருக்கப்பட்ட
பல பொக்கவாய்ப் பாட்டிகள்‌
யார் செத்ததென்று கேட்க
மாடு அறுக்கும்
தாத்தா செத்து
போயிட்டாரென்று‌
ஊரெல்லாம் ஒரே பேச்சு
விடிந்தால் நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை கறிக்கு
நாங்க எங்கே
போவதென்றே கேள்வியை
அப்பிணத்தைக் கடந்து போகிற

ஒவ்வொருவரின்
கடைசி அழுகையும்
சொல்லும் ,

கவிஞர் ; ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

பறவை ….!!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி

பறவை ….!!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி




பறந்து வந்து
மரத்தின் கீழ் கிளையில்
அமர்ந்த அந்த பறவையிடம்
உன்னை ஏன் எல்லோரும்
பறவையென
அழைக்கிறார்கள் யென்றேன்
அக்கிளையிலிருந்து
பறந்து வேறு
ஒரு மேல் கிளையில்
அமர பறந்து போனது
அந்த பறவை
நானும் எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்
நீ பறப்பதனால் தான் உன்னை எல்லோரும் பறவையென்கிறார்களென்று,

கவிஞர் ச.சக்தி

கவிஞர் ச.சக்தியின் கவிதைகள்

கவிஞர் ச.சக்தியின் கவிதைகள்




நாங்கள்
மனிதர்கள் தானா….!!!!
*****************************
மாடி கட்டிடம்
மல்லாக்க
படுத்துக்கொண்டு
குடிசையை
பார்த்துச் சிரிக்கிறது
குடிசையில்
வாழ்பவர்களெல்லாம்
மனிதர்கள்
இல்லையென்று
சொல்லிக்கொண்டு

வெயில்
காலத்தில்
காய்ந்து போன
எங்களின்
குரவலைக்கு
நீரை ஊற்றுகிறது
மழை காலத்தில்
குடிநீரோடு கழிவு நீரும்
சாக்கடை நீரும் கலந்தவாறே,

நமுத்துப்
போன அரிசியையும்
கிழிந்து
போன போர்வையையும்
தருகிறார்கள்
கதர் வேட்டிக் கந்தசாமிகள்,
நீ இங்கேயே இரு,
இங்கே
இருந்து மடிந்து
போயென்று
மனதுக்குள்ளே வாயை வளர்த்து
சொல்லிக் கொண்டே ,

கொடுத்த அரிசியும்
போர்வையும்
நாம் வாழ்வதற்கு அல்ல
நாளை நாம்
இறந்து போனால்
தலைமாட்டில்
வைத்துப் படைப்பதற்கு,

பாம்பு,
பூரான், பல்லி
போன்றவற்றிற்கு
அடைக்கலம்
கொடுக்கின்றன
எங்கள் குடிசைகள்,

நீங்கள்
கொடுத்த
தேர்தல் வாக்குறுதிச் சொற்களை
பேப்பர்களில் எழுதி
காகிதக் கப்பலாக
செய்து மழைநீரில்
ஓட்டுகிறோம்
மூழ்கிப்போன
உங்கள் ஊழல் ஊராட்சியின் எதிரே,

தெருவெள்ளாம்
மழைநீர்
மழைநீரில்
மிதக்கிறது குடிசைகள், குடிசையிலிருந்து
எட்டி பார்க்கிறது
மழைநீரில்
அடித்து வரப்பட்ட பாம்பொன்று

காலில் விழுந்து
வாக்கு கேட்டவர்கள்
சிவப்பு நிற
காரில் ஏறிச் செல்கிறார்கள் ,

சாலையெங்கும்
பீ நாற்றங்கள்
நீர் கட்டித்தருவோம்
யென்று சொன்ன
பொது கழிப்பிடங்கள் இதுதானே ?

கொஞ்சம்
திரும்பி பாருங்களேன்
நாங்களும்
மனிதர்கள் தான்,

இதய விளக்கு…..!!!!
***********************
“நீ இல்லாத
இந்த குடிசைக்காரனின்
வீட்டில் இதயமாக
எறிந்து கொண்டிருக்கிறது
உனது நினைவலைகள் ”

“விளக்கை ஏற்றி
வைத்துவிட்டு
ஏன் இருட்டினில்
ஒளிந்து கொண்டிருக்கிறாய்
வா நாம் சேர்ந்தே எறிவோம்
வெளிச்சமும் இருட்டுமாக ”

“இருண்டு
போன குடிசைக்காரனின்
குடிசையில் தீபமாக
எறிந்து கொண்டிருக்கிறது
வெடித்து சிதறாத
உனது நினைவலைகளை
சுமந்த மண்சுவர்களாகிய
மனமெனும் மண் ”

“சுட்ட
மண்ணில் சுடப்பட்ட
அகல்விளக்கு
திரிகளென்னும்
தூண்டுதலால் எரிகிறது
வீடெங்கும்
காற்றுப்பைகளில்
அடைக்கப்பட்ட
உனது நினைவுகளை சுமந்தவாறு ”

“எறிந்து முடிந்த
என் எலும்பு குச்சிகளை
மீண்டும் உடலோடு
ஒட்டி வைத்து
நீ கொடுத்த விளக்கை ஏற்றுகிறேன் மீண்டும் எரிகிறது குடிசை ”

தீப்பெட்டியை
கடண்கேட்டு
நிற்கிற்கும்
பக்கத்துவீட்டு பாட்டிக்கு
எறிந்து கொண்டிருந்த
எலும்பு குச்சிகளை கொடுத்தனுப்புகிறேன்
அவளோ பெரிய மாடி வீட்டில்
வாடகைக்கு வாழ்கிறாள் ,

குடிசை…..!!!!!
****************
அந்த கடைசி
தெருவில் தான்
என் வீடு இன்னுமும் இருக்கு
ஆனால் வீடு
என்றொரு பெயரை
மட்டுமே தான்
அது தாங்கிக்கொண்டிருக்கு ,

நினைவலைகள்….!!!!!!
**************************
நேற்றைய கனவில்
அப்பா வந்து சிறிது நேரம் உரையாற்றியாற்றி
விட்டு சென்றார்
திடுக்கிட்டு எழுந்து
கண்ட கனவிலிருந்து
வெளியேறி
அங்கும் இங்குமாக
மனதின் கண்களால்
நோட்டமிட்டவாறு
சுவற்றை பார்க்கிறேன்
ஆணியால் அறையப்பட்டு
தொங்கவிடப்பட்டிருந்தது
அப்பாவின்
பழைய புகைப்படம்,

தீ….!!!!
********
ஒடுக்கப்பட்ட
தொழிலாளர்களின்
வயிற்றில் வேள்வி தீயை
மூட்டிகிறார்கள் முதலாளிகள்,

அவன் வீட்டு
கழிப்பறைகள்
எங்களது
வேர்வை துளிகளால் சுத்தமாகிறது,

அப்போது
வெந்து மடிந்தோம் வெண்மணியில்
இப்பொழுதும்
வெந்து மடிகிறோம்
மலக்குழியில்
நீங்கள்
கழித்த மலங்கள்
மன மனக்கிறது
எங்களது கைகளில்,
தண்டவாள பாதையெங்கும்
தலையில்லா
முன்டங்கலாக
எங்களது பிணங்கள்……..!!!!!!

“””நீங்கள்
நீங்கலாக இருக்கும்வரை
நாங்கள்
நாய்களாதான் இருக்க முடியும்;

அறிவு சூரியன்…..!!!!
************************
சேறும் சகதியும்
சுவரை அழுக்காக்கலாம்
சூரியனை
அழுக்காக்க முடியுமா….?
அழுக்குப்படுத்த
முடியாத
அறிவுச் சூரியன்
அண்ணல் அம்பேத்கர்
அவர்கள் அவரே ,

உலக சூரியன்
கிழக்கிலிருந்து பிறக்கிறான்
உழைக்கும்
மக்களுக்கான
சூரியன் மேற்கிலிருந்து
பிறக்கிறான்,
சூரியனை
சுற்றியே பல கோள்கள்
எங்கள் அறிவு
சூரியனை
சுற்றியே பல உலக நாடுகள்,

நீங்கள்
ஆயுதங்களோடு
போரிட்டுக் கொண்டிருந்த
போது தன்
அறிவாயுதத்தால்
போரிட்டு வெற்றி கண்டவர்,

அவர்
அவர்களுக்கானவர் அல்ல
எல்லோருக்குமானவர்
அறிவை நம்பியவர்,
அகிலத்தை ஆள்பவர்,

காதல்….!!!!
*************
பனிக்கட்டியாக கரைந்து
உருகி பனியாறாய்
ஓடிக் கொண்டிருக்கிறது
அவனின் நினைவு,

நினைவிலே வருபவன்
கனவில் கூட நெருங்கி
வர மறுக்கிறான் வயதெனும்
பாத்திரமாக நீ இருப்பதால்,

மந்திரம் தந்திரமாக
தனக்குள்ளே அவனை
வரவழைக்க முயற்சிக்கிறாள்
மூக்கணாங்கயிறை கையுறையிலே
வைத்து அலைபவள்

இச்சையெனும் பச்சைக் கொடியை
உடல் முழுவதும் பூசிக்கொண்டு
அலைந்து திரிபவள்
அலமாரியில் கிடக்கும்
வாசிக்காத புது புத்தகமாய் மினுக்குறாள்,

தனிமையில் வாடிய போது
எனது உடலை யாரே
தீண்டியது போல சில உணர்வுகள்
ஊஞ்சல் கட்டி ஆடியது

மேலாடையாக போர்த்திய
மேகத்துணி காற்றின் வேகத்தால்
களைந்து போய்விடுகிறது
அவன் வருவானா……?
ஊாரடங்கு
எடுத்துக்கொள்வானா …..?

உலக உருண்டை சுழலட்டும்,
அவனின் நினைவுகளை
நான் அசைப்
போட்டுக்கொண்டே இருப்பேன்
வாசலில் கட்டிய
கன்றுக்குட்டியை போல…….!!!!

பேராசான் புத்தன்…..!!!!
****************************
தன் ஆசைகளை துறந்து
போதிமரங்கள் தான் தன் வீடென
கூறிக் கொண்டிருந்த
புத்தனின் சிலையை செதுக்க
ஆரம்பிக்கும் சிற்பியின்
கைகளில் முளைக்க ஆரம்பிக்கிறது
உலகத்திற்கான ஞானம்,

அம்மாவுக்கும்
மகனுக்குமான உறவு …!!!!
******************************
கருவறையின்
முதல் பந்தலில்
ஆரம்பிக்கப்பட்ட உனக்கும் எனக்குமாக தொப்புள் கொடி முடிச்சி கல்லறையின்
கடைசி பந்தலில்
அவிழப்படுகிறது
மரணமெனும் உயிர் புரிதலில்,

பறவையின் நோக்கம்…!!!!!
*******************************
அவைகள்
சிறிய பறவையே
பெரிய பறவையே
அவைகள் எல்லாம்
பறவைகளாக ஆனதே
வானத்தில் பறப்பதற்கு தானே,

மழை…..!!!!
**************
நீ கைநீட்டிய பிறகு தான்
அம்மழையும் மண்ணுக்கு உரமாகிறது
அதில் நான் சிறு பூவாக பூக்கும் துளிராகிறேன்,

மரம் வளர்ப்போம்….!!!!!!
*****************************
வெட்டப்பட்ட மரத்துக்காக
கவிதை ஒன்றை எழுத முற்படும் பொழுதெல்லாம் காகிதமும்
கண்ணீர் விட்டு அழுகிறது
நீ என்
உயிரில் தான்
கவிதை வடிக்கிறாய்யென்று ,

கவிஞர் ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
9791642986,