Salladai Poem By Shanthi Saravanan சல்லடை கவிதை - சாந்தி சரவணன்

சல்லடை கவிதை – சாந்தி சரவணன்




மனம் என்னும் சல்லடையில் சலித்துவிடு 
******************************************************* 
உன்
அகந்தையை
ஆணவத்தை
இறுமாப்பை
ஈன குணத்தை
உபதேசிப்பை
ஊழல்தனத்தை
எகத்தாளத்தை
ஏமாற்றங்களை
ஜாதி வெறியை
ஒழுங்கீனத்தை
கர்வத்தை
வன்மத்தை
வஞ்சத்தை
தலைக்கனத்தை
பொறாமையை
பேராசையை
சுயநலத்தை
மிஞ்சுவது
மனிதமாக
மிளிரும்.