Posted inPoetry
இலக்கிய வியாதி கவிதை – சாமை
நாட்டில் எது நடந்தாலும்
இலக்கியத்தில் ஒளிந்து கொள்ளும் நீ..
சமூக அநீதிகளை எதிர்கொள்ள
இலக்கியத்தையே ஆயுதமாக்கும் நாங்கள்
இலக்கியம் என்னும் ஓட்டுக்குள்ளிருந்து
ஊர்ந்து செல்லும் நத்தை நீ..
எழுத்தை கூர்மையாக்கி
எதிரிகளுடன் களமாடும் வீரர் நாங்கள்..
ஒன்றும் குறைந்து விடவில்லை,
அழகியல் என்று வலிந்து கட்டமைக்கப்படும்
உன் படைப்புக்கு ,
அழுக்கேறிய மனிதர்களின் குரலாக ஒலிக்கும்
எங்கள் வார்ப்பு
ஒளி வட்டம் எனும்
சிறு வலைக்குள் சிக்கிக்கொண்ட
சிலந்தியே.. நீ
இலக்கியவாதியென்கிறாய்
எங்களுக்கோ
இலக்கியவியாதி என்றே
கேட்டுத்தொலைகிறது..!