கவிதை: நேசம் அயராது Nesam Ayarathu Kavithai

கவிதை: நேசம் அயராது – சரவிபி ரோசிசந்திரா

      இன்றைக்கும் என்றைக்கும் நம் அன்பில் பிரிவேது இல்லறத்திற்கு இணையான உலகத்தில் உறவேது என்னுயிர் கலந்த நாயகனே எனக்குள் வாழும் மன்னவனே ஏழேழு உலகை ஆள்பவனே ஏழைக்கு இரங்கும் தென்னவனே நீ இருக்கும் இடந்தேடி நினைவு வரும் மறவாது…
ஆண் தாய் கவிதை – சரவிபி ரோசிசந்திரா

ஆண் தாய் கவிதை – சரவிபி ரோசிசந்திரா




ஆத்மார்த்த அன்புதனில்
உறவுக்கு உணர்வளித்தாய்
புதிய பார்வைதனில்
புதுவாழ்வு எனக்களித்தாய்

முகம் வாடிப்போனால்
உன் மூச்சுக்காற்று
கேள்விக் கேட்கும்
குரல் மாறிப்போனால்
நின்தீந்தமிழ்
மகிழ வைக்கும்

உடல் சோர்ந்து நடை தளர்ந்தால்
கைவிரலைப் பற்றிடுவாய்
மனம் மகிழ்ந்து உடை சிரித்தால்
உச்சிமுகந்து அணைத்திடுவாய்

சித்தம் தந்த பூவிதழோ!
மௌனித்தால் சிவக்கும்
முத்தம் கொடுத்தச் செவ்விதழோ
மௌனத்தால் இனிக்கும்.

தாமதமாய்ப் பதில் வந்தால்
உள்ளுணர்வோடு பேசிடுவாய்
தயங்கி நான் நின்றால்
தன்னம்பிக்கை தந்திடுவாய்
தொலைதூர பயணத்தில்
நிழலாய்த் துணை வருவாய்
அன்பான பிடிவாதத்தில்
முகிழ்நகை அள்ளித் தருவாய்

நீயின்றி நானில்லையென
சொல்லாமல் உணரவைத்தாய்
நானே! நீயென்று
எனக்குள் பேசவைத்தாய்

யாரென்று அறியாமல்
உளமாற உன்னைத்தந்தாய்
இன்னொரு தாயாய்
இதயத்தில் குடிப்புகுந்தாய்

தூயவனே! உன் நினைவின்றி
தூங்காது நெஞ்சம்
என் இதயம் என்றென்றும்
உன்னுள் தஞ்சம்…

– சரவிபி ரோசிசந்திரா

சரவிபி ரோசிசந்திராவின் குழந்தைப் பாடல்

சரவிபி ரோசிசந்திராவின் குழந்தைப் பாடல்




ஒரு குழந்தைப் பாடல்
*****************************
ஆகாயத்தில் வசித்த நிலவு
ஆடிப்பாட வந்ததாம்
ஆடிப்பாடி முடித்தப் பின்னே
அசந்து போனதாம்
வீதியெல்லாம் புகைக்காற்று
திணறி மேலே சென்றதாம்
மேகமெல்லாம் அனல்காற்று
தொப்பென்று கீழே விழுந்ததாம்
மயக்கம் தெளிய நட்சத்திரம்
தண்ணீர் கொண்டு வந்ததாம்
மதி கொஞ்சம் மதி தெளிந்து
வானத்திற்குச் சென்றதாம்
புகை நமக்குப் பகையென்று
புரியவில்லை நமக்குத்தான்
புகையிலையாலே நோய்கள் வந்து
இறக்கின்றறோம் எதற்குத்தான்?
நல்ல பழக்கம் கொள்ளுவோம்
நமது உடலைப் பேணுவோம்
உள்ளம் முழுதும் நம்பிக்கை
உண்மைதான் நம் வாடிக்கை.