Relation ShortStory SathyaSambath உறவு சிறுகதை - சத்யா சம்பத்

உறவு சிறுகதை – சத்யா சம்பத்




சக்தி மலர் பெயருக்கு ஏற்றார்போல் மிகுந்த துள்ளலுடனும், அன்றலர்ந்த செந்தாமரை போன்று இருப்பவள் ,19 வயது இள நங்கை ,கல்லூரி இரண்டாமாண்டு படிப்பவள். சிவாராம் பலமுறை போனில் அழைத்தும் பதில் அளிக்காததால் வேகமாக இரண்டிரண்டு படிக்கட்டாக  தாவி மேலேசெல்ல அதேவேகத்தில் சக்தி மலரும் இறங்கிவர ,சிவராம் மீது மோதி விழப்போனாள்.6 அடி உயரத்தில், கட்டுடலுடனும், கருஞ்சிகையுடனும், மாநிரத்தில் செதிக்கி வைத்த சிற்பம் போல் இருப்பவரின் மேல் “பூ” குவியலாக வந்து விழுந்தால் மலர். அவளை கீழே விழாமல் தாங்கி பிடித்து அவளிடம் “போன் செய்தால் எடுக்க வேண்டும் என்று எத்தனை முறை கூறுவது என்று  கேட்டான்”.

“அதுதான் கீழே வர போகிறோமே என்று எடுக்க வில்லை” அத்தான் என்று கண்ணம் குழிய சிரித்தவள் சிட்டாக பறந்து விட்டால். அந்த சிரிப்பில் இருந்து தன்னை மீட்க ஒரு நிமிடம் நிதானித்து பின்னர் கீழே இறங்கி வந்தான் சிவராமன். அவனுக்காக அவனது தந்தையும், சக்தியும் காத்திருப்பது தெரிந்தது. அவனை பார்த்தவுடன் சக்தி “அத்தான் சீக்கிரம் வாங்க உங்க தட்டுல போடாம எனக்கு சோறு போடாது அப்பத்தா”என்றவளிடம் ஆமாண்டி “அவனுக்கு சாப்பாடு போட்டுவிட்டு நீ சாப்பிடுவேனு பார்த்தா தினமும் அரக்கப்பரக்க வந்து அவன் தான் உனக்கு போட்டுட்டு இருக்கான்” என்று அங்கலாய்த்து காட்ட சக்தியோ சிவாவின் முகவாயை பிடித்து “மை ஸ்வீட் அத்தான்” என்று கூற அவனுக்குதான் தர்மசங்கடமாகி விட்டது. ஐந்து நிமிடத்தில் உணவு உண்டு அத்தானுடன் கல்லூரிக்கு கிளம்பி சென்றாள் சக்தி .அனைவரும் அவளை மலர் என்று அழைத்தாலும் சிவாவிற்கு அவள் என்றும் சக்தி தான். கல்லூரி வரும் வரை தொனதொனவென்று பேசிக் கொண்டு வந்தவள் கல்லூரியில் கை ஆட்டிவிட்டு சென்றாள் . சிவாவிற்கு தானும் அவளுடனே சென்ற உணர்வு. அலுவலகம் செல்ல மனமில்லாமலேயே சென்றான்.

அவளது தோழி ரேகாவும் வர இருவரும் சேர்ந்து கல்லூரிக்குல் சென்றனர் .ரேகாவின் முகத்தில் சந்தோஷத்தை கண்டவள் என்னவென்று கேட்டாள். அதற்குள் ஆசிரியர்  வந்துவிட வகுப்பு ஆரம்பித்து உணவு இடைவேளையும் வந்தது. மீண்டும் அவளிடம் கேட்க  “அத்தை வீட்டில் இருந்து (அப்பாவின் தங்கை) என்னை பெண் கேட்டு வந்தனர்” என்று கூறினாள். அதற்காக இவ்வளவு சந்தோசம் “சொந்தத்தில் திருமணம் செய்யாதே ரேகா” என்று  கூறினால். அதற்கு ரேகா ஏனென்று கேட்க “குழந்தைகளின் அறிவு கேள்விக்குறியாகிவிடும் பல குழந்தைகள் வளர்ச்சி இன்றி இருக்கின்றனர்” என்று கூறினாள். “யார் இப்படி கூறினார்கள்” என்றவளிடம் “அறிவியல்!! அறிவியல் கண்டுபிடிப்புகள் தான் கூறுகின்றன” என்றாள்.

“உறவு முறைக்குள் திருமணம் முடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவு, வளர்ச்சி குறைவாக இருக்கும்” என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன என்றாள்.

முட்டாள்! எங்கள் ஊரில் வந்து பார்?”நாங்கள் பெண் பிள்ளைகளை வெளியில் காட்டிக் கொடுப்பது மிக மிக அரிது”.

“எங்கள் பாட்டி  பூட்டி காலத்திலிருந்து எங்கள் பரம்பரை அந்த ஊரிலேயே அதுவும் உறவு முறையில் தான் திருமணம் செய்துள்ளோம்”

“என்னை பார்த்தால் முட்டாளாக தெரிகிறதா” அல்லது “மூளை வளர்ச்சி இல்லாத செமி போல தோன்றுகிறதா” என்று மிகவும் காட்டமாக கேட்டாள்.

அவளது கோபத்தை பார்த்து சிரித்த மலர் “என்ன உங்கள் அத்தான் மேலே ரொம்ப காதலோ” என்றால்.

காதல் என்று கூற முடியாது “விட்டுக்கொடுக்க முடியாத ஓர் இனம் புரியாத பாசம்” என்று வேண்டுமானால் கூறலாம்” நான் பிறந்தது முதல் எனது ஒவ்வொரு வளர்ச்சியையும் உடன் இருந்து பார்த்தவர் எனது விருப்பு வெறுப்பும் நன்கு அறிந்தவர்”எல்லாத்தையும் விட “என் ஆசை அத்தையின் மகன்” வேறென்ன வேண்டும் என்றாள் ரேகா.

வகுப்பு தொடங்குவதற்காக மணி அடிக்க, இருவரும் வகுப்பிற்கு சென்றனர் அத்துடன் இவ்விஷயத்தை மறந்தும் விட்டனர்.

கல்லூரி முடிந்து வெளியே வருவதற்கும் சிவராமன் வருவதற்கும் சரியாக இருந்தது. உடனே ரேகா “உன் அத்தானை கேட்டுப் பாரேன் உனது பால்ய கால வாழ்க்கை விருப்பு, வெறுப்பு பற்றி நீயே ஆச்சரியப்படும் வகையில் கூறுவார்” என்றாள்.

அத்தானுக்கு வேற வேலையே இல்லையா இப்பொழுது அவரது கம்பெனி மட்டுமல்லாது எனது தந்தையின் உடல் நல குறைவால் எங்களது கம்பெனியையும் சேர்த்து அவர் தான் பார்க்கிறார். எனது தம்பிக்கும் இப்பொழுதுதான் கம்பெனி நடைமுறைகளை பழக்கி கொண்டுள்ளார். 24 மணி நேரம் பத்தவில்லை என்பவரிடம் என்னை பற்றி கேட்க வேண்டுமா என்று சிரித்தவளிடம் ,கேட்டு தான் பாரேன் என்றாள் ரேகா. பார்ப்போம் பார்ப்போம் என்று கண்ணம் குழிய சிரித்தவளை பார்த்தவனின் பார்வையில் காதலை புரிந்து கொண்டால் ரேகா.

எதை பார்ப்போம் என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தவனிடம் ரேகா ஒன்றுமில்லை நான் கிளம்புகிறேன் என்று சென்று விட்டாள்.

காரில் ஏறி அமர்ந்து டிரைவர் சீட்டில் இருந்தவனை நன்றாக பார்க்க வசதியாக திரும்பி அமர்ந்து “அத்தான் என்னை சிறுவயது பாப்பாவாக நினைவிருக்கா எனது சேட்டைகள் நினைவு இருக்கா” என்று கேட்டாள்.

அதை மறந்தால் தானே நினைப்பதற்கு என்றவன் எனது ஏழாவது வயதில் நீ பிறந்த உடன் உன்னை துணியில் சுற்றி பாட்டி எனது மடியில் வைத்தார். குண்டு கன்னங்களும் முட்டை கண்களுமாக ரோஜா நிறத்தில் நீ ! என்னை பார்த்து சிரித்தாய்  எனக்கு இன்னமும்  அது நினைவில் உள்ளது.

உன்னை பள்ளிக்கு அனுப்புவது என்பது பெரும் பாடுதான். ஐந்தாம் வகுப்புவரை பாதினாள் இங்கிருந்துதான் பள்ளி செல்வாய். அதுவும் பரிட்சை என்றால் அத்தை என்னிடம் உன்னை விட்டு விடுவார்கள் நான் சொன்னால்தான் படிப்பாய். நான் உன்னுடன் சேர்ந்து மறுபடியும் LKG-யில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். என்று மிக பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினான்.

அனைத்தும் நிழல்போல் மனதில் தோன்ற தனக்கு கணக்கு சொல்லிக் கொடுத்த குச்சி போல் இருந்த உடம்பு நினைவில் வந்தது. இப்பொழுது இருப்பவனை முழுமையாக பார்த்து ரசித்தாள்.திரும்பிய சிவா என்ன பாஸ் மார்க்கா  என்று கேட்க, முகம் சிவக்க  சிரித்த சக்தியின் மாற்றத்தை மனதில் குறித்து கொண்டான் சிவா.

கல்லூரி ஆண்டு விழாவில் வரவேற்பு நிகழ்ச்சியான பரதநாட்டியத்தில் தோழிகள் இருவரும் இருந்தனர். அலங்காரம் முடித்து உடை மாற்ற சென்றபோது மலர் கழுத்திலிருந்த தாலி வெளிப்பட்டது. அதனை பார்த்து அதிர்ந்த ரேகா  ஏய்….  உன…க்கு திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்டாள்.

உடனே மலர் “ஏய் கத்தாதே”

“திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது” என்றால்.

மாப்பிள்ளை யாரு என்று கேட்டவளிடம் “சிவராம் அத்தான்” என்றாள்.

சந்தோஷத்துடன் “அதான் உன்னை பார்க்கும் போது அவர் பார்வையில் காதல் வழிகிறதா”என்று வம்பு செய்தால் ரேகா.

கோபமாக “நாங்கள் இன்னும் முன்புபோல் தான் வாழ்கிறோம் இருப்பது வேண்டுமானால் ஒரே அறையாக இருக்கலாம் அத்தான் என்னை எதற்கும் தொந்தரவு செய்ததில்லை” என்று கூறினால்.

அரங்கத்திற்கு நேரமானதால் சரி பிறகு பேசலாம் என்று இருவரும் உடை மாற்றி மேடைக்கு சென்றனர். ஆண்டு விழா சிறப்பாக முடிவடைந்தது. வெள்ளிக்கிழமை ஆண்டு விழா என்பதால் தொடர்ந்து வார இறுதி நாட்கள் விடுமுறை கிடைத்தது.

மறுநாள் மாலை 4 மணிக்கு ரேகா மலரின் முன்பு அவளது வீட்டில் வந்து நின்றாள். ஆச்சரியப்பட்ட மலர்  கூப்பிட்டால் கூட வரமாட்டாய் என்ன இன்று மழை கொட்ட போகிறது என்றவளிடம் என்ன செய்வது என் தோழிக்கு அறிவியல் பற்றி நிறைய தெரிந்ததால் தலைகணம் கூடிவிட்டது அதனை இறக்குவதற்காக தான் வந்துள்ளேன் என்றால்.

அங்கு வந்த அப்பத்தா காப்பி பலகாரத்தோடு தோட்டத்தில் சென்று பேசுங்கள் என்று கூற அவ்வாறே இருவரும் தோட்டத்திலுள்ள மல்லிகை பந்தல் அடியில் அமர்ந்தனர்.

“முட்டாளா டீ” என்ற ரேகாவிடம் “பிறந்தது முதல் பார்த்தவரை ஒன்றாக விளையாடியவரை எப்படி கணவனாக பார்ப்பது” என்றால்?

“மண்ணாங்கட்டி” என்ற ரேகா

“இன்று பல கோர்ட்டுகளில் விவாகரத்து குவிந்து கிடப்பதற்கு காரணம் சரியான புரிதல் இருவரிடமும் இல்லை என்பதுதான். அந்த புரிதல் சிறுவயது முதலே கிடைப்பதால் உனக்கு இளக்காரமாக இருக்கிறதா” என்றால்.

மாமன் மகளை மணப்பதால் மனைவி என்பதற்கு முன்பே மாமன் மகள் என்ற தனி பாசம் இருக்கும். அந்த அடிப்படை பாசமே பல தவறுகளை பெரிது படுத்தாது, விட்டுக்கொடுத்து செல்ல வைக்கும்.

மாமியார், நாத்தனார் தொல்லைகளும் இன்றி ஒரு பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும். இது மட்டுமல்ல  பிறந்த வீட்டிற்கு ஏதாவது உதவி தேவை என்றால் தயங்காமல் தடையின்றி செய்ய இயலும் அதற்கான ஒத்துழைப்பும் கிடைக்கும். உணவு, பழக்க வழக்கங்கள் என அனைத்தும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருப்பதால் புது இடத்தில் இருப்பது போன்ற உணர்வே இருக்காது. இப்படி எத்தனையோ காரணங்களை கூறிக் கொண்டே போகலாம் என்றாள்.

“நீ அறிவியல் காரணங்களை கேட்டதில்லையா உறவு முறை திருமணம் பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்க வழிவகுக்கும்” என பல டாக்டர்கள் கூறுகின்றனர் என்றால் சக்தி மலர்.

“எதையும் முழுதாக தெரிந்து கொள்ள மாட்டாயா” என்றாள் ரேகா.

உறவு முறை திருமணத்தை மூன்றாக பிரிப்பார்கள் முதல் வகை அண்ணன், தங்கை உறவில் திருமணம் செய்வது, இரண்டாவது தாய் மாமாவை திருமணம் செய்வது, மூன்றாம் வகை அத்தை மகன், மாமன் மகள் என திருமணம் புரிவது. இதில் முதல் இரண்டு வகைகளில் திருமணம் புரிவோருக்கு தான் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் ஏனென்றால் அம்மா அல்லது அப்பாவின் உறவுகள் தான் முழுமையாக இருக்கும். இதே மூன்றாம் வகையான அத்தை மகன், மாமன் மகள் திருமணத்தில் அம்மா அப்பாவின் உறவுடன் வெளி உறவாக அத்தை மற்றும் மாமாவின் உறவும் இருப்பதால் அதில் பாதிப்புகள் மிக மிக அரிதே என்று நீ நம்பும் அறிவியல் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன என்றாள் ரேகா.

எதற்கும் எங்கள் குடும்ப டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்றாள்  மலர். உடனே ரேகா வா போகலாம் என்று கூற அடுத்த அரை மணி நேரத்தில் அவர்களது குடும்ப டாக்டரின் முன்பு  இருவரும் அமர்ந்திருந்தனர். சக்தி மலர் கேட்பதற்கு தயக்கம் காட்ட, இதற்குத்தான் நான் உடன் வந்தது என்றவளை விசித்திரமாக பார்த்தார் டாக்டர் .என்ன மலர் என்று வினவ தயங்கிக்கொண்டே கேட்டவளை பார்த்து சிரித்து விட்டு  இதற்கு தான் இவ்வளவு தயக்கமா என்றார். ரேகா கூறியதையே அவரும் கூறினார் பின்னர் அவர்கள் விடைபெறும் முன்பு டாக்டர் மலரிடம் திருமணமாகி ஒரு வருடம் ஆகியும் நீ நல்ல செய்தியுடன் என்னிடம் சிகிச்சைக்கு வராததன் காரணம்  உன் படிப்பு என்று தான் நினைத்தேன். இப்படி ஒரு சந்தேகமா  உனக்கு,  இதனை திருமணத்திற்கு முன்பே என்னிடம் கேட்டு இருக்கலாமே என்றார்.

சிவராம்  ரொம்ப நல்லவன், திருமணத்தின்போது அடுத்த வருடம் தந்தையாகி விடுவாய் என்று நண்பர்கள் கூட்டம்  வம்பிழுக்க , என் சக்தி இன்னும் குழந்தைதான் அவளது படிப்பு முடியவேண்டும் என்றவனின் கண்களில் எவ்வளவு எதிர்பார்ப்புகள், ஆசைகள் நிறைந்திருந்தது தெரியுமா ?அந்த ஆசைகளை  கலைத்து விடாதே என்று கூறி அனுப்பினார்.

யோசனையுடனே நடந்துவந்த மலரிடம் இனிமேலாவது வாழ்க்கையை வீணடிக்க மாட்டாய் என்று நினைக்கிறேன்.  உன் அத்தானிடம் மனம் திறந்த பேச்சு என்று கூறி அனுப்பினாள் ரேகா.

வீட்டிற்கு வந்தவள் அப்பத்தாவிடம் ” எனக்கு தலைவலி  இரவு உணவு வேண்டாம்” எனக் கூறிவிட்டு அவ ர்களது அறைக்கு சென்றுவிட்டாள். இரவு வீட்டிற்கு வந்த சிவராமிடம் அப்பத்தா மலருக்கு தலைவலி உணவு வேண்டாம் என்று கூறிவிட்டாள் என்று கூறினார்.

உடை மாற்ற  ரூமுக்கு வந்தவன் அவள் பால்கனியில் தலைசாய்த்து  கண்மூடி அமர்ந்திருப்பதை பார்த்து சத்தம் செய்யாமல் சென்று உணவு உண்டுவிட்டு 2 இட்லி மட்டும் ஹாட்பாக்ஸில் வைக்க சொல்லி எடுத்து வந்து வைத்து விட்டு அவளிடம் சென்றான்.

அவள் தூங்குவதாக நினைத்து ,அவளை படுக்கையில் கிடத்த தூக்கியவனை இறுக பிடித்துக் கொண்டு அழுதாள் சக்தி. பதறிய சிவா என்னவென்று விசாரிக்க நடந்ததை சுருக்கமாக கூறினால் சக்தி.

அனைத்தையும் பொறுமையாக கேட்ட சிவா இதற்காகத்தான் உண்ணாவிரதமா உன் அண்டா வயிற்றுக்கு இரண்டு இட்லி தான் கொண்டுவந்தேன் என்று வம்பு இழுத்தவனை முறைத்துவிட்டு இட்லியை சாப்பிட ஆரம்பித்தால் ,உடனே சிவா சென்று ஒரு வாழைப்பழமும், ஒரு டம்ளர் பாலும் எடுத்துவர அதனையும் மறுக்காமல் வாங்கி உண்டவளை உன் கோர பசிக்கு என்னையே தின்றுவிடுவாய் போல  என்று கூறி சிரித்தான்.

பின்னர்  சத்தியின் அருகே அமர்ந்து சக்தி  நீ பிறந்தது முதல் தொடர்ந்து 2 வாரம் உன்னை பார்க்காமல் நான் இருந்ததில்லை. இதனை உறவுமுறை பாசம் என்று நினைத்திருந்த என்னை மேற்படிப்புக்காக நான் இரண்டு வருடம் வெளிநாடு சென்ற போது  அந்த பிரிவு தான் உன் மேல் உள்ள காதலை எனக்கு புரிய வைத்தது.

நான் வந்த ஒரு வருடத்திலேயே நமது திருமணம் அவசரமாக நடக்க காரணம் நான்தான். உன்னை பிரிந்து இருக்க முடியாது என்ற நிலை வந்தவுடன் தான் திருமணத்தை முடித்ததே.  நீ மிகவும் சின்ன பெண் என்று கூறிய அத்தையிடம் சக்தி கல்லூரி படிப்பை முடிக்கும் வரை உங்கள் மகளாகவே இருப்பாள்என்று கூறி தான் திருமணத்தை முடித்தேன்.

என் காதலை தெரிவித்து உன் படிப்பை கெடுக்க நான் விரும்பவில்லை. இன்றும் அதை தான் கூறுகிறேன் உன் விருப்பம் போல்  நீ படித்து முடிக்கும்வரை என்னால் காத்திருக்க முடியும் என்று கூறினார் சிவா.

உறவு முறையின் அருமையையும், சிவாவின் பெருமையையும் உணர்ந்த சக்தி தான் மலரும் நாள் தொலைவில் இல்லை என்ற நிம்மதியுடன் கண்ணயர்ந்தாள்.

Ulagin Unnatha Uravu Poem by Sathya Sambath சத்யா சம்பத்தின் உலகின் உன்னத உறவு கவிதை

உலகின் உன்னத உறவு கவிதை – சத்யா சம்பத்




நீச்சல் தெரியாத நான் மிதக்கிறேன்
உன் வயிற்றில்! பயமின்றி எப்படி?
உன்னிடமிருந்து ஒரு கயிறு
என்னைப் பிணைக்கின்றது!

இருட்டறை பயமுறுத்தினாலும் உன்
ஸ்பரிசம் தைரியமளிக்க
துயின்றேன்
வெளிவந்து வீறிட்ட என்னை
அள்ளி அணைத்த உன் ஸ்பரிசம் என்னை
அமைதியாக்கியது

அறிவு அறிவிக்க நீ
கைப் பிடித்து எழுதிய
“அ” எழுத்து என்னை
படிப்படியாக உயர்த்தியது

நடுநிலைப்பள்ளியில் நீ
கற்பித்த கூட்டல், கழித்தல், வகுத்தல் – கணக்கை மட்டும்
அல்ல வாழ்க்கையின் நெளிவு
சுளிவுகளை இயல்பாக எனக்குப் பாடமாக்கியது
இன்று நான் கல்லூரியில்……
புதிதாக றெக்கை முளைத்தது,
பல துள்ளல்கள், பல மாற்றங்கள் மனதில் இருக்க!

நீயோ என்னை விட்டுச் சென்றாய்
கல்லூரி விடுதியில்.
இயல்பாக இருந்தாலும்,
தூங்கினாலும் ஏனோ
தூங்காதது போலவே மனநிலை?
நாட்கள் பல நகர்ந்தன

உன்னத உறவு பற்றி எங்கோ
F.M மில் பேட்டி?
மிதந்து வருகின்றன வரிகள்
உறவு என்றதும் எனக்கு நினைவு வருவது நீ தான்
நீ தானே அப்பா, தங்கை……
என தொடர்ந்து உறவு தந்தாய்

உலகின் உன்னத உறவிற்கு
நீ யின்றி வேறு யார் அம்மா
பொருந்துவார்கள்
ஆம் நீ தான் இந்தப் பரந்த
உலகின் உன்னத உறவு
எனக்கு
எப்பொழுது வீடு வந்து உன்னதமான உன்
மடியில் புதைவேன் அம்மா!!!