கற்கால பெண்கள், சங்க கால பெண்கள்,நவீன இக்கால பெண்கள்  | மார்ச் 8 மகளிர் தினம - Womens Day | Muthulakshmi Reddy, Dr.Shalini ,Savitribai Phule - https://bookday.in/

மார்ச் 8 மகளிர் தின சிறப்பு கட்டுரை

மார்ச் 8 மகளிர் தின சிறப்பு கட்டுரை கற்கால பெண்கள், சங்க கால பெண்கள், நவீன இக்கால பெண்கள்  கற்கால பெண்கள் பூமித் தாயாக போற்றப்படுபவள் பெண், புவியைப் பெண்ணாகவும் பொறுமைக்கு இலக்கணமானவளாகவும் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. கற்காலம் தொட்டே…
பிரின்ஸ் கஜேந்திர பாபு | சாதி ஒழிப்பு: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் | Saathi Ozhippu India Arasamaippu Sattathin Paarvaiyil Book Review - https://bookday.in/

சாதி ஒழிப்பு; இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பார்வையில் – நூல் அறிமுகம்

சாதி ஒழிப்பு; இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பார்வையில்  நூலின் அட்டைப் படம் சொல்லும் செய்திகள் இந்திய அரசியலமைப்புச் சட்ட முகப்புரை:         இந்திய மக்களாகிய நாம் இந்தியாவை இறையாண்மை பூண்ட சமதர்ம சமயச் சார்பற்ற மக்களாட்சிக் குடியரசாக அமைப்பதென உறுதி பூண்டுள்ளோம். நீதி: சமூக, பொருளாதார, அரசியல் நீதி…
இந்திய  வரலாற்றில் “சாவித்திரிபாய் புலே ” ஒரு வரலாற்று ஆவணம்…!!!! – கவிஞர் ச.சக்தி

இந்திய வரலாற்றில் “சாவித்திரிபாய் புலே ” ஒரு வரலாற்று ஆவணம்…!!!! – கவிஞர் ச.சக்தி




இந்தியாவின் முதல் ஆசிரியை,
சமூக சீர்திருத்தவாதி
சாவித்திரி_பூலே
பிறந்த தினம் இன்று,

பெண்கள்
கல்வி கற்க கூடாது
என்று இந்து மனுதர்மங்களும் சாஸ்திரங்களும் கூறுகின்றன
அதனால் இந்த சமூகத்தில்
அனைத்து பெண்களுக்கும் கல்வி உரிமை மறுக்கப்பட்டு இருந்தது.
முதன் முதலில் பெண்களுக்கு
தனி பள்ளி ஆரம்பித்து
இந்தியாவிலேயே பெண்களுக்கு முதன்‌ முதலில் கல்வி கற்பித்தவர்
கல்வி தாய்
“”””சாவித்திரி_பூலே””””
அவர்கள்தான்….!!!!

*மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் நைகான் என்ற சிற்றூரில் (1831) பிறந்தார்.
*தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த விவசாயக் குடும்பம் அது
12 வயது ஜோதிராவ் புலேக்கும்,
9 வயது சாவித்ரிபாய்க்கும் குழந்தை திருமணம் செய்துவைக்கப்பட்டது…!!

*சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவ், மனைவியையும் தனது போராட்டங்களில் இணைத்துக் கொண்டார். கணவரிடமே கல்வி கற்றார். ஒரு விதவைத் தாயின் பிள்ளையை தத்தெடுத்து வளர்த்தனர். கணவருடன் சேர்ந்து பல நலப்பணிகளில் ஈடுபட்டார்.

*பெண் கல்விக்காக முதல் பள்ளியை புனேவில் 1846-ல் நிறுவினர். அதில் ஆசிரியையாகப் பணியாற்றிய
இவர், இந்தியாவின் முதல் ஆசிரியை என்ற பெருமை பெற்றார்.
தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு கல்வி புகட்டினார். முறையாக ஆசிரியப் பயிற்சியை நிறைவு செய்து,
ஒரு பள்ளியைத் தொடங்கி அதன் தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றார்.

*இதற்கு பழமைவாதிகள், உயர்ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சேறு, சாணம், கற்கள், முட்டைகளை அவர் மீது வீசினர். ஆனாலும், மனம் தளராமல் கல்விப் பணியைத் தொடர்ந்தார். பள்ளி செல்லும் போது மாற்று உடை ஒன்றை தனது பையில் தினமும் எடுத்து செல்வார். சாதி வெறியர்கள் மற்று இந்தமத வெறியர்களால் அழுக்குற்ற தனது உடையை பள்ளி உள்ளே சென்றதும்‌ மாற்றுடை அணிந்துகொள்வார். ஒவ்வொரு நாளும் இந்து துர்நாற்றம் பிடித்த சாதீய தாக்குதல்களை கடந்தே பெண்களுக்கு கல்வி அறிவை போதித்தார்.

*கணவனை இழந்த பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகி கர்ப்பமாவது, பின்னர் சமூகத்துக்கு பயந்து சிசுக்களை கொல்வது, பெண்கள் தற்கொலை செய்துகொள்வது போன்ற சம்பவங்கள் அதிகம் நடந்தன. இதை தடுக்கும் நோக்கில் ‘பால் ஹத்யா பிரதிபந்தக் கிருஹா’ (சிசுக்கொலைத் தடுப்பு இல்லம்) ஒன்றை தொடங்கினார்.

*பெண் விடுதலை, சமூக அங்கீகாரம் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 1852-ல் மஹிளா சேவா மண்டல் தொடங்கினார். கணவனை இழந்த பெண்களுக்கு வலுக்கட்டாயமாக மொட்டை அடிப்பதைக் கண்டித்து 1863-ல் மாபெரும் போராட்டம் நடத்தினார். ‘இனி இவ்வாறு செய்யமாட்டோம்’ என்று முடிதிருத்துநர்களை உறுதியேற்கச் செய்தார்.

*கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்துவைத்தார். பஞ்சம் ஏற்பட்டபோது, தம்பதியினர் இணைந்து அன்னசத்திரம் நடத்தினர். பஞ்சத்தின்போது பெற்றோரை இழந்த 52 குழந்தைகளுக்காக உறைவிடப் பள்ளி தொடங்கினர். தீண்டாமை, குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடினார். கணவரின் மறைவுக்குப் பிறகும், சமூகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார்.

*இவர் சிறந்த கவிஞரும்கூட. மராத்தியத்தின் நவீன கவிதைப் போக்கு இவரிடம் இருந்து தொடங்கியது என்று கூறப்படுகிறது. 1892-ல் கவிதை நூலை வெளியிட்டார். இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி, பெண் உரிமை, தீண்டாமை என அனைத்து களங்களிலும் கவிதைகள் எழுதி தனிமுத்திரை பதித்தார்.

*1897-ல் பிளேக் நோய் தாக்கியபோது, டாக்டரான தன் மகனைக் கொண்டு பிரத்யேகமாக ஒரு மருத்துவமனை தொடங்கச் செய்தார். பல குழந்தைகளை தன் கையால் தூக்கி வந்து மருத்துவமனையில் சேர்த்தார்.

*தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை தூக்கி வந்ததால் அந்நோய் இவரையும் தாக்கியது. அவன் பிழைத்துக்கொள்ள, இவரது உயிர் பிரிந்தது. அப்போது இவருக்கு 66 வயது. இவரது நினைவாக மத்திய அரசு 1998-ல் தபால்தலை வெளியிட்டது.

*இந்தியாவில் உள்ள அனைத்து
பெண்களும் போற்றி கொண்டாட
வேண்டியவர் கல்விதாய் சாவித்திரி ‌
பூலே அவர்களைதான்.

*ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கும் பெண்களுக்கும் இந்து மதம் மறுத்த
கல்வியை வழங்கிய தாய் பூலே அவர்களின்
பிறந்த தினத்தை ஆசிரியர்
தினமாக நாம் அனைவரும் கொண்டாடுவோம்…..!!!!

கவிஞர் : ச.சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி வட்டம்,

Nanum En Kanavarum Book By Savitribai Phule in tamil Translated by Salai Selvam BookReview By Ramamoorthi Nagarajan. நூல் அறிமுகம்: சாவித்ரி பாய் ஃபூலேவின் நானும் என் கணவரும் - தமிழில்: சாலை செல்வம் | இராமமூர்த்தி நாகராஜன்

நூல் அறிமுகம்: சாவித்ரி பாய் ஃபூலேவின் நானும் என் கணவரும் – தமிழில்: சாலை செல்வம் | இராமமூர்த்தி நாகராஜன்




புலே என்ற வார்த்தை எனக்கு 2010 வாக்கில் அறிமுகம். தனஞ்செய் கீர் என்பவர் எழுதிய “மகாத்மா ஜோதிராவ் புலே” என்ற நூலின் தமிழாக்கத்தை வெ.கோவிந்தசாமி செய்திருந்தார். புத்தா வெளியீட்டகம் வெளியிட்டிருந்தது.

அதுவரை மகாத்மா என்றால் அண்ணல் காந்தியையே நான் அறிந்து வைத்திருந்தேன். ஆனால் காந்திக்கு முன்னரே 1827 ல் பிறந்து எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக தம்பதியாகப் பாடுபட்ட ஜோதிராவ் புலேவுக்கு 1888ல் பொதுமக்கள் முன்னிலையில் மகாத்மா பட்டம் வழங்கப்படுகிறது.

மகாத்மா புலேவின் வாழ்க்கை வரலாற்றையும், அவரின் தத்துவங்களையும் கொண்ட அருமையான நூல் அது. சூத்திர வாழ்க்கையின் பொருளே, அவனுக்கு மரியாதை கிடையாது, வாழ்வதற்கு மரியாதையான வழிகளும் கிடையாது என்பதுதானே. ஓர் உள்ளார்ந்த ஏக்கம் அவன் வாழ்க்கைச் சூழலை நிர்ணயித்து விடுகிறது.

மிகப்பெரிய சமூக மாற்றங்கள் தற்செயலாக நடந்து விடுவதில்லை. செயலூக்கமான மனிதர்களால் முதலில் அம்மாற்றங்கள் விரும்பப்படுகின்றன. ஒரு மனிதன் அடிமையாகும் போது அவன் தன் நற்பண்புகளில் பாதியை இழந்து விடுகிறான். கடுமையான போராட்டமின்றி இழந்து போன உரிமைகளைப் பெற முடியாது.

சிந்தனை என்பது செயலே. செயல் மட்டுமே சிந்தனைக்கு மதிப்பைக் தரும். நீதிக்கும், மனித உணர்ச்சிக்கும் மதிப்புத் தராத வெறும் படிப்பறிவின் மூலம் மேன்மை கிட்டி விடாது.

கல்விக் குறைவால், அறிவு சீரழிந்தது..
அறிவுக் குறைவால், நல்லொழுக்கம் அழுகியது..
நல்லொழுக்கக்குறைவால், முன்னேற்றம் நின்று போனது..
முன்னேற்றம் நின்று போனதால், செல்வம் மறைந்தது..
செல்வக் குறைவினால், சூத்திரங்கள் அழிந்தனர்..
கல்லாமையிலிருந்தே அனைத்துத் துயரங்களும் ஊற்றெடுக்கின்றன….

எத்தனை அருமையான கருத்துக்கள்… இத்தனை சிறந்த சிந்தனை கொண்ட ஜோதிராவ் புலே தனது பதிமூன்று வயதில் ஒன்பது வயது கொண்ட சாவித்திரி பாயை மணக்கிறார்.
திருமணத்தின் போது பள்ளியில் பயின்றார் ஜோதிராவ். படிக்காதவர் சாவித்திரி.

ஜோதிராவ் பகலில் மாணவராகவும், இரவில் ஆசிரியராகவும் தானும் படித்துக்கொண்டு, சாவித்திரிக்கும் கல்வி கற்பிக்கிறார். கல்வியில் கற்றுத் தேர்கிறார் சாவித்திரி. தன் கணவரின் ஆசைப்படி ஆசிரியர் பயிற்சி பெறுகிறார் சாவித்திரி. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகிறார் சாவித்திரி. 1848ல் பூனாவில் பெண்களுக்கான பள்ளியை பல்வேறு இக்கட்டான சூழலில் தொடங்குகின்றனர்.

“பொட்ட புள்ளைக்கு படிப்பா?” என பெரும்பாலான ஊர்க்காரர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.

பள்ளியிலும் சாதிப் பிரச்சினை.

சாவித்ரி பாய் பள்ளிக்கு செல்வதைத் தடுக்க பல்வேறு தடைகளை ஏற்படுத்துகின்றனர்.

அவர் பள்ளிக்கு செல்லும் போது அவர்மீது சாணத்தை எறிகின்றனர்.

மாற்றுப்புடவையை பையில் எடுத்துச் சென்று பள்ளியில் மாற்றிக்கொண்டு வகுப்பெடுக்கிறார் சாவித்திரி.

சாதி, பெண்கல்விக்குத் தடை என பல்வேறு தடைகளைத் தாண்டி வெற்றி பெறுகிறார்.

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகி வெற்றி பெற்ற சாவித்திரி பாய் வாழ்க்கை வரலாற்றை குழந்தை மொழியில் அழகுற சாவித்திரி பாயே தன் வரலாற்றைக் கூறுவது போல் தழிழில் விவரித்துள்ளார் சாவித்திரி செல்வம்.

குழந்தைகள் வாசிக்கலாம். பெரியோர்களும் வாசிக்கலாம்.

பூலே தம்பதிகள் பற்றிய மேல் அதிக வாசிப்புக்கு இந்நூல் திறப்பாக நிச்சயம் இருக்கும். வண்ணப் படங்களுடன் அழகிய எழுத்துருவில் நேர்த்தியாக நூலை இயல்வாகை பதிப்பகத்தினர் வடிவமைத்துள்ளனர். சாதி கடந்து மனிதம் நேசிக்கும் அனைவரும் தானும் வாசியுங்கள்… தங்கள் பிள்ளைகளுக்கும் வாசிக்கத் தாருங்கள். இந்நூலை வாசித்து முடிக்கும்போது தேசிய ஆசிரியர் தினம் சாவித்திரி பாய் பிறந்தநாளாக இருந்தால் நன்றாகவே இருக்கும் என என் மனம் நினைக்கிறது.

நானும் என் கணவரும்.
சாவித்ரி பாய் ஃபூலே
தமிழில்… சாலை செல்வம்.
இயல்வாகை/சுட்டியானை வெளியீடு.
விலை..70/-

Karpom Seyalpaduvom Uyarvom Poem by Savitribai Phule in tamil translated by Mu. Dhananchezhiyan கற்போம் செயல்படுவோம் உயர்வோம் கவிதை

கற்போம் செயல்படுவோம் உயர்வோம் (ஆங்கில கவிதை) – சாவித்திரிபாய் புலே | தமிழில்: மு தனஞ்செழியன்




ஒடுக்கு முறையிலிருந்து பலவீனத்தை உடைத்து எழுந்திரு தோழா?
அடிமைத்தனம் மிதித்து வெளியே வா
மநு கல்வியைத் தடுத்தது
மநுவை – பின்பற்றும் பேஷ்வாக்கள் இறந்து விட்டார்கள்.
அறிவு புகட்ட ஆங்கிலம் வந்தாயிற்று, இப்போதே கற்றிடு.
நம் குழந்தைகளும், நாமும் கற்றிடுவோம்,
ஆண்டாண்டுகளாய் வாய்ப்பில்லை.
அறிவை உரித்தாக்குவோம் பகுத்தறிவை ஞானமாக்குவோம்.
உள்ளம் பீறிட்டுப் பொறாமையில் எழுச்சி கொள்கிறது
அனைவருக்கும் கல்வி வேண்டிக் கரைகிறேன்.
சாதியின் அடையாளம் சீழ் பிடித்த காயம்
என் வாழ்க்கையின் இறுதியில் அதை அழித்து விட்டேன்.
பலி ராஜா ராஜ்ஜியத்தில், ஜாக்கிரதையாக இருப்போம்
எங்கள் பாய்மரம் அவிழ்ந்து, பட்டொளி வீசும்.
அனைவரும் சொல்வோம் “துயரமே போ! ராஜ்யமே வா!”
விழித்தெழு, எதிர்ப்படு, கற்றிடு
மரபுகளை நொறுக்கு – விடுதலை!
ஒன்றிணைந்து கற்போம்
கொள்கை – நீதி – மதம் என்று.
உறங்காமல் எக்காளம் ஊதுங்கள்
ஓ பிராமணனே, உனக்குத் தைரியமில்லை வருத்தப்படாதே.
போர் முழக்கம் கொடுங்கள், வேகமாய் கிளர்ந்தெழுங்கள்
கற்போம், செயல்படுவோம், உயர்வோம்.

Rise, to learn and act
-Savitribai Phule
Weak and oppressed! Rise my brother
Come out of living in slavery.
Manu-follower Peshwas are dead and gone
Manu’s the one who barred us from education.
Givers of knowledge– the English have come
Learn, you’ve had no chance in a millennium.
We’ll teach our children and ourselves to learn
Receive knowledge, become wise to discern.
An upsurge of jealousy in my soul
Crying out for knowledge to be whole.
This festering wound, mark of caste
I’ll blot out from my life at last.
In Baliraja’s kingdom, let’s beware
Our glorious mast, unfurl and flare.
Let all say, “Misery go and kingdom come!”
Awake, arise and educate
Smash traditions-liberate!
We’ll come together and learn
Policy-righteousness-religion.
Slumber not but blow the trumpet
O Brahman, dare not you upset.
Give a war cry, rise fast
Rise, to learn and act.

So says Manu poem by Savitribai phule in tamil translated by M Dhananchezhiyan சாவித்திரிபாய் புலேவின் மநு இப்படி சொல்கிறது கவிதை தமிழில் மு தனஞ்செழியன்

சாவித்திரிபாய் புலேவின் மநு இப்படி சொல்கிறது மொழிபெயர்ப்பு கவிதை – மு தனஞ்செழியன்



நிலத்தை உழுது
பயிரிடுவோர்களை
முட்டாள் என்கிறது மநு.
மத கட்டளைகள் மூலம்,
பார்பானுக்கு மனுஸ்மிருதி
சொல்கிறது,
“உங்கள் ஆற்றலை,
விவசாயத்தின் மீது
வீணாக்காதீர்கள்!”
“சூத்திரர்களாக பிறந்தவர்கள் அனைவரும்
முற்பிறவியல் செய்த பாவங்களுக்கு விலையாக
இப்பிறப்பில் உழவு செய்கிறார்கள்,”
இப்படியாக அசமத்துவம் கொண்ட சமூதாயத்தை
மனிதமற்ற சூழ்ச்சியால், வஞ்சக மனிதர்கள்
உருவாக்குகிறார்கள்.

So says Manu…
savitribai phule
“Dumb are they
who plough the land,
Dumb are the ones
who cultivate it”,
So says Manu.
Through religious diktats,
The Manusmriti to the Brahmin tells,
“Do not your energy, on agriculture, waste!”
“Those born as Shudras,
All these Shudras!,
Are paying in this life,
For the sins of their past lives”
Thus they create
A society based on inequality,
This being the inhuman ploy,
Of these cunning beings.

Mukta Salve (The first Dalit feminist voice), a student of Savitribai Phule article translated in tamil by Prof. Ganesan Book Day is Branch of Bharathi Puthakalayam

முக்தா சால்வே – முதல் தலித் பெண்ணியக் குரல்

ஆங்கிலத்தில்; பேரா.சச்சின் கருட் வரலாற்றுத் துறை கே பி ப்பி கல்லூரி இஸ்லாம்பூர் மகாராஷ்டிரா தமிழில்; பேரா. க கணேசன் குமரி ஜோதிபா பூலேயும் சாவித்திரிபூலேயும் 1848 ல் இந்தியாவில் முதன்முதலாக பெண்களுக்கு பள்ளிக் கூடத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் புதவார் பேத்தில்…
சமூக விடுதலை போராளி சாவித்திரிபாய் பூலே: எழு! கல்வி பயில்!! செயல்படு!!! – கு.காந்தி

சமூக விடுதலை போராளி சாவித்திரிபாய் பூலே: எழு! கல்வி பயில்!! செயல்படு!!! – கு.காந்தி

கடந்த பத்து மாதங்களாக பள்ளிகள் கல்லூரிகள் பூட்டிக்கிடக்கின்றன.உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கின்ற கொரணா வைரஸ்ஸின் எதிரொலியாக மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லமுடியவில்லை. அரசின் சில தளர்வுகள் மூலம் கல்லூரியில் மூன்றாமாண்டு மற்றும் முதுகலை, ஆய்வு மாணவர்கள் கல்லூரிக்குச் சென்று வருகின்றனர். பள்ளிக்கல்வியை பொருத்தவரை மாணவர்கள்…
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய்….! – S.மோசஸ் பிரபு

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய்….! – S.மோசஸ் பிரபு

இந்தியாவின் முதல் பிரதமர் யார்..? முதல் ஜனாதிபதி யார்..? என்கிற கேள்விக்கு மிக எளிதாக பலரும் பதில் சொல்லி விடுவோம். ஆனால் முதல் பெண் ஆசிரியர் யார்..? என்கிற கேள்விக்கு பலருக்கும் பதில் தெரியாது, அது மட்டுமல்ல கேள்வியே புதிதாக இருக்கும்.…